நவீன ஜெகதலபிரதாபன் – அ.அ. ….!!!


பத்திரிகைச் செய்தி ஒன்று. ஜெகதலபிரதாபன் லீலைகள் மாதிரி –

கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான்…
அநேக நாளிதழ்களில் வெளியாகி இருக்கிறது…
எனவே, எதைப்படித்தாலும் ஒன்று தான்.
தினமலர், மின்னம்பலம் செய்தியை கீழே தருகிறேன்…

தேர்தல் நேரம்.. எல்லாரும் பிசி …!!!
எனவே, சுருக்கமாக செய்தி,
+ 2-4 கேள்வி/விளக்கங்ளை தந்து விட்டு,
போய்க்கொண்டே இருக்கலாம்… !

தினமலர் –
————

மின்னம்பலம் –
(https://minnambalam.com/k/2019/04/13/74)
—-

அனில் அம்பானிக்கு வரிச்சலுகை: பிரான்ஸ் பத்திரிகை!

—-

பிரான்ஸுடன் 2015ஆம் ஆண்டில் பிரதமர் மோடி
ரஃபேல் ஒப்பந்தம் போட்ட காலகட்டத்தில்
அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு
ரூ.1,124 கோடி வரியை தள்ளுபடி செய்துள்ளதாக
அந்நாட்டின் புகழ்பெற்ற ஊடகமான லீ மோண்டே கூறியுள்ளது.

தொழிலதிபர் அனில் அம்பானி பிரான்ஸில் –
ரிலையன்ஸ் ஃபிளேக் அட்லாண்டிக் பிரான்ஸ் –
என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் 2007 முதல் 2012 வரையில் செலுத்த வேண்டிய
வரியில் வரி ஏய்ப்பு செய்ததை பிரான்ஸ் அதிகாரிகள்
2 முறை கண்டுபிடித்துள்ளனர் என லீ மோண்டே கூறியுள்ளது.
குறிப்பாக 2007 முதல் 2010 வரையில் செலுத்த வேண்டிய வரியில்
ரூ.469 கோடி செலுத்தாமல் இருந்ததை
பிரான்ஸ் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விசாரணைக்குப் பிறகு முதல்கட்டமாக 60 கோடி ரூபாயை
செலுத்துவதாக அனில் அம்பானியின் நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் மீண்டும் 2010 முதல் 2012 வரையிலான காலத்திலும்
இந்நிறுவனம் வரி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் அனில் அம்பானியின்
நிறுவனம் ரூ.712 கோடி வரையில் வரி செலுத்தாமல்
நிலுவையில் வைத்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில்
பிரான்ஸில் இயங்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ்
ஃபிளேக் அட்லாண்டிக் பிரான்ஸ் நிறுவனம்
ரூ.1,182 கோடி வரையில் வரி செலுத்தாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் பிரான்ஸ்
நாட்டிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க
புதிய ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.
இதன்படி பிரான்ஸின் டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ்
நிறுவனத்தை இணைத்துக் கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில்
மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இந்த
ஒப்பந்தம் கையெழுத்தான 6 மாத காலகட்டத்தில்
அனில் அம்பானியின் பிரான்ஸ் நிறுவனம் செலுத்தாமல்
தாமதித்து வந்த 1,182 கோடி (15.1 கோடி யூரோ)
ரூபாயில், 1,124 கோடி ரூபாயை பிரான்ஸ் அரசு தள்ளுபடி
செய்துவிட்டதாக லீ மோண்டே கூறியுள்ளது.

வெறும் 57 கோடி ரூபாய் வரியை மட்டும்தான்
அனில் அம்பானியின் நிறுவனம் செலுத்தியதாகவும்
குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை
அனில் அம்பானி மறுத்துள்ளார்.
இதுகுறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம்
வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரான்ஸில் செயல்பட்டு வந்த
ரிலையன்ஸ் ஃபிளேக் அட்லாண்டிக் பிரான்ஸ்நிறுவனத்துக்கு
2008 முதல் 2012 வரையில் 20 கோடி ரூபாய் இழப்புதான் ஏற்பட்டது.
ஆனால் பிரான்ஸ் வருமான வரித்துறை அதிகாரிகள் எங்களிடம்
ரூ.1,100 கோடி வரை வரி செலுத்தக் கோரினார்கள்.

