“புதிய” மத்திய அமைச்சரவையில் திமுக மந்திரிகள் லிஸ்ட் ….!!!


– 3 கேபினட் அமைச்சர்கள் –

திருமதி கனிமொழி, திருமதி தமிழச்சி, திரு.ஆ.ராஜா ….

– 3 இணையமைச்சர்கள் –

திருவாளர்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த் S/O து.முருகன்,
மற்றும் எதாவது ஒரு ‘புதுமுகம்’

– ஹைலைட் – திரு.தயாநிதி மாறனுக்கும், திரு.டி.ஆர்.பாலுவுக்கும்
மத்திய அமைச்சர் பதவி கிடையாது…!!!

திமுகவுக்கு நெருக்கமான விகடன் செய்திகள்,
மேற்கண்ட லிஸ்ட்டை வெளியிட்டிருக்கிறது…!
( தயா.மா.வுக்கு நெருக்கமான உறவுடைய
விகடன் செய்தி, த.மா.வுக்கு பதவி கிடையாது என்று செய்தி
வெளியிடுவதில்… வேறு எதாவது பின்னணி இருக்கக்கூடும்…!!!
அது குறித்த விவாதம் இங்கே வேண்டாமே… )

தமிழகத்தைப் பொருத்தவரை திமுக கூட்டணி 40-ல் 30-க்கு மேல்
சீட்டுகளைப் பெறும் என்று கருத்துக்கணிப்புகள்
வெளியாகி இருக்கும் நிலையில் மேற்படி முடிவுகளை
திமுக எடுக்கக்கூடும்… அந்த மட்டில் கிசு கிசு செய்தி
உண்மையாக இருக்கலாம்….!!!

ஆனால் – மத்தியில் திரு.ராகுல்காந்தி தலைமையில்
காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் தானே இது சாத்தியமாகும்….
ஒருவேளை பாஜக கூட்டணி வெற்றி பெற்றால்
இது எப்படி முடியும் …? என்று மக்கள் நினைக்கலாம்…

பெரும்பாலான கருத்து கணிப்புகள், மத்தியில் பாஜவுக்கு மெஜாரிடி
கிடைக்காவிட்டாலும் கூட, கிட்டத்தட்ட 200 சீட்டுகளாவது
அதற்கு கிடைக்கும் என்றும் தனிப்பட்ட பெரும் கட்சி
(single largest party) என்கிற அந்தஸ்து கிடைக்கும் என்றும்
சொல்கின்றன.

அந்த நிலையில், ஜனாதிபதி பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு
விடுவதற்கே வாய்ப்பு உண்டாகும்… பாஜக ஆட்சியமைக்கப்போகிறது
என்கிற ஒரு செய்தி போதாதா – மற்ற துண்டு, துக்கடா கட்சிகள்
எல்லாம் அதனுடன் போய்ச்சேர்ந்து அதற்கு மெஜாரிடியை
உருவாக்குவதற்கு …???

பாஜகவும் – பெருந்தன்மையுடன், அதுவரை தங்கள்
கூட்டணியில் இல்லாத சிறிய கட்சிகளுக்கு,
தங்களுடன் கூட்டணி அரசில் சேரும்படி அழைப்பு விடுக்கும்…!!!

இது போதாதா…?
தமிழக நலன்கள் (…? ) காக்கப்பட வேண்டாமா…?
தேர்தலுக்குப் பிறகும், ராகுல்காந்தியை நம்பியிருந்தால் –
தமிழகத்திற்கென்று மத்திய அமைச்சர்களே
இல்லாமல் போய் விடுவார்களே…?

எனவே –
தமிழகத்தின் நன்மையை கருதி,
தமிழக மக்களுக்கு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வருவதற்காக –
திமுகவும், (தேர்தலுக்குப் பிந்தைய) மத்திய பாஜக கூட்டணி அரசில்
சேரும் என்று நம்பலாம்.

அப்போது மேலே பட்டியலில் உள்ள அதே திமுக எம்.பி.க்கள் –
மத்திய அமைச்சராவது சாத்தியம் தானே…?

தேர்தலுக்குப் பின் மத்தியில், பாஜக ஆட்சியமைத்தால்,
அதில் சேர மாட்டோம் என்று திமுக தலைவர்
இதுவரை எங்கேயாவது கூறி இருக்கிறாரா என்ன….? 🙂 🙂 🙂

( லிஸ்ட்டில் இருப்பவர்கள் இருப்பவர்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது என்கிற நல்ல
நோக்கத்தில் மட்டுமே எழுதப்பட்ட இடுகை இது… !!! )

.
———————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to “புதிய” மத்திய அமைச்சரவையில் திமுக மந்திரிகள் லிஸ்ட் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  //வேறு எதாவது பின்னணி இருக்கக்கூடும்…!!!// – நீங்க கூடாதுன்னு சொன்னா, அதை முதலில் செய்யணுமே கா.மை. சார்… எனக்குத் தோன்றும் காரணம், டி.ஆர்.பாலுவை நிச்சயமாக கழட்டிவிடுவார்கள். தயாநிதிக்கு கொடுப்பார்கள் (இரண்டுபேரில் ஒருவருக்குக் கொடுக்கணும் என்று). அதனால் இந்தச் செய்தியை விகடன் வெளியிட்டிருக்கும் (தயாநிதியின் தூண்டுதல் பேரில்).

  தமிழச்சி – சான்ஸ் இருக்கலாம். கதிர் ஆனந்த்-நோ சான்ஸ். அதற்குப் பதில் த.மாறன்.

