“அருவருப்பான அரசியல்” – கார்த்திகை செல்வனின் ஒரு அருமையான நேர் காணல்…


பேட்டி எடுப்பவர், பேட்டி கொடுப்பவரை மடக்கு மடக்கென்று மடக்கி
முடிந்த வரை அவரது பலவீனங்களை வெளிப்படுத்தி, அவர் எந்தெந்த விதத்தில் முட்டாளென்று நிரூபிக்க முயல்வது ஒரு ரகம்….

கேள்விகளை பட்டியலிட்டு வரிசையாக கேட்டு –
பேட்டி கொடுப்பவர் சொல்வதை எல்லாம் பதிவுசெய்துக் கொண்டு
அடுத்த கேள்விக்கு போவது இன்னொரு ரகம்…

சரியான விதத்தில் கேள்விகளையும்,
துணைக்கேள்விகளையும் கேட்டு,
பேட்டி கொடுப்பவரை காயப்படுத்தாமல், அதே சமயம்
பேட்டி கொடுப்பவரிடமிருந்து – தனது கேள்விகளுக்கான முழுமையான
பதிலைப் பெற்ற பிறகே அடுத்த கேள்விக்கு போவது….
என்பது இன்னொரு ரகம்….

கொஞ்சம் கொஞ்சமாக – ஒரு மிகச்சிறந்த பேட்டியாளராக
உருவாகி வருகிறார் புதிய தலைமுறை தொலைக்காட்சியின்
திரு.கார்த்திகை செல்வன்.

தமிழருவி மணியன் அவர்களுடன், கார்த்திகை செல்வன்
நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி – இதில் மூன்றாவது ரகம்…

ஆனால் – முதல் தரம்….!!!

இந்த பேட்டியில் –

ஒரே சமயத்தில்,
நேரெதிரான இரண்டு தரப்பினருடனும் பேரம் பேசுவது
“அருவருப்பான அரசியல்” என்று தமிழருவி மணியன்
சொல்வதை நான் அப்படியே ஏற்கிறேன்…

இதைக்குறித்து, நான் கூட இந்த தளத்தில் எழுத விரும்பினேன்…
கூட்டணி பேரங்களெல்லாம் முடிவடையட்டும் என்று காத்திருந்தேன்….
அதையெல்லாம் தமிழருவியே சொல்லி விட்டார்….. மகிழ்ச்சி…!!!

புதிய தலைமுறை’யில் நேற்றிரவு
( சனிக்கிழமை, மார்ச், 9-ந்தேதி ) –
ஒளிபரப்பாகிய ஒரு சுவாரஸ்யமான பேட்டி இதோ உங்கள் முன் –

.
—————————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “அருவருப்பான அரசியல்” – கார்த்திகை செல்வனின் ஒரு அருமையான நேர் காணல்…

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  கார்த்திகைச் செல்வன் மிக நாகரிகமாக பேட்டி எடுக்கிறார். நல்ல பேட்டி.
  ஆனால் நாம் எதிர்பார்த்த கருத்துகள் தான் பேட்டியில் வெளிவந்திருக்கின்றன.

 2. mekaviraj சொல்கிறார்:

  சிறப்பான நேர்காணல், ரஜினி குறித்த உரையாடல் தவிர்த்து

 3. D. CHANDRAMOULI சொல்கிறார்:

  Tamilaruvi Manian is very clear in what Rajini would or should do. Does Rajini have that clarity in his mind for dealing with the complex issues of Tamil Nadu? For instance, when he mentions about water for Tamil Nadu, does he mean supply of water from Karnataka as per terms laid down by the Supreme Court or about linking the water bodies within Tamil Nadu? In my humble opinion, Rajini would do well to take in Tamilaruvi Manian on board as his special advisor.

 4. Selvarajan சொல்கிறார்:

  ”. Be your own judge and you will be truly happy ” என்ற மகாத்மாவின் வாக்கின் படி தன்னை தயார் படுத்திக்கொண்டு இருப்பவர் — நல்லவர் — எல்லோராலும் விரும்பப் படுபவர் — தன் உழைப்பால் என்றும் முதலிடத்தை தனது தொழிலில் தக்க வைத்து இருப்பவர் …!

