திருவாளர் திருமா கண்டுபிடித்த புதிய ஃபார்முலா….!!!கமலுக்கு கிடைத்த திடீர் ” புகழ் ” -அரசியல்வாதிகள்
பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

ஒரே ஒரு வார்த்தையை சொல்லி விட்டு
இவ்வளவு “புகழ்” பெற இப்படி ஒரு ஃபார்முலா
இருப்பது இத்தனக்காலம் தெரியாமல் போய் விட்டதே…
என்று ..

விளைவு –

சாதாரணமாக நன்றாக, தெளிவாகப் பேசக்கூடியவர்
திரு.தொல்.திருமாவளவன்.

அவர் இப்போது பேராசிரியராக மாறி
சில சொற்களுக்கு பதவுரை+பொழிப்புரை
விளக்கங்கள் தந்திருக்கிறார்….

—————————-

“காந்தி ஒரு எக்ஸ்ட்ரீமிஸ்ட்.. ”
“கோட்சே ஒரு டெர்ரரிஸ்ட்.. ”

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியொன்றில் …
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் –
டெர்ரரிஸ்ட், எக்ஸ்ட்ரீமிஸ்ட், பயங்கரவாதி
ஆகிய சொற்களுக்கு விளக்கங்கள் கொடுத்துள்ளார்…

தேசத்தந்தை மகாத்மா காந்தி
ஒரு “தீவிர இந்து”.. “எக்ஸ்ட்ரீமிஸ்ட்”..

( திருமா சொல்வதை நம்ப வேண்டுமானால்,
காந்திஜி இந்துக்களுக்கு விரோதமாகவும், முஸ்லிம்களுக்கு
ஆதரவாகவும் செயல்பட்டார் என்று கூறியே கோட்சே அவரை
சுட்டுக் கொன்றார் – என்பதை நாம் இங்கு
எல்லாரும் மறந்து விட வேண்டும்…!!!

ஒரு தீவிர இந்துவை, இன்னொரு இந்து தீவிரவாதி
ஏன் சுட்டுக்கொல்லப்போகிறார்…??? )

இத்தோடு விட்டாரா தொல்.திருமா….?

மகாத்மா காந்தி இந்து மதத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர்…
மூச்சுக்கு 300 முறை ஹேராம் என உச்சரிப்பவர்.
கர்மவினை, முற்பிறவி ஆகியவை மீது
நம்பிக்கை கொண்டவர் காந்தி.
கர்மவினைகள் மீது நம்பிக்கை கொண்ட யாராக இருந்தாலும்
தீவிரவாதிகள்தான். காந்தியைப் பொறுத்தவரையில்
அவர் ஒரு எக்ஸ்ட்ரீமிஸ்ட்..
அதாவது இந்து தீவிரவாதி.

( அதாவது காந்தி ஒரு தீவிர இந்து…அதாவது இந்து தீவிரவாதி…
கோட்சே ஒரு இந்து தீவிரவாதி… 🙂 🙂 🙂 )

எதாவது புரிகிறதா…?

—————–

( ஆக, பேராசிரியர் தொல்.திருமாவளவன் அவர்களின்
பதவுரை, பொழிப்புரை – விளக்கங்களின்படி
கர்மவினைகளின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரையும்
அவர் எக்ஸ்ட்ரீமிஸ்ட் என்று வகைப்படுத்தி இருக்கிறார்…!!!
திருமாவின் ஃபார்முலாபடி,
கர்மவினைகள் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருந்த
திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் கூட
தீவிரவாதி பட்டத்திலிருந்து தப்ப முடியாது. )

எத்தகைய கண்டுபிடிப்பு… உடம்பெல்லாம் புல்லரிக்கிறது இந்த
புதிய விளக்கத்தைக் கேட்டு….

காந்திஜி ஒவ்வொரு பிரார்த்தனை கூட்டத்திலும் தானும் பாடி,
அதில் கலந்து கொண்ட மக்களையும் பாட வைத்த
“ஈஸ்வர அல்லா தேரே நாம்…”
(ஈஸ்வரனும் நீயே – அல்லாவும் நீயே ..இரண்டும் உனது பெயரே…)

– என்கிற வார்த்தைக்கும் தொல்.திருமா அவர்கள்
பதவுரை+பொழிப்புரை வழங்கினால் –

அந்த வார்த்தையை உச்சரித்தவர்கள், உச்சரிப்பவர்கள்
(அதாவது, அனைத்து மதங்களும் ஒன்றே என்று சொல்பவர்கள்…)
என்ன ” ரிஸ்ட் ” என்று தெரிந்துகொள்ள
உதவியாக இருக்கும்….!!! )

——————-

டெர்ரரிஸ்ட் கோட்சே தீவிரவாதி என்றால் –
தனது கொள்கையில் தீவிரமாக இருப்பவர் என்று அர்த்தம்.

