சிங்கப்பூரில் ஒரு உலக அற்புதம் –


ஏற்கெனவே பல அற்புதங்களால் டூரிஸ்டுகளை
திணறடித்து வரும் சிங்கப்பூரின் அதிசயங்களில்
புதிதாக இன்னொரு அற்புதமும் சேர்ந்து கொண்டிருக்கிறது –
“ஜூவல் சாங்கி”

உலகின் நம்பர் ஒன் விமான நிலையமாகத் திகழும்
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில்
ஒரு புதிய பகுதியாக ” Jewel Changi ”
என்னும் 10 மாடி உயர செயற்கை நீர்வீழ்ச்சியை,
டெர்மினல் -1-க்கு எதிரே – 1.7 பில்லியன் டாலர்
மதிப்பில் உருவாக்கி இருக்கிறது சிங்கப்பூர் அரசு.

130 அடி உயர, உள்ளரங்க நீர்வீழ்ச்சியும்,
வண்ணமயமான லேசர் லைட்&சவுண்ட் ஷோவும் –
அற்புதமான தோட்டங்களையும், மலர் பூங்காக்களையும் –
அதன் ஐந்து மாடிகளில் உள்ளடக்கி இருக்கும் ஜூவல் சாங்கியில்
பலநூறு கடைகளும், உணவகங்களும்
இந்த 135,700 சதுரமீட்டர் அளவுள்ள அரங்கினுள்,
ஒரே கூரையின் கீழ் அமைந்திருக்கின்றன.

இந்த ஜூவல் சாங்கி வருகிற 17-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு
அர்ப்பணிக்கப்படுகிறது.

ஜூவல் சாங்கி பற்றிய காணொளி காட்சி –
நண்பர்களின் பார்வைக்கு –

இந்த அற்புதம் உருவாக்கப்பட்டது எப்படி…..?

கடைசியாக சிங்கப்பூர் போய் 30 ஆண்டுகளாகி விட்டன.
இடையில் – ஏகப்பட்ட மாற்றங்கள். வளர்ச்சிகள், கவர்ச்சிகள்…!!
இப்போது மீண்டுமொரு தடவை சிங்கப்பூர் போக வேண்டும் போல்
தோன்றுகிறது….. …!!!

என்ன சிங்கப்பூர் நண்பர்களே வரலாமா …??? 🙂 🙂 🙂

.
————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சிங்கப்பூரில் ஒரு உலக அற்புதம் –

  1. நெல்லை பழனி சொல்கிறார்:

    வீடியோவை பார்த்துட்டு வயிர்றேரிசலாக இருந்தது ,,,நம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் கதியையும் நினைத்து பார்த்தேன். இந்தியாவில் திட்ட்ங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு குறைவில்லை . அந்த நிதி நேர்மையாக செலவழிக்கப் பட் டால் நம் தேசமும் எங்கோ சென்று இருக்கும் . திட்டத்துக்காக ஒதுக்கப் பட்ட நிதி 20% கூட அதற்காக செலவழிக்கப் படுவதில்லை. எப்பொழுது நாம் நேர்மை உள்ளவர்களாக மாறுவோம் .

  2. இராசு பழனிக்குமார் சொல்கிறார்:

    நான் 19 ம் தேதி செல்கிறேன்..தகவலுக்கு நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s