  பலமுறை தன் எண்ணத்தை : அரசியல் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலான ஒன்று. அரசியல் மலர்கள் நிறைந்த பாதை இல்லை. இது ஆபத்தான விளையாட்டு மற்றும் நாடகம் நிறைந்தது. கவனமுடன் விளையாட வேண்டும் நேரம் மிக முக்கியமானது என்றும் கூறிய பின்னும் —
  மீண்டும் – மீண்டும் அரசியலுக்குள் அவரை இழுத்து வர நினைப்பவர்களை என்னவென்று சொல்வது ?

  — தெளிவான – நிதானமான முடிவை எடுக்க கூடியவர் அவர் — அவருக்கு தெரியும் அவர் வழி தனி வழி என்று .. அவரை பற்றி கேட்ப்பதும் — அவரை கேள்விகளால் துளைக்கும் போது பட்டென்று மனதில் பட்டதை கூறிவிடுவது அவருக்கே உரித்தான நேர்மை — அவர் கூறியதை சர்ச்சையாக்கி அவரை சஞ்சலப் படுத்துவதற்காவே காத்திருக்கிற கூட்டங்களுக்கு குறிப்பாக இந்த பாழாய்ப்போன ஊடகங்கள் தங்களின் டிஆர்பி ரேட்டை உயர்த்தி குளிர்காய நினைப்பது எந்த
  வகையில் நியாயம் …?

  இந்த பேட்டியில் கூட அதைத்தான் அதிகமாக காண முடிகிறது — தமிழருவி மணியன் கூறுவதெல்லாம் ரஜினியின் எண்ணம் இல்லை என்பதை தெளிவாக கொள்ளவேண்டும் ..– இதே தமிழருவி மக்கள் நல கூட்டணிக்காக எப்படியெல்லாம் நடந்துகொண்டார் — நடந்தார் என்பதையெல்லாம் அறிந்தவர்கள் தான் மக்கள் — அது இவர் நினைத்தவாறு சரியாக வராத பட்சத்தில் தனது இயக்கத்தை — கட்சியாக உருமாற்றியவர் ..

  தற்போது நடக்கின்ற கூட்டணி கேலிக்கூத்துகளை பற்றி அதிகம் பேசியிருக்க வேண்டும் இந்த பேட்டியில் — அது இல்லை என்பதும் — அரசியல் கட்சிகளுக்கு ” தேர்தல் அரசியல் ” என்றும் மக்களுக்கு ஓட்டரசியல் என்பதும் நன்கு தெரிந்த ஒன்றுதான் .. தற்போதய கூட்டணிகள் — என்பது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதல்ல. அது முற்றுமுழுதாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் கொண்டிருக்கும் வாக்கு சதவீதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகின்றன. அதைத் தாண்டி அவர்களுக்குள் வேறெந்த பந்தமும் கிடையாது. …
  தேர்தல் அரசியல் எவ்வளவு இழிவானது என்பதையும் — மக்கள் நலன் சற்றும் இல்லாதது என்பதையும் இங்கு நடக்கும் கூட்டணிக் கூத்துக்களைப் பார்த்தாலே ஒருவர் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்….

  இதையெல்லாம் பலகாலம் பார்த்தவர் — 1996 ல் ஒரே வார்த்தையில் தமிழகத்தில் மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்தவர் — சந்தர்ப்பவாத அரசியலை நன்கு அறிந்தவர் — அவரை அவரது போக்கில் அப்படியே விட்டு விடுவதும் — பெரும்பாலும் அவரை தொல்லை செய்யாமல் இருப்பதும் நல்லது — முடிவு எடுத்தபின் பின்வாங்க கூடாது என்பதில் உறுதியா இருக்கும் — அவருக்கு வர வேண்டிய நேரத்தில் வரத் தெரியும் – !!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s