எந்த அளவிற்கு நம்பலாம்…தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை….???


முக்கிய தொலைக்காட்சிகள் காட்டத் தவறிய
சில கருத்து கணிப்புகளும் இருக்கின்றன…

கீழே ஒட்டுமொத்தமாக சில சுருக்கங்களை தந்திருக்கிறேன் –
——————-

கவனிக்கத்தகுந்த ஒரு விஷயம்….
இந்த இரு கருத்துகணிப்புகளுக்கு இடையே இவ்வளவு வேறுபாடுகள் ஏன்…?
இவற்றில் எதை ஏற்கலாம்…
எதை ஏற்கக்கூடாது…?
ஏன்….?

——————————————-

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புளை
எந்த அளவுக்கு நம்பலாம்…? என்பது குறித்து
பிபிசி செய்தித் தளத்திற்கு ஒரு மூத்த பத்திரிகையாளர்
கூறிய சில கருத்துளிலிருந்து –

————-

2004 காலக்கட்டம், பிரக்ஸிட், ஆஸ்திரேலிய தேர்தல் தொடர்பான
கருத்துக் கணிப்புகளே பொய்க்கும் போது, இந்தியா
போன்ற நாடுகளில் இந்த கருத்து கணிப்புகள் சரியாக
இருக்குமா? என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.

அதற்கு காரணம் என்னவென்றால் வாக்கு சதவீதத்தை
கணிக்கும் அளவு – அது சீட்டாக மாறுமா …?
என்கிற விஷயத்தில் குழப்பம் இருக்கிறது.

முந்தைய கருத்துக்கணிப்புகளும் பொய்த்துள்ளன.
தெலுகு தேசத்தின் வெற்றியை கருத்துகணிப்புகள் கணிக்கவில்லை.
2004ம் ஆண்டு வாஜ்பாயின் தோல்வியை கணிக்கவில்லை.

அதனால் ஒரு அளவுக்கு மேல் கருத்துக் கணிப்புகள் குறித்து
ஓர் ஊடகவியலாளர் கவலை கொள்ள தேவையில்லை ….

மேலும் “2004ம் ஆண்டு தேர்தல் கணிப்புகள் பொய்த்திருக்கின்றன
தானே? ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கோஷத்தை பா.ஜ.க
முன் வைத்த போது, பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் சரியாக
பா.ஜ.கவின் தோல்வியை கணிக்கவில்லை” என்கிறார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நம்பத்தகுந்தவையா…?

2016 (சட்டமன்ற தேர்தல்) காலக்கட்டத்தில் திமுகவுக்கு சாதகமான
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்தன.
(ஆனால் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக இருந்தன…)

2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், “ஒரே மாநிலத்தில் வெவ்வேறு
பகுதியை சேர்ந்தவர்களின் மனநிலை மாறியது. அதுவரை
தமிழகமெங்கும் ஒரே மாதிரியாக வாக்களித்தவர்கள், இந்த
தேர்தலில் வேறு மாதிரியாக வாக்களித்தார்கள்.
மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் ஒரு கட்சிக்கு
வாக்களித்தார்கள். இதை எல்லாம் கருத்து கணிப்புகள்
உள்வாங்குகின்றனவா …?” என்று அவர்
கேள்வி எழுப்புகிறார்.

மக்களின் கணக்குகள் வேறாக உள்ளன.
எந்த பத்திரிகை கேகிறது என்பதை கருத்தில் கொண்டு –
பத்திரிகைகளின் கொள்கைகளுக்கு ஏற்றவாறு அவர்கள்
அந்த பத்திரிகையிடம் தங்கள் கருத்துகளை கூறுகிறார்கள்.

அதாவது, வலதுசாரி சிந்தனையுடைய பத்திரிகை
மக்களை அணுகும் போது அவர்களுக்கு ஏற்றவாரும்,

மதசார்பின்மை சிந்தனையுடைய பத்திரிகை
மக்களை அணுகும் போது அவர்களுக்கு ஏற்றவாரும்
கருத்துகளை கூறுகிறார்கள்.
இதனை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
சூழல் இப்படியாக இருக்கும் போது
கருத்துக்கணிப்புகளை எந்த அளவுக்கு நம்ப முடியும் ..?

