ஒரு சுவாரஸ்யமான சீன வீடியோ …..அண்மையில், தெற்கு சீன செய்தி நிறுவனத்தில்
வெளியாகியிருந்த ஒரு வீடியோவை ஹிந்துஸ்தான் டைம்ஸ்
நிறுவனம் மறுபடியும் எடுத்து, நம்ம ஊர்
மக்களுக்காக வெளியிட்டிருந்தது …..

தென் சீனாவில் உள்ள Xiguan Primary School-ல்
தினமும் காலையில் பள்ளி செயல்படத்துவங்கும் முன்னர் –
சிறுவர்களை சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும் இசை-நடனம்
ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார் அந்த பள்ளியின்
தலைமை ஆசிரியர்….

பசங்களுடன் சேர்ந்து, அவரும் கூடவே
ஆடுவது தான் இதில் விசேஷம்…!!!
அதைத்தொடர்ந்து பல சீனப்பள்ளிகளில்
இதை செய்யத் துவங்கி இருக்கிறார்களாம்.

நண்பர்களும் கண்டு ரசிக்க –
அந்த வீடியோவை – கீழே பதிந்திருக்கிறேன்.

.
————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஒரு சுவாரஸ்யமான சீன வீடியோ …..

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! அந்த காலங்களில் பள்ளிகளில் ” டிரில் பீரியட் ” என்று ஒன்று இருக்கும் அதற்கு டிரில் மாஸ்டர் என்பவர் ஆசிரியராக இருப்பார் .. மாணவர்களுக்கு வயதுக்கேற்ப உடற்பயிற்சிகளை அளிப்பது மற்றும் விளையாட்டுகளை சொல்லித்தருவது போன்றவை கற்பிக்கப்பட்டது — இப்போதும் இதுக்கு என்று நேரம் ஒதுக்கியிருந்தாலும் –உடற்கல்வி பாடவேளையும் சிறப்பு வகுப்பாக மாற்றி விட்டார்கள் என்பது தான் வேதனையான விஷயம் …! மாணவர்கள் சுறுசுறுப்பு குறைந்து, புத்துணர்ச்சி இழந்து வருகின்றனர். மதிப்பெண் பெறும் இயந்திரமாக மாணவர்களை மாற்றிவிட்டார்கள் என்று தான் கூறவேண்டும் …

  இதை சுட்டிக்காட்ட பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்பு நடத்த வலியுறுத்தி இந்திய குழந்தை மருத்துவர் சங்க மாநாட்டில்
  13th August 2018 அன்று திருச்சியில் { உங்கள் ஊரில் } நடந்ததில் வலியுறுத்தப்பட்டது … !! என்ன பிரயோஜனம் — செவிடன் காதில் ஊதிய சங்கு என்பதைப்போல தான் தற்போதும் உள்ளது —

  எனவே மேலே இடுகையில் உள்ளதைப்போல வகுப்புகள் தொடங்குவதற்கு முன் ” யாராவது புண்ணியவான்கள் ” செய்தார்கள் என்றால் தான் உண்டு …!!!

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  செல்வராஜன்,

  ஆமாம். எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது….

  நான் பள்ளியில் படிக்கும் நாட்களிலெல்லாம்,
  காலையில் பள்ளி துவங்கும்போதே, முதலில் 5 நிமிடம்
  பிரார்த்தனையும் அதன் பிறகு 10-15 நிமிடங்களுக்கு
  “ட்ரில்” பீரியடும் இருக்கும். கை,கால்களை தூக்கி, விரித்து, மடக்கி,
  கொஞ்சம் ஓடி – எல்லாம் செய்து உடலை fitness செய்துகொண்டு –
  மனதையும், உடலையும் தயார் செய்துகொண்டு தான்
  மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைவோம்…

  இந்தக்கால கல்வி “நிபுணர்”கள் – இதை எப்படி புறக்கணிக்க
  ஒப்புக்கொள்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! // கல்வி “நிபுணர்”கள் // காசு பார்க்கும் நிபுணர்கள் ஆகிவிட்டார்களோ …?

  ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தளத்தில் வந்த ஒரு இடுகை :– ..

  // தமிழ்த் தொலைக் காட்சிகளில் …
  Posted on பிப்ரவரி 8, 2010 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2010/02/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-2/ … இதில் // கிரிக்கெட்டைத்தவிர்த்து மற்ற
  விளையாட்டுகளையும், உடற்பயிற்சி முறைகளையும்
  சொல்லித்தரக்கூடிய, அவற்றில்
  ஆர்வத்தை உண்டு பண்ணக்கூடிய நிகழ்வுகள் –

  இப்படி சமுதாயத்திற்கு எவ்வளவோ உபயோகமாக
  இருக்க வேண்டிய ஒரு சாதனம் –

  சமுதாயச் சீர்கேடுகளை உண்டு பண்ணும்,
  ஊக்குவிக்கும் ஒரு அருவருப்பான, ஆபாசமான
  ஊடகமாக பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கின்றதே !

  இதனை மாற்றும் திறன் கொண்டவர்கள்
  யாராவது வருவார்களா ? // ….. என்று கடைசியாக கேட்டு இருப்பீர்கள் … அந்த கேள்வி அப்படியே இருக்கிறது — யாரும் வந்ததாக தெரியவில்லை …! தமிழ்த் தொலைக் காட்சிகள் மாறவில்லை இன்றளவும் — அவசியமான ஒரு இடுகை இன்றைய காலத்திற்கும் — இப்போதைக்கும் … !!!

 4. அறிவழகு சொல்கிறார்:

  குகையில் தியானம்.

  சாமானியனான நம்மால் அவ்ளோ செலவு தாங்காது. சும்மா வீட்டில் தனியாக ஒரு அறையில் இருந்தால் போதும் நமக்கு.

  எதற்கும் ஒரு கொடுப்பினை வேணுமில்லையா….!

 5. கோடிக்கணக்கான தேசபக்தர்களில் ஒருவன் சொல்கிறார்:

  அந்த குகை எப்படி தயாரானது தெரியுமா ?

  சென்ற வருடம் தலைவர் பயணம் சென்றபோது, அவரே ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்து, இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, உத்தராகண்ட் அரசுக்கு ஆர்டர் கொடுத்து உருவாக்கப்பட்டது.
  அந்த குகைக்கு ஜன்னல், கதவு எல்லாம் உண்டு. 15 க்கு 10 அடி அறை,
  உள்ளேயே warmer AC, சுடுநீர் வசதி, டாய்லெட், பாத்ரூம் எல்லாம் உண்டு.
  உள்ளே தொலைபேசியும், இண்டர்னெட் கனெக்ஷனும் உண்டு.
  2 மாதங்களுக்கு முன்னர் ரெடியாகி விட்டது. தலைவர் வரும்வரை பூட்டி
  வைக்கப்பட்டிருந்தது.
  அனுபவி ராஜா அனுபவி.

 6. Selvarajan சொல்கிறார்:

  தியான குகை பற்றி விவரங்கள் … அட சிவமே …! // மோடியின் தியானம்- குகையே இல்லையாம்.. அரசின் குகை மாடல் ஹெஸ்ட் ஹவுஸாம்.. வாடகை ரூ. 990 //

  Read more at: https://tamil.oneindia.com/news/india/modi-s-cave-comes-with-phone-bed-rented-for-rs990-350919.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s