இறுதியாக சுமுக பேச்சுவார்த்தையின்படி ரூ.56 கோடி செலுத்தினோம்.
லீ மோண்டே வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது”
என்று கூறப்பட்டுள்ளது

——————————————

ஆக மொத்தம் நமக்குத் தெரிய வருவது, புரிய வருவது என்ன…?
1999 -லிருந்து அ.அ. ஃப்ரான்ஸில் ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார்.
இந்த ஆசாமி இவ்வளவு பெரிய கம்பெனி ஒன்றை ஃப்ரான்ஸில்
நடத்தி வந்தது இங்கே எவ்வளவு பேருக்குத் தெரியும்…?

எவ்வளவு Investment …?
என்ன Turn over..?
யார் யார் Partners…?
ஊஹூம் – சர்வம் சீக்ரெட் மயம்…!
அதிகாரத்தில் இருக்கும் சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்…!

2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில்,
அந்த கம்பெனி வரிமோசடி செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு –
முதலில் ஒட்டு மொத்தமாக சுமார் 1182 கோடி ரூபாயை
வரியாக கட்டு என்று அ.அ. கம்பெனியிடம் ஃப்ரென்ச் அரசு
சொல்லி இருக்கிறது…

இந்த கம்பெனியின் parent company-யான Reliance Global Com,
சட்டவிரோத, வரி ஏய்பாளர்களின் சொர்க்கமான ( tax haven )
Bermuda-வில் இருக்கிறது… பணத்தை எல்லாம் அங்கே பதுக்கி விட்டு,

அய்யய்யோ – அதெல்லாம் முடியாது… நாங்களே 20 கோடி
நஷ்டத்தில் தவிக்கிறோம். வேண்டுமானல் 60 கோடி ரூபாயை
முதல் கட்டமாக கட்டுகிறோம் என்று
அ.அ. கம்பெனி சொல்லி இருக்கிறது….

இதற்குள்ளாகத்தான் ரஃபேல் டீல் எல்லாம் முடிக்கப்பட்டிருக்கிறது…

அ.அ. கம்பெனி நடத்திய பேரங்களின் (negotiations…!!! ) விளைவாக –
ஃப்ரென்ச் அரசு 56 கோடி ரூபாய் கட்டினால் போதுமென்று
சொல்லி விட்டது.

( 60 கோடியை முதல்கட்டமாகவே கட்டுவதாக
அ.அ. ஏற்கெனவே சொல்லி இருப்பதை
நினைவில் கொள்ள வேண்டும்…

அ.அ.கட்ட ஒப்புக்கொண்டதை விட குறைவான தொகையை
கட்டச் சொல்கிறது ஃப்ரென்ச் அரசு..
என்னே negotiations – விளைவித்த கருணை …!!! )

பிரபல ஃப்ரென்ச் செய்தி ஊடகமான “லீ மோண்டே” இரண்டு
நாட்களுக்கு முன்னர், இந்த செய்தியை பகிரங்கப்படுத்தும் முன்னர் –
அ.அ.வுக்கு ஃப்ரான்ஸில் இப்படி ஒரு கம்பெனி இருப்பதே
இங்கு யாருக்கும் தெரியாது.

அந்த காலத்தில், “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு”
என்று தமிழர்கள் சொல்வார்கள்.
ஆனால், இந்த காலத்தில் – திரவியம் தேடிய பிறகு
(வங்கிகளில் கடன் வாங்கி பதுக்கிய பிறகு)
திரைகடல் ஓடு ( வெளிநாட்டிற்கு ஓடி விடு) – என்று
சில குஜராத்திய வர்த்தகர்கள்
புதுமொழி கண்டுபிடித்திருக்கிறார்களே…!!!

– இந்த ரஃபேல் விமான விவாதங்கள் துவங்கினாலும் துவங்கியது
இப்படி வரிசையாக ஏகப்பட்ட எலும்புக்கூடுகள் கிளம்பி வந்து
நர்த்தனமாடி – பயமுறுத்துகின்றன …!!!

சிலருக்கு அடிக்கிறது அதிருஷ்டம்…
கரும்பு தின்ன கூலி வேறு கிடைக்கிறது.
ரஃபேலில் 50 சதவீத பார்ட்னர்ஷிப் கிடைத்தது போதாதென்று –
கூடவே இலவச இணைப்பாக –
இப்படி 1124 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி வேறு…!!!
ஆனால், இந்த வரித்தள்ளுபடிக்கும்,
ரஃபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கும்
எந்தவித சம்பந்தமும் இல்லையென்று –
அவசர, அவசரமாக – செய்தி வெளியான
சில மணி நேரங்களிலேயே பாதுகாப்பு அமைச்சகம்
அறிவித்து விட்டது.

