வைகோ’வின் அணுகுமுறை – அவமானகரமானது….போராட்டத்திற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், போராட்டம் நடத்தப்படும் முறை – கௌரவமானதாக இருக்க வேண்டும்… அதுவும் வைகோவைப்போன்ற மூத்த தலைவர்கள் நடத்தும் போராட்டம் – கண்ணியமாகவும், ஒரு முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும்….

சட்டம், ஒழுங்கை பராமரிக்க வேண்டியது காவல் துறையின் கடமை…..
அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்…

வீடியோவில் பார்க்க முடிகிறது…
காவல்துறை எந்தவித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை.
அமைதியாகவே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இவர் உயரத்தில் வேனின் மீது ஏறி நின்றுகொண்டு –
கையில் மைக்கை பிடித்துக் கொண்டு,
காவல்துறையினரை அவமானப்படுத்துகிறார் –
ஒருமையில் பேசுகிறார் –
நீ கைநீட்டி சம்பளம் வாங்குபவன் தானே …? என்று ஏளனப்படுத்துகிறார்…

சுற்றி நிற்கும் தொண்டர்களை காவல்துறைக்கு எதிராக உசுப்பி விடுகிறார்..

“நாங்க வர முடியாது, வர முடியாது, வர முடியாது
போராட்டம் நடத்தறது யாரு…. வைகோ…!

முடிஞ்சா ஃபோர்சை யூஸ் பண்ணு…
அடிச்சு இழுத்துண்டு போ..”

அதுவும் ஒரு பெண் அதிகாரியிடம் வீரத்தை காண்பிக்கிறார்…
“போலீஸ் அராஜகம்னு நான் சொல்றதுக்கு முன்னாடி
மரியாதையா போயிடு…”

இடையில் இவர்கள் கூட்டத்திற்குள் நுழைந்து எதிர் கோஷம் போட்ட ஒரு பெண்ணை இவரது கூட்டம் சூழ்ந்துகொண்டு கொம்பால் அடிக்க முயல்கிறது…

அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த வைகோ எத்தகைய முயற்சியையும்
எடுக்கவில்லை…. கலவரம் உண்டாக வேண்டுமென்று இவரே
விரும்புவது தெரிகிறது…

பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன… ஆனால், தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான வைகோ செல்லும் வழி –

அசிங்கமானது….. அவமானகரமானது…கேவலமானது….
நம்மால் இதை ஏற்க முடியவில்லை.

.
———————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to வைகோ’வின் அணுகுமுறை – அவமானகரமானது….

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  வைகோ இவ்வாறு நடந்துகொள்வது இது முதல் தடவை அல்ல.
  இவரது வழக்கமே இது தான்.
  தொண்டர்களை உசுப்பேற்றி விடுவதும்,
  மைக்கை வைத்துக்கொண்டே உரக்கக் கத்துவதும்,
  காவல்துறை அதிகாரிகள் பலப்பிரயோகம் செய்ய மாட்டார்கள் என்று தெரிந்தும்,
  அவர்களை force யூஸ் பண்ணுங்க பார்க்கலாம் என்று சவால் விடுவதும்,
  சுடுவியா எங்கே சுடு பார்க்கலாம் என்று மார் தட்டுவது,
  காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் அழைப்பதும் –
  நீங்கள் கூறுவது போல் // அசிங்கமானது….. அவமானகரமானது…கேவலமானது….// தான்.

 2. சிவக்குமார் சொல்கிறார்:

  வைகோ ஒரு …… எப்படி தமிழ் நாட்டு போலிசுக்கு மரியாதை ……….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சிவக்குமார்,

   மன்னிக்கவும்….உங்கள் பின்னூட்டத்திலிருந்து சில சொற்களை நான் நீக்கி இருக்கிறேன்….நீங்கள் கடுமையான கருத்தை தாராளமாகச் சொல்லலாம்…. ஆனால், அதே சமயம் அநாகரிகமான வார்த்தைகளை இந்த தளத்தில் பயன்படுத்துவதை அனுமதிப்பதற்கில்லை.

   செயலை விமரிசியுங்கள்… ஆனால்,
   அவதூறான – வார்த்தைகளை தவிருங்கள்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. புதியவன் சொல்கிறார்:

  வை.கோ மிகவும் தரம் தாழ்ந்த அரசியல் வியாதி. அவர், சாராயத்துக்கு எதிராக (மதுவிலக்கு வேணும்னு) சசிபெருமாள் நிகழ்வின்போது அவரது பேச்சைக் கேட்க நேர்ந்தது. மூன்றாம்தர அரசியல்வாதி மாதிரி பேசுவார். அரசியல்வாதியாக இருக்கத் தகுதியற்றவர். இருக்கும் 10-15 தொண்டர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக எப்படியெல்லாம் சீறிப் பேச வேண்டியிருக்கிறது… பாவம். காலம், அவர் தரமறிந்துதான் தள்ளி வைத்திருக்கிறது.

  இன்றைக்கு அவரது முக்கியத் தேவை, தேர்தலின்போது அவர் ஒரு ‘சக்தி’ என்று திமுக கூட்டணியினர் நினைக்கவேண்டும் என்பது. அதற்காக இன்னும் தரம் தாழவும் அவர் தயாராக இருக்கிறார். (கடைசியில், சீட் இல்லை என்று கை விரிக்கும்போது, ‘திராவிடர்களுக்காக …. ‘என்று மான அவமானத்தைத் துடைத்துவிட்டு திமுக கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது).

  ஆனால், நான் இறைவனை வேண்டுவது, வை.கோ. திமுக கூட்டணியில்தான் இருக்கவேணும். செய்த வினைகளுக்கு அவமானத்தை அங்கிருந்துதான் அவர் அனுபவிக்கவேண்டும். அவருடைய ராசி, அவரது கூட்டணியினரையும்
  அப்போதான் பற்றிக்கொள்ளும்.

 4. kandaswamy சொல்கிறார்:

  இவரைப் பிடித்து “உள்ளே” போட என்ன தயக்கம்….?
  Posted on செப்ரெம்பர் 17, 2018 by vimarisanam – kavirimainthan…..
  இந்த ஆசாமிக்கு வர வர திமிர் அதிகமாகிக் கொண்டே போகிறது… பொது இடங்களில் எப்படிப் பேசுவது என்கிற வரம்புகளையெல்லாம் உடைத்தெறிகிறார். பேட்டை ரவுடி போல் நடந்து கொள்கிறார்;

  இவர் பேசியதில் சில உண்மைகள் கூட இருக்கலாம்…
  ஆனால், அதைச் சொல்ல இவர் தேர்ந்தெடுத்த விதம்,
  இடம், மொழி…பேசிய முறை …சரியா….?
  This is ur comment for H Raja…. But for Vaiko–அசிங்கமானது….. அவமானகரமானது…கேவலமானது….
  நம்மால் இதை ஏற்க முடியவில்லை….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s