“சட்டா பஜார்” சூதாட்டம் தெரியுமா…?


மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர், கான்பூர் போன்ற
வட இந்தியாவின் சில பெரிய நகரங்களில் புழங்கி வரும் சூதாட்டம்
“சட்டா பஜார்..”. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் புழக்கத்தில் இல்லை… ஒருவேளை மார்வாடிகள் நிறைந்திருக்கும் சென்னை சௌகார்பேட்டையில் மட்டும் இருந்தாலும் இருக்கலாம்… இது சட்டபூர்வமானது இல்லை…
ஆனால், அவர்களுக்கென்று தனி நெட்வொர்க் இருக்கிறது… ஒவ்வொரு ஊரிலும் தனிப்பட்ட ஆட்கள் நடத்துகிறார்கள்…சொன்னால், சொன்னபடி கொடுத்து விடுவார்கள்.

அவ்வபோது, சீசனுக்கு தகுந்தாற்போல் எதாவது டாபிக் கிடைக்கும்.
கிரிக்கெட் என்றால், எந்த நாடு, டீம் ஜெயிக்கும்…? எவ்வளவு ரன்
வித்தியாசத்தில்… யார் யார் சென்சுரி போடுவார்கள்…? இந்த மாதிரி
பல விஷயங்களுக்கு…

இப்போது தேர்தல் நேரம்… முன் கணிப்புகளை (pre poll survey), தேர்தல்
ஆணையம் தடை செய்திருப்பதால், தொலைக்காட்சிகள் இது குறித்து,
புள்ளி விவரங்களோடு விவாதிக்க முடியாது…

அந்த குறையை “சட்டா மார்க்கெட்” சூதாட்டம் நிறை செய்கிறது.

இப்போதைக்கு, அவர்கள் முக்கியமாக கருதுவது – மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் தேர்தல்களை…. இதை வைத்து சூதாட்டம் நடத்துகிறார்கள்….

அவர்கள் குறைவாக பணம் கொடுப்போம் என்று சொல்லும் டீம் /கட்சி
ஜெயிப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்று அர்த்தம்…

அவர்கள் தோற்கும் என்று தீர்மானிக்கும் கட்சி மீது நீங்கள்
பெட் கட்டினால், அதிகப்பணம் தருவதாக உத்திவாதம் உண்டு.

உதாரணமாக, ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் ஜெயிக்கும் என்பது
அவர்கள் கணிப்பு.

ஒருவர் காங்கிரசின் பேரில் ஒரு ரூபாய் கட்டினால், காங்கிரஸ்
ஜெயித்தால், அவர்கள் கொடுப்பதாகச் சொல்வது 40 பைசா தான்.

இதே பாஜகவின் மீது ஒரு ரூபாய் பெட் கட்டி, பாஜக
ஜெயித்தால் – அவர்கள் தருவதாகச் சொல்வது மூன்று ரூபாய்….!!!
( அதாவது பெட் கட்டுபவர் ரிஸ்க் எடுப்பதால், அதிகப்பணம்…! )
இந்த ரேட்/ரேஷியோ தேர்தல் தேதிவரை, அவ்வப்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றாப்போல் மாறிக்கொண்டே இருக்கும்…
நான் சொல்லியிருப்பது 3 நாளைக்கு முந்தைய ரேட்.

சட்டா பஜார் எதிர்பார்க்கும் முடிவுகளின்படி –

ராஜஸ்தானில் மிக சௌகரியமாகவும்,
மத்தியபிரதேசத்தில் சொற்ப மெஜாரிடியிலும் -காங்கிரஸ் ஜெயிக்கும்.

சட்டிஸ்கரில் பாஜக, கொஞ்ச வித்தியாசத்தில் ஜெயிக்கும்….

அவர்களது கணிப்புகள் கீழே –

ராஜஸ்தானில் –
காங்கிரஸ் – 128 முதல் 130 சீட் வரை…
பாஜக – 50 முதல் 52 சீட் வரை…

மத்திய பிரதேசத்தில் –
காங்கிரஸ் – 110 முதல் 115 வரை…
பாஜக – 100 முதல் 102 வரை…

சட்டிஸ்கரில் –

பாஜக – 43 முதல் 45 வரை…
காங்கிரஸ் – 38 முதல் 42 வரை…

.
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “சட்டா பஜார்” சூதாட்டம் தெரியுமா…?

 1. sirappu சொல்கிறார்:

  நீங்களும் பி.ஜே.பி தோற்கும் என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறீர்கள், ஆனால் நடப்பது என்னமோ ,
  மாறாக இருக்கிறது.
  இந்த தடவையாவது உங்கள் கனவு நனவாகிறதா என்று பாப்போம்.
  எவ்வளவு நாள் தான் நாமளும் EVM மெஷினையே சொல்லி சொல்லி சமாளிப்பது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் sirappu,

   // நீங்களும் பி.ஜே.பி தோற்கும் என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறீர்கள், ஆனால் நடப்பது என்னமோ ,
   மாறாக இருக்கிறது. //

   உங்கள் வார்த்தைகளில் கருத்துப்பிழை இருக்கிறது.

   பிஜேபி தோற்கும் என்று நான் சொல்லவில்லை…
   சட்டா பஜார் என்ன சொல்கிறது என்பதை விளக்கி இருக்கிறேன்.

   பிஜேபி – தோற்றால் நிச்சயம் எனக்கு மகிழ்ச்சியே…
   ஆனால் எனக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் ரிசல்ட் இருக்குமா – என்பது எனக்குத் தெரியாது…

   உங்களுக்கு மகிழ்ச்சியா….??? 🙂 🙂

 2. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  காமை ஐயா,
  சற்று சோகமான நிகழ்வு. நெல் ஜெயராமன் ஐயா இறைவனடி சேர்ந்துவிட்டார்.
  அவரை பற்றிய உங்கள் அறிவை சற்று பகிர்ந்தால் நம் வலை நண்பர்கள் தெரிந்து கொள்வோம்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே, (இன்றில்லாவிட்டாலும்)

   அவரை பீடித்திருந்த புற்றுநோயின் தாக்கம், அவரது முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்கெனவே உணரச்செய்திருந்தாலும் கூட,
   அவரது மறைவுச் செய்தி வருத்தம் அளிக்கவே செய்கிறது.

   அவசியம் அவரைப்பற்றி எழுதுவேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.