திருவாளர் ஸ்டாலின் – கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத ……


“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்
வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்டாராம்….”

இன்னும் நிறைய உவமைகள் கூறலாம்.

தனது சுயநலம் கருதியாவது – நாவடக்கம் இல்லாமல் பேசினால், முதல்வர் பதவி என்பது என்றுமே எட்டாத கனியாகிப் போய் விடும் என்பதை திருவாளர் ஸ்டாலின் புரிந்துகொள்வது, அவருக்கும் -அவரை நம்பி இருப்பவர்களுக்கும் நல்லது.

ஒரு திருமண வீட்டில் கலந்து கொண்டு அவர் பேசும்போது
எடுக்கப்பட்ட காணொளியின் ஒரு பகுதி இது –

இஸ்லாமியர் ஒருவரின் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு
மேற்கண்டவாறு உளறியவரின் போக்கு –

இவரை திருமணத்திற்கு அழைத்து, அநாவசியமாக பலர் மனதை நோகச்செய்து விட்டோமே என்று அந்த இல்லத்தவரையே நினைக்கச் செய்துவிட்டிருக்கும்.
முதலில் – இஸ்லாமிய திருமண சம்பிரதாயங்களைப் பற்றி ஸ்டாலின் முழுவதுமாக அறிவாரா…? இவரது பகுத்தறிவு ஸ்கேலுக்குள் அது வருமா…?
அந்த மண்டபத்தில் இருந்தவர்கள் யாருமே ( திமுகவினரையும் சேர்த்து தான் ) ஸ்டாலினது பேச்சை ரசித்ததாகத் தெரியவில்லை.

இந்த அரைவேக்காட்டு பகுத்தறிவுவாதி, முதலில் சில உண்மைகளை
புரிந்துகொள்வாரா…?

தமிழர்களின் திருமணத்தில் சமஸ்கிரிதம் எதற்கு என்று ஒரு இஸ்லாமிய திருமண விழாவில் கேட்டவர், அந்த தமிழ் இஸ்லாமிய திருமணத்தில் எத்தகைய சம்பிரதாயங்கள் நடைமுறையில் உள்ளன என்பதை அறிவாரா…? திருக்குர்ஆன் அரபி மொழியில் மட்டுமே ஓதப்படுகிறது என்பதை அறிவாரா…?.

அம்பேத்கர் அவர்கள் முற்றிலுமாக பின்பற்றிய பௌத்த மதத்தில் திருமணங்கள்
சமஸ்கிரித மொழி உச்சாடனங்களுடன் நடத்தி வைக்கப்படுகின்றன
என்பதை அறிவாரா…?

யூதர்கள் இன்று வரை ஹிப்ரூ மொழியை சம்பிரதாய மொழியாக
பயன்படுத்துகிறார்கள்…. தமிழக சர்ச் சடங்குகளில் ஆங்கிலம், பிரெஞ்சு,
லத்தீன் மொழிகள் எல்லாம் கூட பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிவாரா..?

பார்சி சமூகத்து மக்கள் குஜராத்தியும், மராத்தியும் பேசினாலும் வழிபாட்டுக்கு அவெஸ்தன் மொழியைத் தான் பயன்படுத்திகிறார்கள்..
அவரவர்க்கு, அவரவர் சம்பிரதாயங்கள்… அதை குறை கூற இந்த
அரை பகுத்தறிவாதிக்கு என்ன தகுதி இருக்கிறது…?

தன்னுடைய சிந்தனைகளை – கொள்கைகளை, முதலில் – இவரால், தன்னுடைய இல்லத்தில் நடைமுறைப்படுத்த முடியுமா…?
தன்னுடைய சொந்த இல்லத்தில் நடைமுறைப்படுத்த முடியாத விஷயங்களை எல்லாம் இவர் ஊருக்கு ஏன் உபதேசம் செய்ய முனைகிறார்…?

ஊர் ஊராக, புண்ணியத்தலங்கள் மற்றும் கோவில்களைத் தேடித் தேடிச்சென்று, ஹோமங்களையும், யாகங்களையும், பூஜைகளையும் செய்து வரும் இவரது தர்மபத்தினியாரிடம் என்றாவது இவர் இந்த முறையில் பேசியிருக்க வாய்ப்பு இருக்கிறதா…?

சொல்லி இருந்தால் – கையிலிருந்த கரண்டியோ, அப்பளக்குழவியோ,
எதுவாக இருந்தாலும் பறந்திருக்குமே…

“வீட்டிலே எலி… வெளியிலே புலி..” என்று அனுபவப்படாமலா மக்கள்
பழமொழிகளை உருவாக்கினர்…?

இன்னுமொரு முக்கியமான கேள்வி ….

கீழே ஒரு காணொளி…

இவரது கோபாலபுரம் இல்லத்தில், இவரது தந்தையார் ஆனந்தமாக
அனுபவித்தபடி இருக்க – வேதகோஷங்கள், அதே சம்ஸ்கிருத மொழியில்
தான் – ராக தாளத்துடன் உச்சரிக்கப்படுவதை பாருங்கள்….

இவை ஒலிக்கப்பட்ட சமயத்தில், இவர் தனது தந்தையிடம் –

” தந்தையே… இவர்கள் உங்களுக்கும் எனக்கும் புரியாத, தெரியாத
மொழியில் எதையெதையோ சொல்கிறார்களே… இவர்கள் என்ன
சொல்கிறார்கள் என்பது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை…
உங்களுக்காவது புரிகிறதா..?

குறைந்த பட்சம் இவர்கள் உங்களை வாழ்த்துகிறார்களா அல்லது
வசைபாடுகிறார்களா என்றாவது தெரியுமா…..?

நமக்கு சுத்தமாகப் புரியாத, தெரியாத ஒரு மொழியில் இவர்கள்
வாழ்த்துகிறார்களா அல்லது வசைபாடுகிறார்களா என்று கூடத்தெரியாத
நிலையில் இவர்களை ஏன் அனுமதிக்கிறீர்கள்…? ”

– என்று கேட்டாரா…?

அல்லாத பட்சத்தில் – ஊராருக்கு மட்டும் ஏன் உபதேசம்……?

