என்று இந்த நிலை மாறும் …???


இன்றைய சூழல் குறித்து – இன்று மாலை நீண்ட நேரம் என்னுடன் தொலைபேசியில் விவாதித்து மனம் வருந்தினார் – நான் மிகவும் நேசிக்கும் என் நண்பர் ஒருவர்….

அந்த உரையாடலின் பிரதிபலிப்பு இந்த பதிவு…..

நடப்பவை நல்லவையாக இல்லை…
என்று திருந்தப் போகிறது இந்த சமூகம்…?

.
—————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to என்று இந்த நிலை மாறும் …???

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்த நிலை இனி மாறாது கா.மை சார். இதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. அதனைத் தீர்ப்பது அரசியல் ரீதியாக சாத்தியம் இல்லாத விஷயம். ‘வெளிநாட்டுப் பணம்’, ‘மதம் மாற்றுவதை கட்சி மாற்றம் செய்வதுபோல முனைந்து செய்வது’ என்பதுதான் முக்கியக் காரணி. வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையர் கூட்டத்தில் இந்து மதத்துக்கு எதிராகப் பேசுபவர்களும், ‘சிறுபான்மையினர்’ என்று சொல்லியே அவர்களுக்காக பெரும்பான்மையினரின் நலனை விட்டுக்கொடுப்பவர்களும் இன்றைய நிலைமைக்குக் காரணம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // இந்த நிலை இனி மாறாது கா.மை சார்.//

   நான் அப்படி நினைக்கவில்லை புதியவன்… மத உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஒவ்வொரு சம்பவத்திற்கும் பின்னாலுள்ள நிஜத்தை பாரபட்சமில்லாமல் மக்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யும் காலத்தில் இதற்கு நிச்சயம் விடிவு பிறக்கும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி –

    வெவ்வேறு இனத்தினர், வெவ்வேறு மதப்பின்னணி உடையவர்கள் வாழும் சிங்கப்பூரில் மதக்கலவரங்கள், மதசார்பான அத்துமீறல்கள் நடந்ததாக என்றாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா…?

    மதத்தையும், அரசியலையும் தனித்தனியே பார்க்கக்கூடிய தலைவர்களும், அரசு நிர்வாகமும் அமையும் காலத்தில் இது நிச்சயம் சாத்தியமாகும்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 2. அரவிந்தன் சொல்கிறார்:

  புதியவன்

  சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் இடையே தொடர்ந்து பகையை வளர்த்துக் கொண்டே இருப்பதன் மூலம், தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் அரசியல் கட்சியிகளின் சூழ்ச்சி உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா ? அல்லது தெரிந்தும் அதை கண்டுகொள்ள
  விருப்பமில்லையா ? கடந்த 4 வருடங்களாக மட்டும் சிறுபான்மை, பெரும்பான்மை மக்களிடையே தூண்டி விடல்கள் அதிகரித்திருப்பது உங்களுக்கு புலப்படவில்லையா ? இல்லை அதே வெறிக்கு நீங்களும் ஆளாகி விட்டிருப்பதும் ஒரு காரணமா ?

 3. Selvarajan சொல்கிறார்:

  என்று இந்த நிலை மாறும் …??? மாறாது என்பதற்கு இது போல பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன — நடந்துகொண்டும் இருக்கிறது — அப்படித்தானே …? ஓட்டு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பிரித்தாளும் பேர்வழிகள் இருக்கும் போது எப்படி இந்த நிலை மாறும் …? காணொளியில் கடைசியாக வந்தாரே ஒருவர் — அவரை பழி தீர்த்தது போதாது என்று மறைந்து பல ஆண்டுகள் ஆனபின்னும் அவரது உருவப் படத்தை சில நாட்களுக்கு முன் சுட்டு -சுட்டு வெறுப்பைக்காட்டிய கும்பல் இருக்கும் வரை — என்று இந்த நிலை மாறும் …???

 4. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! // ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலக தலையீடு: சிக்கியது ஆதாரம்! // https://www.minnambalam.com/k/2019/02/08/27 —-தாங்கள் இடுகை இட்டு ஒருசில நாட்களில் இப்படி ஒரு செய்தி — பெட்டிக்கு கொடுத்த திரு ராம் அவர்கள் வெளியிட்டுள்ள ஆதாரம் … இதன் போக்கு …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   காலையில் ஹிந்து நாளிதழை பார்த்தவுடனேயே நினைத்தேன்… இன்று தொலைக்காட்சிகளுக்கு வேட்டை தானென்று.

   ராகுல் காந்தி சீரியசாக பேட்டி கொடுத்து விட்டார். தவறாமல் ஊடகங்களிடமும் சொன்னார் – இதை முன்னெடுத்துச் செல்வதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று… ஆனாலும், எனக்கு இந்த ஊடகங்களைப்பற்றி பெரிதாக நம்பிக்கை எதுவும் இல்லை… ஒவ்வொரு ஊடகத்தையும், ஒவ்வொரு விதத்தில் பலவீனப்படுத்தி, முடமாக்கி வைத்திருக்கிறது மத்தி……

   பார்ப்போம்…..!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   என்.ராம் அவர்களிடத்தில் இன்னும் சில துருப்புச் சீட்டுகள் இருக்குமென்று தோன்றுகிறது…சரியான நேரத்தில், தவணைகளில் அவை வெளியிடப்படக்கூடும்.

   .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.