இன்றைய தலைவர்களின் தரம் ….!!!தேர்தல் ஆணையம் தரக்குறைவான பரப்புரைக்காக ஏற்கெனவே
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜவாதி கட்சித்
தலைவர்களில் ஒருவரான ஆசம்கான், பகுஜன் சமாஜ்வாதி கட்சித்
தலைவி மாயாவதி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்
மேனகா காந்தி ஆகியோருக்கு பிரசாரத் தடை விதித்து
எச்சரித்திருக்கிறது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு மத ரீதியிலான
உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் பரப்புரையாற்றினார்கள் என்பதுதான்.

சுதந்திர இந்தியாவின் முதல் கால் நூற்றாண்டு காலம்
தலைசிறந்த ஜனநாயக வாதிகளையும், கொள்கைப் பிடிப்புள்ள
அரசியல் தலைவர்களையும் கொண்டிருந்தது. அவசர நிலை பிரகடனத்தைத்
தொடர்ந்து 1977-இல் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு
இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்க
முற்பட்டபோதுகூட, தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களைக்
கையாளவில்லை. இந்திரா காந்தியும் சரி, எதிர்க்கட்சிகளின்
கொள்கை முரண்பாடுகளையும், பிரதமர் பதவி மோகத்தையும்,
ஒற்றுமையின்மையையும் விமர்சித்தாரே தவிர எந்தவொரு தலைவரையும்
தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை.

1989-இல் போஃபர்ஸ் ஊழலின் பின்னணியில் இடதுசாரிகள்,
பாரதிய ஜனதா கட்சி, பல மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து தேசிய
முன்னணி என்கிற பெயரில் ராஜீவ் காந்தியின் தலைமையிலான
காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகக் களமிறங்கியபோதும்கூட தனிப்பட்ட
முறையிலான விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை.
போஃபர்ஸ் ஊழலில் சோனியா காந்தியின் குடும்ப உறுப்பினர்களான
குவாத்ரோச்சி உள்ளிட்டவர்களின் தொடர்பு விமர்சிக்கப்பட்டதே தவிர,
முறையற்ற விமர்சனங்களில் எந்தவொரு கட்சியும் ஈடுபடவில்லை.

1991-இல் நடந்த 10-ஆவது மக்களவைக்கான தேர்தலுக்குப்
பிறகுதான், அரசியல் தரம் தாழ்ந்து ஜனநாயகப் பண்புகள்
வலுவிழக்கத் தொடங்கின.

கடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் இருந்து,
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தனிப்பட்ட முறையிலான
தாக்குதல்களின் அடிப்படையில் மாறியிருக்கிறது. இன்னும்
சொல்லப்போனால், 2012-இல் குஜராத் சட்டப்பேரவைத்
தேர்தலின்போது அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை
மரண வியாபாரி என்று அன்றைய காங்கிரஸ் தலைவி சோனியா
காந்தி குற்றஞ்சாட்டியதில் இருந்து அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி
தொடங்கியது என்று கூறலாம்.

அதன் எதிர்வினையாக பாஜகவினரும் சோனியா காந்தியையும்,
அவரது குடும்பத்தினரையும் வெளிநாட்டவர்கள் என்று குற்றஞ் சாட்டி,
அவர்களது இத்தாலியத் தொடர்பை தேர்தல் பரப்புரையாக்கினர்.
அவையெல்லாம் சகித்துக்கொள்ளக் கூடியவை என்று மாற்றி
விட்டிருக்கிறது இப்போதைய 17-ஆவது மக்களவைக்கான
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம்.

தமிழகத்தில் ஆரம்பம் முதலே திமுகவின் அரசியல் பிரசாரங்கள்
தனிப்பட்ட முறையிலான தாக்குதலின் அடிப்படையில்தான்
அமைந்து வந்திருக்கின்றன. தொடக்க காலத்தில் ராஜாஜியையும்,
அதற்குப் பிறகு காமராஜரையும், தொடர்ந்து எம்ஜிஆர்,
ஜெயலலிதாவையும் திமுகவின் மூத்த தலைவர்கள் நாக்கூசும்
விதத்தில் எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்பது வரலாறு.

