நம் விழியில் எரியும் கோபம் …..??? நாம் முன் ஜென்மத்தில் செய்த பாபம்…!!!தேர்தல் அறிவிப்பு வரும் வரை கூட்டணிக்கு
ஆள் தேடிவிட்டு,
யாரும் கிடைக்காமல் –
(கடைசியில் அந்த பச்சை சட்டை போட்டவரைக் கூட
கூட்டத்தில் காணோம்…)

மொக்கை வேட்பாளர்களைத் தேடிப்பிடித்து
மக்கள் தலையில் கட்டி,
இவர்களை தேர்ந்தெடுங்கள் என்று ….

தேர்தல் பிரச்சாரம் செய்யும்போதும்,
டிவியை உடைத்து “நாடகம்” ஆடினால் …

கமலுக்கு நடிப்பு நன்றாக வரும் என்பது உறுதியாகும் – ஆனால்,
இவர் மீது நம்பிக்கை எவருக்கு வரும்….?

மொக்கை என்று சொன்னேனே –
ம.நீ.ம. சிவகங்கை தொகுதி வேட்பாளர்
யார் தெரியுமா…?

இந்த கட்சி சார்பாக நிற்கும் சில
வேட்பாளர்களைப்பற்றிய விபரீதக்கதைகள்
நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால் …
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு போதுமே…!!!

கீழே உள்ள வீடியோவை பாருங்கள்… புரியலாம்…!!!

ம.நீ.ம.வில் சேரும் முன்னர், அவர் அதிமுகவில் இருந்தாராம்.

ஜெயலலிதா அவர்கள் அப்போலோ ஹாஸ்பிடலில்
அட்மிட் ஆகியிருந்த சமயத்தில் –
தான், தாங்கொணா சோகத்தில் ஆழ்ந்திருந்ததை –

தானே வீடியோவாக படம்பிடித்து, யூ-ட்யூபில் பதிந்து
தன் சோகத்தை எல்லாருக்கும் பறைசாற்றிய
திருவாளர் சிநேகன் அவர்களின் இந்த விபரீத வீடியோவை
நேற்று தற்செயலாகப் பார்த்தேன்…

( இவரைப்பற்றிய பயமுறுத்தும் இன்னொரு செய்தி –
இவரது அரசியல் குரு – (சசிகலா) நடராஜன் அவர்களாம்..
இவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்…!!! )
இவர் தான் இப்போது கமலின் சிவகங்கை கேண்டிடேட்…!!!

இந்த வீடியோவை கம்ப்யூட்டரில் பார்த்ததும்,
உலகநாயகர் செய்த அதே காரியத்தைத்தான்
எனக்கும் செய்யத் தோன்றியது…
உடைக்க டார்ச் லைட்டை தேடினேன் – ஆனால்,
நல்ல வேளையாக – கிடைக்கவில்லை….!!!

கஷ்டப்பட்டு சம்பாதித்த – பென்ஷன் பணத்தில் வாங்கிய
என் கம்ப்யூட்டர் அதிருஷ்டவசமாக … உயிர் தப்பியது….!

உண்மையிலேயே –
நாமெல்லாரும் ரொம்ப பாவம் செய்திருக்கிறோம்…
இந்த மாதிரி ஒரு தேர்தலை சந்திப்பதற்கு ..!!!

.
——————————————————
பின் குறிப்பு –

நாடகம், உடனேயே கைமேல் பலனைத் தந்து விட்டது…
அவர் தனது -” விழிகளில் எரியும் கோபம்….” விளம்பரத்தில்
கூறியுள்ள அனிதா குடும்பம் –

வருகிற தேர்தலில் திருமாவளவன் அவர்களின்
( திமுக, ) கூட்டணிக்கு 🙂 🙂 –
எல்லாரையும் ஓட்டு போடச்சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறது… !!!

.
————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to நம் விழியில் எரியும் கோபம் …..??? நாம் முன் ஜென்மத்தில் செய்த பாபம்…!!!

 1. Rajagopalan சொல்கிறார்:

  Good Satire.

  It is just a time pass for Kamal.
  that’s Ok. Understandable.
  But why he expects Public to get fooled ?

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! அம்மா .. என்னம்மா ஆச்சு என்று பீலா விட்டது ஒருகாலம் — கமலின் ” பிக் பாசில் ” அடைந்து கிடந்து அழிச்சாட்டியம் பண்ணது ஒரு காலம் — சிநேகமான சினேகனுக்கு சிவகங்கை கேண்டிடேட் என்கிற வேடம் இப்போது ! .. மற்றதைப்பற்றி நீங்களே கூறிவிட்டிர்கள் … !

