மத உணர்வாளர்கள் – இந்த சிந்தனையை ஏற்பார்களா…?
தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது.
எனவே, இந்த இடுகைக்கும், நாம் ஓட்டு போடுவதற்கும்
எந்த வித தொடர்பும் இல்லை. எனவே, தேர்தலில்
இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்கிற
கேள்வியை மறந்து விட்டு – இந்த கருத்தை பொதுவாக
விவாதிக்க விரும்புகிறேன்.

இங்கே ஒரு சிந்தனை மக்களிடையே முன்வைக்கப்படுகிறது.
இதைச் சொல்வது யார் என்கிற விஷயம் இங்கே தேவையில்லை …

இந்த சிந்தனை ஏற்கப்படத்தக்கதா இல்லையா…?
பொதுவான மக்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள். ?
மத உணர்வாளர்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்…?

————————————————————————————————————————————————-

அவர்கள் மக்களின் குரலை ஒடுக்குகின்றனர். நாம் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வோம். அவர்கள் அவதூறு பரப்புகின்றனர். நாம் அவர்களுக்கும் மரியாதை அளிப்போம். பாதுகாப்போம்.

ஒரு முறை நெருப்பை பற்றவைத்துவிட்டால், அதை அணைப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். நாட்டுக்கு தீ வைத்துவிட்டால், அதை அணைப்பதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். நாடு முழுவதும் பா.ஜ.க வன்முறை தீயைப்
பற்றவைத்துள்ளது.

அவர்கள் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். நாம் ஒற்றுமையை வளர்ப்போம்.

அவர்கள் தீயை பற்ற வைக்கின்றனர். நாம் அதை அணைப்போம்.

மத்தியில் ஆளும் பாஜக தனது சுயநலனுக்காக போராடுகிறது. நாம் இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் போராடுவோம்.

நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ விரும்புகிறோம். ஆனால் அவர்கள் மக்களை பழங்காலத்துக்கு பின்னோக்கி
அழைத்துச் செல்கின்றனர். அறிவு, அனுபவம் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டு, தனது பேச்சுக்கு மட்டுமே சக்தி உள்ளதாக அவர் கருதுகிறார்.

இன்று நாம் காணும் அரசியல் களம் நம்மை விரக்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

இன்றைய அரசியல் இரக்கமற்றதாகவும் உண்மையற்றதாகவும் இருக்கிறது. மக்களின் முன்னேற்றத்துக்காக அல்லாது மக்களை நசுக்கும் விதத்திலேயே அரசியல் செய்யப்படுகிறது.

அரசியல் என்பது இப்போது மக்களுக்கு உடையதாக இல்லை. அதிகார கட்டமைப்பை எப்போது எதிர்க்கத் துணிகிறீர்களோ அப்போது நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறீர்கள். உங்களை பலவீனப்படுத்த பொய் உரைக்கின்றனர்….பிரச்சினைகளை திசை திருப்புகின்றனர்…

இங்கே ஒரே ஒருவரின் குரல்தான் அர்த்தமுள்ளது;
அந்தக் குரலுக்கு அத்தனை பேரும் கீழ்ப்படிந்தாக வேண்டும்.
இப்படித்தான் நாம் இன்று பழக்கப்படுத்தப்படுகிறோம்.

ஒரு தனிநபரை வலுவானவராக்க தேசத்தின் வெளியுறவு கொள்கைகள்
சுக்குநூறாகிக்கிடக்கின்றன.

இந்திய மக்களின் குரலை நசுக்க விடமாட்டோம் என நாம் சூளுரைப்போம்.

இந்தியாவை அன்பும் சகோதரத்துவம் பிணைந்த நாடாக உருவாக்க நாம் இணைந்து செயல்பட வேண்டும். ஆத்திரத்தை அடிப்படையாக கொண்ட அரசியலுக்கு எதிராக வலுவுடன் போராடி, அதை தோற்கடிக்க வேண்டும். அவர்கள் வெறுப்பையும்,
வேற்றுமையையும் திணிக்க முயல்கிறார்கள். நம் குரல் அன்பும், பாசமும் கலந்ததாக இருக்க வேண்டும்.

அன்பும் கருணையும் கொண்ட இந்தியாவை உருவாக்க அனைவரும்
திரண்டுவர வேண்டும்.

