இவர் ஒரு ” முற்றும் ” துறந்த – சந்நியாசி – ஆனால் …. !!!
அடேயப்பா …

இந்த வீடியோவின் துவக்க காட்சிகளைப்
பார்த்ததும் அசந்து விட்டேன்…

ஆங்கில/ ஹிந்தி திரைப்படங்களில் வரும்
டான்’களின் introduction scene
மாதிரி இல்லை …??? 🙂 🙂 🙂

.
—————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இவர் ஒரு ” முற்றும் ” துறந்த – சந்நியாசி – ஆனால் …. !!!

 1. புதியவன் சொல்கிறார்:

  இன்றைக்கு நான் பிரணாய் ராய், உத்திரப்ப்ரதேச வாக்காளர்கள், வாக்களிக்கும் பேட்டர்ன், யாருக்கு வாய்ப்பிருக்கு என்று டீடெயிலாக அனாலிசிஸ் செய்திருந்த வீடியோ பார்த்தேன். அதில் ஒரு கிராமத்துக்குச் சென்று, ஒரு பட்டியல் இனத்துப் பெண்ணிடம் பேசுகிறார்… அதற்கு அங்கிருக்கும் அவரது மகள் (7வது படிக்கிறாள்?) பதிலளிக்கிறார். அந்தப் பெண் தினமும் வயலுக்குப் போய் வைக்கோலைச் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருகிறார் (பல தடவை). அந்தப் பெண்’தான் தன் வீட்டில் எரிவாயு இல்லை, அது ஃபில் அப் பண்ண காசில்லை என்று சொன்னார்னு நினைக்கிறேன். (என்னால் ஒரு தடவைகூட அந்த 7வஹ்டு படிக்கும் பெண் கொடுக்கும் உடலுழைப்பைக் கொடுக்கமுடியாது… இந்த மோசமான சூழலிலும் அந்தப் பெண்ணுக்கு இருக்கும் தன்நம்பிக்கை, ஆம்பிஷன்… சத்தியமா எனக்கு வந்ததில்லை). அந்தப் பெண் சொல்கிறாள், யாரும் அவர்கள் உதவிக்கு வருவதில்லை… கஷ்டம் அதிகமாக இருக்கு, ஆனாலும் நான் மருத்துவராகணும் என்ற ஆசை, இங்கு இருப்பவர்களுக்கு டாக்டராக சேவை செய்யணும் என்றெல்லாம் பேசியது. எனக்கு கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. 1 வருடத்தில், வேறு எதையும் செய்யவேண்டாம், 5 ஏழைக் குடும்பங்கள், 5 ஏழைக் கிராமங்கள் முன்னேற உதவி செய்யக்கூடாதா? அதைக் கூடச் செய்யமுடியாமல் ‘முதலமைச்சர்’ பதவியில் இருந்து என்ன பயன்? ஏன் கா.மை. சார் உ.பி முதலமைச்சர் ஆதித்யநாத்தைப் பற்றி எழுதவில்லை என்று நினைத்தேன்.

  இவர்கள் யாரும் இந்துமதத்தைக் காக்க வேண்டாம். அதனைக் காப்பதற்கு மடங்களின் தலைவர்கள் (நல்ல மடாதிபதிகள்) இருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளின் வேலை, ஏழை மக்களுக்கு நல்லது செய்வது, முக்கியமாக ‘குடி தண்ணீர்’, ‘கால்வாய், ஏரி, குளம் இவற்றை முழுவதும் பழுதுபார்ப்பது’ இவற்றைச் செய்தாலே போதும்.

  இதனைச் செய்ய முடிந்தால், எதற்கு ‘கறுப்புப் பூனைப் படை’, ‘செக்யூரிட்டி அதிகாரிகள்’, ‘டாம்பீகம்’ போன்றவை? வருடத்துக்கு 50 குளங்களை வெட்டியிருந்தாலோ, தூர் வாரியிருந்தாலோ, ஏழைகளுக்கு உதவியிருந்தாலோ, அவர்கள் நல்லெண்ணம் காக்குமே.

  எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல, இவர்களையும் ‘சந்நியாசி’ என்று நீங்கள் எழுதியது வருத்தத்தைத் தருகிறது.

