இங்கிவரை யாம் பெறவே…. என்ன தவம் செய்தோமோ….!!!


இந்த பேட்டியும் செய்தியும் தேர்தல் துவங்கும்
முன்னரே வந்திருக்கலாம்…
நமக்கு அதிருஷ்டம் இல்லை ….
நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்…!!!

—————————————

https://www.ndtv.com/tamil/row-over-pm-modis-cloud-can-help-us-escape-radar-comment-on-balakot-air-strike-2036437

——-

“மேகமூட்டத்தால் பாக். ரேடாரிடமிருந்து எஸ்கேப் ஆகலாம்!”-
சர்ச்சையாகும் பிரதமரின் கருத்து

பிரதமர் மோடியின் இந்த கருத்து குறித்து பாஜக-வின்
அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டது.

NEW DELHI: பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் ஒரு டிவி
சேனலுக்கு அளித்த பேட்டியில்,

பாலகோட் விமானப்படை தாக்குதல் குறித்து சில கருத்துகளை
கூறியுள்ளார். அவர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.

“நியூஸ் நேஷன்” என்கின்ற டிவி சேனலுக்கு
பாலகோட் தாக்குதலைப் பற்றி பிரதமர் மோடி அளித்த பேட்டியில் –

“அன்று திடீரென்று வானிலை மாறியது. வானம் மேகமூட்டத்துடன்
இருந்தது. கனமைழை வேறு பெய்தது. மேகமூட்டம் இருப்பதால்,
திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.

இது குறித்து விவாதித்த போது,

துறை சார்ந்த வல்லுநர்கள்,
தாக்குதல் தேதியை மாற்றலாம்
என்று சிபாரிசு செய்தனர்.

ஆனால் எனக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக பட்டன.
ஒன்று, இந்த திட்டம் குறித்து ரகசியம் காக்கப்பட வேண்டும்.
இரண்டாவது, எனக்கு அறிவியல் குறித்து அவ்வளவாக
தெரியாது.

மேகமூட்டமாகவும், மழையும் இருப்பதால்
நமக்கு அது சாதகமாக பயன்படலாம் என்றேன்.
அதன் மூலம் ரேடாரிலிருந்து எஸ்கேப் ஆகிவிடலாம்
என்று சொன்னேன். முடிவாக,
திட்டத்தை செயல்படுத்தலாம் என்றேன்” எனப் பேசியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலையில், இந்திய
விமானப் படை பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில்
செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமில்
குண்டு போட்டுத் தாக்கினர். புல்வாமா தாக்குதலுக்கு
பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அதிரடி திட்டம்
முன்னெடுக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் இந்த கருத்து குறித்து பாஜக-வின்
அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டது.
அந்த ட்வீட் இப்போது நீக்கப்பட்டு விட்டாலும்,
பிரதமர் மோடி பேசிய வீடியோ இன்னும் அப்படியே இருக்கிறது.

——————-

// That tweet is no longer on the BJP timeline, but the party had
also tweeted a one-minute video – captioned “The story of the air
strike, in PM Modi’s words” – which remains.//

———–

“நியூஸ் நேஷன்” என்கின்ற டிவி சேனலுக்கு பாலகோட் தாக்குதலைப் பற்றி பிரதமர் மோடி அளித்த பேட்டி

——————-

——————-

இது குறித்து இடதுசாரித் தலைவர் சீதாராம் யெச்சூரி
கூறி இருப்பது –

Sitaram Yechury

@SitaramYechury
Modi’s words are truly shameful.
Most importantly, because
they insult our Air Force
as being ignorant and unprofessional.
The fact that he is talking about all
this is itself anti-national;
no patriot would do this.

comments —

Radar, which can detect objects with precision
under adverse weather conditions.

மோடியின் இந்த கருத்துக்கு எதிர்கட்சியினர் பலத்த
கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இடதுசாரி தலைவர் சீதாராம் யெச்சூரி,
“தேசிய பாதுகாப்பில் இப்படி விளையாடக் கூடாது.

மோடியின் பொறுப்பற்ற பதில் பலத்த சேதங்களை
உண்டு செய்யும். இதைப் போன்ற ஒருவர்
இந்தியாவின் பிரதமராக இருக்கவே கூடாது.

அவர் விமானப்படைக்கு போதுமான திறமை இல்லை
என்பது போல கருத்தை சொல்லியுள்ளார்.

இதைப் போன்ற விவகாரங்களை பேசும் அவர்
ஒரு ஆன்டி- நேஷனல். எந்த தேசபக்தனும் இதைச்
செய்ய மாட்டான்” என்று கொதித்துள்ளார்.

– பலரும் பிரமரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர். ரேடாருக்கு மேகங்களை
ஊடுருவிச் செல்லும் திறன் இருக்கிறது என்றும்
பலர் கூறி வருகின்றனர்.

—————————————–

மேலதிக தகவல் –

The clouds did, in fact, affect the operation
as the Indian jets couldn’t launch six Crystal
Maze missiles that day. These missiles were meant to
beam back footage as they struck their targets.

