உருமாறிய திராவிட இயக்கமும் – இன்றைய அரசியலும் … (பகுதி-1)(அந்தக்கால பெரியார் ஈ.வே.ரா…)

நினைத்தாலே வியப்பாக இருக்கிறது…
எப்படித் துவங்கிய ஒரு இயக்கம் – இன்று
எப்படியெல்லாம் மாறி இருக்கிறதென்று….!!!

சில வருடங்களுக்கு முன்னர், இந்த வலைத்தளம்
துவக்க நிலையில் இருந்தபோது,
திராவிட இயக்கத்தின் தோற்றமும் – வளர்ச்சியும்
பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதி இருந்தேன்.

நிறைய நேரம் எடுத்துக்கொண்டு,
பல ஆதாரபூர்வமான தகவல்களை எல்லாம் சேகரித்துக்கொண்டு,
மிகுந்த ஆரவத்துடன் எழுதினேன் அந்த கட்டுரைத் தொடரை.

இந்த வலைத்தளத்திற்கு புதிது புதிதாக வருகை தரும்
வாசகர்களின் எண்ணிக்கை பெருகி விட்ட நிலையில் –
பெரும்பாலான இன்றைய வாசகர்கள் அந்த தொடரை
வாசித்திருக்க வாய்ப்பில்லை…

மேலும், தமிழக அரசியலில் கடந்த சில வருடங்களாக
ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கருத்தில் கொண்டு,
பல செய்திகளையும் உள்ளடக்கி –
புதிதாக ஒரு தொடரை எழுத வேண்டுமென்று தோன்றியது.

அதன் விளைவே, இந்த முயற்சி.
இதில் தரப்படும் தகவல்களைப் பொருத்த வரை –
ஆதாரபூர்வமானவை என்று உறுதியாக நம்பலாம்.

வரலாறு என்பது, கடந்து முடிந்து விட்ட காலம் –
அதை யாராலும் மாற்ற முடியாது.
ஆனால், சிலர், தங்கள் விருப்பங்களுக்கு, வசதிகளுக்கு ஏற்ப,
திரித்து வேண்டுமானால் எழுதலாம் …

நான் அந்த தவற்றைச் செய்ய மாட்டேன்.
இங்கே, இந்த தொடரில் வரலாறு தனியாகவும்,
என் கருத்துகள் தனியாகவும் தெரியும்….

இந்த அறிமுகத்துடன் – இடுகைத் தொடரை துவக்குகிறேன்.
வழக்கம் போல், வாசக நண்பர்கள், இவற்றைப்பற்றியும்,
தங்கள் கருத்துகளை பின்னூட்டங்கள் மூலம் கூறலாம்.

( நமது வழக்கமான இடுகைகள்,
தேவைக்கேற்றாப்போல் தொடரும்…!!!)

———————————————–

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு –

இதில் வரும் பல தகவல்கள் –
அவர்களுக்கு புதிதாகவே தோன்றும்….

எப்போது துவங்கியது இந்த திராவிட இயக்கம் ?

இந்த இயக்கத்தினை உருவாக்கியவர் –
தந்தை பெரியார் என்று அன்போடு அழைக்கப்படும்
ஈரோடு வேங்கட ராமசாமி (ஈ.வே.ரா.) அவர்கள்
என்றாலும் கூட –

இந்த திராவிட இயக்கத்தின் வரலாறு
உண்மையில் – நீதிக்கட்சியின்
(justice party – south indian
liberation federation )
தோற்றத்திலிருந்தே துவங்குகிறது

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் –
அதாவது 1910 களில் ஆங்கிலேயர் ஆட்சியில்
சமுதாயத்தின் பல துறைகளிலும் பிராம்மணர்களின்
ஆதிக்கம் பெருத்தோங்கி இருந்தது.

