மார்ட்டினிடமிருந்து 500 கோடி …. நிஜமா..? – செய்தியை திரு.ஸ்டாலின் ஏன் மறுக்கவில்லை…?


லாட்டரி மார்ட்டினிடமிருந்து திமுக 500 கோடி ரூபாயை
தேர்தல் நிதியாகப் பெற்றது என்று நேற்று வெளிவந்த ஜூ.வி.
பரபரப்பாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இது வரை
திரு.ஸ்டாலினோ, திரு.துரைமுருகனோ –
திமுக முக்கியஸ்தர்கள் வேறு யாருமோ – இந்த
செய்திக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை..

அவர்களது மௌனம் ஆச்சரியம் அளிக்கிறது. மௌனம்
ஒப்புதலுக்கு அறிகுறியா…?
அல்லது ஆவணங்கள் எதாவது ரெய்டில் சிக்கி இருக்கலாம் …
இது குறித்து எதாவது பேசினால் அநாவசியமாக பிரச்சினையில்
சிக்கிக்கொள்வோம் என்கிற அச்சமா…?

அல்லது பிரச்சினை பெரிய அளவில் விளம்பரம் பெற்று விடும்
என்று எண்ணி, இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க
வேண்டாம் என்று ஸ்டாலின் நினைக்கிறாரா…?
ஆனால், ஏற்கெனவே அந்த பத்திரிகை பெரிய அளவில்
போஸ்டர்கள் எல்லாம் அடித்து, விளம்பரம் கொடுத்து
விட்டதே…? மறுக்காமல் விட்டால் தான் பிரச்சினை…!

இந்த செய்தியால், தன்னுடைய இமேஜுக்கு ஏற்படக்கூடிய
மிகப்பெரிய பாதிப்புகளையும் தாண்டி,
ஸ்டாலின் இப்படி மௌனம் காப்பது விசித்திரமாகவே
இருக்கிறது… ஏன் இப்படி…???

ஜூ.வி.யின் செய்தியிலிருந்து குறிப்பிட்ட பகுதிகள் கீழே….

.
———————————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to மார்ட்டினிடமிருந்து 500 கோடி …. நிஜமா..? – செய்தியை திரு.ஸ்டாலின் ஏன் மறுக்கவில்லை…?

 1. KANDASAMY சொல்கிறார்:

  1. Two issues one is Martin has donated funds to DMK & TMC in this election..2. Just because both DMK & TMC against the BJP ,, BJP sent the IT to raid Martin… 3. If we are wise enough we will accept the fact every political party will get money from any one irrespective of whether the donor is a good or bad person .( naai vitha kaasu kuraikkathu)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கந்தசாமி,

   எந்த கட்சி வேண்டுமானாலும், எந்த உத்தமர் அல்லது அயோக்கியரிடமிருந்து
   வேண்டுமானாலும், எவ்வளவு கோடி வேண்டுமானாலும் நன்கொடை பெறட்டும்.
   நமக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை.

   ஆனால், இது வெளிப்படையாக இருக்க வேண்டும்.
   யார் கொடுக்கிறார்கள்…?
   யாருக்கு கொடுக்கிறார்கள்…?
   எவ்வளவு கொடுக்கிறார்கள்…?
   கணக்கில் இருக்கும் பணமா…?
   அல்லது கணக்கில் வராத கருப்புப்பணமா…?
   கொடுத்த பணத்திற்கு கணக்கு காட்டப்படுகிறதா…?
   வாங்கிய பணத்திற்கு கணக்கு காட்டப்படுகிறதா…?

   இது ஜனநாயகம். இதைத் தெரிந்து கொள்ளும்
   உரிமை வாக்காளராகிய பொதுமக்களுக்கு உண்டு.

   சரி தானே… திரு. கந்தசாமி.. ? அல்லது உங்களுக்கு
   இதிலும் எதாவது ஆட்சேபணை உண்டா…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    கந்தசாமி,

    “நாய் விற்ற காசு குறைக்காது” – உண்மை தான்.
    ஆனால், கருப்புப் பணத்தை கொடுத்தாலோ – வாங்கினாலோ –
    சட்டம் பிடித்துக் கொள்ளும்…!!!

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

   • kandaswamy சொல்கிறார்:

    No objection sir….My point is no political party is strict about not getting black money as donation…

 2. Ramnath சொல்கிறார்:

  ஊமை கனா கண்டால் – வெளியே சொல்ல முடியாது.
  கருப்பு பணம், திருட்டுப்பணம் விஷயமும் இப்படித்தான்.
  ஆமான்யா – வாங்கினோம், என்ன இப்போ என்றா கேட்க முடியும் ?

 3. புதியவன் சொல்கிறார்:

  மார்டின், திமுக தலைவர்களின் பினாமியாக இருந்தால்? இல்லையென்றால் ஏன் ‘இளைஞன்’ என்று ஒரு படத்தை பாடலாசிரியர் விஜயை கதாநாயகனாக வைத்து, கருணாநிதி வசனத்தில் தயாரிக்கணும், வசனத்துக்காக கருணாநிதிக்கு 50 லட்சம் ரூபாய் கொடுக்கணும்?

  ஆவணங்கள் இருந்தால், அதன்படி, கட்சித் தலைவர் அந்த 500 கோடிக்கு கணக்கு காண்பிக்க முடியவில்லையென்றால் சிறையில் அடைக்க வாய்ப்பு இருக்கா?

