திருவாளர் …..வைகோவும் அவரது 50 லட்சமும்…!!!


50 லட்சம் குறித்து திருவாளர்கள் வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் கொடுத்த ஒரு தொலைக்காட்சி பேட்டி கீழே –

வைகோ மற்றும் திருமாவளவன் ஒன்றரை நிமிட பேட்டி –

– வைகோ 2006 தேர்தலின்போது, திருமாவுக்கு 50 லட்சம்
கொடுத்ததாகச் சொல்கிறார். திருமாவும் மிகவும் கண்ணியத்தோடு,
உதவினார் – உண்மை தானென்று ஒப்புக்கொள்கிறார்…

இதற்கு முன்னதாக காலையில், விருதுநகரில், வைகோ தனது கட்சிக்காரர்கள் நிறைந்த ஒரு திருமண விழாவில் பேசியது இது –

இந்த வைகோ மிகவும் ஆபத்தானவன்…
உரசிப்பார்த்தால் – எரித்து விடுவேன் ஜாக்கிரதை …

நான் தண்ணீர்ல் நடப்பவன்…
காற்றில் நடமாடுபவன் …
எங்கேன்னு எவனாலயும் கண்டுபிடிக்க முடியாது…!!!

யாரைப்பற்றி கூறுகிறார்….?
விசிக-வின் திரு.வன்னியரசு மற்றும்
திரு.திருமாவளவன் ஆகியோரை நோக்கி –

2006-ல் தானும், திருமாவளவனும் – அதிமுக கூட்டணியில் சேர்ந்து
சட்டமன்ற தேர்தலை சந்தித்தபோது நடந்ததை சொல்கிறார்…

தானே போன் செய்து திருமாவை தன் வீட்டுக்கு வரச்சொல்லி,
முதலில் ‘கைச்செலவு’க்கு 30 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், பின்னர்
மீண்டும் 20 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் சொல்கிறார்…

வைகோ – ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டார் என்பது
முறுக்கிக்கொண்டு நிற்கும்அவரது உடலையும், மொழியையும் –
body language -ஐயும் பார்த்தால் புரிகிறது…!!!

அவரது பயணம் திசை மாறப்போகிறது என்பது தெரிகிறது …
போவதற்கு முன்னர், திமுக கூட்டணியில் முடிந்தவரை
குழப்பம் ஏற்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார் என்பதும் புரிகிறது.

திரு.எ.ப.சாமி கூப்பிட்டிருக்கிறார் என்று ஜூவி சொல்கிறது…

உ.நாயகனும், பாட்டாளித்தலைவரும், தினகரன் சாரும், தானும் சேர்ந்தால்
ஒரு கலக்கு கலக்கி விடலாமே என்று பு.புயலுக்கு தோன்றுவதாக இன்னொரு செய்தி சொல்கிறது….

வைகோ எங்கே வேண்டுமானாலும் போகட்டும்…
“வளமுடன்” – வாழட்டும்…!!!

ஆனால், கைசுத்தம் என்று தனது இரண்டு கைகளையும்
விரித்துக் காட்டுகிறாரே…
அவை உண்மையிலேயே சுத்தமானவை தானா…?
அப்படியானால் சில கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லட்டும்….

50 லட்சம் ரூபாய் அளவிற்கு பெரிய தொகையை ஒருவர்
கையாண்டால், பெற்றுக் கொண்டாலும் சரி, கொடுத்தாலும் சரி –
அதற்கு கணக்கு வைத்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா…?

வருமான வரி அறிக்கையில் காட்டியிருக்க வேண்டுமல்லவா…?
தேர்தல் கமிஷனுக்கு இவர் 50 லட்சம் திருமாவுக்கு “கைச்செலவுக்கு”
கொடுத்தது தெரியுமா…? சட்டப்படி அறிவித்திருக்கிறாரா…?

கடன் வாங்கிக் கொடுத்திருந்தாலும் கூட,
அந்த கடனை இவர் திரும்ப அடைக்க – இவருக்கு வரும்படி எப்படி
கிடைத்தது…? எங்கிருந்து வந்தது…? என்ன தொழில் செய்து
சம்பாதித்தார்…?

அந்த வருமானத்தை இவர் அந்த ஆண்டிற்கான வருமான வரி
அறிக்கையில் (incometax return) – காட்டி இருக்கிறாரா…?

கைசுத்தமானவர் என்றால் இதை எல்லாம் ஆவணப்படுத்தி இருக்க வேண்டுமே… செய்திருக்கிறாரா…? காட்ட முடியுமா…?

இன்னொரு முக்கியமான விஷயம் –

– அந்த தேர்தலில் அண்ணன் வைகோ அவர்கள் கூட்டணி
வைத்திருந்தது அதிமுகவுடன் அல்லவா…?

அதிமுக – எப்போதும் கூட்டணி கட்சிகளை “நன்றாக”
கவனித்துக் கொள்ளும் என்று சொல்வார்களே…
அண்ணன் வைகோ, திருமாவை வேறு கூட்டணிக்கு அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.. எனவே, திருமாவுக்கும் சேர்த்து – அண்ணனை நன்கு கவனித்தி’ருப்பார்களே…!!!

அவர்கள் தேர்தலின்போது – “கைச்செலவிற்கு” என்று
எதையும் வைகோவிடம் கொடுக்கவில்லையா…? அதில் திருமாவிற்காக
என்று சொல்லி எதையும் அவரிடம் கொடுக்கவில்லையா…?