இந்த கருத்தின் மையத்தை ஆங்கிலத்தில் வெளியிடும்போது – அது இன்னமும் அழகாக வெளிப்படுகிறது…
—————————————————————————————————————————————————————————

We wish to take India into the 21st century
while the Prime Minister today is taking us backwards,
to a medieval past –

– where people are butchered
because of who they are,

– beaten for what they believe and

– killed for what they eat.

This ugly violence shames us in the world.
Our country, whose philosophy and history is born out of love and compassion –
– is tarnished by such horror –

and no amount of hugs
can repair the damage done to this great country.

————————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to மத உணர்வாளர்கள் – இந்த சிந்தனையை ஏற்பார்களா…?

 1. அறிவழகு சொல்கிறார்:

  இதை பேசியது ராகுல் காந்தி….?

  ///இங்கே ஒரே ஒருவரின் குரல்தான் அர்த்தமுள்ளது;
  அந்தக் குரலுக்கு அத்தனை பேரும் கீழ்ப்படிந்தாக வேண்டும்.
  இப்படித்தான் நாம் இன்று பழக்கப்படுத்தப்படுகிறோம்.///

  இது தான் ஹிட்லரிசம். சர்வாதிகாரத்தின் உச்சம்.

  அந்த ஒரே ஒருவர் தொடர்ந்தால்… ஜெர்மனிக்கு நேர்ந்த அதேவித பயங்கர பாதிப்புகள் இந்தியாவுக்கு நேர்ந்து விடாது என்று சொல்ல முடியுமா…?

  பாதிப்புகள் ஏற்கனவே மிகவும் வீரியமாக தொடங்கி விட்டன.

  இன்னொரு முறை வந்தால் அழிவு சர்வ நிச்சயம்.

  இறைவன் தான் பாதுகாக்க வேண்டும் இந்த நாட்டை.

 2. ஒரு ... (மதவெறி பிடிக்காத)... தேசபக்தன் சொல்கிறார்:

  மதப்பற்று உடைய மக்கள் கூட, தங்கள் விருப்பு வெறுப்புகளையெல்லாம்
  கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்து விட்டு, திறந்த மனதுடன்,
  நாட்டின் ஒற்றுமையையும், அமைதியையும் – மட்டும் கருத்தில்கொண்டு
  இந்த கருத்துகளைப்பற்றி சிந்திக்க வேண்டும்.
  அமைதியாக யாருடைய influence -உம் இன்றி யோசித்தால், அவர்களும்
  இந்த கருத்தை ஏற்கக்கூடும் என்றே நம்புகிறேன். இந்தியா அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய ஒரு நாடாக இருக்கவும்.
  நல்ல வளமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறக்கூடிய நாடாகவும் மாறும்.
  நம்முடைய பார்வையும், செயலும், உழைப்பும், பலமும் வீணான சர்ச்சைகளில் செலவிடப்படாமல், முன்னேற்றத்திற்கு பயன்படட்டும்.

 3. அறிவழகு சொல்கிறார்:

  ///தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்!

  இந்தப் புகாரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முழுமையாக நிராகரித்துள்ளார். நீதித் துறையைச் சீர்குலைக்க மிகப்பெரிய சதி நடப்பதாக குற்றம்சாட்டிய அவர், “நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. என் மீது குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. என் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் ஊடகங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். 20 ஆண்டுகால சேவைக்குப் பிறகு தலைமை நீதிபதியான எனக்கு கிடைத்த வெகுமதியா இது?” என்று கூறியுள்ளார்.

  – மின்னம்பலம். காம் ///

  இந்த நாடு எங்கே போகிறது…?

  இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால்,

  ///என் மீது குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கிறது.///

  என்று அவர் குறிப்பிட்டுள்ளதை தான்.

  ஏதோ விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்க போகிறதுக்குண்டான அறிகுறியோ என்று பீதி ஏற்படுகிறது.

  இறைவன் தான் பாதுகாக்க வேண்டும் இந்த நாட்டை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்பர்கள் அனைவருக்குமே –

   இந்த செய்தியை, புகாரைப்பற்றி, அவசரப்பட்டு நண்பர்கள் யாரும் comment
   எழுத வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

   முழு விவரங்கள், உண்மைகள் தெரியாத நிலையில் நாம் எதையும்
   விமரிசனம் செய்வது சரியாக இருக்காது..