வாக்களிப்பதை மட்டும் ரகசியமாக
மக்கள் வைத்து கொள்வதில்லை.
யாருக்கு வாக்களித்தோம் என்பதையும்
ரகசியமாக வைத்து கொள்கிறார்கள் என்கிறார் அவர்.

————————————————–

பின் குறிப்பு –

இது என்னுடைய கருத்து –

அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவை தோற்கடிப்பது
அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல.

எதிர்க்கட்சிகள் அனைத்தும், தேர்தலுக்கு முன்னரே
கூட்டணி அமைத்து முனைந்திருந்தால்,
ஒருவேளை அது சாத்தியமாகி இருக்கக்கூடும்…

அத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைக்காமல்,
தனிப்பட்ட ஈகோவிற்கு பலியானவர்களுக்கு
கிடைத்த பரிசு தான் – இந்த தேர்தலில் அவர்களுக்குக்
கிடைத்திருக்கும் தோல்வி.

பாஜகவின் பலம் இன்னமும் கொஞ்சம் குறைந்து,
தனிப்பட்ட மெஜாரிடி கிடைக்காமல் –
கூட்டணி கட்சிகளின் தயவோடு மீண்டும் ஆட்சியை
பிடிக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன்.

ஆனால், எல்லாமே யூகத்தின் அடிப்படை தான்.
நிஜமான முடிவுகளுக்கு 23-ந்தேதி வரை
காத்திருக்க வேண்டியது தான்.

.
————————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to எந்த அளவிற்கு நம்பலாம்…தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை….???

 1. ஞான சூனியம் சொல்கிறார்:

  இதுவரை பிஜேபி ஆட்சியில் மக்கள் ஏழைகளாக மாற்றப்பட்டார்கள் என்று அலறி கொண்டு மக்களை நம்ப வைத்தோம். ஆனால் இப்பொழுது பிஜேபி அசுர பலத்துடன் உள்ளதாக மாறி உளறுகிறீர்கள். so எது உண்மை.
  முன்னது உளறியது அனைத்தும் பொய்யோ?

 2. Rajagopaloan சொல்கிறார்:

  ஞானசூன்யம் –
  உங்களுக்கு பொருத்தமான பெயரைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  கட்சி அசுர பலத்துடன் இருப்பதாக கூறியதற்கும்,
  மக்கள் ஏழைகளாக இருப்பதற்கும் என்னய்யா சம்பந்தம் ?
  ஆனால், இதற்கு பதில ஞானசூன்யத்திடம் எதிர்பார்ப்பது தவறு
  என்பது புரிகிறது.

  • ஞானசூன்யம் சொல்கிறார்:

   ஒருவேளை தாங்கள் இந்த தளத்திற்கு புதியவரோ?
   பிஜேபியின் தவறான கொளகைகளினால் தான் ந்த ஏழைகள் உருவானதாக பரப்புரை , பலமாக பரப்ப பட்டது இந்த தலத்தில் தானே.GDP,demonetization போன்ற நடவடிக்கைகள் பல கோடிக்கணக்கான ஏழைகளை உருவாக்கியுள்ளது.மற்றும் பல கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்து நாடு தெருவிற்கு வந்து விட்டார்கள் என்று நாம் தானே கூவினோம். அந்த பல கோடிக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து வோட்டு அளித்திருந்தால் இந்நேரம் bjp எப்படி இது போல அசுரர் பலம் பொருந்தியுள்ளது என்று வர்ணிக்க முடியும்.
   இந்த ஞான சூனியத்திற்கு தங்களை போன்ற அறிவு ஜீவிகள் விளக்கம் அளித்தால் உபயோகமாக இருக்கும்.

   • Rajagopaloan சொல்கிறார்:

    அய்யா ஞானசூன்யம்,

    இந்த தேர்தல் எந்த அடிப்படையை வைத்து நடந்தது ?

    பொருளாதார வளர்ச்சியின்மை,
    ஜிடிபியால் ஏற்பட்ட குளறுபடிகள்,
    விவசாயிகளின் வறுமை,
    பயிர் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை,
    டிமானடைசேஷன்,
    கருப்புப்பணம்,
    வங்கிகளில் கொள்ளையடித்து ஓடியவர்கள்,
    வேலை இல்லா திண்டாட்டம்
    – ஆகிய பிரச்சினைகளை ஆளும் கட்சியினர் எவராவது விவாதித்தார்களா ?

