இன்றைய ஹீரோ தம்பித்துரை – !!! “ரூபாய் நோட்டின் கலரை மாற்றியதைத் தவிர … “


என்னைப் பொருத்தவரை இன்றைய ஹீரோவாக திரு.தம்பித்துரை
அவர்களைத்தான் நான் சொல்வேன்…

கொஞ்ச நேரத்திற்கு முன்பு, பாராளுமன்றத்தில் (லோக் சபா) அவர்
ஆங்கிலத்தில் பேசியதை, தொலைக்காட்சியில் பார்த்தேன்… தனக்குத் தெரிந்த ஆங்கிலத்திலேயே – அடித்து, துவைத்து, கிழித்து – நார் நாராக தொங்க விட்டு விட்டார் மனிதர்…

அவரை உடனே பாராட்ட வேண்டும் என்று தோன்றியது….எப்போதுமே,
யாரையாவது பாராட்டுவதாக இருந்தாலும், எதாவது தானம் கொடுப்பதாக
இருந்தாலும் உடனே செய்து விட வேண்டும்… இல்லையேல் எதாவது
குறுக்கீடு வந்துவிடும்… சீன், situation மாறி விடும்… அல்லது குறுக்கே திரு.ஜெயக்குமார் வியாக்கியானம் கொடுக்க வந்து விடுவார்… 🙂 🙂 🙂

இப்போதைக்கு விகடன் செய்தியில் வந்ததை அப்படியே போடுவது சுலபமான வேலை… எனவே – situation மாறுவதற்குள் அதையே செய்கிறேன்.

————————————————————————

` ரூபாய் நோட்டை நிறம் மாற்றியதைத் தவிர
வேறு என்ன செய்தீர்கள்?’ – தகித்த தம்பிதுரை

….

இன்று நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் தொடர்பான விவாதத்தின்போது
மக்களவை துணை சபாநாயகரும் அ.தி.மு.க எம்.பியுமான தம்பிதுரை மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

அவர் பேசும்போது, “விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது போதுமா அவர்களுக்கு?

ஒரு நாளுக்குப் பல பிரச்னைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். அப்படியிருக்க நீங்கள் அறிவித்துள்ள இந்த தொகை போதாது.

விவசாயிகளுக்குப் பணம் வழங்க வேண்டும் என்ற அரசின் திட்டம் பாராட்டத்தக்கது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை
போதுமானது இல்லை. ஒரு ஆண்டுக்குக் குறைந்தது 12,000 ரூபாயாவது வழங்க வேண்டும்.

நூறுநாள் வேலை திட்டத்தின் கொள்கையை மாற்றியது முற்றிலும் தோல்வியில் முடிந்துள்ளது. நான் கிராமப்புறங்களுக்குச் செல்லும்போது விவசாயிகள் என்னிடம் புகார் தெரிவிக்கின்றனர். பல இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்து, நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு வருமானம் கிடைக்கவிடாமல் செய்கின்றனர். ஏழைப் பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டுவந்த தூய்மை இந்தியா திட்டம் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டம்
பல சாதனைகளை செய்துள்ளதாகக் கூறும் உங்களின் கருத்தை நான்
ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

உங்களின் மேக் இன் இந்தியா திட்டம் சரி …
மேட் இன் இந்தியா எங்கே…?
இந்தியாவில் பெரும்பாலும் சீனப் பொருள்கள் மட்டுமே விற்பனை
செய்யப்படுகிறது. நாம் எங்கு சென்றாலும் சீனப் பொருள்கள் மட்டுமே அதிகம் கண்ணில் படுகிறது. இதனால் இந்திய தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா போல பை இன் இந்தியா’ என்ற
இந்திய பொருள்களை வாங்க வேண்டும் என்ற திட்டம் கொண்டுவர வேண்டும். இந்தியச் சந்தையில் சீனப் பொருள்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.

சீனா மற்றும் வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளால் இந்தியாவின் ஜவுளி உற்பத்தி நலிவடைந்துவிட்டது.

பணமதிப்பிழப்பு நடைமுறை எதற்காகக் கொண்டுவரப்பட்டது…? பல
லட்சியங்களின் மூலம் அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் அவற்றில் ஒன்றாவது நிறைவேறியதா…?

நிறைவேறியதுபோல் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. முதலில் 500 ரூபாய் நோட்டு செல்லாது எனத் தடை விதித்தீர்கள் பிறகு வேறு நிறத்தில் அதே மதிப்புள்ள புது நோட்டை வெளியிடுகிறீர்கள். இதில் என்ன மாறுபாடு உள்ளது…? இதனால் ஏழை மக்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள்
பாதிக்கப்பட்டது மட்டுமே மிச்சம்.

