வெளி வந்த மர்மம்….கில்லாடி வேலை பார்க்கும் மோடிஜியின்…. ( இது தேர்தல் காலம்-5 )


மீடியாக்களில் தொடர்ந்து மோடிஜியின் இமேஜை
தூக்கி நிறுத்தும் வாட்ஸப், ஃபேஸ்புக், ப்ளாக்,
டுவிட்டர்,இன்ஸ்டாகிராம் மற்றும் டிவி செய்திகள்
வெளிவந்த வண்ணம் இருப்பது எப்படி
என்கிற மர்மத்தை உடைக்கிறது இந்த செய்தி …..

மோடிஜி விசுவாசிகள் பதட்டப்பட வேண்டாம்…
இது விமரிசனம் அல்ல..
வெறும் பத்திரிகைச் செய்தி மட்டுமே…!!!
அதுவும் அவர்களுக்கு ஆதரவான ஒரு செய்தித்தாளில் வெளிவந்ததே…!!!

( லிங்க்- https://www.dinamalar.com/news_detail.asp?id=2237533 )

—————–

கில்லாடி வேலை பார்க்கும் மோடிஜியின் “நிபுணர்கள்….”

—————

புதுடில்லி: இளைஞர்கள் அதிகம் உலாவும் சமூகவலை தளங்களை தனக்கு சாதகமாக பிரதமர் மோடி எப்படி சிறப்பாக பயன்படுத்துகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

மோடிக்காக சமூகவலை தளங்களில் பணியாற்ற 350 தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளனர். இவர்கள் டில்லியிலும் குஜராத்திலும் பணியாற்றுகின்றனர். டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,
வாட்ஸ்ஆப் ஆகியவற்றில் அவ்வப்போது பதிவுகளை வெளியிடுவது
தான் இவர்கள் பணி.

அதுவும், உடனுக்குடன் பதிவுகளை தயார் செய்து சமூகவலை தளங்களில் பதிவேற்றுவதில் இவர்கள் கில்லாடிகள்.

வீடியோ அணி

மோடி மீது அன்பும் அபிமானமும் கொண்டு
இவர்களில் 6 பேர் 30 விநாடி ஓடக்கூடிய வீடியோ தயாரிப்பில்
நிபுணர்கள். வீடியோ தயாரிப்பு, எடிட்டிங், சவுண்ட், கிராபிக்ஸ்
போன்றவற்றில் இவர்கள் புகுந்து விளையாடுவார்கள்.

ஒரு மணி நேரத்தில் ஒரு வீடியோவை தயாரித்து,
தேவை ஏற்பட்டால்
மொழி பெயர்த்து பதிவேற்றிவிடுவர்.

இவர்களுடன் அடிக்கடி போனில் மோடி பேசுவார். ஏழைகளுக்காக அதிக பதிவுகள் வெளியாக வேண்டும் என மோடி விரும்புகிறார். ‛நான் ஒரு டீக்கடைக்காரன்‛‛, ‛‛சவுகிதார் (காவலன்)” போன்ற வாசகங்கள் எல்லாம் அப்படி ஏற்பட்டது தான்.

வீடியோவுக்காக ஒரு நவீன 3டி தொழில்நுட்பத்தையும் ஜப்பானில் இருந்து வரவழைத்துள்ளார் மோடி.

டில்லியில் மோடி பேசினால், அந்த வீடியோவை இன்டர்நெட் வழியாக அது 3டி தரத்தில் உடனுக்குடன் அனுப்ப முடியும். லேசர் தொழில்நுட்பத்திலும் மோடியை காண்பிக்க முடியும்.

புதுமை

2019 தேர்தலுக்காக நவீன முறையில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் பேசி, அதை பொதுமக்களின் ஸ்மார்ட் போன்களில் காட்டும் ஏற்பாடும் நடக்கிறது.

இக்குழுவில் நம்பிக்கைக்குரிய 2 பேர் முக்கிய பங்காற்றுகின்றனர். சமூகவலை தளங்களில் வெளியாகும் பதிவுகள் பற்றி அரை மணிக்கு ஒருமுறை மோடிக்கு தகவல் தருகின்றனர்.

மோடிக்கு செய்தி, செய்தி, செய்தி மட்டுமே பிடிக்கும்.
அதற்கேற்ப இந்த நிபுணர்கள்
15 ஆண்டுகள் குஜராத்தில் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்.

