குண்டாக இருப்பவர்களைப் பிடித்து உள்ளே போடத்தான் குண்டர் சட்டமா….?


யார் “குண்டா” …?

எது குண்டர் சட்டம் – ?

The Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug Offenders, Goondas, Immoral Traffic Offenders, Forest Offenders, Sand Offenders, Slum-Grabbers and Video Pirates Act, 1982…

– இந்த சட்டத்தின் நோக்கம் என்ன ….?

the law aims at a year-long preventive detention of habitual offenders…!!!

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை,
அவர்களை செயல்படும் விதத்திலிருந்து தடுக்கும் விதமாக,
ஒரு ஆண்டு வரை தடுப்புக் காவலில் “உள்ளே” வைப்பது தான்
இந்த சட்டத்தின் நோக்கம்.

இந்த சட்டத்தின் பெயர் மற்றும் குறிப்பிடும் நோக்கத்திலிருந்து –
குற்றம் செய்தவர்களையோ,
மிகக்கடுமையான குற்றச்செயல்களில்
ஈடுபடுபட்டவர்களையோ –
தண்டிக்கும் சட்டம் அல்ல இது என்பது
வெளிப்படையாகவே தெரியும்.

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடித்து தற்காலிகமாக ஒரு வருடம் “உள்ளே” தள்ளி விட்டால் பிரச்சினை தீர்ந்ததா…?

அவர்கள் செய்த குற்றங்களை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று,
தகுந்த ஆதாரங்களைக் கொண்டு நிரூபித்து, கடுமையான, நிரந்தரமான
தண்டனை வாங்கிக்கொடுக்கும் வரையில் –

குற்றங்களையோ, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின்
எண்ணிக்கையையோ குறைக்கவே முடியாது….

அரசியல்வாதிகளின் துணையோடு, அதிகார வர்க்கத்தின் ஆசிகளோடு –
நாளுக்கு நாள் குற்றச்செயல்களும், தொடர் குற்றவாளிகளும்
வளர்ந்துகொண்டே இருப்பதைத் தடுக்கவும் முடியாது….

நீதிமன்றங்கள், கடுமையான குற்றப்பின்னணி உடையவர்கள்
விஷயத்தில் – ஜாமீனில் விடுவதை இயல்பாக பார்ப்பதை தவிர்ப்பது
குற்றச்செயல்களை பெரிதும் குறைக்க உதவும். காவல்துறையும், இத்தகையோரை – ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கை பதிவு செய்து “உள்ளே” தள்ள வேண்டும்.

தொடர்ந்து, இத்தகைய குற்றவாளிகளை ஆதரித்து செயல்படும்
வழக்கறிஞர்களை, சமூக விரோதிகள் கூட்டத்தில் சேர்க்க வேண்டும்.

நீதிமன்றங்கள், இத்தகைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை
கொடுத்தால் மட்டும் போதாது… அதை விரைந்தும் செய்ய வேண்டும்…
“தாமதிக்கப்பட்ட நீதி – மறுக்கப்பட்ட நீதி” – ( Justice Delayed is –
Justice Denied…) என்பது நீதிமான்கள் அறியாத விஷயமா என்ன…?

இன்றைய தினம், மக்கள் – எந்த விடிவுக்கும் – நீதிமன்றங்களையே
பெரும்பாலும் நம்பி இருக்கக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது…

———————————————————-

குண்டர் சட்டத்தின் விரிவாக்கம்….

1. குண்டர் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டத்தின் முழுப் பெயர், “தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்”.

2. இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரிகள் ஒருவரை சிறையில் தள்ள முடியும். நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும் கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.

3. குண்டர்கள் என்ற வரையறையை விளக்கும்போது, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வரும் குற்றம் எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவின் உறுப்பினர் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம்.

4. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சரியா என்பதை நீதிபதி
உள்ளிட்டோரைக் கொண்ட ஆலோசனைக் குழு முடிவு செய்யும். அந்தக் குழு முடிவு செய்தாலும் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற முடியும்.

5. குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டால், அந்த நபரை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். மாநில அரசு விரும்பினால் முன்கூட்டியே
விடுவிக்கலாம்.

6. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர் நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to குண்டாக இருப்பவர்களைப் பிடித்து உள்ளே போடத்தான் குண்டர் சட்டமா….?

