பெண்களை இருவகையாக பிரிக்கலாம்… (பகுதி-10)- இன்றைய சுவாரஸ்யம்…

..
..


எனக்குத் தெரிந்த வரையில் பெண்களை 2 வகைகளில் பிரிக்கலாம்
என்று தோன்றுகிறது…

ஒன்று – புத்திசாலி பெண்கள்…
இரண்டு – அதிபயங்கர புத்திசாலி பெண்கள்… 🙂 🙂

எப்படி என்று கேட்கிறீர்களா…?
அண்மையில், ஒரு வார இதழில், நான் படித்த ஒரு குட்டிக்கதையை
முதலில் சொல்கிறேன்.. கேளுங்கள்… (கதையை கொஞ்சம் மாற்றி
இருக்கிறேன்…! )

கதையை கேட்டபிறகு என் கருத்து – சரியா இல்லையா
என்று நீங்களே சொல்லுங்கள்..!!!

——————

ஒரு பெண் – ஏதோ ஒரு வகையில் ஒரு தேவதைக்கு உதவி செய்து,
அது சாப விமோசனம் பெற உதவி புரிகிறாள்.

சாபவிமோசனம் பெற்ற அந்த தேவதை “எனக்கு உதவியதற்காக,
உனக்கு 3 வரங்கள் தர விரும்புகிறேன். வேண்டியதைக் கேள்” என்கிறது.

கூடவே -” ஒரே ஒரு நிபந்தனை… உனக்கு நான் கொடுக்கும் வரத்தின்
பலன், உனக்கு கிடைப்பதைப்போல் 10 மடங்கு அதிகமாக உன்
கணவருக்கும் கிடைக்கும்” என்றும் சொல்கிறது.

“அதனாலென்ன..பரவாயில்லை” என்கிறாள் அந்தப் பெண்.

பிறகு அந்தப்பெண், முதல் வரத்தின் மூலம் நான் இந்த உலகத்திலேயே
மிகவும் அழகிய பெண் ஆக வேண்டும் என்று கேட்கிறாள்.
தேவதை அவளை எச்சரிக்கிறது… “உன்னை விட உன் கணவன் மிக
அழகானவனாகி விடுவான்”

“அதனாலென்ன…. அவருக்கு இணையான அழகு படைத்தவளாக நான்
மட்டும் தானே இருப்பேன்” என்கிறாள்.
“ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) – என்கிறது தேவதை.

அடுத்து, 2-வது வரமாக “உலகிலேயே பெரிய பணக்காரியாக நான் ஆக
வேண்டும்” என்று அந்தப்பெண் கேட்கிறாள்.

“உன் கணவன் உன்னைவிட 10 மடங்கு பணக்காரனாகி விடுவான்”
என்கிறது தேவதை.

“அதனாலென்ன.. என் கணவன் தானே பணக்காரன் ஆகப்போகிறான்-
நல்லது தான்… ” என்று அந்தப்பெண் ஏற்றுக்கொள்ளவே… அதற்கும்
“ததாஸ்து” சொன்னது தேவதை.

இப்போது 3-வதும், கடைசியுமான வரம்…

தேவதை சொல்கிறது…” இது கடைசி வரம்…உனக்கு வேண்டியதை
நன்கு யோசித்துக் கேள்”.

அந்தப்பெண்ணும், நன்கு யோசித்து….
தன் கடைசி வரத்தை கேட்கிறாள் –
“எனக்கு – “லேசான” – மாரடைப்பு வர வேண்டும்…” 🙂 🙂 🙂

..

..
.
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to பெண்களை இருவகையாக பிரிக்கலாம்… (பகுதி-10)- இன்றைய சுவாரஸ்யம்…

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  தலைப்பை பார்த்தவுடன் நிறைய பேர் சண்டைக்கு வருவார்கள் என்று நினைத்தேன். ஆனால், புத்திசாலி, அதிபயங்கர புத்திசாலி -என்று define பண்ணியதை பார்த்த பிறகு, மனதீற்குள் சிரித்துக் கொள்பவரே அதிகமாக
  இருப்பர் என்று நினைக்கிறேன்.

 2. Mani சொல்கிறார்:

  அந்த நாளில் ” மக்கு “என்றும் “புத்திசாலி” என்றும் இரண்டாக பிரித்தார்கள்.
  ஆனால் இப்போது ?
  நீங்கள் சொல்வது போல் புத்திசாலி அதி(பயங்கர)புத்திசாலி வகைகள் தான்.
  பெண்களில் மக்கு வகையறாவே இந்த காலத்தில் கிடையாது.
  எல்லாருமே புத்திசாலிகள் தான்.
  அதிலும் அதி(பயங்கர)புத்திசாலிகள் தான் அதிகம் என்று சொல்ல வேண்டும்.
  ஆண்களில் தான் பெரும்பாலானோர் “முட்டாள்” வகையறா 🙂

 3. Muthukumarasamy சொல்கிறார்:

  அவள் கணவனுக்கு 10 மடங்கு லேசான மாரடைப்பு தான் வரும் . இருவரும் ஆரோக்யமாகத் தான் வாழ்ந்திருப்பார்கள்.

 4. புதியவன் சொல்கிறார்:

  பெண்கள் எப்போதுமே புத்திசாலிகள்தாம். ஆண்களைவிட அவர்களுக்கு நுண்ணறிவு மிக மிக அதிகம். அவங்க மட்டும் ஆபீசும் போய்க்கொண்டிருந்தால் (அதாவது கணவனுக்கு இணையாக), அவங்க அனுபவத்திலும் எங்கயோ போயிடுவாங்க.

  ஆண்கள்ட இருக்கிற திறமை, வீடு தங்களால்தான் ஆளப்படுதுன்னு எல்லோரையும் நம்ப வைக்கறதுதான். ஹா ஹா.

  • Sundar சொல்கிறார்:

   திரு. புதியவன் அய்யா ,

   உங்களுடைய கருத்துக்களை மட்டும் பதிவிட்டால் நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.

   இடைச்செருகல் மற்றும் பின்னூட்ட நகைப்புக்கள் வேண்டா.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.