விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ஒரு அரசியல் காமெடி…..!!!சமூக வலைத்தளங்களில்,
நிறைய பாஜக ஆதரவாளர்கள்
இதை பதிப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.

எடிட் செய்யப்பட்டது தான் என்றாலும் கூட,
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் யாரும்
சிரிக்காமல் இருக்கவே முடியாது….
எனவே, அவர்களின் கிண்டல்களில்
நான் குறை ஏதும் காணவில்லை.

.

கூடவே, நான் இதை
வேறு ஒரு கோணத்திலும் நினைத்துப் பார்க்கிறேன் –
அப்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை…

ஒரு சின்ன கற்பனை…
ராகுல் காந்திக்கு பதிலாக, அங்கே பேசியவர்
ஸ்ரீமான் நரேந்திரமோடிஜியாக இருந்திருந்தால் –

அவர் முகம் எந்த அளவிற்கு மாறி இருக்கும்…
அந்த, மொழி பெயர்த்த மனிதர்
இந்நேரம் என்ன கதி ஆகி இருப்பார்…??? 🙂 🙂 🙂

———-

கொஞ்சம் கூட எரிச்சல் அடையாமல், கோபப்படாமல்,
தானும் சேர்ந்து ரசித்து சிரித்த ராகுல் காந்தியின்
பக்குவம் நிஜமாகவே அதிசயிக்க வைக்கிறது.

இது 2014-ல் பார்த்த ராகுல் காந்தி இல்லை….
ரொம்பவே மாறி விட்டார்… !!!

.
——————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ஒரு அரசியல் காமெடி…..!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  தமிழகத்தில் ராஜீவ் காந்தி பிரச்சாரத்தின்போது ப.சி அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்… ஒரு கூட்டம் நடைபெறுவதற்கு எத்தனைபேரின் உழைப்பு தேவை. அவற்றையெல்லாம் வீணாக்குவதுபோல, ஆங்கிலமே தெரியாதவர்களை மொழிபெயர்க்கச் சொல்லி யார் ராகுல் காந்திக்கு அறிவுரை கூறுவது? ப.சி. நான் பெரிய ஆள், உங்களுக்கு மொழிபெயர்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டாரா? ‘வெட்டத் தெரியாதனவனுக்கு பதினெட்டு அருவாள்’ என்பதுபோல ஆங்கில, மொழி அறிவு இல்லாதவர்கள் ஏன் மொழிபெயர்க்க ஆசைப்படுகிறார்களோ. மொழிபெயர்ப்பு என்பது பேச்சாளரின் அதே உணர்ச்சியோடு செய்யவேண்டிய செயல். ப.சி. நன்றாக மொழிபெயர்ப்பார் என்பது என் எண்ணம். குஷ்புவுமே நன்றாகச் செய்திருப்பார்.

  ஏன் மோடியை இங்கு நினைக்கவேண்டும். நானாக இருந்தால், உடனே அந்த மொழிபெயர்ப்பாளரை, ‘இடத்தைக் காலி பண்ணு’ என்று சொல்லிவிட்டிருப்பேன். (தங்கபாலுவாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி). அங்கேயே, யாரேனும் திறமையானவர்கள் இருந்தால் மொழிபெயர்க்க வருமாறும் சொல்லியிருப்பேன். (அதனால்தான் அவ்வளவு பெரிய இடத்துக்கு நான் வளரவில்லை என்று நினைத்தால் அதில் உண்மையும் உண்டு)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   நான் எழுதியது ஒரு நகைச்சுவை கட்டுரை.
   அதை தெளிவாகவே குறிப்பிட்டும் இருக்கிறேன்…

   அப்படி இருந்தும் –

   // ஒரு சின்ன கற்பனை…
   ராகுல் காந்திக்கு பதிலாக, அங்கே பேசியவர்
   ஸ்ரீமான் நரேந்திரமோடிஜியாக இருந்திருந்தால் –//

   என்று அங்கே இருக்கிற
   ஒரே ஒரு வார்த்தையை கூட உங்களால்
   சகித்துக் கொள்ள முடியவில்லை…

   உடனேயே கேட்கிறீர்கள் –

   // ஏன் மோடியை இங்கு நினைக்கவேண்டும். ? //

   வர வர உங்களிடம் ஒரு பொறுமையின்மையை
   காண்கிறேன். மோடிஜியைப்பற்றி யாராவது
   நகைச்சுவையாக பேசுவதை கூட
   உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
   மோடிஜி பெயரை யாராவது உச்சரிக்கும்போதே –
   உங்களுக்கு நகைச்சுவை உணர்வு
   அற்றுப்போய் விடுகிறதோ…?

   பாஜக ஆதரவாளர்களை சில grades -களில் பிரிக்கலாம்…

   பாஜக அனுதாபி,
   பாஜக ஆதரவாளர்,
   பாஜக கட்சிக்காரர்,
   பாஜக உறுப்பினர்,
   மோடிஜி பக்தர்,
   பாஜக தீவிர செயல்பாட்டாளர்,
   பாஜக வெறியர் – என்றெல்லாம்….

