திரு.ஸ்டாலின் “நிலை” – “ஹிந்து”-வுக்கே வந்த சந்தேகம்….!!!


இன்றைய தினம் ஹிந்து ஆங்கில இதழில்
வெளிவந்துள்ள ஒரு கார்ட்டூன் கீழே –

தெலங்கான முதலமைச்சர் திரு.சந்திரசேகர் ராவி’ன்
நிலையை அரசியலை உற்று கவனித்து வருபவர்கள்
அறிவார்கள்..

தேர்தல் முடிவுகளுக்குப்பின், பாஜக கூட்டணிக்கு
குறிப்பிட்ட அளவுக்கு எண்ணிக்கை கிடைக்காவிட்டால்,

வெளியிலிருந்து ஆள் திரட்டிக்கொண்டு வரும் பொறுப்பு,
பாஜக தலைமையால் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது…
என்பதை யூகிக்க முடிகிறது.

வெளி கட்சிகளை பாஜக கூட்டணிக்கு இழுத்து வர
முடியா விட்டாலும், குறைந்த பட்சம்,
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் சேர்வதையாவது
தடுப்பது அவரது அடுத்த குறிக்கோள்….

அதன் பொருட்டே 3-வது அணி குறித்து பேசுவதாக
சொல்லிக்கொண்டு, பாஜக கூட்டணியில் ஏற்கெனவே இல்லாத
கட்சித் தலைவர்களை அவர் வரிசையாக சந்தித்து வருகிறார்.

இதில் திமுக-வின் நிலை என்ன….?

23 -ந்தேதிக்குப் பிறகு, எந்த combination (கூட்டணி) -க்கு
மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறதோ,
அதில் சேர்ந்து கொள்வதை விட வேறு என்ன நோக்கமாக
இருக்க முடியும்….?

ராவு’டனான சந்திப்பில் என்ன நடந்தது என்பதை ஸ்டாலின்
வெளிப்படையாக கூறாததற்கு என்ன காரணம்….?

ஸ்டாலின் பேட்டி – “ராவ் – சாமி கும்பிட, கோவில்களுக்கு
செல்ல – தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்படியே,
என்னையும் சந்தித்து விட்டு சென்றார்…” (அவ்வளவு தான்..!!! )

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில்,
முக்கால் மணி நேரம் – திமுகவின் இதர
மூத்த தலைவர்களும் உடனிருந்திருக்கிறார்கள்.

ஆனால், 15 நிமிடங்களுக்கு, ராவு’ம், ஸ்டாலினும் மட்டும்
தனியே ரகசியமாக பேசி இருக்கிறார்கள்….
எனவே இங்கு பேசப்பட்டது என்ன என்பது இவர்கள்
இருவரைத்தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு
தனது பேரத்திற்கு வசதியாக எல்லா option
(வாய்ப்பு) -களையும் திருவாளர் ஸ்டாலின் திறந்து
வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.

இடது சாரி பத்திரிகையான,
திமுகவுக்கு மிகவும் வேண்டப்பட்ட –
ஹிந்து’வுக்கே ஸ்டாலின் போக்கில்
சந்தேகம் வந்து விட்டதன் விளைவா இந்த கார்ட்டூன்….?

.
——————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திரு.ஸ்டாலின் “நிலை” – “ஹிந்து”-வுக்கே வந்த சந்தேகம்….!!!

 1. Ramnath சொல்கிறார்:

  திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே
  ராவுடன் பேச்சு வார்த்தை நடத்துவது சரி இல்லை.
  இது காங்கிரசுக்கு செய்யப்படும் துரோகம்.
  ஸ்டாலின் இந்த சந்திப்பிற்கு சம்மதம் கொடுத்திருக்கக்கூடாது.

 2. Rajagopalan சொல்கிறார்:

  தினமணி செய்தி –

  பாஜகவிடம் 5 கேபினட் அமைச்சர் பதவிகளைக் கேட்டு திமுக பேசி வருவதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று சந்தித்து பேசினார்.

  இந்த சந்திப்பு தொடர்பாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், ‘‘திமுக எப்போதுமே சந்தர்ப்பவாத கட்சி. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே நடந்த அரசியல் நிகழ்வுகளைக் கொண்டு இதை அறியலாம்.
  ஒரே நேரத்தில் இரு படகுகளில் பயணிப்பவர்கள் திமுகவினர். அவசர நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸை கடுமையாக விமர்சித்துவிட்டு, அதன்பின் ‘நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக’ என்று சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.

  3-வது அணிக்கு மட்டும் அல்ல; டெல்லிக்கு தூதுவிட்டு 5 கேபினட் அமைச்சர் வேண்டும் என்று பாஜகவுடன் அவர்கள் பேசி வருகின்றனர். எல்லோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பதவிகள் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

 3. tamilmani சொல்கிறார்:

  bjp should not entertain the likes of stalin who is a rank opportunist. After abusing Mr Modi during
  the entire election compaign and before that how he can stoop to this level for 5 cabinet posts.
  What Congress high command is doing? Now it is clear that Bjp is going to become the single
  largest party .

 4. அறிவழகு சொல்கிறார்:

  அமைச்சர் டி.ஜெயக்குமார், பாஜக தலைவர் தமிழிசை இருவரும் ஒருமித்து சொல்கிறார்கள், திமுக கேபினெட் அமைச்சர் பதவிகளுக்காக மோடியிடம் பேசிவருவதாக.