முதன்முதலில் ஜி.எஸ்.டியைக் கொண்டு வந்தது காங்கிரஸ்தான் என பா.ஜ.க குற்றம் சுமத்துகிறது, பா.ஜ.க-வின் ஜி.எஸ்.டி தவறானது என காங்கிரஸ் குற்றம் சுமத்துகிறது. இவர்களின் சண்டை மற்றும் குற்றச்சாட்டு மிகவும் குழந்தைத்தனமாக உள்ளது.

தங்கள் மாநிலத்துக்கு முறையாக நிதி வழங்கவில்லை என ஆந்திர எம்.பி-க்கள் இன்று காலை முதல் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

ஜி.எஸ்.டி என்ற பெயரில் மாநிலத்தின் மொத்தப் பணமும் மத்திய அரசிடம்
இருக்கும்போது மாநிலங்களுக்கு எப்படி பணம் கிடைக்கும். இதுவரை மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய் வர வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதும் தற்போது முதல்வரும் பலமுறை நிதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், இதுவரை மத்திய அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, தானே புயல், கஜா புயல் போன்றவற்றின்
நிதியை உடனடியாக தமிழ்கத்திற்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறி தன் உரையை முடித்தார்.

( அவர் பேசுவதை நோக்கியபோது, அதில் எந்தவித ‘உள்நோக்க’மும்
இருப்பதாக ‘வெளிநோக்’கில் தெரியவில்லை… 🙂 🙂 )

( https://www.vikatan.com/news/tamilnadu/149385-admk-mp-thambidurai-criticize-central-government.html )

.
—————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to இன்றைய ஹீரோ தம்பித்துரை – !!! “ரூபாய் நோட்டின் கலரை மாற்றியதைத் தவிர … “

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  ( அவர் பேசுவதை நோக்கியபோது, அதில் எந்தவித ‘உள்நோக்க’மும்
  இருப்பதாக ‘வெளிநோக்’கில் தெரியவில்லை… 🙂 🙂 )

  ஆனால், பாஜகவினர் அப்படி நினைக்க மாட்டார்களே ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தம்பித்துரை இன்னும் நிறைய விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறார். விகடன் செய்தி, முழு பேச்சையும் cover
   செய்யவில்லை. செய்தித்தாளில் கிடைக்கக்கூடும்.
   ( இது முழுமை பெறாத செய்தி என்பதற்காக இதனை இங்கே குறிப்பிடுகிறேன்…)

   -காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  நான் அவர் பேசின சப்ஜெக்டை இப்போ விட்டுடறேன். பொதுவா தம்பிதுரை அவர்கள் நம்பிக்கைக்குரியவர் இல்லை. அவர், அதிமுகவில் சீனியர் ஆனாலும், எம்ஜியாரின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் அல்ல (அந்த நிகழ்ச்சியைப் படித்திருக்கிறேன்). அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் பெற்றவரல்லர். இப்போ எடப்பாடி அவர்களை முன்னிறுத்தியதிலிருந்து அவருக்கு ஈகோ. (நாம கட்சில இருந்தப்போ இல்லாதவங்ககிட்ட இப்போ நாம கேட்டுக்கணுமா என்று). அவர் ஏற்கனவே சசிகலா குரூப்பை ஆதரித்தவர்.

  இப்போ எலெக்‌ஷென் நேரத்தில், அதிமுகவின் அதிகாரபூர்வ கருத்துக்கு மாறா ஓரிரு மாதத்துக்கும் மேலாக பேசுவதுபோல் தெரிகிறது. பாஜக எதிர்ப்பு நிலைல இருக்கிறார். முதலில் நான், அதிமுக, பாஜகவை இப்படி ஹேண்டில் செய்கிறது என்றுதான் நினைத்தேன் (தம்பிதுரை தைரியமாக எதிர்ப்பது, எ.ப/ஓபிஎஸ் ஒன்றும் சொல்லாமல் இருப்பது, ஜெயக்குமார் நியூட்ரல் மெசேஜ் சொல்வது என்று பாஜகவுக்கு கடுக்காய் கொடுக்க).

  இன்னமும் தம்பிதுரை இப்படிப் பேசுவது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துது. அவரது அரசியல் நிலைப்பாட்டில் ஏதேனும் மாறுதல் இருக்கா அல்லது ‘இதுதான் சாக்கு’ என்று நாடாளுமன்றத்துக்கு நிற்கப்போவதில்லையா என்ற எண்ணம் ஏற்படுகிறது. பார்ப்போம்.