 4. புதியவன் சொல்கிறார்:

  இன்னொன்று…. இந்த பாஜக வுக்கு வேறு வேலை கிடையாது. பொழுதன்னிக்கும் ஐ.டி ரெய்டு என்று படம் காண்பிப்பதைத் தவிர… எந்த ஐடி ரெய்டுலயாவது ஏதாவது ஆக்‌ஷன் எடுத்தாங்களா? (உடனே ஐ.டி ரெய்டு என்பதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லைன்னு யாரும் வரவேண்டாம். அவங்களுக்கு பாஜக அரசியல்வாதிகள் யாரும் கண்ணுக்குத் தென்படமாட்டாங்க)

 5. Selvarajan சொல்கிறார்:

  மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், பாரி வேந்தரின் ஐ.ஜே.கே.வில் உள்ளார்….. மகன் சார்லஸ் பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து உள்ளார் ! இப்படி குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருப்பதும் பல நன்மைகளுக்கு தானே …? …. 2003-ல் லாட்டரி தொழிலை தடை செய்து மார்டினை நெருக்கடிக்குள் தள்ள்ளினார் ஜெயலலிதா .. அதனால் இவரது அளவுக்கு அதிமான பாசம் தி.மு.க .விடம் திரும்பியது அன்றிலிருந்து இந்த பாசம் தொடர்ந்து இன்று ” பாசப் பறவைகளாக ” சிறகடித்து பறந்துக் கொண்டு இருக்கிறது … !! எத்தனையோ ரைடுகளையும் — வழக்குகளையும் பார்த்தவர் இந்த மார்ட்டின் — இதெல்லாம் அவருக்கு ஒரு பொழுது போக்கு போல …
  இந்த விகடன் தற்போது இந்த செய்தியை வெளிட்டு இருப்பதற்கு என்ன காரணம் .. ? மார்ட்டினின் ஃப்யூச்சர் கேமிங் நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரிந்து வந்த பழனிச்சாமியின் இறப்பு என்பது மட்டும் காரணமாக கொள்ள முடியுமா என்பதே கேள்வி — ? பழனிச்சாமியின் மனைவி இரண்டு கோடிகள் வரை பேரம் பேசுகிறார்கள் என்று வெளிப்படையாக கூறி வருகிறார் — எது எப்படியோ 500 கோடிகளை தேர்தல் நன்கொடை — “எலெக்டோரல் பாண்ட்” மூலம் கொடுத்ததா …?

 6. peppin சொல்கிறார்:

  செய்தியை திரு.ஸ்டாலின் ஏன் மறுக்கவில்லை…..A defamation case has been filed in the court against JV!

 7. tamilmani சொல்கிறார்:

  இவ்வளவு பெரிய தொகை மார்ட்டின் திமுகவிற்கு கொடுக்கிறார்
  என்றால் அவர் எவ்வளவு தொகை தன் லாட்டரி தொழிலில்
  சம்பாதித்து இருப்பார். அது சரி திமுகவிற்கு எதிரான
  எந்த செய்திகள் வந்தாலும் தமிழக டிவி சானல்கள் இருட்டடிப்பு
  செய்கின்றனவே ஏன் ? அதிமுக ,பிஜேபி என்றால் ஒன்றும் இல்லாத
  விஷயத்தை ஊதி பெரிதாக்கும் இந்த டிவி சானல்கள் திமுக என்றால்
  மௌனம் காப்பது ஏன்?.

  • புதியவன் சொல்கிறார்:

   தமிழ்மணி – தமிழகத்தில் நாளை ஸ்டாலின் வருவார் என்பதாலும், ஸ்டாலின்/திமுகவுக்கு உள்ள ‘தொடர்பு’களாலும், பெரும்பாலான மீடியா ‘திமுக’ சார்பு அல்லது அவர்களது அசோசியேட்ஸ் என்பதாலும்தான்.

   ஜெ. இருந்தபோது எப்படி வாலைச் சுருட்டிக்கொண்டிருந்தன, ஜெ.வும் இவர்களை லட்சியமே செய்யாது எப்படி இருந்தார் என்பதையெல்லாம் யோசித்தால் நமக்கு உண்மை புரியும்.

   இந்தத் தொலைக்காட்சிகளுக்கு 4-5 பேரை வைத்து ‘வெட்டிப் பேச்சு வெறும் கூத்து’ நடத்தணும், கலந்துகொள்கிறவர்கள் யாரையாவது எதிர்த்து ‘கத்தணும்’. இதைத் தவிர வேறு என்ன பயன் இவர்களது தினசரி விவாதங்களால்? முக்கியமான நிகழ்வுகள், சமுதாயத்தை பாதிக்கும் பிரச்சனைகள் (சாதிக்கலவரம் போன்று), மழை நீர் சேகரிப்பு, தூர் வாருதல் போன்ற எந்தப் பிரச்சனையையும் இவர்கள் விவாதிக்கமாட்டார்கள். இந்த ‘கத்திப் பேசும் நடிகர் வைகோ’ இப்போது ‘மதுவிலக்கு’, ‘மதுக்கடைகள் மூடுவது’ என்பதைப் பற்றிப் பேசவே மாட்டார். ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ அதன்படி மறுபேச்சு பேசாமல் இருப்பதுதான் அவர் வேலை. இதுதான் நம் தொலைக்காட்சிகளின் லட்சணம்.

   தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே, நேர்மையான நேர்காணல்கள், விவாதங்கள் நடத்தியபோது பாதிக்கப்பட்ட ஸ்டாலின், தந்தி டிவ் அதிபரை மிரட்டி, திமுக இனி எப்போதும் கலந்துகொள்ளாது என்று சொல்லி, நிகழ்ச்சிகளையே தூக்கவைத்துவிட்டார் என்பதும் நாம் அறிந்ததுதானே.

 8. Pingback: ஜூனியர் விகடன் – பொய் சொன்னதை ஒப்புக்கொள்கிறதா…? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s