Though the Air Force did hit targets using
Spice munitions, the video feed of the Crystal
Maze strike, meant to showcase the destruction
of the terror camp, never materialised because of
clouds that day.

Experts say ‘reliable’ BDA or bomb damage assessment
could not be gathered since the missile with the
video feed was not launched due to clouds.

Air forces around the world use this assessment to see
the results of any air strike.

.
————————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இங்கிவரை யாம் பெறவே…. என்ன தவம் செய்தோமோ….!!!

 1. Selvarajan சொல்கிறார்:

  மேகங்களுக்கு இடையே விமானங்கள் சென்றால் ரேடாரில் அது தெரியாது என பிரதமர் மோடி பகிரங்கமாக அளித்த பேட்டி பெரும் கேலிக்குரியதாகிவிட்டது. சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவது ஒருபக்கம் என்றால் —

  // 1980களில் மோடி இ- மெயில் அனுப்பினார்? டிஜிட்டல் கேமரா வெச்சிருந்தார்?.. ட்விட்டரில் ‘தெறி’சர்ச்சை //

  Read more at: https://tamil.oneindia.com/news/delhi/netizens-slams-pm-modi-for-digital-camera-e-mail-in-interview/articlecontent-pf373352-350079.html … ஒன்னுமே புரியல உலகத்திலே …?

 2. அறிவழகு சொல்கிறார்:

  திரும்பவும் ஐந்து ஆண்டுகள் கொடுங்கள் இந்தியாவை என்ன செய்கிறேன் பாருங்கள் என்று தேர்தல் பரப்புறையில் கேட்கிறாரே….

  திரும்ப கொடுத்தால் இந்த நாடு என்னாகும்…?

  பயந்து வருகிறதே.

 3. ஞான சூனியம் சொல்கிறார்:

  முதலில் பால்கோட் தாக்குதல் பொய் என்று கூவினோம். இப்பொழுது அந்த தாக்குதல் உண்மை தான் என்பது போல ஒத்துக்கொள்வது கஷ்டமாக உள்ளது

 4. R. RAMANI SANKAR சொல்கிறார்:

  பேஸ்புக்கில் வந்த பதிவு: ராடார் புகழ் மோடி அந்த தொலைக்காட்சி பேட்டியில் இன்னும் பல வடைகளை சுட்டுள்ளார்!

  1988ல் டிஜிட்டல் கேமராவில் கலர் போட்டோ எடுத்து அதை ஈ மெயிலில் அத்வானிக்கு அனுப்பினாரம்(?!) டிஜிட்டல் கேமரா சந்தைக்கு வந்தது 1990ல், இந்தியாவுக்கு இணையம் வந்தது 1995ல்!

  அதுசரி அப்போது விலை உயர்ந்ததாக இருந்த பெரிய டிஜிட்டல் கேமரா வாங்க ஏழைத்தாயின் மகனுக்கு பணம் எங்கிருந்து வந்தது?! இதற்கும் அவரின் ஏழை தாய் பணம் கொடுத்துருப்பாங்களோ?!

 5. Prabu சொல்கிறார்:

  Modi divert all attention from mal practice at Electronic Voting Machine

 6. D. Chandramouli சொல்கிறார்:

  Sorry, my comment is on a different issue. is this spelling at the start ‘இங்கிவரை’ correct? Thought it should be two distinct words ‘Ingu Ivarai’. How Bharathi spell it?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சந்திரமௌலி,

   உங்கள் கேள்வி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

   நான் இந்த வலைத்தளம், படிப்பவர்களுக்கு சுலபமான,
   எளிதான தமிழில் இருக்க வேண்டுமென்று தான்,
   இணைத்து எழுதக்கூடிய சொற்களைக்கூட,
   பிரித்து பிரித்து எழுதுகிறேன்…

   அந்த முறையில் பார்த்தால், இந்த தலைப்பு –
   இங்கு + இவரை என்று தான் இருக்க வேண்டும்.

   ஆனால் “இங்கிவரை ” ஏன் என்றால்…

   கவிதை, பாடல் வடிவில் வரும்போது,
   சிலசொற்களை சேர்த்து எழுதுவது வழக்கம்…அழகு.

   திருக்குறளில் பெரும்பாலான இணைப்புச் சொற்களை
   நீங்கள் பார்க்கலாம்.

   இந்த தலைப்பை நான் நான் தேர்ந்தெடுக்க பாரதியாரின்
   கீழ்க்கண்ட பாடலின் புகழ் ஒரு முக்கிய காரணம்..

   // எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
   இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..//

   இது கண்ணனைக் குறித்த பாடல்… நமது தலைவருக்கு
   பாடலின் அசல் பொருளில் நிச்சயம் பொருந்தாது…!!!

   இருந்தாலும், பாரதியின் அந்த வார்த்தை
   எனக்குப் பிடித்த வார்த்தை…

   ஆகவே தான்…”இங்கிவரை (…னை)”…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • D. Chandramouli சொல்கிறார்:

    Thanks for your clarification. This sentence proves your point. எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
    இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..//

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s