மாறன் பிரதர்ஸின் – அந்த நாளும் வந்திடாதோ….!!!


தமிழ் இந்து நாளிதழின் தலைப்புச் செய்தி இது –

.

சென்னை பிஎஸ்என்எல்லின் அதிவிரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் (கடந்த 2004 முதல் 2007) பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி,

தனது சகோதரரின் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியதாகப் புகார் எழுந்தது.

இதில் அரசுக்கு 1 கோடியே 78 லட்சத்து 71 ஆயிரத்து 391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2013-ம் ஆண்டு கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

அதன் பிறகு, பல ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களைக் கூறி, கீழ் மட்டத்தில் சிபிஐ நீதிமன்றம் துவங்கி, செஷன்ஸ் கோர்ட், ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று வரிசையாக அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த வழக்கை தொடர முடியாமல், கைவிடச் செய்யவும், தாமதப்படுத்தவும்

– தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருந்த நிலையில், சென்னை
உயர்நீதிமன்றம் கடைசியாக, நேற்று முன் தினம் இட்டுள்ள
உத்திரவின் சுருக்கம் கீழே –

( https://tamil.thehindu.com/tamilnadu/article26592445.ece?
utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication )

– ஏற்கெனவே, குற்றச்சாட்டு பதிவை எதிர்த்த மனுவை விசாரித்த
உச்ச நீதிமன்றம் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளதைக் சிபிஐ குறிப்பிட்டு, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் சிபிஐ வசம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு கடந்த 13-ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்று வழக்கில் உத்தரவு பிறப்பித்தார்.

அவர் தனது உத்தரவில் –

ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கருதியதால் தான் – விசாரணை நீதிமன்றம் குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுகளில் தலையிட போதுமான காரணங்கள் இல்லை.

குற்றச்சாட்டுகளில் இருந்தும் வழக்கில் இருந்தும் விடுவிக்க மறுத்த

– உச்ச நீதிமன்றம் மனுதரார்களின் மனுவை ஏற்கெனவே
தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால் – மனுதாரர்கள் வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் சந்தித்து சட்டப்படி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே தற்போதைய நிலையில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யச் கோரி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 5 பேர் –
தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும் –

விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்
வழக்கின் விசாரணை 4 மாதங்களில்
முடிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் தனது உத்தரவில் –

———————————

சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளின் விசாரணைக்கு,
குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை
என்றால் –

விசாரணை நீதிமன்றம் அவர்களுக்கு
எதிராக வாரண்ட் பிறப்பித்து சிறையில் அடைத்து –
வழக்கு விசாரணையைத் தொடரலாம் என
உத்தரவில் தெரிவித்த நீதிபதி, குற்றச்சாட்டு
பதிவை ரத்து செய்ய வேண்டும்
என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனவும்
தெரிவித்து அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

…………

அந்த நாளும்….. வந்திடாதோ…???
…………

.
—————————————————————————————————————

இந்த வழக்கு தொடர்பாக, விமரிசனம் தளத்தில்
முன்னதாக வெளியாகிய –
இரண்டு இடுகைகளுக்கான லிங்க் கீழே –

(அவற்றை படித்தால், வழக்கு இதற்கு முன்னதாக
சென்ற பாதை தெரிய வரும் … !!! )

கே.டி.பிரதர்ஸ் + விசாரணை அமைப்புகள் V/s திரு.குருமூர்த்தி + உண்மை = முடிவு ??????

டெலிபோன் மந்திரிக்கு, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் இனாம்…!!! சென்னை கோர்ட்டில் வாதம் …!!!

.
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to மாறன் பிரதர்ஸின் – அந்த நாளும் வந்திடாதோ….!!!

 1. tamilmani சொல்கிறார்:

  நீதிபதி பி எஸ் என் ல் வழக்கில் தயாநிதி மாறன் மீது வாரண்ட் பிறப்பித்து
  சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது, இவர் எப்படி மத்திய சென்னையில்
  வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்? இவர் சிறை சென்றால் தேர்தல் நடக்குமா?
  இதே போல் கார்த்தி சிதம்பரமும் சிவகங்கையில் நிறுத்தப்பட்டுள்ளார்.
  இது எப்படி சாத்தியமாகிறது?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழ்மணி,

   நமது தேர்தல் சட்டங்களின்படி, கிரிமினல் குற்றச்சாட்டு / வழக்கு காரணமாக இவர்கள் சிறையில் இருந்தாலும் கூட இவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையேதும் இல்லை.

