” லஞ்சம் எனப்படுவது யாதெனின் ” – யாருக்கும் தெரியாமல் ஆளும் கட்சிக்கு தரப்படும் “எலெக்டோரல் பாண்ட்” என்றறிக…!!!


Electoral Bond Scheme என்பது, திருவாளர் ஜெட்லி அவர்களால்
finance bill என்று define செய்யப்பட்டு அவசரம் அவசரமாக,
பாராளுமன்ற மேலவையின் (ராஜ்ய சபா) ஒப்புதலை பெறாமலே,
ஆளும் கட்சிக்கு மெஜாரிடி உள்ள லோக் சபாவில் மட்டும்
நிறைவேற்றப்பட்டு கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம்.

இதன்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தர விரும்பும்
கம்பெனிகளோ, தனிப்பட்ட முதலாளிகளோ –
ரொக்கமாகப் பணம் தருவதற்கு பதிலாக
இந்திய ஸ்டேட் வங்கியில்(SBI) மின்னணு எந்திரம் வழியாக
பணத்தைச் செலுத்தி – அந்த தொகைக்கான பத்திரத்தைப் பெற்று
அந்தப் பத்திரத்தை தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.

இத்தகைய நன்கொடைக்கு உச்சவரம்பு கிடையாது….
எத்தனை நூறு/ஆயிரம் கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

SBI – வங்கியில் வாங்கப்படும் இந்த பத்திரத்தில்,
யாரால் வாங்கப்படுகிறது என்கிற விவரமும் இருக்காது…
யாருக்கு கொடுக்கப்படுகிறது என்கிற விவரமும்
இருக்காது.

வங்கியின் ரிக்கார்டுகளில், வாங்குபவரின் பெயர் இருக்கும்…
ஆனால் அது வெளியிடப்படாது.
எந்த கட்சிக்கு கொடுக்கப்படுகிறதோ –
அந்த கட்சியின் ஆவணங்களிலும் பண வரவு
மட்டும் காட்டப்படும்… யாரிடமிருந்து கிடைத்தது
என்பது குறிப்பிடப்படாது… ரகசியம் காக்கப்படும்.

அரசியல் கட்சிகளால், தேர்தல் கமிஷனுக்கு ஒவ்வொரு
நிதியாண்டிலும் கொடுக்கும் அறிக்கையில் பண வரவு மட்டுமே
காட்டப்பட்டிருக்கும்… மற்ற விவரங்கள் தரத்தேவையில்லை
என்பது தான், பாஜக அரசு கொண்டு வந்த இந்த புதிய சட்டத்தின்
முக்கிய வசதி…..

எந்த ஒரு தனிப்பட்ட முதலாளியோ, கம்பெனியோ –
ஆளும் கட்சியின் மூலம் எதாவது காண்டிராக்ட்,
லைசென்ஸ் எதாவது பெற விரும்பினாலோ அல்லது எதாவது
காரியத்தை செய்து கொள்ள விரும்பினாலோ,
அதற்கான 10 %, 20 %, 30% கமிஷனை,
லஞ்சமாக கொடுத்து (பிற்காலத்தில் ) மாட்டிக்கொள்ளாமல் –

தங்கள் கணக்கிலுள்ள வெள்ளை பணத்தின் மூலமே,
செய்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கக்கூடிய ஒரு திட்டம்
இது. ( இது அனைத்து ஆளும் கட்சிகளுக்கும் பொருந்தும்…!!! )

இதே போல் -வெளிநாட்டு நிறுவனங்கள் கட்சிகளுக்கு
நன்கொடை வாங்கும் சட்டத்திலும் –
(Foregin Contribution Regulation – FCRA) திருத்தம்
கொண்டு வந்து விட்டார்கள்.