   உங்கள் status கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவது போல்
   எனக்குத் தோன்றுகிறது….(உங்கள் பழைய பின்னூட்டங்களுடன்
   தற்போதைய பின்னூட்டங்களை ஒப்பிட்டால் உங்களுக்கே
   இந்த உண்மை புரியும்…!)

   எனக்கு ம.நீ.ம. சிநேகன் வீடியோவில் கேட்ட மாதிரி கேட்கத் தோன்றுகிறது…

   ” புதியவன், என்ன சார் ஆயிற்று…உங்களுக்கு… ? ” 🙂 🙂 🙂

   பின் குறிப்பு – உங்கள் பின்னூட்டத்தை பார்த்து
   inspire ஆகி,
   உங்களுக்கு பின்னால் “அருண்” என்கிற பாஜக ………
   ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறார் பாருங்கள்…

   எதிர்காலத்தில், அவர் நிலைக்கு நீங்களும் போய்
   விடுவீர்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    //ஏன் மோடியை இங்கு நினைக்கவேண்டும். நானாக// இதுல நீங்க நினைக்கற அர்த்தத்துல எழுதலை கா.மை. சார். நான் சொல்லவந்தது, ராகுல், நாட்டின் பிரதமர் பதவிக்குப் போட்டி போடுபவர். அப்போ அவரது பேச்சை சரியா மொழிபெயர்க்கலை என்பது மிகவும் சீரியசான விஷயம் என்ற த்வனியில்தான் நினைத்து எழுதினேன். (மோடிக்கு இதுபோல மொழிபெயர்பைத் தவறாகச் செய்தபிறகு செய்தவருக்கு என்ன ஆயிருக்கும், அல்லது மேடையிலேயே என்ன ஆயிருக்கும் என்று யோசித்தாலே பகீர்னு இருக்கு)

 2. Arun சொல்கிறார்:

  “ராகுல் காந்திக்கு பதிலாக, அங்கே பேசியவர்
  ஸ்ரீமான் நரேந்திரமோடிஜியாக இருந்திருந்தால்”

  ஏண்டா கிழ பாடு, இதுல மோடி எங்கடா வந்தார். பாஜக காரன் கவட்டையை மோரலன்னா உனக்கு சோறு எறங்காதா

  • இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

   அருண் அவர்களே
   சற்று நாகரிகமாக உங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது நல்லது. வயதில் மூத்தோர் மட்டும் இல்லை, அனைவரிடமும் முறையாக அணுக முயலுங்கள்.
   மீண்டும் இவ்வாறு பதிவிடாதீர்கள்.

 3. Vivek சொல்கிறார்:

  புதியவர் என்னும் பெருந்தகையின் கருத்து :
  // ஏன் மோடியை இங்கு நினைக்கவேண்டும். நானாக இருந்தால், உடனே அந்த மொழிபெயர்ப்பாளரை, ‘இடத்தைக் காலி பண்ணு’ என்று சொல்லிவிட்டிருப்பேன்.//

  Arun – என்னும் அதி நாகரீக மனிதரின் கருத்து –
  // ஏண்டா கிழ பாடு, இதுல மோடி எங்கடா வந்தார். பாஜக காரன் கவட்டையை மோரலன்னா உனக்கு சோறு எறங்காதா //

  நீங்கள் எதிர்பார்த்தீர்களோ இல்லையோ இரண்டு மோடி வெறியர்களை உடனடியாக இங்கே வரவழைத்து, expose செய்த பெருமை உங்களைச் சேர்கிறது காவிரிமைந்தன் சார். 🙂

  Please keep it up: We enjoy every bit of your Writing.

 4. Selvarajan சொல்கிறார்:

  அய்யா .. ஏதோ என்னால் முடிந்தது தங்களின் இந்த இடுகையை உங்களுக்காக — உங்களை ஏதோ ” எதையும் தாங்கும் மனிதர் ” என்று நினைக்கின்றவர்களுக்காக மீண்டும் : — // இந்த சிந்தனையை வரவேற்போம்…….!!!
  Posted on திசெம்பர் 17, 2017 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2017/12/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE/ — படித்து மீண்டும் கடிக்காமல் இருந்தால் நல்லது — இந்த மேற்கோள் காட்டியுள்ள இடுகையின் பின்னூட்டங்களும் முக்கியமானவைதான் …!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நீங்கள் சரியான நேரத்தில், பொருத்தமான பழைய இடுகைகளை
   லிங்க் கொடுத்து நினைவுபடுத்துகிறீர்கள்…. இது சில விஷயங்களைப்பற்றி
   மீண்டும் யோசிக்க மிகவும் உதவியாக இருக்கிறது.

   மிக்க நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. R KARTHIK சொல்கிறார்:

  Although the video was made to mock rahul. It exposes his maturity and patience.

  I understand from my mallu friends that the translator was having problem in hearing rahul at stage due to more noise and he had expressed it in beginning.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s