இவ்வளவு பெரிய லாபம் கிடைத்ததற்கு
அ.அ.நிறுவனம் நிச்சயம் நன்றி உடையவர்களாக
இருக்க வேண்டும்… தங்களுக்கு உதவியவர்களுக்கு –

– அது யாராக இருந்தாலும் –
(யாரென்று தான் நமக்குத் தெரியாதே…!!! )

செலுத்த வேண்டிய நன்றிக்கடனை
அவசியம் செலுத்த வேண்டும்…

எப்படியும் நன்றிக்கடனை செலுத்தி இருப்பார்கள்
என்றே நம்புவோமாக ….!!!

எப்படிச் செலுத்தி இருப்பார்கள் என்றெல்லாம் யோசித்து –
மூளையை கசக்கிக்கொண்டு, இருக்கிற கொஞ்ச நஞ்ச
மூளையையும் வேஸ்ட் பண்ண நான் தயாரில்லை. எனவே,
அந்த பொறுப்பை வாசக நண்பர்களிடம் விட்டு விடுகிறேன்….

அவரவர் தங்கள் சொந்த மூளையை கசக்கிக்கொண்டு -யோசித்து,
எதாவது தெரிய வந்தால் – எனக்கும் சொல்ல வேண்டுமாய்
கேட்டுக் கொள்கிறேன்…!!!

.
——————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to நவீன ஜெகதலபிரதாபன் – அ.அ. ….!!!

 1. Vivek சொல்கிறார்:

  // இவ்வளவு பெரிய லாபம் கிடைத்ததற்கு
  அ.அ.நிறுவனம் நிச்சயம் நன்றி உடையவர்களாக
  இருக்க வேண்டும்… தங்களுக்கு உதவியவர்களுக்கு –

  – அது யாராக இருந்தாலும் –
  (யாரென்று தான் நமக்குத் தெரியாதே…!!! )

  செலுத்த வேண்டிய நன்றிக்கடனை
  அவசியம் செலுத்த வேண்டும்…

  எப்படியும் நன்றிக்கடனை செலுத்தி இருப்பார்கள்
  என்றே நம்புவோமாக ….!!! //

  – athu thaan mukkiyam.

 2. Vivek சொல்கிறார்:

  // எப்படிச் செலுத்தி இருப்பார்கள் என்றெல்லாம் யோசித்து –
  மூளையை கசக்கிக்கொண்டு, இருக்கிற கொஞ்ச நஞ்ச
  மூளையையும் வேஸ்ட் பண்ண நான் தயாரில்லை. எனவே,
  அந்த பொறுப்பை வாசக நண்பர்களிடம் விட்டு விடுகிறேன்….

  அவரவர் தங்கள் சொந்த மூளையை கசக்கிக்கொண்டு -யோசித்து,
  எதாவது தெரிய வந்தால் – எனக்கும் சொல்ல வேண்டுமாய்
  கேட்டுக் கொள்கிறேன்…!!! //

  ITHU SUPER .

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! ஆதெள கீர்த்தனாரம்பத்திலே — என்று ஆரம்பித்து நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள : // 2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில்,
  அந்த கம்பெனி வரிமோசடி செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு –
  முதலில் ஒட்டு மொத்தமாக சுமார் 1182 கோடி ரூபாயை
  வரியாக கட்டு என்று அ.அ. கம்பெனியிடம் ஃப்ரென்ச் அரசு
  சொல்லி இருக்கிறது…

  இந்த கம்பெனியின் parent company-யான Reliance Global Com,
  சட்டவிரோத, வரி ஏய்பாளர்களின் சொர்க்கமான ( tax haven )
  Bermuda-வில் இருக்கிறது… பணத்தை எல்லாம் அங்கே பதுக்கி விட்டு,

  அய்யய்யோ – அதெல்லாம் முடியாது… நாங்களே 20 கோடி
  நஷ்டத்தில் தவிக்கிறோம். வேண்டுமானல் 60 கோடி ரூபாயை
  முதல் கட்டமாக கட்டுகிறோம் என்று
  அ.அ. கம்பெனி சொல்லி இருக்கிறது….