.
—————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

32 Responses to திருவாளர் ஸ்டாலின் – கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத ……

 1. kandaswamy சொல்கிறார்:

  வேதாரணியம் N.V.காமராஜ் இல்ல மணவிழா சென்னைஅண்சாலை (தேனாம்பேட்டை) ஹோட்டல் ஹையாத்தேவில் 10-9-2017ல் நடைபெற்ற திருமணத்தில் தலைமை தாங்கி பேசியது…அது ஒரு சுயமரியாதை திருமணவிழா. இதை இஸ்லாமிய திருமணம் என்று வேண்டுமென்றே பொய் செய்தியை பரப்பியது இந்து முன்னணி இராம கோபாலன் இந்த திருமணம் இஸ்லாமிய திருமணம் என்பதை நிரூபிக்க சொல்லி இராம கோபாலனை கேளுங்கள்….நிருபிக்க தவறினால் அவர் ஒரு பொய்யர் என்று உணர்ந்து கடந்து செல்லுங்கள்.For a wedding function people from all religeons will attend…it is normal….u can see majority of hindu women in the crowd..please note the nadhaswara group with instruments,,, sitting in the video….. normally muslims do not engage nadhaswaram for their wedding

 2. kandaswamy சொல்கிறார்:

  I think you are underestimating stalin …..of course i do not claim that he is an ideal political leader…No normal politician will talk bad about one religion in the crowd of other religious people… I wonder how you also believed this nonsense story ( propagated with criminal intention of communal war) and took time to write your opinion…May be your hatred towards stalin took the first stage instead of your wisdom.. I am sorry sir…please verify the facts…if you are not sure about the fact please delete this post….it is just a request …purely based on my regards to you..Thank you.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கந்தசாமி,

   இந்த வீடியோவை நான் யூட்யூபில் பார்த்தேன்.. அது பிப்ரவரி 3-ந்தேதி பதிவேற்றப்பட்டிருக்கிறது. இதில் திரு.ஸ்டாலின் அவர்களே இந்த கருத்துகளை நேரடியாக கூறி இருக்கிறார் என்பதால் இதற்கு வேறு எந்த ஆதாரமும் தேவையே இல்லை.

   இது செய்தியாக – dailyhunt, kathirnews, tamil hindu உட்பட பல தளங்களில் வெளிவந்திருக்கிறது…

   தனிப்பட்ட முறையில் விமரிசனங்கள் செய்துவரும் பெண்மணி கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து விவரமாக பதிந்து, அது http://www.newstm.in -ல் வெளிவந்திருக்கிறது.
   தமிழ் ஹிந்து நாளிதழில், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் இதுபற்றி விவரமாக ஒரு அறிக்கையே வெளியிட்டிருக்கிறார் – https://tamil.thehindu.com/tamilnadu/article26174483.ece

   அதிலிருந்து ஒரு பகுதி –
   ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், வருங்கால முதலமைச்சர் கனவிலும் இருக்கும் ஸ்டாலின், மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகப் பேசியிருப்பது அவரது முதிர்ச்சியின்மையையும், அவரிடம் தலைமைப் பண்பு இல்லாததையும் நன்றாகவே வெளிப்படுத்திவிட்டது.

   நாத்திகவாதமும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும் பேசி மட்டுமே அரசியலில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பது பரிதாபகரமானது.

   இந்து மதத்தினர்கள் மட்டுமல்லாது, உண்மையான நாட்டுப்பற்றும், மத நல்லிணக்கத்தை விரும்புபவர்களும் எந்த மதத்தினராய் இருந்தாலும், இதுபோல் ஒரு மதநம்பிக்கையைப் புண்படுத்தும் அநாகரிகத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

   இந்து முறைப்படி திருமணம் செய்பவர்கள் திமுக உறுப்பினராக இருக்கக்கூடாது என்றோ, அவர்கள் திமுக சார்பில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ, அமைச்சர்களாகவோ ஆக முடியாது என்றோ ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா?

   மேலும், மந்திரம் உச்சரித்து திருமணம் செய்யும் மரபைப் பின்பற்றுபவர்கள் திமுகவிற்கு இனிமேல் வாக்களிக்கவேண்டாம் என்று கூறுவதற்கும் திமுக தலைவர் தயாரா என்ற கேள்வியையும் முன் வைக்கிறேன்.

   நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களையும், இயற்கையையும் தொன்றுதொட்டு வணங்கி வரும் இந்து மக்கள் அக்னி சாட்சியாக திருமண பந்தத்தில் இணைபவர்கள். தரையில் அமர்ந்து ஹோமம் வளர்த்து மந்திர உச்சரிப்புக்கு இடையே திருமணம் செய்யும் முறை அனைத்தையும் புனிதமாகக் கருதும் கோடிக்கணக்கான மக்களின் மரபைக் கேலி செய்பவர் மதச்சார்பற்றவர் என்று எண்ண என் மனம் மறுக்கிறது.

   இனிமேலாவது நல்ல தலைமைப் பண்போடு மத உணர்வுகளைப் புண்படுத்தாத வகையில் பேசுவதை ஸ்டாலின் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்த விரும்புகிறேன்” என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

   ————————

   சரத்குமாரின் மேற்படி அறிக்கை பிப்ரவரி 4-ந்தேதியே தமிழ் ஹிந்துவில் வெளிவந்திருக்கிறது…. அது தவறான கருத்து என்றால், இதுவரை
   ஸ்டாலினோ, மற்ற திமுக தலைவர்கள் எவருமோ மறுப்பு தெரிவிக்காதது ஏன்..?

   இந்த நிலையில் தான் நான் மேற்படி இடுகையை வெளியிட்டேன்.

   உங்கள் கூற்றுப்படி, அது இஸ்லாமியர் இல்ல திருமணம் அல்ல. ஹிந்து மதத்தினர் இல்லம் என்றே வைத்துக் கொள்வோம்… அப்போது கூட, திரு.ஸ்டாலின் பேசியது எந்த விதத்தில் நியாயப்படுத்தக்கூடியது…?

   யாருடைய பழக்க வழக்கங்களையும் கேலி செய்ய, அவருக்கு யார் உரிமை கொடுத்தது…?

   இஸ்லாமியர் இல்ல திருமணம் – என்கிற ஒரு கருத்தை மட்டும் நீக்கி விட்டு -பார்த்தாலும், நான் எழுப்பியுள்ள
   கேள்விகள் அனைத்தும் இப்போதும் அப்படியே பொருந்துகிறது.

   அனைத்து மதத்தவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி எழுதி வருபவன் நான்.
   என்னுடைய நேற்றைய “என்று இந்த நிலை மாறும்…?’ அதில் லேட்டஸ்ட்.

   ஸ்டாலின் போன்ற அரைகுறை பகுத்தறிவாளர்களின் பேச்சும் – மத, இன மோதல்கள் உருவாக ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

   நான் மேலே சொல்லியிருக்கும் கருத்துகள் எந்த விதத்தில் தவறானவை என்று நீங்கள் விளக்குங்கள் பார்க்கலாம்…

   இந்த பேச்சை நீங்கள் எப்படி நியாயப்படுத்துவீர்கள் என்பதையும் எனக்கும்
   இந்த தள வாசகர்களுக்கும் விளக்குங்கள் பார்க்கலாம்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்…. நான் குறிப்பிடணும்னு நினைத்தேன்.