 1. அறிவழகு சொல்கிறார்:

  ஆண்களுக்காக: உங்களுக்கு அந்த அலறல் கேட்கிறதா? – பாரதி ஆனந்த்

  பாலியல் பயங்கரவாதிகளே.. அந்த அலறல் கேட்கிறதா?

  https://tamil.thehindu.com/opinion/reporter-page/article26506793.ece?utm_source=HP&utm_medium=hp-latest

 2. அரவிந்தன் சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது மிகவும் அவசியமான விஷயம்.
  பல வழக்குகளில், 90 நாட்களுக்குள் சார்ஜ் ஷீட் போடப்படவில்லை என்கிற காரணத்தால், ஜாமீன் கொடுக்கப்பட்டு விடுகிறது. ஜாமீனில் வெளியே வந்தவர்கள்
  மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். சாட்சிகளை மிரட்டுகிறார்கள். பயமுறுத்துகிறார்கள். அவர்களுக்கெதிரான சாட்சியங்கள் பலவீனப்படுத்தப்படுகின்றன… விளைவாக குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று
  சொல்லப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டு, விடுதலையாகி வெளிவந்து விடுகிறார்கள்.
  10-12 வழக்குகள் பெண்டிங் இருக்கும் அயோக்கியர்கள் சர்வ சாதாரணமாக தெருக்களில் சுற்றி வருகிறார்கள். நேற்று கூட டிவியில் ஒரு சிசிடிவி காமிரா காட்சி காண்பித்தார்கள். பட்டப்பகலில் ஒரு பொறுக்கி, ஒரு வயதான பெண்மணியுடன்
  பின்னாலேயே நடந்து சென்று, ஆட்கள் இல்லாத இடத்தில், அவரை கீழே தள்ளிவிட்டு, அமுக்கிப்பிடித்துக் கொண்டு, தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு
  ஓடுகிறான். சகலமும் காமிராவில் பதிவாகி இருக்கிறது.
  இவன் கைது செய்யப்பட்டாலும், 15 நாட்களில் வெளியே வந்து விடுவான்.
  இத்தகைய habitual offender களின் கை-கால்களை உடைக்க வேண்டும். அது, குறைந்த பட்சம் அடுத்த 6 மாதத்திற்காவது அவனை மீண்டும் செயல்படுவதிலிருந்து தடுக்கும்.

 3. Mani சொல்கிறார்:

  அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்படவில்லையென்றால், இத்தகையோரை அடக்கும் பொறுப்பை மக்களே ஏற்றுக்கொண்டு செயல்படும் நிலை உண்டாகும்.

 4. அரவிந்தன் சொல்கிறார்:

  இங்கே மக்களும் சரி இல்லை.
  கூட்டத்தோடு சேர்ந்து கூச்சல் போடத்தான் தெரிகிறது.
  செயலில் ஒன்றையும் காணோம்.
  தவறு செய்தவனின் முகம் தெரியும்போது ( ஜெயிலுக்கோ, கோர்ட்டுக்கோ
  கொண்டு போகும்போது) – பயன்படுத்த தக்காளிக்கும், அழுகிய முட்டைக்கும்
  இங்கே பஞ்சமா என்ன ? அடிப்பதுதான் சட்டப்படி குற்றம். அழுகிய முட்டைக்கும், தக்காளிக்கும் எந்த சட்டம் துணைக்கு வரும் ?
  தவறு செய்கிறவர்களுக்கு நமது சமுதாயத்தில் பயமே கிடையாது.
  நேர்மை பேசுகிறவர்களுக்குத்தான் இங்கே பயம்.
  என்ன காரணம் ?

 5. அரவிந்தன் சொல்கிறார்:

  கே.எம்.சார்.
  தயவு செய்து என் பின்னூட்டத்தை நீக்கி விடாதீர்கள்.

  நான் வன்முறையை தூண்டவில்லை.
  கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் சொல்கிறேன்.
  குற்றவாளிகளுக்கு பயத்தை உண்டு பண்ண வேண்டும் என்று தான் சொல்கிறேன்.
  சட்ட வரம்பை மீறாமல், மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வேண்டும் என்று தாவ்ன்
  சொல்கிறேன்.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அரசியல்வாதிகளின் ஆதரவு இல்லாமல் இந்த அயோக்கியர்களால் இந்த அளவிற்கு துணிச்சலாக செயல்பட்டிருக்க முடியாது. போலீசில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை மிரட்டி, அடித்த பொறுக்கிக்கு, உடனேயே ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள். அவன் வெளியே வந்தவுடன் புகார் கொடுத்தவரை மீண்டும் மிரட்ட மாட்டானா ?

  இதெல்லாம் யார் நம்மை என்ன செய்ய முடியும் என்கிற துணிச்சல் அல்லாமல் வேறென்ன ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s