கொடுத்ததெல்லாம் கொடுத்தான் …..!!!


இந்த குழந்தைகளைப் பாருங்களேன்…
எவ்வளவு ஆனந்தம் அவர்களுக்கு…

இந்த தருணத்தில் –
கவிஞர் வாலியின் மறக்க முடியாத
ஒரு பாடல் நினைவிற்கு வருகிறது –

…..

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
“அவன்” யாருக்காக கொடுத்தான் – ?

ஒருத்தருக்கா கொடுத்தான் – ?
இல்லை – ஊருக்காக கொடுத்தான்

மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா – ?
மாலை நிலா ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா – ?

உனக்காக ஒன்று – எனக்காக ஒன்று –
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

பலர் வாட வாட – சிலர் வாழ வாழ
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் …..

….

வறியோர்க்கு, எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல்,
அவர்களின் தேவையை அறிந்து உதவி செய்து –
அந்த உதவி, அவர்களிடத்தே உண்டு பண்ணும் உணர்வை
கண்ணெதிரே அனுபவித்துப் பார்க்க வேண்டும்….
அதுவே ஆனந்தம்…!

கொடுத்து மகிழ்கின்ற குணம் மனிதரிடையே –
மேலும் மேலும் பரவ வேண்டும்

ஈகைத்திருநாளையொட்டி, டாட்டா மோட்டார்ஸ் சார்பில்
வெளியிடப்பட்டுள்ள அருமையான ஒரு
காணொளியை கண்டேன் ….!!!
நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்…
(வீடியோ லிங்க் உதவிக்கு நன்றி – நண்பர் அஜீஸ் )

.
——————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to கொடுத்ததெல்லாம் கொடுத்தான் …..!!!

 1. Selvarajan சொல்கிறார்:

  அவர் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும்… என்பதைப்பற்றி ” சிறார்கள்” அறிந்திருக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம் …! — அப்படி அவர்கள் அதன் பிரதிபலன் பற்றி அறியாமலேயே செய்த செயல்தான் மேன்மையானது — நல்ல பதிவு .. நன்றிகள் ..!!!

 2. Rajagopalan சொல்கிறார்:

  Good Video.
  Spreads good will gesture.
  thanks for sharing.

 3. c.venkatasubramanian சொல்கிறார்:

  Kuzhandaium DEIVAMUM kondadum idathile,Nandru.Nandri

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.