அதிமுக+பாஜக கூட்டணி – அபூர்வமாக தினமலர் சொல்லும் – “உண்மை”


தீவிரமான பாஜக ஆதரவு நாளிதழ் தினமலர் என்பதை வாசகர்கள் அறிவார்கள்… ஆனால், அபூர்வமாக சில சமயங்களில், தினமலர் உண்மை நிலையை பிரதிபலிப்பதும் உண்டு… சர்குலேஷனை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் அதற்கான ஒரு முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்…

இன்று தினமலர் பிரசுரித்துள்ள, அத்தகைய ஒரு கார்ட்டூன் கீழே –

…………


—————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அதிமுக+பாஜக கூட்டணி – அபூர்வமாக தினமலர் சொல்லும் – “உண்மை”

 1. Selvarajan சொல்கிறார்:

  இது அபூர்வமான ..? இல்லை நடைமுறை எதார்த்தம் …! இதிலும் தினமலரின் கெத்து தான் பிரதிபலிக்கிறது — பார்த்தீர்களா நாங்கள் எம்மாம் பெரிய ஆட்கள் என்கிற ” மமதையை ” குறிக்காதோ …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   உண்மை தான்.. நீங்கள் சொல்கிற கோணத்திலும் இதைப் பார்க்கலாம்…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  கார்ட்டுனைப் பார்த்து ‘என்ன ஆணவம்’ என்று நற நறத்ததில் என் பற்கள் தேய்ந்ததுதான் மிச்சம். மோடி ஜெ.வைத் தேடிவந்தார். சாப்பிட்டார். சென்றுவிட்டார் (வெறும் கையுடன்).

  நான் அதிமுக இருவரில் ஒருவராக இருந்தால் (ஊழல் செய்திருந்தாலும்), தைரியமாக தொலைக்காட்சியில் தோன்றி, ‘சிபிஐ, அமலாக்கப் பிரிவு என்று மிரட்டி நாடாளுமன்ற சீட்டைக் கேட்கிறார்கள். நாங்கள் கூட்டணியை மறுத்துவிட்டோம். தமிழகத்துக்கு என்று இதுவரை ஒன்றையும் மத்திய அரசு உருப்படியாகச் செய்யாததால். அதனால் பழிவாங்கும் விதமாக மத்திய அரசு எங்கள் மீது நடந்துகொண்டாலும் கவலை இல்லை. எங்களுக்கு தமிழக மக்களின் மானம், அதிமுக கட்சியின் கொள்கைகள்தான் முக்கியம்” என்று பேசியிருப்பேன். செரிக்க கஷ்டமான செய்தி/கார்ட்டூன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.