   விசாரணம் முடிந்து, தீர்ப்பு வரும் வரையில் இவர்கள் நிற்பதை தடுக்க முடியாது.

   தீர்ப்பு வந்தாலும் கூட, 2 வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு சிறைவாசம் விதிக்கப்பட்டால் தான்
   இவர்களுக்கு தடை வரும்.

   “வாழ்க ஜனநாயகம்…”

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. kausikan1967 சொல்கிறார்:

  Nothing will happend to KD Brothers as well as Chidambaram & Co

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா ..! இன்றைய இடுகைக்கு ஒரு முன்னோட்டம் இருந்தால் நண்பர்களுக்கு விலாவாரியா புரியும் என்பதற்காக :– // டெலிபோன் மந்திரிக்கு, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் இனாம்…!!! சென்னை கோர்ட்டில் வாதம் …!!!
  Posted on ஜூலை 31, 2018 by vimarisanam – kavirimainthan //

  இதில் கேடி களுக்காக வாதாடும் // இன்னொரு சீனியர் வக்கீல் வாதாடுகிறார்…

  “பாதுகாப்பு அமைச்சர், தனி ராணுவ விமானத்தில்
  இலவசமாக பயணம் செய்கிறார்….

  ரெயில்வே அமைச்சர், தனி (saloon) கம்பார்ட்மெண்டில்
  இலவசமாக பயணம் செய்கிறார்… இந்த நிலையில் –

  தொலைபேசி அமைச்சர், தனக்கென ஒரு தனி தொலைபேசி
  நிலையம் அமைத்துக் கொள்வதில் என்ன தவறு….? ” //
  என்று கேட்டதிலேயே இந்த கேடி பிரதர்ஸ் தங்களுக்கு என்று ஒரு தொலைபேசி நிலையம் அமைத்து செயல்பட்டார்கள் என்பது நிரூபணம் ஆகிறது அல்லவா …? கைது செய்து விசாரிக்கும் வகையில் விசாரித்தால் — அந்த நாளும்….. வந்திடாதோ…??? வந்திடும் ..

  அய்யா … யாம் முன்னோட்டம் எடுத்து பதிவு செய்துகொண்டு இருக்கும் போதே தாங்களும் அதையே செய்து விட்டிர்கள் … திரு குருமூர்த்தி தற்போது வரை இது பற்றி வாயை திறக்காமல் இருப்பதே — அவருக்கே புரிந்த உண்மை …!!!

 4. புதியவன் சொல்கிறார்:

  நாம நினைக்கறமாதிரி அரசியல் செயல்படுவதில்லைன்னு நினைக்கிறேன்.

  பாஜக, தங்களுடன் திமுக கூட்டு வைப்பார்கள் என்று நினைத்திருக்கலாம். இல்லை, ஜெட்லி, தன் கிரிக்கெட் தொடர்புகளால் கேடி பிரதர்ஸுக்கு ஆதரவாக இருந்திருக்கலாம். 4 வருடங்களில் பாஜகவினால் திமுக, காங்கிரஸ் மீதான நடந்த ஊழல் வழக்குகளில், சிறிதுகூட முன்னேற்றம் காண்பிக்க முடியாததன் காரணம் என்ன?

  நேர்மைக்கு விலை பாஜக வைத்திருந்தது என்று சொன்னால் அதில் என்ன தவறு இருக்கமுடியும்?

  சிபிஐயினால் எந்த வழக்கிலும் முன்னேற்றம் காண்பிக்க முடியாது என்றால், சிபிஐ என்ற அமைப்பு இருப்பதால் என்ன பயன்? ஏன் நாம் அதனை வெளிநாட்டினருக்கு அவுட் சோர்ஸ் செய்யக்கூடாது என்று சாதரண மனிதர்கள் நினைப்பார்களா மாட்டார்களா? (அவங்க வெஸ்டட் இண்டெரெஸ்ட் இருக்கும் என்று வாதிட்டால், நம்ம நாட்டில் சிபிஐயில் இருப்பவர்களும் அப்படித்தான் செயல்படுகிறார்கள் என்பதை நாம கண்கூடாகப் பார்க்கிறோமே)

  • Mani சொல்கிறார்:

   Mr.Puthiyavan,

   //நேர்மைக்கு விலை பாஜக வைத்திருந்தது என்று சொன்னால் அதில் என்ன தவறு இருக்கமுடியும்?//

   I fully agree with you.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s