பதிலுக்கு அண்ணன் திருமாவை கவனித்தாரா இல்லையா ?
(ஒருவேளை அது தான் அந்த 30 + 20…. ஆ…?)

சிலரை சில நாள் ஏமாற்றலாம்…
பலரை பல நாட்கள் ஏமாற்றலாம்…
ஆனால், எல்லாரையும், எப்போதும் ……………. முடியுமா.. ?

தண்ணீரில் மிதப்பவர் …
காற்றில் நடமாடுபவர் … 🙂 🙂

– எல்லா வித்தைகளும் தெரிந்த அண்ணன் வைகோவுக்கு –
இது தெரியாத விஷயமா என்ன …. ???

.
————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திருவாளர் …..வைகோவும் அவரது 50 லட்சமும்…!!!

 1. Mani சொல்கிறார்:

  //ஆபத்தானவன்…
  உரசிப்பார்த்தால் – எரித்து விடுவேன் ஜாக்கிரதை …//

  Super Punch. Can be used by Thalapathy in the next Movie.

  • புதியவன் சொல்கிறார்:

   மணி – இதப் பாருங்க. சமீபத்தில்தான் ‘தளபதி’ என்று ஒருவரை, கேடி பிரதர் சொன்னதற்கு வீட்டில் கூப்பிட்டு தன் மகன் முன்னிலையில் காய்ச்சி எடுத்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர். நீங்க என்னடான்னா, வலிய அந்தப் பிரச்சனையில் தலையைக் கொடுக்கறீங்க.

   தமிழ்நாட்டில் ஒரு தளபதிதான் உ ண் டு. ஹா ஹா ஹா.

 2. புதியவன் சொல்கிறார்:

  அண்ணன் வைகோ 2006ல் உதவிகள் செய்தார். மறுக்கவில்லை. நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் – திருமா

  வெள்ளையடிக்கக்கூட காசு இல்லை. தாத்தா கட்டிய வீடு ஒன்றுதான். ஆனால் வைகோ ஆபத்தானவன் – வை கோ

  இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? வைகோ ‘கைச்சுத்தம்’ என்று சொன்னால் கைதட்ட இத்தனை அல்லக்கைகள் அவருக்கு இருக்கின்றனரே என்று ஆச்சர்யமாக இருக்கிறது. கொடுத்த 50 லட்சம் எங்கிருந்து வந்தது?

  பையனுக்கு எப்படி சிகரெட் ஏஜென்சி கிடைத்தது? பச்சைத் தலைப்பாகை எங்கே போச்சுது? ஜெ.விடம் வாங்கிக்கொண்டதற்கு நன்றி பாராட்டி ‘சகோதரி ஜெயலலிதா’, ‘புரட்சித் தலைவி’ என்று 55 பற்களையும் காண்பித்த வைகோ, ஜெ. மரணமடைந்தபிறகு திமுகவிடம் மடிப்பிச்சை ஏந்துவதற்காக ஒருமையில் ஜெ.வை அழைக்கவில்லையா? கையை குழாய்த் தண்ணீரில் கழுவிவிட்டால் ‘கை சுத்தம்’ என்று சொல்லிக்கொள்ளமுடியுமா?

  ஆனாலும் ஒன்று சொல்வேன். நான் ‘சிவாஜி’ அவர்கள் மறைந்த பிறகு அவர்போல் நடிக்க யார் உண்டு என்று நினைத்திருந்தேன். ‘அரசியல் மேடைகளில் வைகோவை அந்த சிவாஜியே தோற்கடிக்கமுடியாது, பேச்சில் அல்ல, நடிப்பில்’. இதைச் சொல்ல எனக்குத் தகுதி உண்டு. நான் சிவாஜியின் அரசியல் மேடைப் பேச்சினை பாளையங்கோட்டையில் பார்த்து/கேட்டு நொந்துபோனவன். ஹா ஹா.

  அரசியலில் வைகோவுக்கும் திருமாவுக்குமான தேவை என்ன? இரண்டு அல்லது மூன்று கட்சிகள் போதாதா தமிழகத்துக்கு?

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா ..! ஒரு உன்னத கலைஞன் , நடிப்பு இலக்கணத்தை வயைறுத்தவன் … அவனை இந்த பாழாப்பபாேன அரசியல்வாதிகளுக்கு உதாரணமாக குறிப்பதை தவிர்க்கலாம் ..அது மாேடிக்காக இருந்தாலும் … வைகாேவுக்காக இருந்தாலும் .. !

  // சிலரை சில நாள் ஏமாற்றலாம்…
  பலரை பல நாட்கள் ஏமாற்றலாம்…
  ஆனால் // இந்த இருவரையும் சார்ந்த
  பாவப்பட்ட மக்களை ஏமாற்றுவதில் இருவருமே கில்லாடிகள் தானே …?

 4. அரவிந்தன் சொல்கிறார்:

  வைகோவை நம்புகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே
  வருகிறது. முன்பெல்லாம் அவரை ஒரு ஹீரோவாக நினைத்தவர்கள், இப்போது
  ஒரு காமெடியனாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் அவர் தன்னை இன்னமும் மக்கள் நம்புகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.
  இப்போதும் அவருக்கு கூட்டம் வருகிறது; கைத்தட்டல் வருகிறது என்றால்
  அதற்கு காரணம, அவர் அண்ணன் கவுண்டமணியை இப்போதெல்லாம் imitate
  பண்ணுவதை ரசித்து தான்.
  இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படியே போனால்,
  வைகோ ஒரு சைக்கோ -வாகத்தான் நினைக்கப்படுவார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.