இந்த பச்சை சட்டைக்காரரை இதற்கு முன்னால் பார்த்திருக்கிறீர்களா…?


கமலுடன் நின்று கொண்டிருக்கும், இந்த பச்சை சட்டைக்காரரை
இதற்கு முன்னால் நண்பர்கள் யாராவது, தமிழகத்தில் –
எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா…?

தமிழகத்தில், “வளரும் தமிழகம்” என்கிற பெயரில் ஒரு கட்சி
இருக்கிறதாம்… இவர் – அந்த கட்சியின் தலைவராம் …
பெயர் – துரை அரசன் என்பதாம்…!!!

ம.நீ.மய்யத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க
இவர் விருப்பம் தெரிவித்தாராம்…
அதை கமல் ஏற்றுக்கொண்டு,
இவரது கட்சிக்கு, இரண்டு ‘சீட்’ தந்திருக்கிறாராம்….!!!

தேர்தல் முடிந்து, ரிசல்ட் வரும்போது எப்படியோ தெரியவில்லை…

ஆனால் இப்போதே, கூட்டணி வைக்கும்போதே – பிரமிப்பூட்டுகிறார்
திருவாளர் கமல் ஹாசன்.

கலக்கறீங்க கமல்…!!! வாழ்த்துகள்…!!!


( https://tamil.oneindia.com/news/chennai/valarum-tamilagam-party-supports-makkal-needhi-maiam-344820.html )

.
——————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இந்த பச்சை சட்டைக்காரரை இதற்கு முன்னால் பார்த்திருக்கிறீர்களா…?

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  கமலுக்கு அநியாயத்துக்கும் தன்னம்பிக்கை.
  சினிமாவில் அவர் கெட்டிக்காரர் தான்.
  ஆனால், அரசியல் அவர் நினைப்பது போல் அவ்வளவு சுலபமல்ல.
  மக்களை சுலபமாக ஏமாற்றி விடலாம் என்று அவர் நினைக்கிறார்.
  ஆனால், மக்கள் ஏமாந்தவர்கள் போல் நடிப்பார்கள். ஏமாற மாட்டார்கள்.

  \

 2. Rajagopalan சொல்கிறார்:

  2-வது புகைப்படத்தை தவிர்த்திருக்கலாம்.
  அது கமலின் உயரத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறது.

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா .. ! இந்த ” இந்திய கட்சிகளுக்கு ” எந்த ஒரு கொள்கை இல்லை. கோட்பாடு இல்லை. இவர்களின் கூட்டணிக்கு யாரும் வரலாம், யாரும் போகலாம்; தடைஇல்லை.மாறாக, வாக்கு வங்கியை மட்டும் வைத்திருந்தால் போதும். என்பது ஒரு நடைமுறையாக இருக்கிற போது — கமலின் இந்த ஊர்–பேர் அறியாத ஒரு கட்சியுடன் கூட்டணி என்பது — ” பல்லிளிக்கும் கூட்டணி ரகமோ ” …?

  நம் நாட்டில் பல விதமான கூட்டணிகளும் — கோல் -மால்களும் உண்டு…. அவை பெரிய லிஸ்ட் சந்தர்ப்பவாதக் கூட்டணி,– சமயத்துக்கு கூட்டணி –வெற்றிக் கூட்டணி– முற்போக்குக் கூட்டணி– மெகா கூட்டணி — மதச் சார்பற்ற கூட்டணி — மதவாதக் கூட்டணி — இயற்கையான கூட்டணி, — செயற்கையான கூட்டணி, என எத்தனை எத்தனை பலவகையான கூட்டணிகள் இருந்தாலும் அமைக்கப்பட்டாலும்…

  இந்த ஒரே ஒரு கூட்டணி அமைவதில் மட்டும் சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் நம் இந்திய கட்சியினர்….. அது மிக ஆபத்தான ” சாதிச் சார்பற்ற கூட்டணிகள் ” அமைக்கப்படுவதேயில்லை.– அமைவதும் இல்லை — ஆனால் அனைத்து கட்சியினரும் எந்த சாதி அதிகம் இருக்கிறதோ அந்த பகுதில் அதே சாதியை சேர்ந்த வேட்பாளர்களை களம் இயக்குவதில் மட்டும் கில்லாடிகள் …

  ஓட்டுப் பொறுக்கும் கூட்டணிக் கதையில், முதன்முதல் சந்தர்ப்பவாதக் கூட்டணியைத் துவக்கி வைத்தது தி.மு.க . அதற்கு துணை போனது கம்யூனிஸ்ட் கட்சிகள் …. இதைப்போன்ற –இப்படியான ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளின் கூட்டணிக் காட்சிகள் எல்லா தேர்தல்களிலும் அரங்கேறி வளர்ந்து வளர்ந்து மெருகு பூசப்பட்டு இன்று சகிக்க முடியாதபடி நாறித் தொலைக்கிறது. …

  இதில் ” மய்யமாவது ” மற்றதாவது — ஆனால் தற்போது தமிழக மக்களுக்கு ” வளரும் தமிழகம் ” என்ற ஒரு கட்சி உலக நாயகன் மூலம் அறிமுகம் ஆகியுள்ளது — தமிழகம் வளருமா .. இல்லை இவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள — அடுத்தடுத்து வரும் தேர்தல்களின் தங்களின் சொற்ப வாக்கு வங்கியை காட்டி கல்லாக்கட்டி வளரப்போகிறார்கள் என்பது மட்டும் — நம் நாட்டில் நிச்சயமான ஒன்று … !!!

 4. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… தென் தமிழகத்துக்கு, குறிப்பா இராமநாதபுரத்துக்கு பரமக்குடிக்கு இப்போ போயிடாதீங்க. இன்னும் 20+ சீட்டுக்கு கமல் ஆட்களுக்காக வெயிட்டிங். உங்களுக்கு 1 + 1 முறைல இரண்டு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துவிடப்போகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   ஊஹூம்…..எனக்கு தகுதி இல்லையென்று நினைக்கிறேன்.
   நான் எப்பவுமே வெள்ளை சட்டை போடறவன் … 🙂 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Pingback: நம் விழியில் எரியும் கோபம் …..??? நாம் முன் ஜென்மத்தில் செய்த பாபம்…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s