    சரத்குமாரின் அறிக்கையைப் படித்தேன் (அன்றே). எவ்வளவு மெச்சூர்டா எழுதியிருக்கார்னு ஆச்சர்யப்பட்டேன். சில சமயம் கிருஷ்ணசாமி
    (புதிய தமிழகம்) அவர்கள் கூட ரொம்ப மெச்சூர்டா பேசுவார்.

 3. kandaswamy சொல்கிறார்:

  At the outset i clarify i am neither wise as you are nor i am an advocate of stalin..Anyway i will try to answer
  :1. இந்து முறைப்படி திருமணம் செய்பவர்கள் திமுக உறுப்பினராக இருக்கக்கூடாது என்றோ, அவர்கள் திமுக சார்பில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ, அமைச்சர்களாகவோ ஆக முடியாது என்றோ ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா?—- There is one important difference between DK and DMK Ondre Kulam Oruvane Devan is the policy of DMK– PTR PlanivelRajan held some important responsibiliies in TN govt during Kalaignars period… ( I hope you will accept the fact that Kalaignar was a rationalist )
  2. யாருடைய பழக்க வழக்கங்களையும் கேலி செய்ய, அவருக்கு யார் உரிமை கொடுத்தது…? Please read Ramanujar Nootranthathi , 99th stanza…..If you can accept this ,why cant you accept stalins KELI ,KINDAL & NAIYAANDI ..http://www.ahobilamutt.org/us/data/text/shri-ramanuja-nootrandhadhi-tamil.pdf
  3.நாத்திகவாதமும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும் பேசி மட்டுமே அரசியலில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பது பரிதாபகரமானது….— There are so many other issues for which he is working and of course rationalism is one important policy. .https://www.thehindu.com/news/national/tamil-nadu/not-bothered-by-campaign-against-me-on-social-media/article26197678.ece..
  4. DK school of thought have clearly established the meaning of these mantras in the way as stalin spoke…. And if you remember Parasakthi film dialaue —Seerthirutha thirmanthirku 2 maalai, oru sorpozhivaalar pothume… economic advantage than conducting yagam , rituals, & purohithar fee etc… If you can be neutral minded you can always take stalins talk as normal, .. I stop here as i need to do some other work… Once again i say that i am not wise as you are….But in the case of DMK you are pre defined… I am sorry to say this sir.

  • புதியவன் சொல்கிறார்:

   @கந்தசாமி சார்.

   /Kalaignar was a rationalist // – கந்தசாமி சார்… இது நகைச்சுவை இடுகை இல்லையே. ஏன் நீங்கள் நகைச்சுவையாக எழுதுகிறீர்கள். திருப்பதி கணேசனே திரும்பிப்போ என்று யார் சொன்னார்கள்? யார் ‘நெற்றியில் இரத்தப் பொட்டு’ என்று கேலிபேசியது? யார் புட்டபர்த்தி சாயிபாபாவை வீட்டிற்கு வந்து அருளாசி செய்யச் சொன்னது? கருணாநிதி என்றுமே தீயசக்திதான். தனக்கொரு கொள்கை, மக்களைப் பிளவுபடுத்த வெளியில் ஒரு கொள்கை என்றே வாழ்ந்து மறைந்தவர் அவர்.

   ராமானுச நூற்றந்தாதி மட்டுமல்ல, சைவத் திருமுறைகளிலும் அவர்களது பிரிவுதான் மேம்பட்டதாகச் சொல்லியிருக்கிறது. திருமாலையிலும் சமணர்கள் பவுத்தர்களின் கொள்கைகள் சரியில்லை என்றுதான் சொல்லியிருக்கிறது. அதற்கும் ஸ்டாலின் சொன்னதற்கும் என்ன சம்பந்தம்? ஸ்டாலின் மாதிரி தலைவர்கள், திமுக மாதிரி கட்சிகள் தமிழகத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவை மட்டுமல்ல, அவர் பேசியதை வைத்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றம் பதிவு செய்யப்படவேண்டும். இவரைப் போன்றவர்கள் இருந்தால் ஏன் ஹெச்.ராஜா போன்ற ஆட்கள் பேசமாட்டார்கள்? இவருக்கும் ஹெச்.ராசாவுக்கும், எஸ்.வி.சேகருக்கும் என்ன வித்தியாசம்? என்ன ஹெச்.ராசா ‘நமக்கு நாமே’ என்று நாடகம் போடவில்லை. நாற்பதாயிரம் கோடி அறக்கட்டளையைத் தன் குடும்பத்துக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை.

   /There are so many other issues for which he is working // – ஸ்டாலின் வேலை பார்ப்பது எப்படா முதலமைச்சர் நாற்காலியில் அமர்வோம் என்ற ஒற்றை அஜெண்டாவுக்காகத்தான். தமிழக நலத்துக்காக என்று சொன்னால், ஸ்டாலினே அதைப் பார்த்துச் சிரிப்பார். (அவர்தானே ஏதோ ஞாபகத்தில் கையெழுத்துப் போட்டேன் என்று சொன்னது, தஞ்சையை புஞ்சையாக்கும் என்று தெரிந்தும்) இப்போ அவருடைய அஜெண்டா, முதலமைச்சர் நாற்காலையைக் கைப்பற்றணும், உதயநிதியை இளைஞரணி செயலாளராக ஆக்கணும். கனிமொழியை சரியான சந்தர்ப்பத்தில் கழட்டி விட்டுவிட்டு சபரீசனை அந்த இடத்துக்குக் கொண்டுவரணும். வேறு ஏதேனும், தமிழர்களுக்குத் தெரியாத அஜெண்டா இருந்தால் கண்டுபிடித்துச் சொல்லவும்.

   //economic advantage than conducting yagam// – அடடா… சிக்கன வழியா? டெளரி கொடுக்காத திமுக திருமணங்களை நீங்கள்தான் காண்பியுங்களேன் பார்ப்போம். சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் கட்சிக்கு எவ்வளவு பணம் அழுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா . திருமணத்துக்கு கட்சித் தலைவர் வரணும்னா வரவேற்பு, கட்சிக்குப் பணம், வரும் தலைவர்களுக்குப் பணம் என்று அத்தனை செலவு இருக்கும். இதுல எகனாமிகலாம்… நல்ல கதை வசனம் எழுதுறீங்க சார்.

