எந்த சாமி கேட்டது – தனக்கு வைரத்தில் கிரீடமும், தங்கத்தில் தேரும் வேண்டுமென்று …..?


பட்டினியோடு கிடப்பவனுக்கு முதலில் சோறு போடு… அப்புறம்
என்னைப் பார்க்கலாமென்று அந்த சாமியே சொல்கிறது….

எது தர்மம்…?
ஒரு மனிதனுடைய கண்ணீரைத் துடைப்பதை விட சிறந்த தர்மம் எது…?

பிரதிபலனை எதிர்பார்க்காத –
நிபந்தனைகள் அற்ற தர்மம் தான் சரியானது.

எத்தனை ஹிந்து கோயில்கள்,
ஆஸ்பத்திரி கட்டி இருக்கின்றன…?
ஏன் – கட்ட முடியாதா…? …கட்டக்கூடாதா…?

காலத்திற்கு ஏற்றபடி தர்மத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம்
நமக்கு இருக்கிறது…

சமூகத்திற்கு மிகவும் அவசியமான கருத்துகளை –
பளிச்சென்று சொல்கிறார் – சொல்வேந்தர் திரு.சுகி சிவம்…

சாமிக்கு செய்வதைக் காட்டிலும் முக்கியமானது சக மனிதருக்கு செய்வது…
நூற்றுக்கு நூறு நான் ஏற்கிறேன் அவர் கருத்தை…
ஏற்கெனவே, நான் இந்த வழியில் தான் போய்க்கொண்டிருக்கிறேன்…!

….

.
—————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to எந்த சாமி கேட்டது – தனக்கு வைரத்தில் கிரீடமும், தங்கத்தில் தேரும் வேண்டுமென்று …..?

 1. புதியவன் சொல்கிறார்:

  ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்துதான். பாரதியின் ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என் நினைவுக்கு வருகிறது.

  செண்டிமெண்ட் என்ற வலையின் காரணமாக இத்தகைய குரல்கள் ஓங்கி எழுவதில்லை. ஆன்மீகப் பெரியவர்கள் இதற்கு வழிகாட்டவேண்டும். அப்போதுதான் இது சாத்தியமாகும்.

  சக மனிதன் பசித்த வயிறோடு இருக்கும்போது, கடவுளுக்குச் செய்கிறேன் என்று சொல்வதில் என்ன பயன் விளைந்துவிட முடியும்? சங்கர நேத்ராலயாவும் அதன் நிறுவனர் டாக்டர் பத்ரிநாத்தும் என் நினைவுக்கு வருகின்றனர்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நிறைய பேர் பழகி விட்டார்கள்.
  சாமிக்கு செய்வது; கோவிலுக்கு செய்வது என்று ஒரு வழக்கமாக வைத்துக்கொண்டு விட்டார்கள். அத்தகையோர் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நிச்சயம் இத்தகைய கருத்துக்களில் இருக்கும் உண்மைகளை புரிந்து, ஏற்றுக் கொள்வார்கள்.

  காலம் மாறிக்கொண்டு வருகிறது. நான் இப்போதெல்லாம் நிறைய தம்பதிகளை பார்க்கிறேன். தங்கள் திருமண நாளை – wedding day – கொண்டாடும்போது, அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு, உணவு, இனிப்புகள் கொடுப்பதை வழக்கமாக கொள்பவர்களை….இத்தகைய பழக்கங்கள் அதிகரிக்க வேண்டும்.

  சக மனிதர்களுக்கு உதவி செய்வதே மிகப்பெரிய தர்மம்
  என்கிற இத்தகைய கருத்துகள் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

 3. அறிவழகு சொல்கிறார்:

  கடவுள் எல்லாம் பக்தர்களிடம் காணிக்கை கேட்க மாட்டார். பக்தர்களுக்கு அருள் புரிபவர் அவர்கள் தம் தேவையை நிறைவேற்றும் இடத்தில் இருப்பவர் தான் கடவுள்.

  அவர் பக்தர்களிடம் தேவைப்படுபவராக இருந்தால் அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்.

  கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்தை ஆராய்ந்தோமானால் அதனால் பயன் அடையும் மனிதன் ஏற்படுத்தியதாக தான் இருக்கும். அந்த காணிக்கைகள் கடவுளிடம் சென்று சேருகின்றன என்று யாரும் நிரூபிக்க முடியுமா? வெற்று நம்பிக்கையை தவிர.