 2. அறிவழகு சொல்கிறார்:

  இவரிடம் இரண்டே இரண்டு உடுப்பு துனி மட்டும் தான் இருக்கு, அவ்வளவு எளிமையான சன்னியாசி அவர் என்றெல்லாம் சொன்னார்களே….!?

  அப்ப இல்லையா….?

  ஆனாலும், ஆங்கில/ ஹிந்தி திரைப்படங்களில் வரும்
  டான்’களின் லெவலுக்கு கொண்டு போய்விட்டீரகள்.

  ரொம்ப பெருமையாக இருக்கு, நம் நாட்டு ஒரு மாநில முதலமைச்சரின் எளிமையை கண்டு.

 3. Selvarajan சொல்கிறார்:

  // நான் ஏழைகளின் ஜாதி, ஏழ்மைதான் எனது அடையாளம்’: பிரதமர் மோடி // https://tamil.thehindu.com/india/article27107979.ece என்று கூறுகிற பிரதமரின் ஆட்சியில் ஒரு மாநில முதல்வர் வீடியோவில் வரும் காட்சிகளை விட ” சிம்பிளாக ” வேறு எப்படித்தான் செயல் பட முடியும் ? இதுவே மிகவும் சிம்பிள் — !!!

  தமிழ் படம் ஒன்றில் : வெள்ளை சட்டை — வெள்ளை பேண்ட் போட்டவங்க எல்லோரும் ஏ .வி. எம் சரவணனா ..? என்று ஒரு காமெடி காட்சியின் டயலாக் ஞாபகம் வருகிறது — ஏனோ தெரியல …!

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  இந்த வீடியோ எடுத்தது யாரு?
  Officials என்றால் எதற்காக… விளம்பரமா?
  அல்லது வீடியோவை எடுத்தது யாரோ தனியார் என்றால், பாதுகாப்பில் எங்கேயோ ஓட்டை இருப்பதாக நான் எண்ணுகின்றேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அஜீஸ்,

   வீடியோவை எடுத்தது DPR Videos என்கிற
   பெயரிலுள்ள நிறுவனம். யாருக்குச் சொந்தம்
   என்று தெரியவில்லை… ஆளும்கட்சிக்கு
   வேண்டிய (ஏர் ) டிராவல்ஸ் நிறுவனமாக
   இருக்க வாய்ப்பு.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Selvarajan சொல்கிறார்:

  வேறு ஒரு அத்தியாவசிய சுவாரஸ்யமான செய்தி :– // சென்னையில் ரூ.7க்கு 20 லிட்டர் வாட்டர் கேன்.. 800 இடங்களில் வருகிறது வாட்டர் ஏடிஎம் //

  Read more at: https://tamil.oneindia.com/news/chennai/soon-low-cost-water-atms-in-800-locations-across-the-200-wards-in-chennai-350053.html … டிஜிட்டல் இந்தியா …! முன்பு தண்ணீருக்கு குழாயடி சண்டையை பார்த்து அலுத்து போனவர்களுக்கு — அதே தண்ணீருக்கு ” ஏடிஎம் யடி ” சண்டையை இனி பார்க்கலாமோ …?

  • Selvarajan சொல்கிறார்:

   72 வருட சுதந்திர இந்தியாவில் காசுக்கு தண்ணீர் விற்கும் அவலம் … ! அது சரி இத்தனை ஏடிஎம்களுக்கு நிரப்ப மட்டும் தண்ணீர் எங்கே இருந்து வருகிறது …? காசுக்கு விற்க தண்ணீர் தடையின்றி கிடைக்கிறதோ இந்த கையாலாகாத அரசுக்கு — வெட்கக்கேடு …!!!

 6. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  யோகி பாபாவிற்கு Z பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது .
  இந்த செக்யூரிட்டி அரசு கொடுக்கிறது .
  ஏற்பாடுகள் கவனிக்க ஒரு டி எஸ் பி எந்நேரமும் கூட இருப்பார் .
  This is protocol decided by NSG !

  மற்றபடி ஏதோ டான் மாதிரி என்று சொல்வது கொஞ்சம் ஓவர் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s