 4. kandaswamy சொல்கிறார்:

  It is very natural when you talk in a weeding function that too seerthirutha kalyanam,, you need to talk about the advantages of seerthirutha kalyanam as well as the reasons for the evolution of these seerthirutha kalyanam… so his comments are unavoidable and natural….. As his comments are made inside a marriage hall ,,, let us take it easy and proceed further..Thankyou.

 5. kandaswamy சொல்கிறார்:

  In the whole episode ,,the intention of the people who mentioned that it was a muslim wedding is the most cruel part… INTENTION IS CRUEL…. Please condemn that intention… other part of circulating this 2 year old video is political ,,, least bothered about this.

 6. Rajagopalan சொல்கிறார்:

  கந்தசுவாமி,

  அப்புறம் அந்த முக்கியமான பாயிண்ட் “வீட்டுல எலி – வெளில புலி” – அதை டச் பண்ணாமலே விட்டுட்டீங்களே.

 7. bandhu சொல்கிறார்:

  இந்த விஷயத்தில் சரத் குமார் அறிக்கை மிகச் சரியானது. கந்தசாமி அவர்கள் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லக் காணோம்?

 8. செங்கொடி சொல்கிறார்:

  இது தவறாக உள்நோக்கத்தோடு பரப்பப்படும் காணொளிக் காட்சி என்றும், எந்த உள்நோக்கத்தோடு இந்த காணொளி பகிரப்படுகிறதோ அந்த உள்நோக்கத்தோடு இந்த கட்டுரையும் ஒத்துப் போகிறது என்றும் என்னால் நிரூபிக்க முடியும். என்னுடைய கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிக்க முன்வந்தால். இந்த கட்டுரையை எழுதியவரோ அல்லது இத்தளத்தின் பின்னூட்டமிடும் வாசகரோ என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முன் வந்தால், அவர்கள் மூலமாகவே நிரூபிக்கிறேன். தயாரென்றால் கூறுங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செங்கொடி,

   நீங்கள் ஒரு கட்சி சார்புடையவர்…பகுத்தறிவுவாதி என்று பறைசாற்றிக்கொள்பவர்.. எனவே உங்கள் விளக்கம் எப்படி
   எதைச் சார்ந்து இருக்குமென்று நீங்கள் சொல்வதற்கு முன்னாலேயே எங்களுக்கு புரிகிறது.

   இந்த காணொளியை யார், எந்த காரணத்திற்காக யூட்யூபில் பதிவேற்றினார்கள் என்பது குறித்து எனக்கு தெரியாது.

   ஆனால், நான் ஏற்கெனவே நண்பர் கந்தசாமிக்கு கூறியது போல், திரு.ஸ்டாலின் பேசியது இஸ்லாமியர்
   இல்லத் திருமணம் அல்ல என்று வைத்துக்கொண்டாலும் கூட – அவர் பேசியது தவறு தான்… அபத்தம் தான்.

   எந்த வகையில் தவறு என்பதை இடுகையும், கந்தசாமிக்கான என் விளக்கமும் கூறுகின்றன…

   அது உங்களுக்கு போதவில்லையென்றால் – திரு.சரத்குமாரின் அறிக்கையை படியுங்கள்… சிந்தையை ஒருபட்சமாக வைத்துக்கொள்ளாமல், திறந்த கண்ணோட்டத்துடன் படித்தால் புரியும்…

   எத்தனை நாட்களாக இந்த விமரிசனம் தளத்தைப் படித்து வருகிறீர்கள்…? நீங்கள் ஒரு கட்சி சார்பில்லாதவராக
   இருந்திருந்தால், என்னைப்பற்றியும், என் எழுத்தைப்பற்றியும் புரிந்திருக்கும்..இப்படியெல்லாம் இங்கே எழுதி இருக்க மாட்டீர்கள்…

   இதற்கு முன்னால் இங்கே பின்னூட்டங்கள், விவாதங்களில் கலந்து கொள்ளாமல், திடீரென்று இதில் மட்டும் தலையிட்டதில் உங்கள் உள்நோக்கம் என்ன…? உங்கள் சார்பு நிலையை பாதுகாக்க வேண்டுமென்பது தானே…?

   என் நோக்கம் என்ன, லட்சியம் என்ன – என்பதைப்பற்றி பல வருடங்களாக இந்த விமரிசனம் தளத்தைப்
   படித்து வரும் வாசக நண்பர்கள் நன்கு அறிவார்கள்.

   உங்களை நீங்களே பெரிய மேதாவி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.
   உங்களிடமிருந்து சான்றிதழ் எதையும் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை…

   – உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • அரவிந்தன் சொல்கிறார்:

    காவிரிமைந்தன் சார்,

    பிரமாதமான பதில். போலி பகுத்தறிவாளர்களுக்கு பரிந்து பேசும் அரசியல் அடிமைகள் நமக்கென்ன புத்தி சொல்வது ? குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் அடிமைகளுக்கு வேறு என்ன தெரியும். தேர்தலுக்கு தேர்தல்
    கூட்டணி மாறி 2 எம்.பி.சீட், 5 எம்.எல்.ஏ. சீட் எவர் கொடுத்தாலும் அவர் பின்னால் நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டு அலைவதும், அவர்களை ஆதரித்துப் பேசுவதும் தானே இவவ்ர்களது கொள்கை ?

 9. Saravanan சொல்கிறார்:

  Rajeshwari Priya (PMK Party) very bold and nice fitting reply to Stalin on this very same issue.

 10. Selvarajan சொல்கிறார்:

  அய்யா…! இடத்திற்கு ஏற்றவாறு நடந்துக் காெள்வது … ஆலயங்களில் பரிவட்டம் கட்ட தலையை வசமாக காட்டுவது … நெற்றியில் இடும்வரை சும்மா இருந்து பின் முகத்தை துடைப்பது பாேல நீக்க முற்படுவது … இதெல்லாம் பகுத்தறிவே பக்தியாகி விட்டவர்களின் செயல்தானே..இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை … !

 11. அரவிந்தன் சொல்கிறார்:

  இந்த சகோதரி மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும், அர்த்தமுள்ள கருத்துகளோடும் பேசுகிறார். அவர் சொல்வது போல், ஸ்டாலின் கிண்டல் செய்வது ஹிந்து மதத்திற்கு மட்டுமல்ல, இஸ்லாமிய-கிறிஸ்தவ மத பழக்க வழக்கங்களுக்கும் எதிரானது தான். இந்த ஆசாமி ஓட்டுப் பிச்சை கேட்டு தெருத்தெருவாக வலம் வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை. அப்போது மக்கள் இவரை நேரடியாகவே கேள்வி கேட்க வேண்டும்.