  இந்த தேர்தலில் ஏகப்பட்ட காமெடி காட்சிகளில் கமலின் தனது சின்னத்தையே தூக்கி அடிச்சதும் ஒன்று …. குடும்பமே கண்ணீர் விட்டு அழுது ஓட்டு கேட்கும் காட்சிகள் — வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று வாரிசுக்காக பிரச்சாரம் செய்யும் கூட்டத்தில் பேசும் காட்சிகள் — நீட் தேர்வுக்காக வாதாடியவரின் கணவரே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறும் காட்சிகள் — மதுரை லீலாவதியை கொன்றவர்களோடு கூட்டணி அமைத்து சொரணையில்லாமல் ஓட்டு கேட்கும் சிபிஎம் கட்சியின் காட்சிகள் … அடடா .. என்னமா மக்களின் ” காதுல வாழைப்பூ ” சுத்தி ஏமாற்ற துடிக்கும் அரசியல் அவதாரங்கள் … சூப்பர் — தேர்தல் … ? ஜன நாயகம் வாழ்க …!!!

 3. புதியவன் சொல்கிறார்:

  கமல் மீது என்ன தவறு கண்டீர்கள்? நான் ஒரு தவறையும் காணவில்லை.

  அவர், ‘தான் உமி வைத்திருக்கிறேன்’, ‘அரிசி வைத்திருப்பவர்கள் எல்லோரும் என்னோடு சேருங்கள், இரண்டையும் கலந்து ஊதி ஊதி தின்னலாம்’ என்று சமத்துவம் பேசுகிறார். எந்தப் பெரிய கட்சியும் அவரோடு கூட்டணி வைக்காததற்கு கமலைக் குறை சொல்லலாமா? கூட்டணிக்கு வரத் திராணியற்ற, தைரியமற்ற, மக்கள் நலன் மேல் அக்கறை இல்லாத அந்தக் கட்சிகளைத்தானே குறை சொல்லணும்?

  இதைவிட ஒரு நல்ல காலம் தமிழகத்துக்கு நேர்ந்ததை நீங்கள் கவனிக்கவிட்டீர்கள். 40 தொகுதியில் ஆட்கள் கிடைக்காவிட்டால், பிக் பாஸில் கலந்துகொண்டவர்கள் வேட்பாளராக நிற்கணும் என்று பிக் பாஸ் அக்ரிமெண்டில் இருந்ததா எனத் தெரியவில்லை. இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நம்மைப் பிடித்த நல்லகாலம்.

  பிக் பாஸில் ‘நாடகம்’ நடத்துவதுபோல், தேர்தலின்போதும் இதுபோல் நாடகம் நடத்தினால் டிஆர்பி (அதாவது வாக்குகள்) ரேட் உயரும் என்று கமல் கட்சியின் தலைவர் (விஜய் டீவி ஓனரோ? மகேந்திரன்னு சொல்றாங்களே) சொல்லியிருப்பாரோ?

 4. Prabhu Kalidas சொல்கிறார்:

  உங்கள் தலையில் இருப்பது கமல் வெறுப்பு மலம்

  இன்று நேற்று அல்ல

  தொன்று தொட்டு இருப்பது

 5. Prabhu Kalidas சொல்கிறார்:

  நீங்கள் கமல் தொடர்பாக சொன்ன ஒரே ஒரு நல்ல விடயம் ?

  ஒன்றும் இருக்காது

  காரணம்

  கமல் வெறுப்பு
  உங்கள் குடும்பத்துக்கு கமல் என்ன துரோகம் பண்ணினாரோ தெரியலையே

 6. tamilmani சொல்கிறார்:

  ஸ்டாலின் குரல் கேட்டு டீ வி உடைத்த காம ஹாசன் அவர்களே
  நிச்சயம் உங்களுக்கு வோட்டு இல்லை . ஊருக்கு உபதேசம்
  செய்பவர்களெல்லாம் ஒரு முன் மாதிரி யாக இருக்கவேண்டும்.
  ஸ்டெர்லிட்டை துவங்கி வைத்தவர் மகன் இப்போது அதை மூட சொல்கிறார்.
  நீட் தேர்வை எதிர்க்கும் திமுகவின் கூட்டணி சிதம்பரத்தின் மனைவி
  நீட் தேர்வுக்காக வாதிடுகிறார். கார்த்தி நீட் தேர்வை வரவேற்கிறார். இந்த குழப்பத்தின்
  நடுவே கமல் தினகரன் சீமான் போன்ற காமெடியன்கள் . தமிழக மக்கள் நன்கு யோசித்து
  தங்கள் ஜனநாயக கடமை ஆற்றவேண்டும்.

 7. Charles சொல்கிறார்:

  //உங்கள் குடும்பத்துக்கு கமல் என்ன துரோகம் பண்ணினாரோ தெரியலையே//
  You have got your answer in the question itself…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சார்லஸ்,

   கமல் என் குடும்பத்திற்கு எந்த துரோகமும் பண்ணவில்லை உண்மை தான்.

   ஆனால் நான் எனக்காக பேசவில்லை –

   திருமதி வாணி கணபதிக்கு என்ன துரோகம் செய்தார் என்று முந்தைய
   செய்திகளை / இடுகைகளை படித்து, அவர் வாயாலேயே சொல்வதை
   தெரிந்து கொள்ளுங்கள்.