   முழு விவரங்களும், பின்னணியும் தெரியும் வரை காத்திருப்போம்.
   நடப்பதை தெரிந்து கொள்ளுங்கள்… ஆனால், கருத்துக் கூறல்
   தற்போதைக்கு வேண்டாம். முழு விவரங்களையும்
   தெரிந்துகொண்ட பின் பேசலாம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. sankar Raju சொல்கிறார்:

  ***

 5. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! // இந்து கலாச்சாரத்தை தீவிரவாதம் என்றவர்களுக்கான பதிலடி: சாத்வியை களமிறக்கியதற்கு நியாயம் கற்பிக்கும் பிரதமர் மோடி //
  https://tamil.thehindu.com/india/article26896426.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  நீங்கள் கூறியுள்ளதே மீண்டும் .. // இந்த சிந்தனை ஏற்கப்படத்தக்கதா இல்லையா…?
  பொதுவான மக்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள். ?
  மத உணர்வாளர்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்…?

 6. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Sir,
  Even among within the family members people begin to hate between brothers, sisters & brothers
  father & sons etc because of their differing political ideology.. I don’t know where this will lead to?
  Will this keep a permanent enmity within the family. I can’t even think of it Mr.KM. Sometimes
  my mind is getting blocked for a short period.Sleep is a rare function in my body.
  I can write a lot. I wish not to. Here, my mind sings, ” Orayiram varudam oyndhu kidandha pinnar
  varadhu pol_

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   கோபாலகிருஷ்ணன்,

   நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
   இதில் விதிவிலக்கு அபூர்வம்…
   என் சுற்றங்களில் கூட –
   என் மனைவியும், மகளும் மட்டுமே நான் சொல்வதை,
   என் நோக்கத்தை, என் லட்சியங்களை புரிந்து கொள்கின்றனர்.

   மோடிஜி வந்த பிறகு பலருக்கு –
   உறவை விட, மோடியே முக்கியமாகத் தெரிகிறார்.

   நான் உறவுகளை விரும்புபவன், நேசிப்பவன்…..
   அவர்களிடம் அரசியல் பேசி அதை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
   எனவே, உறவினர்களுடன் அரசியல் பேசுவதை அறவே விட்டு விட்டேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    அரசியல்னு வந்தாச்சுன்னா, வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது. என்னதான் விவரித்தாலும் ஒவ்வொருவரும் அவர்கள் நிலையிலிருந்து வெகுவாக மாறுவதில்லை. பெற்றோர்கள் மட்டும் நாம சொன்னோம்னா, அதுக்காக தங்கள் வாக்குகளை போனாப் போகுதுன்னு மாற்றிக்கொள்கிறார்களே தவிர, இதுதான் லட்சியம், நம் அனுமானம் இவற்றின் நிலைமையாகப் பார்க்கிறேன்.

    இதில் ஒரு சாதகமான நிலைமை உள்ளது. ஒருவேளை நாம் நினைப்பது (நல்லதே நினைத்தாலும்) தவறான அனுமானமாக இருந்தால், மற்றவர்களை வற்புறுத்திய பாவம் நமக்குக் கிடையாது என்பதுதான்.

 7. bandhu சொல்கிறார்:

  பிஜேபி ஒரு பக்கம் சுய மத அபிமானம் என்பதை தாண்டி சுய மதம் மட்டுமே சரி. மற்றவை தவறு என்ற நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சென்றுகொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ‘மதசார்பற்ற’ என்று கூறிக்கொள்ளும் மற்ற கட்சிகளோ, எப்படியாவது சிறுபான்மை ஓட்டுகளை மொத்தமாக பெற்றுவிடவேண்டும் என்ற பேராவலில் அவர்கள் என்ன செய்தாலும் தவறில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக பலரிடமிருந்து விலகி சென்றுகொண்டிருக்கிறார்கள்.

  இருபுறத்திலும் அவர்கள் சார்ந்த கட்சியை சப்போர்ட் செய்பவர்களை விட, எதிர் கட்சியை வெறுப்பவர்களே அதிகம். இந்த வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவி, எதிர் கட்சியை ஆதரிப்பவர்களை வெறுக்கும் அளவு கொண்டு விட்டிருக்கிறது.

  நமக்கு தேவை இரண்டிற்கும் இடைப்பட்ட கட்சி! அதிமுக போன்ற காட்சிகள் இந்த பார்வையில் சரியான கட்சியாக இருக்கிறார்கள். இந்திய அளவில் எந்த கட்சி அப்படி இருக்கிறதென்று தெரியவில்லை!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.