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு
அந்தக் கட்சியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம்
ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், முன்னாள்
துணை முதல்வராகவும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவராகவும்
இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமியை கொலைகாரன், மண்புழு என்றெல்லாம்
தேர்தல் பிரசாரத்தின்போது வசைமாரி பொழிந்தது முகம்
சுளிக்க வைத்தது. அவரிடமிருந்து இப்படிப்பட்ட
அணுகுமுறையை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் ஐக்கிய முற்போக்குக்
கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் இருக்கும் ராகுல்
காந்தியின் பிரசாரம் கண்ணியக்குறைவானது என்பது
மட்டுமல்ல, அவர் வகிக்கும் பதவிக்கு கௌரவம்
ஏற்படுத்துவதாகவும் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து மேடைகளில் வாய்க்கு
வந்தபடி அவர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவதும்
விமர்சிப்பதும் கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது.

ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறாத
ஒரு கருத்தை நீதிமன்றம் குறிப்பிட்டதாகக் கூறி
பிரதமர் மோடி திருடன் என்கிற ராகுல் காந்தியின்
பரப்புரைக்கு மன்னிப்புக் கோரச் சொன்னது உச்சநீதிமன்றம்.
மன்னிப்புக் கோராமல் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று
பதிலளித்ததன் விளைவாக நீதிமன்றத்தின் கோபத்தை
சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் அவர். ஒரு தேசியக்
கட்சியின் தலைவருக்கான அணுகுமுறை ராகுல்
காந்தியிடம் காணப்படவில்லை.

————————————

இவையெல்லாம்கூடப் பரவாயில்லை. பிரதமர்
நரேந்திர மோடி மேற்கு வங்கத் தேர்தல்
பிரசாரத்தின்போது, தேர்தல் முடிவுக்குப் பிறகு
40 திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள்
பாஜகவுக்குக் கட்சி மாறத் தயாராக இருக்கிறார்கள்
என்று கூறியிருப்பது, அவர் வகிக்கும் பதவியின்
கௌரவத்தையே குலைப்பதாக இருக்கிறது.
இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துபோய், கட்சித் தாவலை
ஊக்குவிக்கும் விதத்தில் இதுவரை எந்வொரு
இந்தியப் பிரதமரும் பேசியதில்லை.

தேர்தல் வெற்றி – தோல்விக்காக,
மூன்றாம் தரப் பேச்சாளர்களைப்போல,
பிரதமர் பதவி வகிப்பவரும் பிரதமராகத் துடிப்பவரும்
தரம் தாழ்ந்து வசைமாரி பொழியும் அரசியல் சூழல்
வரும்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

———————-

சிலப்பதிகாரப் பாயிரம் கூறுவதைப்போல,
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
நிலை ஏற்பட்டால் மட்டுமே இந்திய ஜனநாயகம்
பிழைக்கும் போலிருக்கிறதே…

—————-

மேலே எழுதியுள்ளவற்றில் தலைப்பு மட்டும் தான் என்னுடையது…
மற்றபடி கட்டுரை முழுவதும், அப்படியே – தினமணி நாளிதழில்
முந்தாநாள் ” யாகாவாராயினும்” என்கிற தலைப்பில் வெளியான தலயங்கமே

(https://www.dinamani.com/editorial/2019/may/03/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3144514.html)


.
—————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இன்றைய தலைவர்களின் தரம் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  அருமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி கா.மை சார்….. மோடி, 40 எம்.எல்.ஏக்கள் பற்றிப் பேசியதெல்லாம், பதவிக்குரிய பேச்சே இல்லை. நமக்கு நல்ல தலைவர்களே இல்லையா ?