 3. புதியவன் சொல்கிறார்:

  //பெரும்பாலும் சீனப் பொருள்கள் // – இது இந்தியாவுக்கு பெரிய பிரச்சனை கா.மை சார். ஓரளவு தரமான பொருட்கள் (சாதாரண உபயோகத்துக்கு) சைனா ப்ராடக்ட்ஸ்தான். சீனாவினால்தான், ஹார்ட்வேர் விலை உலகளவில் மலிவாக இருக்கு. விளையாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், பலவித கம்ப்யூட்டர்கள்/மொபைல் போன் என்று எதை எடுத்தாலும் சீனப் பொருட்கள் தரத்திலும் உயர்வு, விலையிலும் குறைவு. இதை உபயோகப்படுத்தி ஃபர்னிசர், உடைகள் போன்றவற்றிலும் அவர்கள் இறங்கினால் இந்தியத் தொழிலுக்கு பாதகம்தான். (திருப்பூர்/இந்திய டி.ஷர்ட் 600 ரூபாய், டிரவுசர் 400-500 ரூபாய். ஆனால் சீன உடைகள் விலை மிகக் குறைவு. நம் தொழில்களை நாம் ஆதரிக்கணும். இதைப் பற்றி நிறைய எழுதலாம்)

  இந்தியர்களுக்கு பெரும்பாலும் தேசப்பற்று என்று ஒன்று கிடையாது. (வாக்குக்குப் பணம் வாங்குவதிலேயே அவங்க லட்சணம் தெரியும்). குறைந்த விலைக்கு யார் கொடுத்தாலும் அதையே வாங்குவாங்க, வசனத்துக்கு சிவகாசித் தொழிலாளர்கள், திருப்பூர் என்றெல்லாம் பேசுவார்கள். 100 பேர்கள் உபயோகப்படுத்தும் குடைகளைப் பாருங்கள். 99% சீன குடைகள்தாம்.

  • mekaviraj சொல்கிறார்:

   “இந்தியர்களுக்கு பெரும்பாலும் தேசப்பற்று என்று ஒன்று கிடையாது. (வாக்குக்குப் பணம் வாங்குவதிலேயே அவங்க லட்சணம் தெரியும்). குறைந்த விலைக்கு யார் கொடுத்தாலும் அதையே வாங்குவாங்க, வசனத்துக்கு சிவகாசித் தொழிலாளர்கள், திருப்பூர் என்றெல்லாம் பேசுவார்கள்.”

   ஒரு சின்ன சந்தேகம் – இங்க இந்தியர்கள்னு சொல்லும்போது அதில் புதியவனும் அதில் உள்ளர்வர்தானா அல்லது இந்தியர்களுக்கு வெளிய நின்னு புதியவன் பேசுகிறாரா ?
   அதில் நான் வருவேனா ? அதில் காவேரிமைந்தன் வருவாரா ?

   • புதியவன் சொல்கிறார்:

    ‘பெரும்பாலானவர்கள்’னு சொல்லியிருக்கேன். அதில் நானும் வருவது வருத்தத்துக்கு உரிய விஷயமே. முடிந்த வரை இந்தியப் பொருட்களை உபயோகப்படுத்துவது, வெளிநாட்டு உணவை சாப்பிடாமல் இருப்பது, ஓசிக்குக் கிடைக்கும் எதையும் வாங்காமலிருப்பது என்று என்னளவில் இருக்க முயல்கிறேன். இந்தியப் பொருட்களை மட்டும் வாங்குவது (நல்லாப் பார்த்துக்கோங்க… பலருக்குக் கிடைக்காத வாய்ப்பு எனக்கு பலப் பல வருடங்களாக வெளிநாட்டில்தான் வாழும் வாய்ப்பு இருந்தது). அரசு 1000 ரூபாய் கொடுத்தபோது எங்கள் தெருவே ஸ்தம்பித்துவிட்டது. ஜனவரி 1ம் தேதி, வைகுண்ட ஏகாதசி போன்றவற்றையும் மிஞ்சும் கியூ – வேறு எங்கும் இல்லை… படித்தவர்கள் இருப்பதாக நம்பப்படும் சென்னையில்.

    நம்ம அரசியல் தலைவர்கள் வசனம் பேசிட்டு, சிகரெட் கம்பெனி, சொந்த பள்ளி/கல்லூரி என்று கல்லா கட்டுவாங்க. ‘நாகரீகம், தமிழர் கலாச்சாரம்’ என்று சொல்லிக்கிட்டு வைகோ மாதிரி வன்முறையைத் தூண்டுவாங்க. அதுனால ஊருக்கு அட்வைஸ் செய்யும் அரசியல் தலைவர்கள் யாரையும் பிடிப்பதே இல்லை.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    மேகவிராஜ்,

    “அதில் – காவிரிமைந்தன் வருவாரா..? ”

    – ” நிச்சயம் வர மாட்டார்.” இது இன்றைய நிலை மட்டுமல்ல. நான் மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கிய நாளிலிருந்து – இந்த நிலை தான். …!!!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 4. Praba சொல்கிறார்:

  No impact, modi govt divert all attension from ELECTRONIC VOTING MACHINE malpractice.