நீதித்துறை, கல்வி, அரசாங்க நிர்வாகப் பிரிவுகள்,
பத்திரிக்கைகள் என்று அனைத்து துறைகளிலும்
பிராம்மணர்கள் நிறைந்து காணப்பட்டனர்.
பிராம்மணர்களின் செல்வாக்கு
உச்ச கட்டத்தில் இருந்த அந்த காலகட்டத்தில் –

– தகுதியும், திறமையும் இருந்தும்
வாய்ப்புகள் கிடைக்கப் பெறாத,
பண வசதி படைத்த, செல்வந்தர்கள்
சிலரின் சிந்தனையில் –

பிராம்மணர்கள் அரசு அமைப்புகளில் இருக்கும் வரை
சமுதாயத்தில் மற்ற சமூகத்தினரால் வாய்ப்பு பெறவே
இயலாது என்ற கருத்து தோன்றி மெல்ல மெல்ல
வலுப்பெற ஆரம்பித்தது.

இதன் விளைவே பிராம்மணர் அல்லாதோருக்காக
துவக்கப்பட்டது – நீதிக்கட்சி. ( ஜஸ்டிஸ் கட்சி )

1916 -ல் இதைத் துவக்கியவர்களில்
முக்கியமானவர்கள் டாக்டர் டி.எம்.நாயர்,
ஸர் பிட்டி தியாகராசர் ஆகியோர்.
( துவக்கத்தில் ஜஸ்டிஸ் கட்சியில்,
ஈ.வே.ரா. அவர்கள் இல்லை…!!!)


(        டாக்டர்  டி.எம்.நாயர் )

( சர் பி.தியாகராயசெட்டி என்னும் பிட்டி தியாகராயர் (1852-1925 )
ஒரு தொழிலதிபராகவும், அரசியல்வாதியாகவும் செயல்பட்டார்.
சென்னையின் இன்றைய தி.நகர் என்னும் தியாகராய நகர்,
1925-ல் இவர் காலமானபோது, இவர் பெயரிலேயே உருவானது.
1920-களில் இவர் சென்னை மேயராகவும் பதவி வகித்தார். )

( 1920 -ல் ஜஸ்டிஸ் கட்சி விழாவில் ..)

துவக்கத்தில் இது செல்வந்தர்களின் கட்சியாகவும் –
அதன் முக்கிய நோக்கம் –
பிராம்மணர் ஆதிக்கம் இல்லாத ஒரு சமுதாயத்தை
உருவாக்குவதாகவும் இருந்தது.

இதன் காரணமாக பிராம்மணர் அல்லாதோரிடையே
இந்த கட்சி மெல்ல மெல்ல
செல்வாக்கு பெறவும் துவங்கியது.

மற்றோரு பக்கம் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு
கொண்டு சமுதாயப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்
பெரியார் ஈவேரா அவர்கள்.
(அப்போது அவர் திரு.ராமசாமி நாயக்கர்
என்றழைக்கப்பட்டு வந்தார்…)


( ஜஸ்டிஸ் கட்சியில் பெரியார் ஈ.வே.ரா. சேர்ந்த பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் )

அன்றைய நாட்களில் –
அரசியலை விட – சமுதாய சீர்திருத்தமே முக்கியம்
என்று நினைத்த பெரியார் ஈவேரா அவர்கள்
தன் கொள்கைகளுக்கு ஏற்ற இயக்கம்
காங்கிரஸ் அல்ல என்ற முடிவுக்கு வந்தார்.

தன் கொள்கைகளுக்காக உழைக்க –
1925-ல் சுய மரியாதை இயக்கத்தை துவக்கினார்.

சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு மனம்
பொங்கினார் பெரியார்….

தீண்டாமைக் கொடுமை ஒழிய வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்கள் சம உரிமை பெற வேண்டும்.
மக்களிடையே ஏற்றத்தாழ்வு கூடாது.
ஆணும் பெண்ணும் சரி சமம்.

ஜாதிவேறுபாடுகள் இருக்கும் வரை இது
சாத்தியமில்லை. எனவே – ஜாதிகள்
ஒழிய வேண்டும்.