  இவரது சம்சாரம் கோவில் கோவிலாக போய், சீக்கிரமாக திமுக தலைவர் சீட் காலியாக வேண்டுமென்றும் இவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றும் “சத்ரு சம்ஹார யாகம்” செய்ததை இவர் encourage செய்து கொண்டு தானே இருந்தார். மற்றவர்களுக்கு புத்தி சொல்வதற்கு இவருக்கென்ன தகுதி இருக்கிறது ? ரகசியமாக யாகம் செய்வதும், வடக்கே இவரைத்தெரியாத இடங்களில் போய் சாமி கும்பிடுவதும், புட்டபர்த்தி சாய்பாபா காலில் விழுவதும், இங்கே பகுத்தறிவுவாதி வேடம் புனைவதும் சுத்த ஏமாற்று வேலை. இவர் பொது இடங்களில் இந்த மாதிரியெல்லாம் பேசினால், மக்கள் அங்கேயே குழுக்களாக சேர்ந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து, மக்களை ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது என்பதை உணர்த்த வேண்டும்.

 12. செங்கொடி சொல்கிறார்:

  நண்பர் காவிரிமைந்தன்,

  நான் ஒரு கட்சி சார்ந்தவன், பகுத்தறிவுவாதி என பறைசாற்றிக் கொள்பவன் எனவே என்னுடைய பதில் உங்களுக்கு தேவையில்லை. அப்படி எடுத்துக் கொள்ளலாமா?

  இந்தக் காணொளியை யார் எந்த நோக்கத்துக்காக வெளியிட்டார் என்று தெரியாது, தெரிந்து கொள்ளவும் ஆர்வமில்லை. ஆனாலும் உங்கள் கருத்தைச் பொது வெளியில் சொல்வீர்கள். அதற்கான எதிர்வினை வந்தால் – நீங்கள் நடுநிலைவாதி (அப்படி ஒன்று இல்லை என்றாலும் கூட) என்றால் ஏன் நம்முடைய கருத்து அந்த இன்னொரு சாராரோடு ஒத்துப் போக வேண்டும்? அது சரியானது தானா? என பரிசீலித்துப் பார்க்க மாட்டீர்கள். அப்படி எடுத்துக் கொள்ளலாமா?

  சரத் குமாரின் அறிக்கையை படித்தால் எனக்கு திறந்த கண்ணோட்டம் வந்து விடும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை உங்களுக்கு அவ்வாறான திறந்த கண்ணோட்டம் வந்திருந்தால் என்னுடைய கருத்து என்ன அதைக் கூறுங்கள் அதை நான் பரிசீலிக்கிறேன் என்று கூறியிருக்கலாம். அல்லது, ஏன் இப்படி எழுதியிருக்கிறீர்கள்? முதலில் உங்கள் கேள்விகளை கேளுங்கள் பதில் பின்னர் வரும் என்று கூட பதில் கூறியிருக்கலாம். மாறாக நான் மேதாவியா இல்லையா? என ஆய்வு செய்திருக்கிறீர்களே ஏன்? நீங்கள் பதட்டப்பட்டிருக்கிறீர்கள் என்று நான் எடுத்துக் கொள்ளலாமா?

  ஏன்? இந்த தளத்தை இதுவரை படித்திருக்கவில்லை என்றாலோ அல்லது இதற்கு முன்னர் எந்த பதிவுக்கும் பின்னூட்டம் இட்டிருக்கவில்லை என்றாலோ தற்போதைய இந்தப் பதிவில் கருத்து கூறும் உரிமை எனக்கு இல்லாமல் போய் விடுமா?

  உங்கள் பதிவு. உள்நோக்கத்துடன் அந்த காணொளியை பகிரும் கூட்டத்துடன் ஒத்துப் போகிறது என குற்றம் சாட்டியிருக்கிறேன். நீங்கள் நடுநிலைவாதியாக இருப்பதாக கருதினால், எந்த தீய உள்நோக்கத்தோடும் என்னை என் இடுகையை முடிச்சுப் போடாதீர்கள் என்றல்லவா எழுதியிருக்க வேண்டும். இதற்கு மாறாக என்னுடைய கருத்து இங்கு தேவையில்லை என்று பொருள்படும்படி எழுதியிருக்கிறீர்களே ஏன்?

  ஐயா, உங்களின் வயதும் அனுபவமும் எனக்கு இல்லை. அதனை உங்களின் பல இடுகைகள் மூலம் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அதுபோலவே நடுநிலமை எனும் பெயரால் ஒரு பக்கச் சார்பான உங்கள் தன்மையையும் புரிந்து கொண்டிருக்கிறேன். அதன் வெளிப்பாடு தான் மேற்கண்ட என்னுடைய பின்னூட்டம்.

  இப்போதும் அதையே தான் சொகிறேன். என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் அறிவுநேர்மையுடன் பதிலளிக்க முன்வந்தால் உங்கள் மூலமே உங்களின் ஒருபக்கச் சார்பை உங்களுக்கே புரிய வைக்கிறேன். நீங்கள் ஆயத்தமாக இருந்தால் கூறுங்கள், நான் நேரம் ஒதுக்குகிறேன்.

  எல்லாம் சரி. மாற்றுக் கருத்து இருந்தால் நேரடியாக இங்கே விவாதிக்கலாமே என்று ஏன் நேர்மையுடன் பதில் கூறுவீர்களா? என்று கேள்வி எழுப்ப வேண்டும் என்று கேள்வி எழுப்புவோர் கீழுள்ள விபரங்களைப் பார்க்கலாம். ஏற்கனவே இத்தளத்தில் ஒரு விவாதத்தில் பங்கேற்று அதில் நேர்மையின்மையை எதிர் கொண்டதாலேயே இவ்வாறு கேள்வி எழுப்பும் தேவை எழுந்தது.

  முன்னர் நடந்த விவாதம்: https://vimarisanam.wordpress.com/2016/06/03/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7-%E0%AE%AA%E0%AE%BF/

  அதற்கான என்னுடைய இடுகை:https://senkodi.wordpress.com/2016/06/10/kavirimainthan-debate/

  நன்றி.