 5. Justin சொல்கிறார்:

  Thambidurai is an opportunist, does not have any integrity. Before election, he will join another party.

 6. Selvarajan சொல்கிறார்:

  அய்யா .. ! ஒரு முந்தைய இடுகை — மிக நீண்ட இடுகை — அதிகபட்சமாக 57 பின்னூட்டங்களை கொண்டது — இப்போதும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வந்துவிட்ட நிலையில் — மீண்டும் இந்த பதிவை படிக்கும் போது — அதில் தாங்கள் அலசி ஆராய்ந்து எழுதியது — அதன் தலைப்பு : மோடிஜியை குறை கூறக்கூடாதா …? விமரிசனம் செய்வதே தவறா … ?
  Posted on பிப்ரவரி 16, 2015 by vimarisanam – kavirimainthan https://vimarisanam.wordpress.com/2015/02/16/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4/

  இதில் தாங்கள் : // இடுகை நீண்டு விட்டது.
  நான் கேட்கும், நமது வாசக நண்பர்கள் பின்னூட்டங்களின்
  மூலமாகக் கேட்கும் – பல கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல்

  நாங்கள் என்ன மோடிஜியின் பெர்சனாலிடி பற்றியா
  எழுதுகிறோம் ? அவர் குட்டையா நெட்டையா, கருப்பா சிவப்பா
  என்றா விமரிசிக்கிறோம் ? நாங்கள் விமரிசிப்பது அவர்
  கொள்கைகளை, செயல்பாட்டைத் தானே ?

  என் நினைவிற்கு வரும் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு
  மட்டுமாவது அவர்கள் விளக்கம் அளித்து விட்டு, பிறகு
  மற்ற விஷயங்களுக்குப் போகட்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்….. இதில் // இன்று வரை பதில் கிடைத்ததா .. தங்களுக்கு …?

  இந்த இடுகை சுட்டிக்காட்டிய பல அம்சங்கள் அப்படியே இருப்பதும் — எந்த நிலை மாற்றமும் மாறாமலும் — தொழிலதிபர்கள் நிலை உயர்ந்துகொண்டே செல்வதும் — // 10 % பணக்காரர்களுக்காக, 90 % பொதுமக்களின் நலன்களை
  அரசு கைவிட வேண்டும் என்று சொல்லும் கொள்கை
  என்ன கொள்கை …? crony capitalism …? // — இதே ” crony capitalism ” என்கிற வார்த்தையை சிலநாட்களுக்கு முன் எழுதிய பதிவிலும் தாங்கள் கூறியதும் … மோடிஜி/ பாஜக ஆதரவாளர்கள் திரும்பத் திரும்ப தாங்கள்
  சொல்வதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…. என்பதும் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கிறது அப்படித்தானே …?

  எதிர் வரும் தேர்தலுக்காக திருப்பூர் கூட்டத்தில் : // திருப்பூர் காமராஜர் ஆட்சியை கொடுப்போம்.. திருப்பூரை திரும்பி பார்க்க வைத்த மோடி! //

  Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/we-will-give-kamarajar-dream-rule-over-india-says-pm-modi-340996.html என்று பிரதமர்ஜி கூறுவது — அனைத்து கட்சியினரும் இதே டயலாக்கை அடித்து ஓய்ந்துவிட்ட நிலையில் — இவர் கையில் எடுத்திருப்பது — ???

  • புதியவன் சொல்கிறார்:

   //காமராஜர் ஆட்சியை கொடுப்போம்..// – இதை யார்தான் சொல்றது என்று விவஸ்தையில்லாமல் எல்லாரும் சொல்லுகிறார்கள். இன்றைய அரசியலில் (40 வருடங்களுக்கு மேலாகவே) இதைச் சொல்லும் தகுதி யாருக்குமே இல்லை. காமராஜ் இருந்தபோதே மக்களுக்கு அவர் செய்த நல்ல செயல்கள் தெரியவில்லை, சாதி, சொந்த லாபம் என்பதைப் பொறுத்து வாக்களித்தனர். அதற்கு அப்புறம் மக்களின் தரமும் குறைந்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது. இதுல காமராஜ் ஆட்சியா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.