தூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –வாக்குப்பதிவுக்கு முன்னதாக, தூத்துக்குடி மக்களிடையே
ஒரு ஹிந்தி வலைத்தளம்
அவர்களின் எண்ணங்களைப்பற்றி கேட்டது…

அதை வீடியோவாக பதிவு செய்து யூ-ட்யூப்
தளத்திலும் வெளியிட்டிருக்கிறது.
தூத்துக்குடி மக்களின் மன நிலையை அறிய
வட இந்திய மீடியா எடுத்த முயற்சியை பாராட்டுவோம்…

அந்த வீடியோ கீழே –

இதில் வேடிக்கை என்னவென்றால், 5 பேரில், 2 பேர்
நன்றாக ஹிந்தி பேசுகிறார்கள்.
திமுக ஆதரவாளர் ஒருவர் அமர்க்களமாக
ஹிந்தி பேசுகிறார் என்பது விசேஷம் …!!!

வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில்,
இந்த இடுகைக்கு அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை..

இந்த வீடியோ – just ஒரு அனுபவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக இங்கே பதிவு செய்யப்படுகிறது.

.
————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to தூத்துக்குடி மக்களுடன் ஒரு ஹிந்தி சேனல் நடத்திய இன்டர்வியூ –

 1. அறிவழகு சொல்கிறார்:

  ///பால்கோட் தாக்குதலில் பாகிஸ்தானியர் யாரும் கொல்லப்படவில்லை: சுஷ்மா சுவராஜ்

  இந்திய விமானப் படை கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானிய ராணுவ வீரர்களோ, குடிமகன்களோ யாரும் கொல்லப்படவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடத்திலும், சர்வதேச வட்டாரத்திலும் கூட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  – மின்னம்பலம்.காம் ///

  பாஜக – மோடி, அமித்ஷா மற்றும் அவர் தம் பல்லக்கு தூக்கிகள் தேசப்பற்று வியாபாரிகள் 300 என்றும் 250 என்றும் அளந்து விட்டார்களே இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்.

  உண்மை மட்டுமே சொல்லத் தெரிந்த நமது பாரத பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்கள் எப்படி திரிக்க போகிறார் என்று பார்ப்போம்.

  தெளிவு படுத்த சொல்லி கேட்ட எதிர் கட்சிகளையும் மற்றவர்களையும் இவர்கள் தேசதுரோகிகள் என்று தூற்றியதற்கு மன்னிப்பு கேட்பார்களா…?

 2. tamilmani சொல்கிறார்:

  திருமதி சுஷ்மா குறிப்பிட்டது பாகிஸ்தானின் ராணுவம் மற்றும்
  பொது மக்கள் கொல்ல படவில்லை. தீவிர வாத குழு ஒன்றின் முகாம்
  அழிக்கப்பட்டது என்பதாகும். தாக்குதல் நடந்த 46 நாட்களுக்கு பிறகு
  ஒரு புதிய மதர்ஸாவை கட்டி சிறுவர்கள் படிப்பதை போன்ற காட்சிகளை
  உலக ஊடகங்களுக்கு காட்டும் பாகிஸ்தானை நம்ப முடியாது

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   தமிழ்மணி,

   அது சரியே.
   ஆனால், சுஷ்மாஜி, இப்போதைய சூழ்நிலையில்,
   தேவையில்லாமல் இப்படி ஒரு சர்ச்சைப் பேச்சை
   பேசியது ஏன்…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா ..! இதில் பேட்டியில் கலந்து கொண்டவர்களை விட இன்னும் கொஞ்சம் அடித்தட்டு மக்கள் நோக்கி சென்று இருந்தால் — விலாவரியான விவரங்கள் வெளிப்பட்டு இருக்குமோ …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன்,

   அப்படிச் செய்திருந்தால், நிச்சயமாக இன்னும் முழுமையானதாக இருக்கும்.
   வெளியூர்க்காரர், வட இந்தியாவிலிருந்து வந்து இந்த வரை செய்ததே பெரிது தான்…

   நம்ம ஊர் செய்தி சேனல்கள் இந்த மாதிரி செயல்களை எல்லாம் விட்டு விட்டு,
   நாலு வேலை வெட்டி இல்லாத ஆட்களை கூப்பிட்டு, விவாதம் எங்கிற பெயரில்
   கூச்சல் அரங்கம் நிகழ்த்துவார்கள்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.