எதிர்க்கட்சிகள் எதைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்பதையும் மோடிஜி தான் தீர்மானிக்கிறார்…!!!


– மோடிஜியும், அமீத்ஜீயும் – தேர்தலில் ஜெயிப்பதற்காக
எதையும் செய்யக்கூடியவர்கள்.

– ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றையொன்று குறை
சொல்வதிலேயே காலத்தை கடத்துகின்றன…

– கூட்டணியில் பிற கட்சிகளை இழுத்துக் கொள்வதற்காக
எத்தகைய கசப்பான மருந்தையும் உட்கொள்ள பாஜக
தயாராக செயல்படுகிறது..

– ஆனால், சீட் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்வதை
எதிர்க்கட்சிகள் ஏதோ உயிர் பிரச்சினையாக நினைத்துக்
கொள்கின்றன. விட்டுக்கொடுத்து, ஒற்றுமையாக
இருக்க வேண்டியதன் அவசியம் அவர்களுக்கு
இன்னமும் புரியவில்லை…

– எதிர்க்கட்சிகள், பாஜகவுடனான இந்த தேர்தல் போர்
தங்களுக்கு – வாழ்வா, சாவா என்கிற பிரச்சினை என்பதை
இன்னமும் உணரவில்லை… அதற்கு முக்கியத்துவமும்
கொடுக்கவில்லை…

– எதை முக்கிய பிரச்சினையாகி விவாதிக்க வேண்டும்
என்பதை இப்போதும் மோடி தான் தீர்மானிக்கிறார்…
எதிர்க்கட்சிகள் இதை உணராமல்,
அவர் விரிக்கும் வலையில் வீழ்கின்றன.

– தேசிய கட்சி என்கிற முறையில், பெரும் அளவில்
விட்டுக்கொடுத்து, எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை
ஏற்படுத்தி, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி கூட்டணியை
ஏற்படுத்த வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது…

– தனக்கான துணை கட்சிகளை கவர்ந்து இழுத்துக்கொண்டு
ஒரு வலுவான கூட்டணியை உருவாக்குவதில்
பாஜக முந்திக் கொண்டு விட்டது…

“புல்வானா” ” மற்றும் “பாலகோட்” விமான தாக்குதல்
போன்ற விஷயங்களையே திரும்பத் திரும்ப பேசி மோடி
தனக்கு சாதகமான விஷயங்களையே விவாதித்து வருகிறார்.

தேர்தலில் விவாதிக்கப்பட வேண்டிய,
பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் படுமோசமாக செயல்பட்ட –
பல விஷயங்களைப்பற்றி, எதிர்க்கட்சிகள் விவாதிக்கவே
இல்லை… அவர்கள் எதை விவாதிக்க வேண்டும் என்பதை
தீர்மானிப்பதிலும் இதுவரை – மோடியே வெற்றி பெற்றிருக்கிறார்….

———————

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான
யஸ்வந்த் சின்ஹா – மிகவும் அவசியமான பல செய்திகளை
இந்த பேட்டியில், மிகவும் வெளிப்படையாக – விவாதிக்கிறார்…

நண்பர்கள் அவசியம் காண வேண்டிய ஒரு பேட்டி –

.
—————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to எதிர்க்கட்சிகள் எதைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்பதையும் மோடிஜி தான் தீர்மானிக்கிறார்…!!!

 1. true_indian சொல்கிறார்:

  காவல காரன் என்று மோடி கூறியது தான் இப்போதைய மிக பெரிய ஊழல் என்று ராகுல் காந்தி மாயையில் உழல்கின்றார். பாவம் அவரை மோடி நன்றாக மூளை சலவை செய்து , தனக்கு சாதகமாக உபயோக படுத்தி கொண்டு வருகிறார்.

 2. Prabakar சொல்கிறார்:

  Your vtews are correct, BJP diverting all from malpractice in voting machine

 3. true_indian சொல்கிறார்:

  voting machine இல் தற்போது மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒருவர் ஓட்டு போடும் பொழுது, அதன் அருகிலேயே புதிதாக அச்சிடும் இயந்திரமும் அமைக்கப்படும்.எனவே ஓட்டு போட்ட உடனேயே, நாம் யாருக்கு வோட்டு போட்டோமோ, அந்த கட்சியின் பெயர் ஒரு தூண்டி சீட்டில் அச்சிடப்பட்டு நமக்கு காண்பிக்க படும்.அச்சிடப்பட்ட அந்த சீட்டு துண்டு, அந்த மெஷினிலேயே தங்கி விடும்.அதனால் வோட்டு எண்ணப்படும் பொழுது பதிவான ஓட்டுக்கள் மெஷின் வழியாகவும், மற்றும் இந்த அச்சிடப்பட்ட துண்டு சீட்டுகள் மூலமும் இருமுறை சரி பார்க்கப்படுவதால், இனிமேல் மெஷின் தப்பு செய்கிறது என்று வாதிட முடியாது.
  ஒருவேளை பிஜேபி ஜெயித்தால் நாம் வேறு காரணங்களை தான் கூற வேண்டும்.
  எல்லாம் நம் தலை விதி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s