  திமுக+காங்கிரஸ் 35-38 சீட்டுகள் வெற்றிபெறலாம். திமுகவின் 23 சீட்டுகளுக்கு இத்தனை மந்திரிபதவிகள் கிடைக்காது, பாஜக ஆட்சிக்கு வந்தால். காங்கிரஸ் ஆட்சியிலும், அதை டிமாண்ட் செய்யும் வலிமையோ சாமர்த்தியமோ கருணாநிதிபோல ஸ்டாலினுக்குக் கிடையாது. எனக்கு மனதில் சபரீசன் அல்லது உதயநிதியை எலெவேட் செய்வார் என்று தோன்றுகிறது (மத்தியில் நடப்பது தெரியவேண்டும் என்பதற்காக). ஆ.ராசா மற்றும் ஜெகத்ரட்சகன் – யாருடைய பினாமி என்று சொல்லப்போவதில்லை.

 2. புதியவன் சொல்கிறார்:

  //இதுவரை எங்கேயாவது கூறி இருக்கிறாரா என்ன….?// – கூறியிருந்தால் மட்டும் என்ன? சிலவருடங்களுக்கு முன்புதான், காங்கிரஸோடு இனி எப்போதும் கூட்டணி கிடையாது என்றார். (யூ டியூபில் இன்னும் அது காணக்கிடைக்கிறது). ஏன் இப்போது சேர்ந்தீர்கள் என்று யாரும் கேட்கவில்லை. பாஜகவோடு சேர்ந்தாலும், அல்லக்கைகள், அதனை ஜஸ்டிஃபை பண்ணி எழுதுவார்கள். ஏதோ…பாஜகவை எதிர்க்கணும் என்பதற்காக திமுகவை ஆதரித்தவர்கள்தான் எங்க போவாங்கன்னு தெரியலை.

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! தேர்தலுக்கு பின் பேரம் பேசும் வியாபாரம் சூடு பிடிக்கும் — இது மக்களுக்கு என்ன புதுசானதா — ஆச்சர்யமானதா –அதிர்ச்சியானதா — அதிசயமானதா இந்த வியாபாரிகளின் நிலை — ? அதற்கு இப்போதே ஸ்டாலின் ஒரு ” பிட்டை ” போட்டு வைப்பது இதுபோல நான் இந்துக்களுக்கு எதிரி இல்லை என அடிக்கடி கூறுவதும் — நாளைக்கு யாரும் கொள்கை குழப்பம் ஏன் என்று கேட்காமலிருக்க — கிருஷ்ணர் சர்ச்சையில் வீரமணிக்கு கண்டனம் தெரிவிப்பதும் எல்லாம் எதற்கு ..? , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திராவிட இயக்க தலைவர்கள் எளிதில் உதிர்க்காத வார்த்தைகள் இது…. இப்படி பேச ஸ்டாலினுக்கு அவசியமும், அவசரமும் வந்துள்ளது என்பதில் ஒளிந்திருக்கு பல விஷயங்கள் — என்ன தயாநிதி இல்லையென்றால் — உதயநிதி இருக்கவே இருக்கார் …!!!

 4. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … // தமிழகத்தின் நன்மையை கருதி,
  தமிழக மக்களுக்கு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வருவதற்காக –
  திமுகவும், (தேர்தலுக்குப் பிந்தைய) மத்திய பாஜக கூட்டணி அரசில்
  சேரும் என்று நம்பலாம் // …. உங்களது நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று தான் காரியங்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன அதற்கு சான்று இன்னொன்று :–. // தூத்துக்குடியில் கனிமொழிக்கு இப்படியும் நெருக்கடி.. பெரியார் போட்டோ திடீர் மாயம் ஏன்? //
  Read more at: https://tamil.oneindia.com/news/tuticorin/periyar-picture-removed-from-kanimozhi-twitter-handle-346747.html ..

  காணாமல் போன பெரியார் …? ஆனா இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தே ” பதவிக்காக எவன் காலையும் நக்குவான் ” என்று பெரியார் கூறினாரோ — என்னவோ ..? நல்லதீர்க்க தரிசனம் …!

 5. tamilmani சொல்கிறார்:

  முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். ஸ்டாலின் வகையறாக்கள்
  மோடியை மிகவும் மோசமாக விமர்சித்திருக்கும் நிலையில் அவர் திமுகவின்
  ஆதரவிற்கு பதில் பிஜு ஜனதாதளம், ஜெகன் கட்சி ,தெலுங்கானா ராஷ்டிர சமிதி
  ஆகியோரின் ஆதரவில் ஆட்சி அமைந்தால்திமுகவிற்கு கணிசமான எம் பிக்கள் இருந்தும்
  எதிர்பார்க்கும் “பசையான” துறைகள் கிடைக்க வாய்ப்பில்லை. போன தடவை அதிமுகவுக்கு
  37 எம் பிக்கள் இருந்தும் ஆட்சியில் பங்கு பெற முடியவில்லை. ஆனால் மோடி வெற்றிபெற்று
  ஆட்சி அமைத்தால் பொன்னார் , அன்புமணி சுதீஷ் அதிமுகவில் தம்பிதுரை வேணுகோபால்
  தமிழிசை, ராஜா சி பி ராதாகிருஷ்னன் ஆகியயோர் வெற்றி பெற்றால் மந்திரி பதவிக்கு
  வாய்ப்பு இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s