இதற்கு யார் பொறுப்பு….? தனது 29,035 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே வங்கியில் கடன் வாங்கும் நிலையில் H.A.L. நிறுவனம் –


ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆர்டர், பேப்பர் அளவில் இருக்கிறதா….
அல்லது பைப் லைனுக்குள் இருக்கிறதா என்கிற பிரச்சினையை பற்றி இங்கே நாம் பேசவே இல்லை…. இது தனி…!!!

இந்தியாவின் பெருமைச்சின்னம், (பங்களூரு-வில் அமைந்துள்ள) மத்திய அரசின் பாதுகாப்புத்துறை உற்பத்தி நிறுவனம்…. ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்… முக்கியமாக இவர்கள் தயார் செய்வது ராணுவ பயன்பாட்டிற்கான, மிக் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவை. ரஃபேல் பேரத்தில், அரசு நிறுவனமான இவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் அந்த இடத்தில் அ.அம்பானியின் நிறுவனம் புகுந்து கொண்டிருக்கிறது.

இதன் தலைமை நிர்வாகி திரு.மாதவன் அவர்கள் மனம் நொந்து போய் கூறுகிறார்-

கடந்த 30 ஆண்டுகளில் முதல் தடவையாக எங்களது ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் கூட கொடுக்கக்கூட வக்கற்ற நிலையில் நாங்கள் இன்று நிற்கிறோம். இந்த மாத சம்பளத்திற்கு வங்கியில் கடன் வாங்கித்தான் கொடுக்கிறோம்…?

ஏன் இந்த நிலை…?

இவர்கள் தங்கள் தயாரிப்புகளை முக்கியமாக சப்ளை செய்வது பாதுகாப்புத் துறைக்கு தான்…. ஆனால், அந்த துறையிலிருந்து இவர்களுக்கு வாங்கும் பொருட்களுக்கு பணம் ஒழுங்காக, உரிய நேரத்தில் வருவதில்லை என்கிறார்கள்.

இன்றைய தினத்தில், ராணுவத்திலிருந்து மட்டும் இவர்கள் கம்பெனிக்கு வர வேண்டிய கடன் பாக்கி மட்டுமே சுமார் 15,700 கோடி என்கிறார்.

இந்த நிறுவனத்தை திவாலாக்கி விட்டால், இதையும் அ.அ.யிடம் பொட்டலம் கட்டி கொடுத்து விடலாம் அல்லவா….?

கீழே இருக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழின் செய்திக்குறிப்பு – இதைப்பற்றி விவரமாக அலசுகிறது….

…………………………………………………………………..

Broke HAL borrows Rs 1,000 crore to pay salaries to employees
Saturday, January 05, 2019

http://www.defencenews.in/article/Broke-HAL-borrows-Rs-1,000-crore-to-pay-salaries-to-employees-582441

Highlights

Defence PSU Hindustan Aeronautics Ltd (HAL) has, for the first time in decades,
borrowed about Rs 1,000 crore to pay salaries to its employees.

The company is worried that projects could come to a standstill by April with no
money left to make fresh purchases or pay vendors.

TOI reported on October 10, 2018 that HAL’s cash reserves were about Rs 1,000 crore, just enough to pay its 29,000 employees for three months. Defence PSU Hindustan Aeronautics Limited (HAL), grappling with low finances has been, for the first time in many years, forced to borrow money to pay salaries to its employees. The company is worried of work coming to a standstill from April
with no money to make fresh purchases or even pay vendors.

Late on Thursday, HAL CMD R Madhavan told TOI: “Our cash in hand is in the
negative, we’ve had to borrow close to Rs 1,000 crore as an overdraft (OD). By
March 31 we’ll have minus of Rs 6,000 crore, which becomes unsustainable. We can borrow for day-to-day work, but not for project purchases.”

HAL is working on getting its OD limit extended from the present Rs 1,950 crore.
The major reason for the troubles is dues owed by its largest customer, Indian Air Force (IAF), which hasn’t paid up since September 2017. In October, the
outstanding dues, or receivables, was about Rs 10,000 crore.

As of today, pending dues are Rs 15,700 crore. And none of this is money we want as advance, it is for products and services we’ve delivered already,” Madhavan said.

Of the Rs 15,700 crore, about Rs 14,500 crore is due from IAF and the rest from
the Indian army, navy and the coast guard. The IAF has paid only Rs 2,000 crore
since September 2017. It’s present dues stand at Rs 14,500 crore.

HAL’s business is dependent on MoD, which has to allot budget to the armed forces, which in turn pay HAL for the business. “We’ve always been cash rich, this is the first time ever, or at least in the past two to three decades that we’ve borrowed money,” Madhavan said.

2k MSMEs Will Hurt ::

On the impact it has on HAL’s vendors, Madhavan said: “This is another big issue. There are more than 2,000 vendors dependant on us, all of them are MSMEs. My worry is that shortage of money will force us to keep dues, which will affect them badly. So far, we’ve managed to keep paying them.”

He said that all projects, including serviceability of aircraft, design projects such as LUH, LCH, will be affected. The firm, as TOI had reported earlier, is also staring at a depleting order book, which means it cannot rely on any advances from customers too.