 13. செங்கொடி சொல்கிறார்:

  கடந்த என்னுடைய இடுகையிலிருந்து ஒரு மேற்கோள்

  “தன்னுடைய வர்க்கம், அது கற்பிக்கும் பண்பாடு, அதிலிருந்து எழும் நிலைப்பாடு இந்தக் கோட்டிலிருந்து அவர்கள் இறங்க விரும்புவதே இல்லை. ஏனென்றால் சமூகம் அவ்வாறு இறங்குவதற்கான தேவையை கொண்டிருப்பதில்லை. தெளிவாகச் சொன்னால் ஆளும்வர்க்கத்தின் அங்கமாக இருக்கிறார்கள். பாட்டாளி வர்க்கம் மட்டுமே தன்னுடைய நிலை எதுவானாலும், எப்போதும் அதை மீளாய்வு செய்வதற்கு தயாராக இருக்கிறது. அதன் மூலம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு புரட்சிகரமாய் இயங்குகிறது. இவ்வாறு இல்லாதவர்களால் இப்போது மட்டுமல்ல எப்போதும் பதில் கூற முடியாது”

  அன்று சொன்னது, எப்படி இன்றைக்கும் பொருந்திப் போகிறது பாருங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கடிவாளம் பூட்டப்பட்ட குதிரை, வேறு எந்த திசையிலும் பார்க்கக்கூடிய வாய்ப்பையும், சுதந்திரத்தையும் இழந்து விடுகிறது…. அதே போல் தான் ஒரு கட்சியில் தீவிரமாக பணியாற்றுபவர்கள், எப்பேற்பட்ட சூழ்நிலையிலும்,
   தங்கள் நிலை தவறு என்று தெரிந்தாலும் கூட – கட்சியின் கண்ணோட்டம், வியூகம், பார்வையிலிருந்து
   அவர்களால் வெளி வர முடியாது. மாறுபட்ட கருத்துகளை சரியென்று தெரிந்தாலும் கூட ஒப்புக்கொள்ள
   அவர்களால் இயலாது.

   எனவே, அப்படிப்பட்டவர்களுடன் – விவாதம் நடத்துவதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது…?
   அவர்களின் கண்ணோட்டம், சிந்தனை -ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருக்கிறது.
   மாறுபட்ட கோணங்களில் சிந்திக்க சக்தியும், சுதந்திரமும் இல்லாதவர்களுடன் விவாதிப்பதால் எந்த பயனும்
   விளையப்போவதில்லை…

   என்றாவது, நீங்கள் ஏற்றுக் கொண்ட கட்சிக்கு மாறான கருத்துகளையும் ஒப்புக்கொள்ளும் சுதந்திரமும்,
   மனப்போக்கும் உங்களுக்கு ஏற்பட்டால் – அன்று இங்கே வாருங்கள்.. நிறைய விவாதிப்போம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 14. செங்கொடி சொல்கிறார்:

  ஐயா காவிரி மைந்தன் அவர்களே,

  நான் தெளிவாக இப்படி அறிவித்திருக்கிறேன்,

  \\ பாட்டாளி வர்க்கம் மட்டுமே தன்னுடைய நிலை எதுவானாலும், எப்போதும் அதை மீளாய்வு செய்வதற்கு தயாராக இருக்கிறது. அதன் மூலம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு புரட்சிகரமாய் இயங்குகிறது //

  இதன் பொருள் என்னவென்று அறிந்திருக்கிறீர்களா? புரியவில்லை என்று நீங்கள் வெளிப்படுத்த விரும்பினால் பரவாயில்லை நேரடியாகவே சொல்கிறேன். என்னுடைய கருத்துகள், நிலைபாடுகள் மீது கேள்வி எழுப்பப்பட்டால் அதை பரிசீலித்து சரி என்றால் ஏற்கவும் தவறு என்றால் தள்ளவும் நான் தயங்கியதே இல்லை. இனியும் தயங்கப் போவதும் இல்லை. நான் எந்த ஓட்டுக் கட்சியையும் சார்ந்தவனில்லை.

  நீங்களும் அவ்வாறு தானா? உங்கள் கருத்துகள் மீது பகிரங்கமாக குற்றச் சாட்டு வைத்திருக்கிறேன். அதை பரிசீலிப்பதை விட்டு விட்டு என்னை தவிர்ப்பதிலேயே குறியாக இருக்கிறீர்களே ஏன்? நான் அளித்திருப்பது போன்ற உறுதிமொழியைத் தானே உங்களிடம் கேட்கிறேன். ஏன் உங்களால் கொடுக்க முடியவில்லை.

  ஏனென்றால்
  நீங்கள் கடிவாளம் பூட்டப்பட்ட குதிரையைப் போல் இருக்கிறீர்கள்.
  நீங்கள் உங்கள் நிலை தவறு என்று தெரிந்த பின்பும் தங்களை பரிசீலிக்க மறுப்பவராக இருக்கிறீர்கள்.
  நீங்கள் உங்கள் நிலைத்துவிட்ட கண்ணோட்டத்திலிருந்து பார்வையிலிருந்து வெளிவர மறுப்பவராக இருக்கிறீர்கள்.
  நீங்கள் உங்கள் சிந்தனைகளை சீல் வைத்து விட்டவராக இருக்கிறீர்கள்.
  அதனால் தான் நீங்கள் மீளாய்வு செய்ய முடியாதவராக இருக்கிறீர்கள்.

  ஆனால் உங்களைப் போல் உங்களோடு விவாதிக்க விரும்பவில்லை என்றெல்லாம் கூற மாட்டேன். ஏனென்றால் என்னிடம் தெளிவு இருக்கிறது வெளிப்படைத் தன்மை இருக்கிறது, மதிக்கும் பண்பு இருக்கிறது. அதானால் உங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன். உங்களோடு விவாதிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். நேரமையாக பதில் சொல்கிறேன் என்று கூறுங்கள் அதாவது நீங்கள் கூறியது போலவே உங்கள் நிலைபாடுகளை பரிசீலனை செய்வதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறுங்கள். உங்கள் மூலமே உங்கள் நிலைப்பாடுகளை தவறு என உணர வைக்கிறேன்.

  இன்னும் கூடுதலாக உங்கள் நிலை தவறு என்று சுட்டிக் காட்டப்பட்ட பின்பும் அதை நேர்மையாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ள நீங்கள் முன்வராமல் சமாளிக்கவே பார்த்திருக்கிறீர்கள் என்பதை இந்த இடுகையிலிருந்தே நிரூபிக்க முடியும்.

  இதை மறுக்க நினைத்தால் .. .. .. என்னுடனான விவாதத்தை ஒரு சவாலாகவே எடுத்துக் கொள்ளுங்களேன். என்ன ஆயத்தமாகிறீர்களா? அல்லது வசனம் மட்டும் தான் பேசத் தெரியும் என ஒதுங்கிவிடவோ சவடால் விடவோ போகிறீர்களா?
  பார்க்கலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   – விதண்டாவாதத்திற்கு ஒரு எல்லையே இல்லையா…?