வெளிநாட்டு நன்கொடைகளை யார் வழங்கியது ?
எவ்வளவு தொகை என்கிற விவரங்களை
வெளிப்படுத்தத் தேவையில்லை

இந்த சட்டம் வருவதற்கு முன்னதாக இருந்த நிலை –

தேர்தல் பிரதிநிதித்துவ சட்டம் 1951- பிரிவு, 29சி -யின்படி,
எந்தவொரு அரசியல் கட்சிக்குக்கும்,

இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை தரப்படுமானால்,
அந்தகட்சி அந்த நன்கொடை எங்கிருந்து வந்தது என்பதை
வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு
ஆண்டுதோறும் அளிக்கும் நிதியறிக்கையில்
இந்த விவரங்கள் தரப்பட வேண்டும்.

பாஜக அரசு கொண்டு வந்த திட்டம் –
இவ்வாறு லஞ்சத்தை சட்டபூர்வமாக மாற்றுகிறது
– என்று புகார் கூறி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு
பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

2019-ல் பொதுத் தேர்தல்கள் வருகின்ற வேளையில்,
இந்த சட்டம் எந்த நோக்கத்தோடு
கொண்டு வரப்பட்டிருக்கும் என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம்.

சுப்ரீம் கோர்ட்டிற்கு போகும் முன்னர் –

இந்த ‘தேர்தல் பத்திர’ முறை அமுல்படுத்திய பிறகு
‘இந்திய ஸ்டேட் வங்கி வழியாக’ எவ்வளவு தொகைக்கு
பத்திரம் வாங்கப்பட்டுள்ளது என்று தகவல் பெறும்
உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களில் மட்டும்
ரூ.1716 கோடிக்கு பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.
தொழிலதிபர்கள் நிறைந்த நகரமான மும்பையில் மட்டுமே
ரூ.495.60 கோடிக்கு பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.
இங்குதான் பத்திர விற்பனை அமோகமாக
நடந்துள்ளது. (அதாவது 28.9 சதவீதம்)

அனைத்துக் கட்சிகளும் நன்கொடை பெறலாம் என்று
கூறப்பட்டாலும் இந்தத் திட்டத்தில் அதிகம்
பயனடைந்தது யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாகவே இருக்கும்.

பா.ஜ.க.வின் 2017-18 வரவு செலவு தணிக்கையின்படி –
இத்திட்டத்தின் மூலமான சுமார் 94.6 % – நிதி
பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கிறது என்கிற தகவல்
தெரிய வந்திருக்கிறது….!!!

இது எதிர்பார்த்ததே….
காரியம் ஆக வேண்டுமென்று லஞ்சம் கொடுப்பவர்கள் –
ஆளும் கட்சிக்கு கொடுக்காமல், வேறு யாருக்கு கொடுப்பார்கள்…?

————————

இதற்கப்புறம் நடந்தது மிக மோசமான –
ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கும் ஒரு விஷயம்….

சுப்ரீம் கோர்ட்டில், இது குறித்து, தேர்தல் கமிஷனின் கருத்து
கேட்கப்பட்டபோது, இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை
இல்லாமல் இருப்பது, நல்ல ஜனநாயக நெறிமுறைகளுக்கு
வலு சேர்க்காது.. எனவே, நன்கொடை அளிப்பவர்களின் பெயர்
வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்று
தனது கருத்தை தெரிவித்திருக்கிறது…

அதாவது மத்திய அரசின்
கருத்துக்கு நேர் எதிரான கருத்து.

ஆனால், மத்திய அரசோ – தான் கொண்டு வந்த சட்டத்திற்கு
மூன்றே கால் தான் என்றும் அதை மாற்ற முடியாது என்றும்,
பெயர்களை வெளியே தெரிவிப்பது சட்டத்தின் நோக்கத்தையே
சிதைத்து விடும் என்றும் கூறி பிடிவாதம் பிடித்திருக்கிறது.
(எந்த நோக்கத்தை….??? )

தற்போதைக்கு ஒரு இடைக்கால உத்திரவை வெளியிட்டு விட்டு,
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திப்போட்டிருக்கிறது.