   இரண்டு குழந்தைகளை பெற்றும்,
   திருமணம் செய்து கொள்ள மறுத்து
   திருமதி சரிகாவிற்கு என்ன துரோகம் செய்தார் என்பதையும்
   செய்திகளில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

   ofcourse திருமதி சிம்ரன் இதைப்பற்றி ஒன்றும்
   வெளிப்படையாக சொல்ல மாட்டார்… என்றாலும் –

   திருமதி கௌதமி நிறைய சொல்லி இருக்கிறார்…
   படித்து தெரிந்து கொள்ளவும்.

   .
   – செய்திகளை சரியாகத் தெரிந்துகொண்டு,
   தெளிவு பெற வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. Antony சொல்கிறார்:

  I don’t understand your logic for opposing Kamal for his private life whereas you praise an actor who snatched the wife of another???

  • தமிழன் சொல்கிறார்:

   அந்தோணி – வரலாறு தெரியாமல் எழுதக்கூடாது. நீங்கள் எம்ஜியாரைப் பற்றிச் சொன்னால், நீங்கள் நினைப்பதுபோல நடந்ததில்லை. வி.என்.ஜானகி அவர்களை நடிக்கவைக்க, அவரது பெற்றோரிடம் காசு கொடுத்து வி.என்.ஜானகியை காண்டிராக்டில் அழைத்துச் சென்றார் அவரது ‘பாதுகாப்பாளர்’ என்ற பெயரைத் தாங்கியவர் (பாபனாசம் சிவனின் உறவினர்). தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெண்ணை வைத்து, அவருடைய நடிப்பு உழைப்பில் சம்பாதித்தார். அப்போதுதான் வி.என்.ஜானகி அவர்களும் எம்ஜியார் அவர்களும் ஒருவரை ஒருவர் விரும்பியது. அதற்கான விலையைக் கொடுத்து அவர்களது திருமணம் நடந்தது. இதற்கான கோர்ட் கேஸுக்கு பெருந்தன்மையாக சாட்சி சொன்னது, விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள்.

   நாம நம்மை ஆள ஆசைப்படுபவர்கள், சொந்த வாழ்க்கையில் பூச்சியமாக இருந்தாலும், ‘புத்தர் போல் நமக்கு உபதேசம்’ சொன்னால் பெரிய ஆள் என்று நினைக்கிறோம். அதற்குக் காரணம் நமது மடைமைதான்.

   கமலஹாசன், அரசியல் களத்தில் எம்ஜியார்,ஜெ., கருணாநிதி இருந்தபோது வந்ததே இல்லை. ஜெ.வின் 91-96 ஆட்சி நன்றாக இல்லாதபோதும், கருணாநிதி/திமுக ஆட்சி மோசமாக இருந்தபோதும், ‘ஜிங் சக்’ ஜால்ரா போட்டுக்கொண்டிருந்தவர் கமல். ஆனால் தைரியமாக மேடைகளில் அதனை எதிர்த்தவர் ரஜினி (ஜெ.வுக்கு எதிராக மேடையில் பேசி, கட்சிகளை ஒன்றுதிரட்டினார், மூப்பனாரின் ஆதரவோடு… திமுக மோசமாக ஆட்சி புரிந்தபோது தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதைச் சொன்னவர் ரஜினி). இன்றைக்கு டார்ச் லைட் ஆட்டிக்கொண்டு வந்தால், கமல் பெரிய அறிவாளி, சமூக நன்மைக்காக பாடுபடுபவர் என்று சொல்லவேண்டுமோ?

   தன் தொழிலிலேயே நாணயமாக இல்லாதவர் கமல். அவர் எத்தனை புரொடியூசர்களை போண்டி செய்தார் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    தமிழன்,

    உங்கள் பொருத்தமான பின்னூட்டத்திற்கு பாராட்டுகள்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   அந்தோனி,

   மற்றவரை குறை சொல்லும்போது, நீங்கள் உங்களையே expose
   செய்து கொள்ளும் பலவீனத்தில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

   இப்போது, கமலின் private life பற்றி குறை சொல்லக்கூடாது
   என்று வாதாடும் நீங்கள், முன்னதாக உங்களது ஒரு பின்னூட்டத்தில்,
   ரஜினியைப்பற்றி என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைவுபடுத்த
   அதை கீழே தந்திருக்கிறேன்.

   You said about Rajini earlier –

   // I could not agree on his character.
   He could not keep his promise given to his own fans
   during her daughter’s wedding. //

   நீங்கள் கமலின் die hard Fan ஆக இருந்தால் இருந்து விட்டு போங்கள்..
   ஆனால், எழுதுபவர்களைப் பற்றி தவறான
   கருத்துகளை கூறாதீர்கள்..

   நான் என்ன சொல்ல விரும்பினாலும், அதை ஓளிவு மறைவின்றி,
   தெளிவாக, வெளிப்படையாகச் சொல்லி வருகிறேன்…

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s