  எதற்கும் தமிழன் முன்னோடி. கருணாநிதி, அண்ணா 60களில் ஆரம்பித்துவைத்த ‘தனி நபர் அசிங்கமான தாக்குதல்’, இந்திய அளவில் 30-40 வருடங்களுக்குப் பிறகுதான் பரவ ஆரம்பித்திருக்கிறது… நல்லவேளை, ‘என் உயரம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லி, கருணாநிதி தமிழகத்திலேயே இருந்துவிட்டார். அவர் மட்டும் அகில இந்திய அளவில் அரசியலுக்கு இறங்கியிருந்தால், அகில இந்திய அரசியல் கெட்டுப்போக 40 ஆண்டுகள் ஆகியிருக்காது.

  முதல் கார்ட்டூன் – இதைப்பற்றி நான் எழுதணும் என்று நிறையதடவை நினைத்துக்கொண்டிருந்தேன். அரசியலைப் பற்றியோ தேசத்தைப் பற்றியோ ஒரு ‘முஸ்லீம்’ கருத்துச் சொன்னால், அதற்கு மறுமொழியாக ‘அப்படீன்னா பாகிஸ்தான் போ’ என்பதாகத்தான் பல இடங்களில் நான் படிக்கிறேன். எனக்குள்ள உரிமை, என் மொழி பேசும் முஸ்லீமுக்கோ கிறித்துவனுக்கோ கிடையாது என்ற எண்ணமே நாராசமாக இருக்கிறது.

  Real Issue in this country – அதன் மக்கள்தானோ?

 2. Selvarajan சொல்கிறார்:

  https://tamil.thehindu.com/india/article27023620.ece .. இந்த இந்து பத்திரிக்கை செய்தியில் யோகி கிண்டலாக அருமையான கருத்தை கூறியிருக்கிறார் – அப்புறம் என்ன தரம் தாழ்ந்து விட்டதா …?

 3. Ramnath சொல்கிறார்:

  இந்த லட்சணத்தில் இவர் தன்னை “யோகி” என்று வேறு அழைத்துக்கொள்கிறார்.
  சந்நியாசிக்குரிய எந்த லட்சணம் இவரிடம் இருக்கிறது – மொட்டையிலும், சட்டையிலும் தவிர ?

 4. சிவராசு சொல்கிறார்:

  நாவலர் நெடுஞ்செழியனை ‘ உதிர்ந்த மயிர்’, கம்யூனிஸ்டுகளை ‘உண்டியல் குலுக்கிகள்’, பேராசிரியர் அன்பழகனை ‘சிக்கன் குனியா கொசு’, விஜயகாந்தை ‘குடிகாரன்’, காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை ‘காலி டப்பா’ , சோனியா காந்தியை ‘பதிபக்தியில்லாதவள்’, அத்வானி ‘ஞாபகசக்தியில்லாதவர்’, ஜானகி எம்ஜியாரை ‘புருசனை மோரில் விசம் வைத்து கொன்றவர்’ என்றெல்லாம் விமர்சித்து அரசியலில் தரம் மெயின்டெயன் செய்த தலைவர் யார்?

  சரியான விடை சொன்னவர்களுக்கு காவிரி மையின் திட்டுக்கள் பரிசளிக்கப்படும்.

  • புதியவன் சொல்கிறார்:

   குல்லுக பட்டர், இந்திராகாந்தியை அருவருக்கும்படி பேசியது, பெண்களைப் பற்றி எப்போதும் அசிங்கமாகப் பேசுவது, பெருந்தலைவரை சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியிருக்கிறான் என்று பேசியது, உருவத்தை வைத்து எள்ளிநகையாடியது, எதிர்கட்சித் தலைவரை சட்டசபையில் புடவையை இழுத்து துச்சாதன்ன் வேலையைக் காண்பித்தது என்று கருணாநிதி தன் தரத்துக்கேற்றபடி நடந்தபோது, எம் ஜி ஆர் அவர்கள் கண்ணியமான அரசியலை மேற்கொண்டவர். அதனால்தான் மக்கள் தங்கள் அபரிமித அன்பால் அவர் இறக்கும்வரை அவரை முதலமைச்சராகவும் ஒவ்வொரு முறையும் கருணாநிதியின் திமுகவுக்கு மிக்க் குறைந்த எம் எல் ஏக்களையும் கொடுத்தார்கள். வயதான காலத்திலும் கருணாநிதியின் வக்கிர புத்தி போகாததால் அவரை அரசியலில் எதிர்கொள்ள ஆரம்பகாலத்தில் ஜெ. கருணாநி லெவலுக்கு இறங்காவிட்டாலும் சிறிது தரம் தாழ்த்தி விமர்சனம் செய்தது (91-96ல்) உண்மையே. பிறகு அதனைத் தவிர்த்ததால் தமிழக மக்கள் அவரையும் தொடர்ந்து ஆட்சிபுரிய வைத்தார்கள்.