—————-
(அந்த கொள்கை காரணமாக அவர் ஒருவரை கொலை செய்தால்
அப்போது அவர் என்ன “ரிஸ்ட்” என்பதையும் திருவாளர் திருமா.
பதவுரை+பொழிப்புரை தந்து விளக்கினால் நம்மைப்போன்ற
அறிவிலிகள் கொஞ்சம் ஞானம் பெறலாம் …….)

——————

கமலை ஆதரித்தது ஏன்…?
கமல்ஹாசனுக்கும் நமக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு
இருந்தாலும் சனாதான எதிர்ப்பு அடிப்படையில்
அவரது கருத்தை ஆதரித்தேன்.

கோட்சேவை ஒரு தீவிரவாதி என கமல் சொல்லியிருக்கக் கூடாது;
பயங்கரவாதி என குறிப்பிட்டிருக்க வேண்டும்….
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
( குழப்பவாதி கமலையே மிஞ்சிய திருமா…. 🙂 🙂 🙂 )

( https://tamil.oneindia.com/news/chennai/extremist-gandhi-terrorist-godse-says-thirumavalavan-350868.html )

————————————

பின் குறிப்பு – இந்த பதவுரை+பொழிப்புரைகளின் மூலம் –
கமல் கட்சியில் இணைந்து செயல்பட,
அல்லது அவரோடு கூட்டணி வைத்து செயல்பட,
திரு.திருமாவளவன் அவர்களுக்கு அனைத்து தகுதிகளும்
வந்து விட்டதாகத் தெரிகிறது.

அடுத்து வரும் தேர்தலில்,
இருவரும் இணைந்து
தமிழகத்தை ஒரு கலக்கு கலக்குவார்கள்
என்று நம்புவோமாக…. !!!

——————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திருவாளர் திருமா கண்டுபிடித்த புதிய ஃபார்முலா….!!!

 1. Rehim சொல்கிறார்:

  வழக்கம்போல மர மண்டையாக உளறி கொட்டியுள்ளார் உலக நாயகன் கமல். கோட்ஸே இந்து தீவிரவாதியாம். வரலாறு தெரியவில்லை. கோட்ஸேவை தீவிரவாதியாக்கியது மதமல்ல. மதத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்திய இயக்கங்களே. அதே இயக்கங்களே இன்றைக்கும் சாத்வி போன்ற தீவிரவாதிகளை பயன்படுத்துகின்றன. தீவிரவாதத்துக்கு எந்த மதமுமில்லை. மனித விரோத இயக்கங்களே காரணம். இந்த உண்மையை பேச கமலுக்கு முதுகெலும்பு இல்லை. கோட்ஸேவை இந்துக்களுடன் சம்பந்தப்படுத்தி அவர்களை புண்படுத்திய கமலுக்கு கண்டனங்கள்.

 2. Rajagopalan சொல்கிறார்:

  நீங்கள் சோவின் சீடர் என்பதை புரிய வைத்து விட்டீர்கள். 🙂

 3. Selvarajan சொல்கிறார்:

  // அதெப்படி காந்தியை தீவிரவாதின்னு சொல்லலாம்? திருமாவளவன் மீது சி.பி.எம் அருணன் பாய்ச்சல் //

  Read more at: https://tamil.oneindia.com/news/chennai/cpm-condemns-thirumvalavan-remarks-on-gandhi-350889.html … மற்ற கட்சிக்காரர்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது எதனால் …?

 4. bandhu சொல்கிறார்:

  தடாலடியாக பேசினால் கூட மவுசு கூடும் என்று இப்போது புதிதாக கண்டுகொண்டுவிட்டார்கள். இன்னும் என்ன என்ன சொல்லப்போகிறார்களோ?

  தலை சுத்துகிறது!

 5. Siva Sankaran சொல்கிறார்:

  இந்த தடாலடி பேச்சுக்கு திடீர் புகழ் தான் காரணமா ! இருக்கும்.

  //அந்த கொள்கை காரணமாக அவர் ஒருவரை கொலை செய்தால்
  அப்போது அவர் என்ன “ரிஸ்ட்” // பயங்கரவாதி terrorist என்று திருமா சொல்லிவிட்டாரே.

  Out of this context என்னுடைய பொதுவான கருத்து: தமிழில் நாம் terrorism என்பதற்கு பயங்கரவாதம் என்றே பயன்படுத்த வேண்டும் . தீவிரவாதம் என்ற சொல்லை நாம் குழப்பி வைத்திருக்கிறோம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.