  அது உண்மையா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அதைவிட கேவலம் வேறு இருக்க முடியாது.

  மோடியை ஃபாசிஸ்ட்னு சொன்ன ஸ்டாலினுக்கு தான் எதுவும் இல்லையென்று கொண்டாலும் பதவியில் தொடர எதுவும் செய்யும் மோடிக்கு…?

  ஓ…நாம் அரசியல் வாதிகளை பற்றியல்லவா பேசிக்கிட்டு இருக்கிறோம்.

  உடு ஜூட்…

  • அறிவழகு சொல்கிறார்:

   ///பாஜகவுடன் பேசுகிறேனா?: ஸ்டாலின் சவால்!

   பாஜகவுடன் பேசுவதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயாராக இருப்பதாக தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.///

   ஸ்டாலின் அந்த அறிக்கையில் இன்னும் கடுமையான வார்த்தை பிரயோகம் செய்து இருக்கிறார்.

   தான் பேசியதாக சொன்னதை நிரூபிக்க முடியுமா? நிரூபித்தால் தான் அரசியலைவிட்டே போய் விடுவதாகவும் இல்லை என்றால் திருமதி. தமிழிசை மற்றும் திருவாளர் மோடி இருவரும் அரசியலை விட்டு போவார்களா என்று கேட்டுள்ளார்.

   திருமதி. தமிழிசை மற்றும் திருவாளர் மோடி இருவரும் முன் வரவேண்டும்.

   ஏற்கனவே மம்தா பானர்ஜி மற்றும் ராகுல் காந்தி இருவரும் விட்ட சவால்களும் இருக்கின்றன.

   “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்”

   அதுவெல்லாம் அந்த கால மனிதர்களுக்கு. சிலப்பதிகாரம் சொல்லும் அந்த அரசியலை கைகொள்ள இந்த கால அரசியல் வாதிகள் விவரம் இல்லாதவர்களா என்ன ….?

 5. kandaswamy சொல்கிறார்:

  sir 1. Last time you wrote about Junior vikatan article—- Stalin issued a notice to vikatan group…2. Today you wrote about raos meeting and just now stalin issued a strong statement…Please read that…. Please sir dont get angry ….with all my respects and love to you ,, i take the privilege to accuse you for your anti dmk mindset… so please relax and restrain before writing anything bad about dmk…so that you can realize some good things about dmk… anyway your views and articles
  about dmk ( avasara pattu alli theliththal) in no way going to affect the wise peoples views..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கந்தசுவாமி,

   நீங்கள் ஒரு திமுக ஆதரவாளர் என்றும், நான் திமுக / திரு.ஸ்டாலின் பற்றி குறைகூறுவது
   உங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் இப்போதும், இதற்கு முன்னால் நீங்கள் எழுதிய
   பின்னூட்டங்களிலிருந்தும் தெரிந்து கொண்டேன்.

   1) // Stalin issued a notice to vikatan group… //

   ஸ்டாலின் ஜூ.வி.க்கு நோட்டீஸ் விட்டிருப்பதாக ஊர் முழுவதும் திமுகவினர்
   சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் அத்தகைய நோட்டீஸ் எதையும் பெறவில்லை
   என்று ஜூ.வி.யின் அடுத்தடுத்த இதழ்களில் எழுதி இருக்கிறார்களே பார்க்கவில்லையா…?

   ஸ்டாலின் நோட்டீஸ் விட்டிருப்பதாக எந்த மீடியாவில் செய்தி வந்தது…?
   நீங்கள் அதன் விவரங்களை பார்த்தீர்களா…?
   ஜூ.வி.க்கு நோட்டீஸ் விடப்பட்டிருப்பதாகச் சொல்லி, இந்த கதையை இத்தோடு மேற்கொண்டு
   விளம்பரம்/தொல்லை இல்லாமல் முடித்து விட வேண்டும் என்பது தானே திமுகவின் நோக்கம்…?

   2) இன்று திரு.ஸ்டாலின் கொடுத்த அறிக்கையிலிருந்து உங்களுக்கு என்ன புரிந்தது…?

   23-ந்தேதி ரிசல்ட் வந்த பிறகு பார்ப்போம் என்று சொல்லித்தானே முடித்திருக்கிறார்…
   ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு முன் மொழிந்ததை மாற்றிக்கொள்ள மாட்டோம்
   என்று எங்காவது ஒரு வார்த்தையாவது சொல்லி இருக்கிறாரா…?

   3) நான் என்ன எழுத வேண்டும், எதை எழுத வேண்டும் என்பதை
   எதாவது ஒரு கட்சியின் உறுப்பினரோ, ஆதரவாளரோ சொல்லி,
   அதை நான் ஏற்றுக்கொள்வேன் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்…?

   4) உங்களுக்கு ஒரு அட்வைஸ் – எந்த கட்சிக்கும், எந்த தலைவருக்கும், எப்போதும்
   அடிமையாக இருக்காதீர்கள்…. நான் எழுதுவதைக்கூட ஏற்க வேண்டாம்..
   எந்த விஷயத்திலும், கிடைக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு,
   நீங்களே சுதந்திரமாக சிந்தியுங்கள்.

   5) நீங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தாலும், அதை பண்பான முறையில் சொல்லி இருப்பதை நான் பாராட்டுகிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. Raghavendra சொல்கிறார்:

  ஆஹா – உதயசூரியனில் மோடியின் முகம்.
  அற்புதமான காட்சி.
  கொடுத்து வைத்தவர் மோடியா அல்லது ஸ்டாலினா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.