ரஃபேல் ஊழல் நடந்தது எப்படி ..? ஹிந்து என்.ராம் தமிழில் விவரமாகச் சொல்கிறார்……


HAL (ஹிந்துஸ்தான் விமான தொழிற்சாலை) பங்களூரில், ஃப்ரென்சு விமான தயாரிப்பு நிறுவனத்தோடு சேர்ந்து கூட்டாக – 118 ரஃபேல் விமானங்கள் தயாரிப்பது என்று கிட்டத்தட்ட ( 95 % ) பேசி முடிக்கப்பட்டு விட்டதை மோடிஜி ஏன் ரத்து செய்தார்..?

அ.அம்பானிக்கு சலுகை காட்டியது எந்த விதத்தில் ஊழலாகும்…?

126 விமானங்கள் வாங்குவது என்கிற முந்தைய அரசின் தீர்மானத்தை மோடிஜி தன்னிச்சையாக 36 என்று மாற்றியது ஏன்…? யாருக்காக…?

தனக்கு வேண்டிய ஒரு தனி நபர் – தொழிலதிபருக்காக – ஏற்கெனவே
முந்தைய அரசால் எடுக்கப்பட்ட முடிவை மோடிஜி மாற்றினாரா…?

பாதுகாப்பு அமைச்சருக்கு தெரியாமல், வெளியுறவுத்துறை
அமைச்சருக்கும், செயலாளருக்கும் தெரியாமல், யாரையும் கலந்தாலோசிக்காமல், கேபினட் ஒப்புதலும் இல்லாமல் மோடிஜி
திடீரென்று, அவசர அவசரமாக ஃப்ரான்சில் இருக்கும்போது – ஏப்ரல், 2015 -ல் – முடிவை மாற்றி அறிவித்தது ஏன்..?

மோடிஜி தன்னிச்சையாகவ் முடிவை அறிவித்து ஒரு வருடம் கழித்து 2016 -ல் கேபினட் ஒப்புதல் பெற்றது முறையா…?

விமானத்தின் விலையில் 41 % உயர்த்தப்பட்டது எப்படி ..?

இப்படி பல விவரங்களைப்பற்றி தமிழில் தெளிவாக விவாதிக்கிறார்
ஹிந்து ஆங்கில நாளிதழைச் சேர்ந்த ஆசிரியர் திரு.என்.ராம் அவர்கள்.

நக்கீரன் செய்தித்தளத்திற்காக அவர் பேட்டி கொடுத்த வீடியோவை,
விமரிசனம் வலைத்தள வாசகர்களின் வசதிக்காக கீழே தந்திருக்கிறேன் –
(நக்கீரனுக்கு நன்றி…! )

.
—————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ரஃபேல் ஊழல் நடந்தது எப்படி ..? ஹிந்து என்.ராம் தமிழில் விவரமாகச் சொல்கிறார்……

 1. Mani சொல்கிறார்:

  ஏற்கெனவே இதுகுறித்து பல கட்டுரைகள் வெளிவந்திருந்தாலும், ராம் அவர்கள் தமிழில் தந்திருக்கும் இந்த பேட்டி விஷயத்தை இன்னும் தெளிவாக்குகிறது.

 2. sirappu சொல்கிறார்:

  ஊழல் எனும் பட்சத்தில் , இதில் எவ்வளவு லட்சம் கோடிகள் யார் யாரிடம் பரிமாறின என்று தெரிய படுத்தினால் இந்த வழக்கு சூடு பிடிக்கும்.
  வெறும் ஊழல் , ஊழல் என்று ராகுல் காந்தியை போல் நாம் கூக்குரலிட்டு மட்டும் கொண்டிருந்தாள் போதாது.
  மக்களிடம் இந்த ஊழல் ஈடுபடாமலேயே பொய் விடும் ஆபத்து உள்ளது.

 3. Mani சொல்கிறார்:

  // மக்களிடம் இந்த ஊழல் ஈடுபடாமலேயே பொய் விடும் ஆபத்து உள்ளது. //

  எடுபடாது என்றால் பாஜக ஜால்ராக்கள் சந்தோஷப்பட வேண்டியது தானே ?
  ஏன் அலற வேண்டும் ?

 4. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  But the important issue in elections should be EMPLOYMENT and FARMERS DISTRESS. CORRUPTION will be the third issue. Rahul should focus on the 1st two more.

 5. bandhu சொல்கிறார்:

  unfortunately, both nakkeeran and hindu ram do not have any credibility!

 6. Mercy சொல்கிறார்:

  KM Sir please read this and explain to those people who ask for proof https://minnambalam.com/k/2019/02/08/27

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.