மத்திய அரசின் மக்கள் தொடர்பு துறையை மோடி நம்புவதில்லை.

இதனாலேயே அவர் மீடியா ஆலோசகர் என யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. பிரதமர் ஆனதும் குஜராத்தில் இருந்து ஜெகதீஷ் தாக்கர் என்பவரை தனது அலுவலக மீடியா பிரிவுக்கு மோடி கொண்டு வந்தார். கடந்த மாதம் அவர் இறந்து விட்டார்.

அதன் பிறகு யாரையும் வைத்துக்கொள்ளாமல், மீடியாவை தானே கையாள்கிறார் மோடி.

‛‛தனது இமேஜை தானே உயர்த்திக்கொள்வதில் மோடி திறமையானவர்”.

தான் பேச வேண்டிய உரையை தானே தயாரிக்கிறார்.
எந்த விஷயத்தை வெளிப்படுத்த வேண்டும்,
எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்,
எங்கு என்ன பேச வேண்டும், யாருக்காக பேசுகிறோம்
என்பதில் திறமையாக செயல்படுகிறார் மோடி ”
என்கிறார்கள் டில்லி பத்திரிகையாளர்கள்.

.
————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to வெளி வந்த மர்மம்….கில்லாடி வேலை பார்க்கும் மோடிஜியின்…. ( இது தேர்தல் காலம்-5 )

 1. Rajagopalan சொல்கிறார்:

  Vow. Superman N.M.

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! இது புதுசா என்ன இவர்களுக்கு …! 2014 தேர்தலில் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்ற – என்னவெல்லாம் தகிடுதத்தங்கள் செய்தார்கள் என்பதை பற்றி விலாவாரியா -{ பெருமையாக } பாஜக மீடியா பொறுப்பாளர்
  டாக்டர் அர்விந்த் குப்தா அவர்கள் மும்பையில் நடந்த ஒரு கருத்தரங்கில்
  ” இந்தியாவில் – பாராளுமன்ற மற்றும் அதை அடுத்து நிகழ்ந்துள்ள
  சட்டமன்ற தேர்தல்களில், மக்கள் மனதை (ஏ)மாற்ற தாங்கள்
  எந்தவித தொழில் நுணுக்கங்களை எல்லாம் பயன்படுத்தினோம்
  என்பதை விவரமாக விளக்கி இருக்கிறார்.” —

  இதைப்பற்றி சென்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் ஜனவரி 2 –2015 ல் நம் தளத்தில் ஒரு இடுகை பதிவிட்டு இருந்திர்கள் அது :– // எப்படி (ஏ)மாற்றினோம்…!!! பாஜக மீடியா பொறுப்பாளர் ஒப்புதல் வாக்குமூலம்…!!! //
  Posted on ஜனவரி 2, 2015 by vimarisanam – kavirimainthan https://vimarisanam.wordpress.com/2015/01/02/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/
  இந்த பதிவில் // டாக்டர் அர்விந்த் குப்தா-வின் விளக்கங்களை நீங்களும்
  விவரமாகப் படித்து உண்மைகளை அறிய அவரது
  ஆங்கில உரைச்சுருக்கம் கீழே – // என்றும் ஆங்கிலத்தில் உள்ளதையும் காணலாம் —
  அதில் ஒரு நண்பரின் பின்னூட்டமும் அதற்கு தங்களின் மறு மொழியும் …
  இளந்திரையன் சொல்கிறார்:
  11:03 முப இல் ஜனவரி 2, 2015
  இதற்கு ஒரே ஒரு பாவப் பரிகாரம் தான் உண்டு.
  மோடியையும், பாஜகவையுஜ்ம் நம்பிய மக்கள்
  அனைவரும் தங்களைத் தாங்களே
  தங்கள் செருப்பாலேயே அடித்துக் கொள்ள வேண்டும்

  vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
  4:21 பிப இல் ஜனவரி 2, 2015
  நண்பர் இளந்திரையன்,

  இதை – நீங்கள் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் சரியாகப் பொருந்தும்
  என்று நினைக்கிறேன் –