   முகப்பிலே கம்யூனிஸ்ட் தலைவர்கள் படத்துடன், “கம்யூனிசமே வெல்லும்” என்கிற வார்த்தை –

   என்னைப்பற்றி – என்று சொல்கிற இடத்தில் –

   // என்னைப்பற்றி சொல்வதற்கு குறிப்பிடும்படியாய் எதுவுமில்லை. பொதுவுடமை தத்துவத்தில் ஈர்ப்பு உண்டு. உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வு. அதனால் மகஇக எனும் மாக்சிய லெனினிய இயக்கத்தில் செயல்படுபவன்.‌

   நான் இறந்தபின் என்மேல் செங்கொடி போர்த்தப்படுமாயின் அதுவே இவ்வுலகில் நான் வாழ்ந்ததன் அடையாளமாய் இருக்கும்.‌ //

   ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருப்பதில் நான் எந்த தவறும் காணவில்லை.
   ஒரிஜினல் கம்யூனிஸ்டு தோழர்களை நான் மிகவும் மதிக்கிறேன்.

   ஆனால் தன் வலைத்தளத்தின் தலைப்பில் இப்படி எல்லாம் எழுதிவிட்டு,

   இங்கு இந்த தளத்தில் எழுதியிருக்கும் பின்னூட்டத்தில் –

   // நான் எந்த ஓட்டுக் கட்சியையும் சார்ந்தவனில்லை.//

   -என்று கூசாமல் பொய் சொல்பவர்களை நான் எள்ளளவும் மதித்து விவாதிக்கத் தயாரில்லை.

   நண்பரே மீண்டும் உறுதியாக கூறுகிறேன்….
   நீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் இதையே தான் கூறுவேன்.

   கட்சிகளுக்கு அடிமையாக இருப்பவர்களிடம், விவாதிப்பதால் எனக்கோ, இந்த தளத்து வாசகர்களுக்கோ
   எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை.

   இனியும் இங்கே வந்து என் நேரத்தையும், மற்ற நண்பர்களின் நேரத்தையும் வீணடிக்காமல், நீங்கள் கூட்டணி
   சேரப்போகும் கட்சிக்கு உங்களால் ஆன பணியை வேறு எங்கேயாவது போய் பாருங்கள்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 15. Mani சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  தன் பெயரிலேயே செங்கொடி என்று போட்டுக்கொண்டு, முகப்பிலேயே அவர் கட்சியின் சின்னத்தையும் போட்டுக்கொண்டு, // நான் எந்த ஓட்டுக் கட்சியையும் சார்ந்தவனில்லை // என்று கதைக்கிறார்.
  உங்களுக்கு ஆலோசனை கூறுவதற்கு மன்னிக்கவும்;
  இந்த மாதிரி வெட்டி ஆசாமிகளை தயவுசெய்து encourage செய்யாதீர்கள்.

  • Mani சொல்கிறார்:

   அடுத்த மாதமே கூட்டணி முடிவானவுடன், ஸ்டாலினுக்கு ஓட்டு கேட்டு
   இவரெ திமுக கொடியையும் சேர்த்து தூக்குவார்.

 16. mekaviraj சொல்கிறார்:

  உங்கள் கட்டுரையின் கருத்தோடு உடன்படுகிறேன். இது போன்ற பேச்சுக்களின் மூலம் மக்களிடமிருந்து விலகுகிறார்.

  இது இஸ்லாமிய திருமணம் இல்லை என்று சிலர் ஆதாரமாக சொல்லும்போது , உங்கள் கட்டுரையை சற்றே திருத்தலாம். உங்களுக்கே தெரியும் – இது போல ஏதாவது கிடைக்காதா என்று சிலர் நாக்கை தொங்க போட்டுகொண்டு அலைவது.

 17. kkannan1973 சொல்கிறார்:

  ஐயா செங்கொடி அவர்கள் உங்களை துல்லியமாக எடை போட்டுள்ளார். உங்கள் தவறை ஒத்துக்கொள்ளதான் வேண்டும். இந்த காணொளியை பதிவு செய்ததும் பொதுவெளியில் பரவவிட்டதும் உள்நோக்கத்துடந்தான்.
  பதிவுசெய்தவரின் பின்புலம் தாங்கள் அறியாதது. அவரே இதன் உரையை எழுதினார். ஸ்டாலின் அவரது உள்நோக்கம் அறியாது பேசிவிட்டார். இது ஸ்டாலின் தவறில்லை.
  .ஒளி பதிவு செய்தவரை கைது செய்யும்வரை மறியல் போராட்டம் செய்யப்போகிறோம்.

  • புதியவன் சொல்கிறார்:

   ஸ்டாலினுக்கு முட்டுக் கொடுக்க எல்லாரும் கிளம்பிடறாங்க., அவருக்கு திறமை இல்லை, அவரது நோக்கம் தவறு என்று அறிந்தும். ஸ்டாலினுக்கு லக்தான். கெயில் பேப்பரில் கையெழுத்துப் போட்டுப் பழகினேன், இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தூங்கிவிட்டேன், நான் பேசியதை எனக்குத் தெரியாமல் எடுத்துவிட்டார்கள், சட்டசபையில் சட்டையைக் கிழித்தார்கள் என்று கலர் கலராக ரீல் விட்டாலும், “ஆமாம் ஜிங்சக், ஆமாம் ஜிங்சக்” போட ஆட்களும் ரெடியாத்தான் இருக்காங்க.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அய்யா kkannan1973,

   நீங்கள் யார்…? இவ்வளவு நாட்களாக இந்த வலைப்பக்கமே உங்களை பார்த்ததில்லையே…? நீங்கள் எப்படி இங்கே திடுதிப்பென்று செங்கொடிக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்து குதித்தீர்கள்….? செங்கொடியின் இன்னொரு அவதாரமா…?

   // ஸ்டாலின் அவரது உள்நோக்கம் அறியாது பேசிவிட்டார். இது ஸ்டாலின் தவறில்லை.//

   திரு.ஸ்டாலின் பச்சைக்குழந்தையா…? சுயமாக சிந்திக்கும் திறனற்றவர் என்று சொல்கிறீர்களா…? தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசி விட்டார் என்று சொல்கிறீர்களா…?

   //ஒளிப்பதிவு செய்தவரை கைது செய்யும்வரை மறியல் போராட்டம் செய்யப்போகிறோம்//

   தாராளமாகச் செய்யுங்கள்… எங்கே.. எப்போது…? மீடியாவிற்கு அறிவித்து விட்டீர்களா…? அது சரி நீங்கள் யார்…? ஓட்டுக்கட்சியா அல்லது ஓட்டு இல்லாத கட்சியா…?

