மோடிஜியின் செல்ஃபி ….!!!


சில செய்திகளுக்கு விமரிசனம் தேவைப்படாது…
படிக்கும் செய்தியே வாசகர் மனதில் அந்த விமரிசனத்தை
உருவாக்கி விடும். அத்தகைய செய்தி ஒன்று கீழே…

இதை நாம் விமரிசனம் செய்ய வேண்டிய
அவசியமே ஏற்படவில்லை…. !!!

———————–

அபிநந்தன் விவகாரத்தில் பாகிஸ்தானை எச்சரித்தேன்!
(https://minnambalam.com/k/2019/04/21/43 )

குஜராத் மாநிலம் படான் பகுதியில் இன்று பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் சிக்கியபோது,
எங்களது பைலட்டுக்கு ஏதேனும் ஏற்பட்டால் உங்களை
சும்மா விடமாட்டோம் என்று பாகிஸ்தானை எச்சரித்தோம்.

மோடி 12 ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளதாகவும்,
நிலைமை மோசமடைந்தால் எந்த நேரத்திலும் தாக்குவார் எனவும்
அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாளே அபிநந்தன் வெளியிடப்படுவதாக
பாகிஸ்தான் அறிவித்தது.

அப்படி அறிவிக்காவிடில் இரண்டாம் தின இரவில்
பல உயிர்கள் பலியாகியிருக்கும்.
இதெல்லாம் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டன.
நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
நேரம் வரும்போது நான் பேசுவேன்.

தங்களது மண்ணின் மைந்தனை (மோடி)
கவனிக்க வேண்டியது
குஜராத் மக்களது கடமை.

குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளையும்
என்னிடம் கொடுத்துவிடுங்கள்.
நிச்சயமாக நான் மீண்டும் ஆட்சியமைக்கப் போகிறேன்.

ஆனால் குஜராத் மக்கள் எனக்கு 26 தொகுதிகளை
வழங்கவில்லை என்றால்,
ஏன் தோல்வியடைந்தோம் என்று தொலைக்காட்சி
விவாதங்களில் பேசத்தொடங்குவர்” என்று பேசினார்.

————————–

தேர்தல் பரப்புரையில் விமானப் படை அதிகாரி அபிநந்தன்
குறித்து மோடி பேசியதில்
தேர்தல் நடத்தை விதிமீறல் ஏதும் உள்ளதா
என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்படும்
என்று குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி
முரளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்

.
————————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மோடிஜியின் செல்ஃபி ….!!!

 1. Ramnath சொல்கிறார்:

  உ.பி. முதலமைச்சர் யோகிஜி’க்கும், மாயாவதிஜி’க்கும் ஒட்டப்பட்டதில் பிளாஸ்திரி தீர்ந்து விட்டதாம். கைவசம் ஸ்டாக் இல்லையாம். தேர்தல் கமிஷன்
  இன்னும் கொஞ்சம் தருவிக்க ஆர்டர் கொடுத்திருக்கிறதாம்.

 2. Rajagopalan சொல்கிறார்:

  இதைப்பற்றி ஏற்கெனவே தேர்தல் கமிஷன், தேர்தல் பிரச்சாரங்களில், ராணுவம்-பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களை பேசக்கூடாது என்று தெளிவான உத்திரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதை மீறுபவர்கள் மீது வெறும் நோட்டீஸ் மட்டும் அனுப்பிக்கொண்டிருந்த சமயத்தில் தான், சுப்ரீம் கோர்ட் தலையிட்டு,
  தேர்தல் கமிஷன் கடுமையான மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று சொன்னது. அதன் பின்னரே, யோகிஜி, மாயாவதிஜி, ஆசம்கான்ஜி ஆகியோர்
  48 /72 மணி நேரங்களுக்கு பிரச்சார கூட்டங்களில் பேச தடை விதித்தது.
  அதே விதிகள் இப்போது மோடிஜிக்கும் பொருந்தும். பிளாஸ்திரிக்கான அவசியம் வந்திருக்கிறது. ஆனால், தேர்தல் கமிஷனுக்கு செயல்பட துணிவு இருக்கிறதா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.