…
…
பல வித்தியாசமான தோற்றங்களில்
தம் தலைவர்களைப் பார்ப்பது
தொண்டர்களுக்கு
பிடித்தமான ஒரு விஷயம் அல்லவா…?
ஆகையால் தான் எங்கேயோ பார்த்த புகைப்படங்களை மீண்டும் இப்போது தேடியெடுத்து தருகிறேன்…!
…
…
——————-
பி.கு. – இரண்டும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…
உடை மாறி இருப்பதை பார்த்தால் தெரியும்.
.
——————————————————————————————————
Advertisements
நன்றி கே.எம்.சார்.
அருமை திரு காவிரிமைந்தன் அவர்களே
அய்யா … ஒரு பழைய இடுகை – 04/04/2011 – அன்று ” சவுக்கு ” தளத்தில் // நன்றி ஜுனியர் விகடன் // என்கிற நன்றி தெரிவித்தலோடு வெளிவந்த ஒரு பதிவு — திரு . கருணாநிதி அவர்களைப்பற்றி ” பகுத்தறிவுப் பகலவன்,” என்ற தலைப்புடன் வெளி வந்துள்ளது — அதை அறிய : https://www.savukkuonline.com/1250/
இது அவர்களின் பல நிலைப்பாடுகளை பற்றி விவரிக்கிறது — அப்பவே அந்த தலைவர் அப்படி என்றால் தற்போது உள்ள தலைவர் இப்படி என்பதில் என்ன ஆச்சர்யம் — ! டபுள் ஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு — முன்பு திருக்கோஷ்டியூர் கோயில் — சமீப ஸ்ரீ ரங்கம் கோயில் சம்பவம் கூட இன்னும் மக்களுக்கு மறந்திருக்க வாய்ப்பு இல்லை … அதனுடைய பல புகைப்படங்களும் செய்திகளும் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வந்தது தானே …? புதிதாக எதையும் கூறவில்லை அப்படித்தானே ..?
ஒரு வேளை வெளி மாநில சாமியாராக இருந்தால் யாருக்கும் தெரியாமல் காலில் விழுந்தால் சுயமரியாதைக்கு பங்கமில்லையோ ?
அப்படியெல்லாம் இல்லை ;பெரியவர்களின் காலைத்தொட்டு கும்பிடுவதில் என்ன தவறு என்று யாராவது தொண்டர் கேட்கக்கூடும். அப்படியானால், நம்ம ஊர் மூத்த அரசியல் தலைவர் திரு.நல்லமுத்து அவர்களின் கால்களிலோ அல்லது குறைந்தபட்சம் மானமிகு திரு.வீரமணி அவர்களின் திருப்பாதத்தையாவது தொட்டு வைக்கலாமே.
திருத்தம் – திரு.நல்லகண்ணு அவர்கள்
கா.மை. சார்… இன்னும் நிறைய புகைப்படங்கள் உண்டே…. அவைகளை விட்டுவிட்டீர்களே…
‘கடவுள் இல்லை’ என்று வெளியில் பிதற்றிக்கொண்டிருந்த கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான், ஸ்டாலினும், தயாநிதி மாறனும் கோவிலில் கும்பிட்டுக்கொண்டிருக்கும் போட்டோ வெளியானது. கருணாநிதி வெளியில் சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். படம் எடுக்க ஏன் அனுமதித்தீர்கள் என்று அவர் கேட்டதாக ஜூவியில் வந்த ஞாபகம். தந்தை எவ்வழி, தனயன் அவ்வழி. இந்த விஷயத்தில் அழகிரி நேர்மையானவர் என்றே நினைக்கிறேன்.