  “மோடிஜியையும், பாஜக வையும் ஆதரித்து மக்கள் அலை பொங்கி
  எழுகிறது” – என்று நினைத்தவர்களை இந்த செய்தி செருப்பாலடிப்பது
  போல் இருக்கிறது. –

  சரி தானே …?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன் …
  இப்போது இந்த தேர்தலுக்கு சென்ற பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் இன்னும் அதிகமாக — விரைவாக — அதிக தொழில்நுட்பங்களோடு மீண்டும் அதே பாணியில் ” (ஏ)மாற்ற ” முயலுகிறார்கள் .. அப்படித்தானே … ? கெட்டிக்காரர்கள் …!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன்,

   சிலரை, சிலகாலம் ஏமாற்ற முடியும்.
   பலரை, பலகாலம் ஏமாற்ற முடியும்.
   ஆனால் -எல்லாரையும், எக்காலத்திலும் ஏமாற்ற முடியுமா… ?

   பார்ப்போம் …!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. true_indian சொல்கிறார்:

  இந்த செய்தி நிச்சயம் நம்பும் படியாக இல்லை.பி,ஜெ.பி யை நீங்கள் சொல்லுவது போல புகழ்ந்து வந்த செய்திகள் எந்த செய்திகளிலும் நான் கண்டதில்லை. மேலும் ஒவ்வொரு கட்சியும் இதே போன்று வேலையை தான் செய்து வரு கின்றன என்பதும் நாம் அறிந்ததே.

 4. old_indian சொல்கிறார்:

  இந்த செய்தி நிச்சயம் நம்பும் படியாக இல்லை.பி,ஜெ.பி யை நீங்கள் சொல்லுவது போல புகழ்ந்து வந்த செய்திகள் எந்த செய்திகளிலும் நான் கண்டதில்லை. மேலும் ஒவ்வொரு கட்சியும் இதே போன்று வேலையை தான் செய்து வரு கின்றன என்பதும் நாம் அறிந்ததே.

 5. true_nation சொல்கிறார்:

  இந்த செய்தி நிச்சயம் நம்பும் படியாக இல்லை.பி,ஜெ.பி யை நீங்கள் சொல்லுவது போல புகழ்ந்து வந்த செய்திகள் எந்த செய்திகளிலும் நான் கண்டதில்லை. மேலும் ஒவ்வொரு கட்சியும் இதே போன்று வேலையை தான் செய்து வரு கின்றன என்பதும் நாம் அறிந்ததே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களுக்கு,

   நமது மேற்கண்ட இடுகையை உண்மை என்று நிரூபிப்பது போல்
   ஒரு நண்பர், பாஜகவுக்கு ஆதரவான ஒரே செய்தியை மூன்று
   வெவ்வேறு பெயர்களில் பின்னூட்டமாக அனுப்பி இருக்கிறார்….

   true_nation
   old_indian
   true_indian -என்கிற வெவ்வெறு email ID -க்களிலிருந்து அந்த ஒரே நபர்
   சொல்லும் செய்தி இது தான் –
   ————–

   இந்த செய்தி நிச்சயம் நம்பும் படியாக இல்லை…….

   மேலும் ஒவ்வொரு கட்சியும் இதே போன்று
   வேலையை தான் செய்து வருகின்றன.

   —————————-

   இன்னும் கொஞ்சம் கற்பனைத்திறனுடன் அவர் செயல்பட்டிருந்தால்,
   தன்னைப்பற்றிய உண்மை வெளியாகாமலே பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கலாம்…

   மோடிஜியின் ஆதரவாளர்களுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

   நன்றி மிஸ்டர் சௌகிதார்…true_nation, old_indian, true_indian –

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • செ. இரமேஷ் சொல்கிறார்:


    இந்த வலைதள காணொளியில் நம் மோடியின் உத்திகளை நல்ல புட்டு புட்டு வச்சிருக்கார் .
    வடிவேலு சொன்ன மாதிரி..
    “பில்ட் அப்பு விடுறேனோ பீலா விடுறேனோ அது முக்கியமில்லை
    நம்ம எது செஞ்சாலும் உலகம் நம்மள உத்து பாக்கணும் “

   • true_indian சொல்கிறார்:

    பி.ஜெ.பி யை புகழும் செய்தி தளங்களை தாங்கள் காண்பித்தாள், நீங்கள் கூறுவது உண்மை என்று புலப்படும்.
    நான் அவர்களை கிண்டல் செய்யும் 100 செய்தி தளங்களை பட்டியலிடுகிறேன்.
    எல்லா செய்தி தளங்களும் அவர்களை கிண்டல் செய்யும் தொனியை தான் கையாளுகின்றன.
    இதில் ஏன் id யை வைத்து தாங்கள் ஏதோ கண்டு பிடித்ததை போல காட்டி கொல்லுகின்றீர்கள்.
    நீங்கள் சொல்லுவது போல் பி.ஜெ.பி மோசம் என்று கருதினால், அவர்கள் எவ்வாறு ஒவ்வொரு தேர்தலில்களும் வெற்றியை பெற்றிருக்கிறார்கள். voting machine ஏமாற்று வேலை என்று ஒவ்வொரு தடவையும் நம்மை ஏமாற்றி கொள்ளுவதில் அர்த்தமில்லை.

    • அரவிந்தன் சொல்கிறார்:

     true_indian,

     நீங்கள் 3 வெவ்வேறு IDக்களில் ஏன்
     பிஜேபியை ஆதரித்து எழுதினீர்கள் என்பதை முதலில் விளக்குங்கள்.

 6. M.Thevesh சொல்கிறார்:

  சன் டிவி செய்திகளையே நம்பும் வாக்காளர்களுக்கு இந்தியாவுக்கு வெளியே வரும் அதிகார பூர்வசெய்திகள் காதில் விழுவதில்லையே.
  இந்தியாவுக்கு வெளியில் உலகம் ஒன்று இருப்பதைக்கவனத்தில் எடுக்கவும்.மோடி எதிர்ப்பின் உச்ச கட்டத்தில் இந்திய ஊடகஙகள்
  இருப்பதால் உண்மை பொய் புரியவில்லை.

 7. புதியவன் சொல்கிறார்:

  இந்த இடுகைல, மோடி அவர்கள் தன்னுடைய தேர்தல் கால வேலையாக தன்னை ப்ரொஜெக்ட் செய்யும் விதமா நிபுணர்களை, நிபுணர் குழுவை வைத்திருக்கிறார் என்று சொல்றீங்க. அதுல எனக்கு எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

  மீடியாவுல பெரும்பான்மை, வெளிநாட்டினரால், அவர்களுடைய பணத்தால் நிர்வகிக்கப்படுகிறது. நேர்மையான செய்தி என்பதே கேட்பதற்கு, பார்ப்பதற்கு மிக அரியதாக இருக்கிறது. எந்த மீடியாவை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் எத்தனை பெய்டு செய்திகள் இருக்கின்றன என்பதை சாதாரணமானவர்கள் கண்டுகொள்ள முடியுமா?

  மக்கள், தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள் என்பதால், அதற்கேற்றபடி பாஜக தன் வியூகத்தை அமைக்கிறது. இதில் தவறு என்ன இருக்கிறது?

  //எல்லாரையும், எக்காலத்திலும் ஏமாற்ற முடியுமா…// – அரசியல்வாதிகள் எல்லோரையும் ஏமாற்றமுடியும் என்று நம்புவதால்தான் அப்படி முயல்கிறார்கள். இதில் எந்தக் கட்சிக்கும் விதிவிலக்கு இல்லை. பாருங்க, திருமணம் செய்துகொள்ளும்போதும் மற்ற சமயத்திலும் கிறித்துவராக இருந்த சோனியா/ராகுல்/ப்ரியங்கா போன்றவர்கள், கங்கையைச் சுத்துவதும் இந்துகோவில்களுக்குப் படையெடுப்பதுமாக இருக்கிறார்கள். எலெக்‌ஷன் நேரம் என்பதால் கம்யூனிஸ்ட் அரசுகூட ஐயப்பன் கோவில் சம்பந்தப்பட்டதை சில மாதங்களாக அடக்கிவாசிக்க முயல்கிறது. லோகல்ல, ஸ்டாலின், ‘நமக்கு நாமே’ என்று ஆரம்பித்து, ‘கிராம சபை’ என்று திமுக இமேஜை மாற்ற முயல்கிறார். மத ரீதியில் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கவேணும் என்ற வேண்டுகோள்கள் அந்த அந்த மதத்தைச் சார்ந்தவர்களால் வெளியிடப்பட்டது மீடியாவில் (வாட்சப்பில்) வந்ததை நாம் பார்த்திருப்போமே.

