ராகுல்ஜி, ஜெட்லிஜி – நிஜம் யார் பக்கம்….?


4-வது தடவையாக, மசூத் அசாரை
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் – உலக தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்ததையொட்டி –

இரண்டு தலைவர்கள் இரண்டுவித கருத்துகளை கூறி இருக்கிறார்கள்…

முதலில் திரு. ராகுல் காந்தி கூறியது –

ராகுலுக்கு பதிலாக திரு. அருண் ஜெட்லி கூறியது –

——————————————

இதில் அருண் ஜெட்லி கூறி இருக்கும் விஷயம் –

இந்தியாவும், சீனாவும் “இந்தி-சீனி பாய் பாய்” என்று தோள் மீது கை போட்டு வலம் வந்த காலத்தில்,
1962-ஆம் ஆண்டு சீன-இந்திய போர் நடக்கும் முன்னர் – நடந்தது…..

……….

ராகுல் காந்தி கூறி இருக்கும் விஷயம் –

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்த பிறகு, இந்தியாவின் சில பகுதிகளை
தொடர்ந்து சீனா பிடித்து வைத்திருக்கும் நிலையில் –

சீனா தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனது பகை நடவடிக்கைகளை தொடரும் நிலையில் –

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைகளை சீனா மறைமுகமாக ஆதரிக்கும் நிலையில் –

மசூர் அசாரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை தொடர்ந்து சீனா தடுத்து வரும் நிலையில்- நடப்பது…

———————-

இந்த இரண்டு பேர் கூற்றில் – நிஜம் யார் பக்கம் நிற்கிறது ….?

.
———————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ராகுல்ஜி, ஜெட்லிஜி – நிஜம் யார் பக்கம்….?

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  ஜெட்லிஜியின் பேச்சு வெறும் பிதற்றலாகத்தான் தெரிகிறது.
  எப்போதோ 60-65 வருடங்களுக்கு முன்னர், ஐ.நா.வில் சீனாவிற்கு இடம் கிடைக்க
  நேருஜி சிபாரிசு செய்ததை இப்போது நடக்கும் சம்பவங்களுக்கு காரணமாக காட்டுகிறார். வெறும் பிதற்றல். அருண்ஜி புத்திசாலியாக இருந்தது ஒரு கடந்த கால நிகழ்வாகி விட்டது.
  இத்தனை துரோகங்களுக்குப் பிறகும், சீன அதிபரை குஜராத்திற்கு அழைத்துச் சென்று நர்மதை ஆற்றங்கரையில் ஊஞ்சலில் உட்கார வைத்து ஆட்டியதும் கட்டிப்பிடித்து கொண்டாடியதும் யார் ?
  ஜெட்லிஜி என்ன வேண்டுமானலும் கூறிக்கொள்ளலாம்.
  ஆனால் அவற்றை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள மக்கள் அனைவரும் பாஜக தொண்டர்கள் அல்ல.

 2. புதியவன் சொல்கிறார்:

  ஜெட்லி சரியான பதில் கூறவில்லை. ரெலெவன்ட் ஆகவும் பதில் இல்லை. வயதா இல்லை உடல் நிலையா தெரியலை.

  இதற்குப் பதில் எப்படி காங்கிரஸ், சீனாவைக் கண்டு தொடை நடுங்கியது, அவர்கள் எல்லைப் பகுதியில் ஊடுருவியகோதும், ரோடுகளைப் போட்டபோதும், ஊழல் செய்து கொழுப்பதில் பிஸியாக இருந்தது, மும்பைத் தாக்குதலின்போது என்ன செய்வது என்பதையே யோசிக்க முடியாமல் கோழைத்தனமாக காங்கிரஸ் அரசு நடந்துகொண்டது என்பதைப் பற்றி குறிப்பிட்டிருந்தால் அது பொருந்தியிருக்கும்.

  • Rajagopalan சொல்கிறார்:

   புதியவன்ஜி

   ஊஞ்சலா(ட்)டியது
   நர்மதையில் படகு சவாரி சென்றது
   கட்டிப்பிடித்தது
   இத்தனையும் செய்தது யார் ? மன்மோகன்ஜியா ?
   சொல்லுங்கஜி
   இத்தனையும் பண்ணிட்டு இப்ப ஒரு போன் கூட
   பண்ண முடியல்லைன்னா அதுக்கு பேரு என்னஜி ?

   • Mani சொல்கிறார்:

    போன் கூட பண்ணாமலா இருந்திருப்பாங்க ?
    என்ன, ரெஸ்பான்ஸ் வெளில சொல்லிக்கற மாதிரி இருந்திருக்காது.