.
———————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to இதற்கு யார் பொறுப்பு….? தனது 29,035 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே வங்கியில் கடன் வாங்கும் நிலையில் H.A.L. நிறுவனம் –

 1. Selvarajan சொல்கிறார்:

  // ‘ஹால்’ நிறுவனத்துக்கு நான்கு வருடங்களில் ரூ.7334 கோடி லாபம் // ….. 03 ஜனவரி 2019 அன்றைய செய்தி https://patrikai.com/hal-yields-a-profit-of-rs-7334-crore-in-4-years/ ….. இந்தளவு லாபம் ஈட்டிய ஒரு நிறுவனம் தற்போது ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றிற்கு சுமார் 1000 கோடி கடன் வாங்கும் நிலையில் இருப்பது வேதனையான செய்தி … இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியோடு // இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
  அதனை அவன்கண் விடல் // என்ற திருக்குறளுக்கு ஏற்ப நடக்காதது தான் காரணமா …? இந்த குறள் பாதுகாப்பு அமைச்சருக்கும் பொருந்துமோ …? இந்த துறையின் முன்னாள் அமைச்சர் — பிரான்சில் திரு மோடிஜி ரபேல் ஒப்பந்தம் போடும் போது இவர் மார்க்கெட்டில் மீன் வாங்கிக்கொண்டு இருந்தது கூட இந்த குறளுக்கு ஒத்து வருகிறதோ …?

  • அறிவழகு சொல்கிறார்:

   நண்பரே…!

   ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’

   சரியாக தானே நடந்து கொண்டிருக்கு.

   ஒவ்வொரு தன்னதிகார அமைப்புகளும் HAL போன்ற அரசு நிறுவனங்களும் அதன் பலமிழந்து ஊத்தி மூடத் தானே அவர் கண் விடப் பட்டிருக்கு….!

   இதில் என்ன சந்தேகம்…!?

   இன்னும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால்….!

   அடுத்த முறையும் அதிக பலத்தோடு எங்களை ஆட்சியில் அமரவையுங்கள். மொத்தமாகவே அதாவது இந்த நாட்டையே ஊத்தி மூடி காட்டுகிறோம்.

   ஆமாம்…!

 2. Mercy சொல்கிறார்:

  Very sad to know this.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mercy,

   பார்த்தேன். மிக்க நன்றி.
   இந்த டாங்குகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஒரு காலத்தில் நானும் பணி புரிந்தவன் என்கிற முறையில்
   இந்த விவகாரம் எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. அங்கே இன்னமும் தொடர்பில் இருக்கும் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்….அங்கே நடப்பவற்றைப்பற்றி நான் கேள்விப்படுவது நன்றாக இல்லை.
   இதற்கு மேல் இதைப்பற்றி விவரமாக நான் எழுத முடியாதவனாக இருக்கிறேன்.

   இந்த தேசத்தை கடவுள் காப்பாற்றுவார்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. அறிவழகு சொல்கிறார்:

  ஐயா,

  சுகமாக இருக்கிறீர்களா?

  இரண்டு நாட்களாக காணோம். அதான் கேட்டேன்.

  பூர்ண சுகத்தோடு நீங்கள் நன்றாக இருக்க இறைவனை இறைஞ்சுகிறேன் ஐயா.

 4. Selvarajan சொல்கிறார்:

  அய்யா ….! கடந்த ஒரு சில நாட்களாக தங்களைப்பற்றி எதுவும் அறியப்படமுடியவில்லை …இடுகைகளும் இல்லை …. நலமாக இருப்பீர்கள் …நலம் பெறுவீர்கள் என்கிற நம்பிக்கை எமக்கு உண்டு ….எல்லாம் அவன் செயல் …. என்றென்றும் தங்களின் நலம் நாடும் செல்வராஜன் …!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன் மற்றும் அறிவழகு,

   உங்கள் அன்பிற்கும் அக்கறைக்கும் நான் மிகவும் கொடுத்து வைத்தவன்.

   உண்மை தான்… கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லை. ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் சேர வேண்டி
   கட்டாயப்படுத்தப்பட்டேன்… எனக்கு அதில் உடன்பாடு இல்லாததால், வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று
   சொல்லி விட்டேன்…பூரண ஓய்வில், சிகிச்சையில் இருக்க வேண்டும் என்கிற கண்டிஷனோடு ஒத்துக்கொண்டார்கள்.
   இப்போது கொஞ்சம் தேவலை… இறைவன் துணையோடு, இன்னும் 3-4 நாட்களில் normal – க்கு வந்து விடுவேன் என்று நம்புகிறேன்…

   என்னாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை… உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பும், ஆர்வமும், இறைவனின் கருணையும் துணையிருக்க –
   விரைவில் பழைய வேகத்திற்கு திரும்பி விடுவேன் என்று நம்புகிறேன்.

   மீண்டும் – உங்கள் அன்பிற்கும், கருணை கொண்டு விசாரித்ததற்கும் மிக்க நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Mercy சொல்கிறார்:

  Thanks for your response. Take care.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.