அவற்றை வளர்க்கும் –
மதங்களும், கடவுள் நம்பிக்கைகளும்
ஒழிக்கப்பட வேண்டும். மூட நம்பிக்கைகள்
தகர்க்கப்பட வேண்டும்.

தர்மத்தின் பெயராலும், கர்மத்தின் பெயராலும்
இழைக்கப்படும் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும்.
மக்கள் சுயமரியாதையுடன் வாழ வேன்டும்.

ஒவ்வொரு மனிதனும்
காரணம் புரிந்து செயல்பட வேண்டும்.
யாரும் யாருக்கும் அடிபணியத் தேவை இல்லை –

– என்பன அவரது அப்போதைய முக்கிய குறிக்கோள்கள்.

சுமார் 95 வருடங்களுக்கு முன்னர் நமது சமுதாயத்தில்
இத்தகைய கருத்துக்களை யோசிக்கவோ,
வெளிப்படையாகச் சொல்லவோ
யாருக்கும் துணிச்சல் இருந்ததில்லை !

பெரியார் ஈ.வே.ரா. அவர்களுக்கு
அந்த தைரியம் இருந்தது.
பெரியார் ஒரு அற்புதமான சிந்தனையாளர் !
தைரியமான சமூக சீர்திருத்தவாதி.

பெரியார் ஈ.வே.ரா. அவர்களின்
அந்தக்கால புகைப்படங்கள் சில –


( பெரியார்  ஈ.வே.ரா. தனது முதல் மனைவி நாகம்மையாருடன்…)

.
———————————————————-
தொடர்ந்து அடுத்த பகுதி(2)யில் சந்திப்போம்..

.
————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to உருமாறிய திராவிட இயக்கமும் – இன்றைய அரசியலும் … (பகுதி-1)

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  மகாத்மாவை திட்டுனா கோவப்படுகிற காலத்திலிருந்து
  மகாத்மாவை கொன்னவனை திட்டுனா கோவப்படுகிற காலத்துக்கு நாம் மாறியாச்சு!

  ராஜிவ்-ஐ கொன்னவர்களை தண்டிக்க போராடிய காலம் போய் ராஜிவ்-ஐ கொன்னவர்களை விடுவிக்க போராடும் காலத்துக்கு மாறியாச்சு!

  எனவே நாள்பட எல்லாமே மாறிவிடும் என்பதுதான் விதி!

 2. KANDASAMY சொல்கிறார்:

  ஜாதிகள்
  ஒழிய வேண்டும்.

  அவற்றை வளர்க்கும் –
  மதங்களும், கடவுள் நம்பிக்கைகளும்
  ஒழிக்கப்பட வேண்டும்.—– This point should be understood b many people…Thanks for mentioning this sir…
  2. சுமார் 95 வருடங்களுக்கு முன்னர் நமது சமுதாயத்தில்
  இத்தகைய கருத்துக்களை யோசிக்கவோ,
  வெளிப்படையாகச் சொல்லவோ
  யாருக்கும் துணிச்சல் இருந்ததில்லை —- Vallalar has openly criticized this discrimination based on varna system —“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளையாட்டு”

  “”சாதியும், மதமும், சமயமும் பொய் ”

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   கந்தசுவாமி,

   இந்த இடுகையில் நான் பெரும்பாலும் வரலாற்றைத்தான்
   சொல்லி வருகிறேன்… இங்கு கூறப்பட்டிருப்பவை
   வரலாறு குறித்த விவரங்கள்..

   இந்த கருத்துகளில் எனக்கு முற்றிலும்
   உடன்பாடு உண்டு என்று தவறாக நினைத்து விடக்கூடாது.

   பெரியாரின் சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு…
   ஆனால், அனைத்திலும் அல்ல…

   பிற்பாடு உரிய இடங்களில் நான் அவற்றை விளக்குவேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Pingback: (பகுதி-2 ) உருமாறிய திராவிட இயக்கமும் – இன்றைய அரசியலும் .. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s