இந்த இடைக்கால உத்திரவில், அனைத்து அரசியல் கட்சிகளும்,
தாங்கள் எவரிடமிருந்து, எத்தனை தொகை நன்கொடை
பெற்றனர் போன்ற விவரங்களை சீல்’ இட்ட கவரில் வைத்து
தேர்தல் கமிஷனிடம் மே 31- ந்தேதிக்குள் தர வேண்டும் என்றும்,
தேர்தல் கமிஷன் அவற்றை, மேற்கொண்டு சுப்ரீம் கோர்ட்
இந்த விவகாரத்தில் உத்திரவுகள் இடும்வரை பத்திரமாக பாதுகாக்க
வேண்டுமென்றும் கூறி இருக்கிறது….!!!

இந்த வழக்கு நடைபெறும்போது,
பாஜக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்த ஒரு கருத்து அற்புதமானது –

“யார், எந்த கட்சிக்கு,
எவ்வளவு நன்கொடை கொடுத்தார்
என்கிற விவரத்தை வாக்காளர்களுக்கு
தெரிவிக்க வேண்டியது அநாவசியம்…

அவர்கள் அதை தெரிந்து கொண்டு
என்ன செய்யப்போகிறார்கள்….? ” 🙂 🙂 🙂

.
————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ” லஞ்சம் எனப்படுவது யாதெனின் ” – யாருக்கும் தெரியாமல் ஆளும் கட்சிக்கு தரப்படும் “எலெக்டோரல் பாண்ட்” என்றறிக…!!!

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  ஆகா, என்ன ஒரு அருமையான திட்டம், ஒரு குடியரசு இப்படித்தான் மக்களுக்காக சிந்திக்க வேண்டும்.
  பணமதிப்பிழப்பு என்னும் ஏமாற்று வித்தையின் தொடர்ச்சி. 70 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி சரியாக ஆட்சி செய்யவில்லை, ஆட்சி செய்ய தெரியவில்லை என இதன் மூலம் நிரூபணமாகிறது.
  உங்கள் gmailid க்கு இது (பணமதிப்பிழப்பு ) சார்ந்த ஒரு பதிவை அனுப்பியுள்ளேன். உங்கள் கருத்தை அறிந்தபின் என் முகநூல் பக்கத்தில் பதிவிட வேண்டும் என காத்திருக்கிறேன்.

  நன்றியுடன்.
  புது வசந்தம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்பர் புதுவசந்தம்,

   உங்கள் கட்டுரையை படித்தேன்…
   நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
   எழுத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும்.
   இது உங்கள் பாணியில் எழுதியது…
   தாராளமாக அப்படியே உங்கள் முகநூலில் பதிவிடலாம்.
   (உங்களுக்கு தனியே மெயில் அனுப்பி இருக்கிறேன்..)

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Vivek சொல்கிறார்:

  ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளுக்குள், அத்தனை institutions ஐயும் தங்களுக்கு
  வசதியாக மாற்றியமைத்து விட்டார்கள்.
  தங்களுக்கு வேண்டிய, சாதகமான அனைத்து சட்டங்களையும் குறுக்கு வழியில்
  நிறைவேற்றிக் கொண்டு விட்டார்கள்.
  ஆனால் – பின்னால் ஒரு சமயம் அது இவர்களுக்கே “பூமராங்க்” ஆக முடியும்
  என்று தோன்றாமல் போய் விட்டதே.

 3. bandhu சொல்கிறார்:

  இது மிகப்பெரிய தவறு. ஊழலை சட்டப்படி சரி என்று செய்யும் உத்தரவு. இதை கடுமையாக எதிர்ப்பது மக்கள் கடமை.

 4. Karthik சொல்கிறார்:

  Finance bill shortcut also should go. it can be used during emergency times not to bypass the democratic right by discussing in both sabhas.

 5. tamilmani சொல்கிறார்:

  Participatory notes introduced by sivagangai cheeman Chidambaram also should be abolished
  otherewise you cannot control black money.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தமிழ்மணி,

  நீங்கள் சொல்வது சரியே.
  Participatory Notes – உம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றே.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s