  தேர்தல் காலங்களில் இவை தேவையாக இருக்கிறது. அதில் தவறேதும் கிடையாது. வாக்களிப்பவர்கள்தாம் இதனை ஆராய்ந்து எது நாட்டுக்கு நல்லது என்று எண்ணி வாக்களிக்கவேண்டும். எது தங்கள் ஜாதிக்கு, மதத்துக்கு நல்லது என்று எண்ணக்கூடாது.

  • Mani சொல்கிறார்:

   // இந்த இடுகைல, மோடி அவர்கள் தன்னுடைய தேர்தல் கால வேலையாக தன்னை ப்ரொஜெக்ட் செய்யும் விதமா நிபுணர்களை, நிபுணர் குழுவை வைத்திருக்கிறார் என்று சொல்றீங்க. அதுல எனக்கு எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

   //எல்லாரையும், எக்காலத்திலும் ஏமாற்ற முடியுமா…// – அரசியல்வாதிகள் எல்லோரையும் ஏமாற்றமுடியும் என்று நம்புவதால்தான் அப்படி முயல்கிறார்கள்.

   தேர்தல் காலங்களில் இவை தேவையாக இருக்கிறது. அதில் தவறேதும் கிடையாது.

   வாக்களிப்பவர்கள்தாம் இதனை ஆராய்ந்து எது நாட்டுக்கு நல்லது என்று எண்ணி வாக்களிக்கவேண்டும்.//

   Mr.Puthiyavan,

   Wonderful; Great phylosophy !
   Good thoughts; Keep it up.
   You can also name yourself CHOWKIDAR PUTHIYAVAN

 8. Selvarajan சொல்கிறார்:

  சவ்கிதார் அதாங்க பாதுகாவலன் தான் மட்டுமே என்கிற எண்ணத்தில் மாேடி பதிவிட பாேய் …பாஜக தலைவரில் இருந்து காமெடி பீசு சேகர் வரை அனைவரும் ஏதாே பத்ம விருது பாேல தங்களின் பெயர்களில் சேர்த்து பெருமைப்பட கடைசியில் இது ஒரு தமாஷாக நாறிப்பாேய்விட்டது …தான் மட்டுமே என்கிற அவரின் நினைப்பை வீணாக்கியவர்கள் ..அவரது கட்சியினரே …அடுத்து வேற ஏதாவது புதுசா வருமா …?

 9. true_indian சொல்கிறார்:

  உப்பு சப்பு பெறாத சமீபத்தில் வெளிவந்த மெர்சல் என்ற திரைப்படத்தை தேவையில்லாமல் விமரிசித்து அதை பல நாட்கள் ஓட வைத்த புண்ணியவான்களாகிய மீடியாக்கள் , இப்பொழுது பிஜேபி க்கு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.உண்மையில் மோடி சொன்ன காவல்காரன் என்ற வாசகத்தை நான் இது வரை அறிந்ததில்லை.மேலும் கேள்வி பட்டது கூட இல்லை.ஆனால் ராகுல் காந்தி பாவம் அறியாமல் அவரது வாசகத்தை இந்தியாவின் மூளை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்து விளம்பரம் கொடுத்து கொண்டு உள்ளார்.அவருடன் எல்ல மீடியாக்களும் சேர்ந்து கொண்டு இலவச பிஜேபி விளம்பரம் தூதுவர்களாகி கொண்டு உள்ளார்கள்.போன தேர்தலில் மோடியை புகழ் பெற வைத்து, இந்தியாவின் மூளை முடுக்கெல்லாம் அவரை கொண்டு சேர்த்தவர் மணீஷ் திவாரி.இந்த முறை ராகுல் காந்தி மற்றும் பிஜேபி எதிர்ப்பாளர்கள்.
  உண்மையில் மோடி எதை எப்படி செய்தால் இலவச விளம்பரம் கிடைக்கும் என்று நன்றாக தெரிந்து வைத்துள்ளார்.ராகுல் காந்தி போன்ற அப்பாவிகளை இலவச விளம்பர தூதுவர்களாக பயன்படுத்தி கொண்டு வருகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s