  கடவுள் தன் படைப்புகளிடம் தேவையற்றவராக இருந்தால் தான் அவர் முழுமை பெற்றவராக இருப்பார்.

  கடவுள் சில கட்டளைகள் இட்டு நடைமுறை படுத்தினால் அது சக மனிதர்கள் பயன் அடையும் விதத்தில் இருக்கும். தனக்கு தேவை என்ற அடிப்படையில் இருக்காது.

 4. அறிவழகு சொல்கிறார்:

  ஐயா,

  ///எது தர்மம்…?
  ஒரு மனிதனுடைய கண்ணீரைத் துடைப்பதை விட சிறந்த தர்மம் எது…?///

  சத்தியமான வார்த்தைகள்.

  ///பிரதிபலனை எதிர்பார்க்காத –
  நிபந்தனைகள் அற்ற தர்மம் தான் சரியானது.///

  இதுவும் சத்தியமான வார்த்தை தான். ஒரு சிறு மாற்றத்துடன்.

  அது இந்த உலகில். மறு உலகில்… இந்த தன்னலமற்ற பிரதிபலனை எதிர் பார்க்காத எந்தவிதமான தர்மமும் இரட்டிப்பாக கடவுள் நாடினால் பனமடங்காக பலன் கிடைக்கும்.

  தர்மம் தலைகாக்கும். அது இங்கு இல்லை என்றாலும் நிச்சயம் மறுமையில்.

  • அறிவழகு சொல்கிறார்:

   தர்மம் பலவகை உண்டு.

   பலர் நம்பி இருப்பது போல், பொருள் கொண்டு செய்வது மட்டும் அல்ல தர்மம்.

   அது பலவகைப்படும். உதாரணமாக,

   பிறருக்கு தீங்கு விளைவிக்கும் நிலையில் பாதையில் கிடக்கும் கல்லையோ முல்லையோ அகற்றினால் கூட அது சிறிய அளவில் ஒரு தர்மம் தான்.

   பிறர் நலம் பெற பிரார்த்திக்கும் பிரார்த்தனை கூட ஒரு தர்மம் தான்.

   இது போல் பிறருக்கு உதவும் அனைத்தையும் சொல்லலாம்.

   அதில் முக்கியமான நிபந்தனை ஒன்று இருக்கிறது.

   அதாவது, ஐயா ஏற்கனவே சொன்னது தான், பிரதிபலனை எதிர்பார்க்காத தர்மம், அது பொருளாகவோ எந்தவிதமான உதவியாகவோ இருக்க கூடாது. மேலும், புகழ், பதவி, பட்டம் இதுபோன்ற எதுவும் எதிர் பார்க்காததாக இருக்கனும்.

   அது உலகாயாத எந்த பலனையும் எதிர் பார்க்காத, உளச்சுத்தியுடன் கடவுளுக்காக மட்டும் கடவுள் மறுமையில் இதற்கு கூலி தருவார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் செய்யும் தர்மமே சிறந்த தர்மம்.

 5. Muthu Selvam சொல்கிறார்:

  I am from a village in Pudukkottai district; they celebrated Kumbabishegam for the village temple few days back in a very grand manner. Totally about Rs.1.5 crore was spent, all the money collected forcibly from the community people; it is done by indirect black mail by visiting the houses in groups and a veiled threatening by some in the community who are rich; the rich don’t spend from their packet, they fleece others ad take the credit for the Kumbabishegam and because it is “God’s service’ nobody questions the account and if you ask, you are ‘blacksheep’; The temple itself has got lot of properties all over the village and outside. When I asked why not we put to use the properties to better use for the public, by creating parks, playgrounds old age homes common to all, I am advised not to speak and nowadays I find very few of my community relates to me; this is the stark Indian ground relaity; sometimes I think ‘ why not somebody drop a nuclear bomb’ on our heads.

 6. Muthu Selvam சொல்கிறார்:

  Every temple in our country has got lot of wealth; donated over centuries by childless couples, left by unknown and taken over by temples, many criminals/ usurpers to atone their sins; all these assets are wasted and mismanaged by useless temple authorities, both Govt and mutts and so called trusts

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.