  இதற்குள்ளாகத்தான் ரஃபேல் டீல் எல்லாம் முடிக்கப்பட்டிருக்கிறது…// இதில் ரபேல் தவிர மற்றதெல்லாம் நடந்தது UPA அதாங்க காங்கிரஸ் ஆட்சியின் போது என்று கூறி கதா – காலட்சேபம் செய்தால் தவறாகுமா …?

  • புதியவன் சொல்கிறார்:

   @செல்வராஜன் சார்… கடைசி பாரா, வெல்டன். நல்லா எழுதியிருக்கீங்க. ரசித்தேன். (வேற என்ன பண்ணறது சொல்லுங்க.. துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்றுதானே படித்திருக்கிறோம்)

 4. அறிவழகு சொல்கிறார்:

  ரிலையன்ஸ் மறுத்து விட்டது.

  பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துவிட்டது.

  வேறு என்ன வேண்டும். முடிந்தது விவகாரம்.

  மோடி மிகவும் நல்லவர். அவர் கையில் நாடு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. இதற்கு எல்லாம் காங்கிரஸூம் ஜவஹர்லால் நேருவும் தான் காரணம்.

  வேறு என்ன….இருக்கு….

  இதில் கொஞ்சமே கொஞ்சம் இருக்கிற மூலைய கசக்கிக்கிட்டு…. ஏன் ஐயா எங்கள் மீது இவ்வளவு கொலை வெறி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன், அறிவழகு –

   இந்த issue -வில் மட்டும் வழக்கத்திலிருந்து மாறுபட்ட ஒரு வித்தியாசத்தை காண முடிகிறது…

   இந்த மாதிரி குற்றச்சாட்டுகள் வெளியாகும்போதெல்லாம், கேபினட் அமைச்சர்களும்,
   பாஜக செய்தி தொடர்பாளர்களும், வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள்…
   டெல்லி தொலைக்காட்சிகளில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து debate நடக்கும்.

   ஆனால், இந்த விவகாரத்தில் மட்டும் –
   அ.அ.கம்பெனியிலிருந்து ஒரு ஸ்டேட்மெண்ட்…
   பாதுகாப்பு இலாகாவிலிருந்து (பெயர் இல்லமல்) ஒரு அறிக்கை…
   அவ்வளவு தான்… கப்சிப் …
   இதைப்பற்றிய பேச்சுகள் இத்தோடு அடங்கிவிட வேண்டும் என்கிற
   உத்தி இதில் தெரிகிறது…

   ஏன் – விவாதத்திற்கு அஞ்சுவது ஏன்…?
   எல்லாம் ரிக்கார்டில், எழுத்து பூர்வமாக, தேதிவாரியாக –
   இருக்கிறது என்பதாலா…?

   வெளிநாட்டு ஆவணங்களை இவர்களால்
   மாற்ற முடியாது என்பதாலா…?

   -கில்லாடிகள் தான்.
   ஆனால் கில்லாடிக்கும் கில்லாடி
   யாராவது இல்லாமலா இருப்பார்கள்…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Selvarajan சொல்கிறார்:

    அய்யா … // இந்த issue -வில் மட்டும் வழக்கத்திலிருந்து மாறுபட்ட ஒரு வித்தியாசத்தை காண முடிகிறது…// உண்மைதான் — நீங்கள் உள்ளதை எடுத்துக்காட்டி — எழுத போய் — உடனே தேச பக்தர்கள் வரிந்துகட்டிக்கொண்டு — காங்கிரஸ் — திமுக { கூட சேர்த்துக்கொண்டு } அவர்கள் காலத்தில் நடந்தது தான் இவ்வளவும் — ஐம்பது ஆண்டு என்ன கிழித்தார்கள் — அது சொத்தை — எது சொல்லை என்று திசை திருப்பி குழப்பாமல் இருக்க — இடுகையில் இருந்தே அவர்களுக்கு தேவையான ஒன்றை எடுத்து மேற்கோள் காட்டி விட்டால் — நாமும் கதா காலட்சேபத்தில் இருந்து தப்பிக்கலாம் — என்கிற ஒரு நப்பாசையில் — பின்னூட்டம் இடவேண்டியதாகி விட்டது … ! என்ன பண்ணறது துன்பம் வரும் போது சொரணையுள்ளவர்களுக்கு சிரிப்பு வர மறுக்கிறது …!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s