   • புதியவன் சொல்கிறார்:

    அரசு முறைப் பயணமாக வந்தவரிடத்தில் நடந்துகொள்வது என்பது வேறு. அவங்க அவங்க நாட்டின் நிலையைத் தீர்மானிக்கும்போது நடந்துகொள்வது வேறு. போன் பண்ணினாலும் அவங்க நிலைல அவங்க உறுதியா இருப்பாங்க. நாம விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீனா மிகப் பெரிய வலுவான நாடு. அதனுடன் போர் போகும் அளவு நாம் கொஞ்சம்கூட இல்லை. அதே சமயம், உள்ளூர் மக்களான நமக்கு சீனா பாகிஸ்தான் இவற்றைப் பற்றிக் கவலை இல்லை. நம் தேசபக்திலாம் இணையத்தில் எழுதுவதோடு ஓவர்.

    ராஜகோபாலன், நீங்க சொல்லுங்க… பாகிஸ்தான் எதிரி, கள்ள நோட்டு அடிக்கறாங்க என்று கம்பிளெயிண்ட் பண்ணிவிட்டு நம்ம நோட்டு அடிக்கற மிஷின்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு யார் கொடுத்தது ஜீ?

    உள்ளூர்ல ராஜபக்‌ஷே அரக்கன், சிங்களர்கள் எதிரிகள் என்று சொல்லிவிட்டு அவங்க ஊர்ல போய் பல்லைக் காட்டி பரிசு பெற்றுவந்தவங்க யார் யார் ஜி?

    நான் அரசியல் செய்திகளைச் சொல்லலை (இலங்கை இனப்படுகொலை, காங்கிரஸ் காரணம் என்று 10 வருடங்கள் அவர்களுக்கு எதிராக இருந்துவிட்டு இப்போது பதவிக்காகப் பல் இளிப்பதை). நான் மேலே குறிப்பிட்ட இரண்டே விஷயம், எப்படி நாம் நாடுகளை ட்ரீட் பண்ணுகிறோம் என்பதை.

    • Rajagopalan சொல்கிறார்:

     // அரசு முறைப் பயணமாக வந்தவரிடத்தில்
     நடந்துகொள்வது என்பது வேறு. //

     வெளிநாட்டு அதிபர்களை கட்டிப்பிடித்து கொஞ்சுவதையும், ஊஞ்சலில் உட்கார வைத்து ஆடுவதையும் இதற்கு முன்னர் எந்த பிரதமராவது செய்திருக்கிறார்களா ? இந்த அளவிற்கு நெருக்கம் பாராட்டுபவர்களிடம் ஒரு போன் போட்டு விளக்கமாக பேசி உதவி கேட்டிருக்க வேண்டாமா ?

     //சீனா மிகப் பெரிய வலுவான நாடு. அதனுடன் போர் போகும் அளவு நாம் கொஞ்சம்கூட இல்லை.////

     இதென்ன உளரல் ? சீனாவுடன் போருக்கு போக வேண்டும் என்று யார் சொன்னது ? விவரமாக நம் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது தான் சொல்லப்படுகிறது. கட்டிப்பிடித்து, ஊஞ்சலாடுவதற்கு நெருக்கம் உண்டேன்றால், இப்படி விவரமாக பேசுவதற்கும்
     உரிமை உண்டே ?

     காங்கிரஸ் தவறு செய்தது அதனால் – பாஜகவும் தவறு செய்யலாம் என்கிற உரிமையை உங்களைப்போன்றவர்கள் தான் கொடுக்கிறீர்கள். அவர்கள் சரியாகச் செய்யவில்லை என்று தான் வீட்டிற்கு அனுப்பினோம். இப்போது நீங்கள் சரியாகச் செய்யவில்லையென்றால் நீங்களும் வீட்டுக்கு போக வேண்டியிருக்கும் என்று தான் இங்கே சொல்லப்படுகிறது.

 3. Mani சொல்கிறார்:

  கோழைகளில் பெரிய கோழை சின்ன கோழையென்று உண்டா என்ன 🙂

  இருவருமே வாய்ச் சொல் வீரர்கள்.

 4. Selvarajan சொல்கிறார்:

  நேரடியா பதில் கூறும் வழக்கமே இல்லை என்கிற பாேது நிஜமாவது….நிழலாவது ….? என்ன ராகுல் மீது வழக்குகள் பிளஸ் ஆகி காெண்டு இருக்கின்றன… அவர் மசூர் அசாரை ஜி பாேட்டு அழைத்ததால் …!

 5. bandhu சொல்கிறார்:

  ராகுல், எந்த பதவியிலும் இல்லாததால், பதவியில் இருப்பவருக்கு வீரம் இல்லை என்று சொல்வது எளிது. நாங்கள் பதவியில் இருந்த போது எப்படி வீரத்தை காட்டினோம் என்று பேசவேண்டியது தானே? ஐந்து வருடம் முன் வரை காங்கிரஸ் தானே ஆட்சியில் இருந்தது! அவர்கள் எப்படி பாகிஸ்தானுடனும் சீனாவிடமும் வீரத்தை காட்டினார்கள் என்று பார்த்துக்கொண்டு தானே இருந்தோம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s