   இப்படி வேடம் போட்டுத் திரிகிறீர்களே – வெட்கமாக இல்லை உங்களுக்கெல்லாம்…?

   முதலில் உங்கள் தலைவரை அவர் வீட்டை சரி செய்யச் சொல்லுங்கள்… கோவில் கோவிலாக போவதையும், யாகங்கள், ஹோமங்கள் செய்வதையும் – அதற்கு வட்டங்கள், மாவட்டங்கள் உடன் துணை செல்வதையும் நிறுத்தச் சொல்லுங்கள்.. வீட்டை சரி செய்த பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம்.

   அது சரி, தலைவர் வீட்டில், புரியாத மொழியில் கும்பலாக ஏதேதோ சொன்ன / பாடிய வீடியோ வெளியானதே .. அதற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று கண்டு பிடித்து விட்டீர்களா…? வாழ்த்துகிறார்களா அல்லது வசைபாடுகிறார்களா என்று கண்டுபிடித்து விட்டாயிற்றா…?

 18. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! // . இந்த காணொளியை பதிவு செய்ததும் பொதுவெளியில் பரவவிட்டதும் உள்நோக்கத்துடந்தான்.
  பதிவுசெய்தவரின் பின்புலம் தாங்கள் அறியாதது. அவரே இதன் உரையை எழுதினார். ஸ்டாலின் அவரது உள்நோக்கம் அறியாது பேசிவிட்டார். இது ஸ்டாலின் தவறில்லை.// என்று கூறுகிற நண்பர் .. மேலும் தங்களுக்கு கூறுகிற : // உங்கள் தவறை ஒத்துக்கொள்ளதான் வேண்டும் // என்பதை திரு . ஸ்டாலின் அவர்களுக்கும் கூறுவாரா ..? பதிவு செய்தது — உரையை எழுதியது — பரவ விட்டது — உங்களுக்கு தெரியாத அவரின் பின்புலம் நண்பருக்கு எல்லாம் தெரிந்திருந்தும் அவர் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை …? அவ்வளவு வெள்ளேந்தியா நம்ம வாரிசு தலைவர் …? யார் கொடுத்தாலும் உரையை வாசித்து விடும் அளவுக்கு ….?

 19. Selvarajan சொல்கிறார்:

  முந்தைய இடுகை ஒன்று ரொம்ப விவாதம் செய்து களைத்துப்போன அனைவருக்கும் : //கருணாநிதியிடம் சிக்கிய “அய்யோ பாவம்” ஷண்முகநாதன் ….!
  Posted on ஜூலை 2, 2014 by vimarisanam – kavirimainthan .. https://vimarisanam.wordpress.com/2014/07/02/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நீங்கள் சுட்டியிருக்கும் இந்த இடுகையை பார்த்தவுடன் எனக்கே இது நான் எழுதியது தானா என்று தோன்றுகிறது…
   அந்த நகைச்சுவை உணர்வு இப்போது என்னிடம் கொஞ்சம் குறைந்து விட்டதோ என்றும் தோன்றுகிறது….
   நான் serious ஆக எழுதுவதை கொஞ்சம் மாற்றி இன்னும் கொஞ்சம் நகைச்சுவை கூடுதலாக எழுத வேண்டும் என்றும் தோன்றுகிறது…. முயற்சிக்க வேண்டும்…

   நன்றி செல்வராஜன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    இதெல்லாம் நான் மிஸ் பண்ணின இடுகைகள். கனிமொழியின் தாயார், எப்படி ராயல் ஃபர்னிசர் துவக்கினார், கருணாநிதியைச் சந்திக்கணும்னா 50,000 ரூபாய்க்கு அங்க பர்சேஸ் பண்ணின பில்லைக் காண்பித்தால்தான் சந்திக்கமுடியும் என்றெல்லாம் இருந்தது தெரியுமா? (பிறகு 1 லட்சம் ஆகியிருக்கலாம்) சண்முகத்தை சிபிஐ இப்போதும் விசாரிக்கவில்லையா? சிஐடி நகர் வீட்டை பிரபுதேவாவின் சகோதரனுக்கு எப்படி விற்றார்கள், தினகரன் பத்திரிகையை தயாநிதி மாறன் பர்சேஸ் செய்ததற்கு, தினகரன் பத்திரிகையின் முந்தைய முதலாளிக்கு (யாரிடமிருந்து வாங்கினாரோ அவருக்கு) எம்.பி பதவி கொடுக்கப்பட்டது என்று ஏகப்படா ஃப்ராடுகள். தொலைக்காட்சிக்கான லஞ்சமே ஸ்டாலினிடம்தான் கொடுக்கப்பட்டது என்று தெரியும். இவை எதையும் அறியாதமாதிரி, இப்போது ஸ்டாலின் புனிதர் என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.

   • Selvarajan சொல்கிறார்:

    அய்யா .. ! // அந்த நகைச்சுவை உணர்வு இப்போது என்னிடம் கொஞ்சம் குறைந்து விட்டதோ என்றும் தோன்றுகிறது….//

    இதைப்பற்றி 20, நவம்பர் 2018 இடுகையில் பின் குறிப்பாக கோடிட்டு காட்டியிருக்கிறீர்கள் அது : —

    // சரி அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதுவோம்…. ஆனால், தொடர்ந்து சீரியஸாக எழுதிக்கொண்டிருப்பதை விட –
    நகைச்சுவை உணர்வை துணைக்கு அழைத்துக் கொண்டு கொஞ்சம் மென்மையாக, எழுதலாமென்று தோன்றியது….

    என் சொந்த விருப்பு, வெறுப்பு – கடினமான மனநிலை ஆகியவற்றை
    கொஞ்சம் தூரமாகத் தள்ளி வைத்து விட்டு, இலேசான மனநிலையோடு,

    அரசியல் சங்கதிகளை அலசலாமே என்று தோன்றியது…. கூடவே மாநில அரசியலையும் கொஞ்சம் அதிகம் விவாதிக்கலாம் என்றும் தோன்றியது….

    இந்த யோசனைகளை, அடுத்து வரும் நாட்களில்,
    கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்தலாமென்று நினைக்கிறேன்…
    வரும் நாட்களில் என் எழுத்தின் போக்கு கொஞ்சம் மாறி இருக்கும்…
    புதிய பாணி எனக்கு பிடிபடும்வரை
    கொஞ்சம் இப்படி அப்படித்தான் இருக்கும்… நண்பர்கள்
    பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்…// நாங்க ரெடி — நீங்க ரெடியா …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.