   இந்திய அரசியலில் தரம் தாழ்வதில் யாரும் உடைக்கமுடியாத தொடமுடியாத ரெகார்டு கருணாநிதியுடையதுதான்.

 5. tamilmani சொல்கிறார்:

  When you compare the political speeches during the election Edapaadi Palanisamy is far better
  than Stalin. Stalin when he came to know that pmk is not with him. got enraged and scolded
  Ramadoss in a very personal manner not even giving respect to an elder politician. He is also
  attacking Mr Modi as Kalavani which does not go well with BJP cadre. With more political players like kamal,seeman,ttv in the arena it is not going to be a cakewalk for stalin, as it was perceived
  before the elections. Antognising hindu voters will also matter in this election and and stalin will learn some hard lessons this time.

  • புதியவன் சொல்கிறார்:

   @தமிழ்மணி – இந்த பாராளுமன்றத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்ததால், அதிமுக சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்தது. அவை மொத்தமாக திமுகவுக்கு வருவதாலும், திமுகவின் டிரெடிஷனல் வாக்குகளும் திமுகவுக்கு வரும் என்பதால், ஸ்டாலின் நிச்சய வெற்றி என்று மனதில் நினைத்துவிட்டார் (அதுதான் கள நிலவரம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதாவது 35-40 சீட்டுகள் திமுக வாங்கும் என்றே நான் நம்புகிறேன்… காரணம் மத ரீதியான வாக்குகள் + கூட்டணி வாக்குகள்). அந்த ஆணவத்தில், அவர் சிறுபான்மையினரை சந்தோஷப்படுத்துகிறேன் என்ற அளவில் இந்துமதத்தை கேவலமாக விமர்சிப்பது மட்டுமல்லாமல் பிரதமரையும் வசைபாடுகிறார் (அப்பா மாதிரிதானே பசங்க இருக்கும். கருணாநிதி 3rd rated person. His son will also be a 3rd rated person). திமுக ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் மீண்டும் அந்தத் துன்பங்களை அனுபவித்து திமுகவை, கருணாநிதியை வெறுத்து ஒதுக்கியதுபோல வெறுத்து ஒதுக்குவார்கள்.

   ஆனால் காலம் என்பது பாடங்களைக் கற்பிக்கக்கூடியது. அப்போது தெரியும் ஸ்டாலினுக்கு. தமிழகத்தில் தீயசக்தியான திமுகவுக்கு எதிரான பெரிய சக்தி நிச்சயம் உண்டு. இன்றைக்கு நல்ல தலைமையில்லாமல் பலவீனப்பட்டிருந்தாலும், அதிமுக, திமுகவைக் காட்டிலும் மிக நல்ல டீசண்ட் கட்சி, மக்களின் பேராதரவைப் பெற்ற கட்சி.

   தமிழகத்தின் ஓரளவு டீசண்ட் அரசியல்வாதிகள் எடப்பாடி, ஓபிஎஸ், ராமதாஸ் போன்றவர்கள் மட்டும்தான். (காங்கிரசுக்கு ஏஜெண்டுகள் மட்டும்தான் இருப்பதால் அவர்களைச் சேர்க்கவில்லை. இல்லையென்றால் குமரி அனந்தனைச் சேர்க்கலாம்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s