    மதம், மதம், மதம் – இது ஒன்றைத்தவிர
    வேறு என்ன முன்வைக்கப்பட்டது ?

    பாகிஸ்தானியர்களை வீடு புகுந்து அடிக்க என்னை விட்டால்
    யார் இருக்கிறார்கள். என் ராணுவம் என்ன செய்தது பாருங்கள் –
    இது தானே பிரச்சாரமாக இருந்தது ?
    மத உணர்ச்சிகளை பெரும்பாலான இந்துக்களிடம் தூண்டி விட்டு,
    அந்த வெறியை ஓட்டுகளாக மாற்றத்தானே முயற்சிகள் நடந்தன.

    பாஜகவுக்கு வெற்றி கிடைத்தால், அது மதவெறியை தூண்டி
    ஓட்டு பெறுவதில் அவர்களுக்கு வெற்றீ என்று தான் கொள்ள வேண்டும்.

    • Rajagopalan சொல்கிறார்:

     இப்போதும் கூட, தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பாருங்கள் –
     பெரும்பாலான மக்கள் பாஜகவுக்கு எதிராகத்தான் வாக்களிட்திருப்பார்கள்.
     எதிர்க்கட்சிகள் ஒன்று சேராததால், ஓட்டுகள் சிதறி, பாஜக வெற்றி பெறக்கூடும். அதனால் பெரும்பாலான மக்கள் அதை ஆத்ரிக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.

    • ஞானசூன்யம் சொல்கிறார்:

     நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக வர்ணிக்க பட்டவன் ஏன், மதத்திற்காக போராட போகிறான் அய்யா.
     தாங்கள் கூற்றை ஒருதடவை யோசித்து பார்க்கலாமே.
     நான் ஒருவேளை இந்த அரசாங்கத்தினால் நடு தெருவிற்கு கொண்டு வர பட்டிருந்தால், என் வயிறு காய்ந்து செத்து கொண்டிருக்கும் என் குழந்தைகளை , மனைவியையும் தினதோரும் பார்த்து கொண்டு வெந்து கொண்டிருக்கும் என்னை எவ்வாறு மதத்தின் பால் நீங்கள் திருப்ப முடியும்.
     சப்பை கட்டு கட்டுவது என்பது இதுதானோ.
     நீங்கள் கூறும் கூற்று உண்மையாக இருந்தால் பிஜேபி க்கு ஒரு ஓட்டு கூட விழா வாய்ப்பு இல்லை, என்று துணித்து கூற வேண்டியது தானே.அதை விட்டு விட்டு, மக்கள் மதத்தின் காரணமாக பிஜேபிக்கு ஒட்டு போடுகிறார்கள் என்று என் திடீரென்று சப்பை கட்டு கட்ட வேண்டிய அவசியம் என்ன.
     மதத்தின் பால் மக்கள் பற்று கொண்டவர்கள் என்றால், ஏன் இதற்க்கு முன் பிஜேபியினால் ஆட்சிக்கு வர முடிய வில்லை.
     அதே போல், அதே மதத்தின் காரணமாக இனிமேல் இன்னும் 60 வருடங்களுக்கு பிஜேபி தான் ஆட்சியில் இருக்கும் என்று கூறலாமா?

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே,

      ( நீங்கள் உங்களை அப்படி அழைத்துக்கொண்டாலும்,
      ஒருவரை ஞானசூன்யம் என்றழைக்க எனக்கு மனம் வரவில்லை…
      நீங்கள் நல்ல ஞானத்துடன் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்…)

      நீங்கள் நண்பர் ராஜகோபாலனுடன்
      செய்துகொண்டிருப்பதற்கு பெயர் தான் விதண்டாவாதம்.

      உங்களை இப்படி வாதம் செய்யவைப்பது தான்
      அந்த ” மதவாதம் ”

      போதை வசப்பட்டவர்களை பார்த்திருப்பீர்கள்.
      மதுவாக இருந்தாலும் சரி, மருந்தாக (DRUGS ) இருந்தாலும் சரி –
      மதவாதம் என்பது அபின் மாதிரி ஒரு போதைப்பொருள்.
      அதன் ஈர்ப்புக்குள் போனவர்களுக்கு வேறு எதைப்பற்றியும்
      எண்ணத் தோன்றாது. எந்த ஆலோசனையையும் அவர்கள்
      கேட்கும் நிலையில் இருக்க மாட்டார்கள்.

      நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த பணத்தை சாராயக்கடையில்
      கொடுத்து போதையை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வருபவனுக்கு –
      மனைவி, பிள்ளை குட்டிகளைப்பற்றிய கவலை எதாவது
      இருக்குமா…? அவர்கள் சாப்பிட்டார்களா, தூங்கினார்களா
      என்றெல்லாம் கவலைப்படுவானா…? காரணம்…?

      அவன் அவர்களை வெறுக்கவில்லை…
      ஆனாலும் அவர்களைப்பற்றி கவலைப்படவில்லை..
      காரணம் – அவன் “போதை” வசப்பட்டிருக்கிறான்.

      “மதவெறி” ஊட்டப்பட்டவர்கள் நிலையும் இதே தான்.
      அது வேறு ஒரு வகை போதை….
      வேறு எதுவும் அவர்களுக்கு முக்கியமாகத் தெரியாது.
      இதைப்பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம்
      இப்போதிருக்கிறவர்க்கு கைவந்த கலையாக இருக்கிறது.

      கடந்த காலத்தில் இருந்தவர்களுக்கு – இல்லை.
      எதிர்காலத்தில்…?
      காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

      தூங்குபவர்களைத்தான் எழுப்ப முடியும்..
      விழித்துக்கொண்டே கண்களை இறுக மூடிக்கொண்டு
      இருப்பவர்களை நாம் எழுப்ப முடியாது…
      அவர்களாகத்தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

      உங்கள் தலைவர் தான் ஜெயித்து விட்டாரே…
      பிறகென்ன…
      போய்க் கொண்டாடுங்கள் அந்த வைபவத்தை…!
      இங்கெதற்கு விதண்டாவாதம்…?

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  உத்திர பிரதேசத்தில் மட்டுமே
  எத்தனை வேறுபட்ட கருத்து கணிப்புமுடிவுகள் … !!!
  கீழே பாருங்கள் –

  சாணக்யா & – ஏபிபி-நீல்சன் – C -Voter
  இந்தியா டுடே,
  ஆக்சிஸ்
  ————————————————————————-

  பாஜக+ = 65 – – = 33 – = 38

  BSP&SP = 13 – = 45 – = 40

  இதில் எதை கருத்தில் கொள்வீர்கள்…?
  எதை விடுவீர்கள்…?
  எதை கணக்கில் கொண்டாலும், இறுதியான மொத்த முடிவுகளில்
  கணிசமான மாறுதல் ஏற்படும்….

  கருத்துக் கணப்பை ஏன் இறுதியானதாக எடுத்துக் கொள்ளக்கூடாது
  என்பதற்காக இந்த உதாரணத்தைச் சொல்லி இருக்கிறேன்.

 4. kandaswamy சொல்கிறார்:

  It is a fact that people suffered with wrong policies of bjp govt,, so bjp will loose more seats this time…dot.

 5. Sankar Raju சொல்கிறார்:

  ‘SUCCESS REQUIRES NO EXPLANATION;
  FAILURE PERMITS NO ALIBIS’
  – Napoleon Hill.
  Can’t you people wail till May 23rd?

 6. புதியவன் சொல்கிறார்:

  கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. நாம உண்மையை வெளிப்படையாக சொல்ல மாட்டோம். வெள்ளந்தி மனிதர்கள்தாம் உண்மை பேசுவர்.

  என்னுடைய -கருத்து கணிப்பு- பாஜக 200-210, திமுக 33-37+, உபில பாஜக 20- இடங்கள் ஆனால் பாஜக வாக்கு சதவிகிதம் குறிப்பிடும் அளவு குறையாதுன்னு நினைக்கறேன், வங்காளத்தில் பாஜக வாக்கு மிக அதிகமாகும் at the expense of communists.

  இந்தக் கணிப்பு தவறுனால் (பாஜக அதிகம் வாங்கினால்), மக்கள் நான் நினைப்பதுபோல் நினைக்கலை, அவங்க பாஜகவிடம் ஹேப்பி என்றுதான் புரிந்துகொள்வேன்.

  இதில் மதம் பிஸினெஸ் சொல்றவங்க wtong. What religious parties and their pray houses do என்பதை அறியாதவர்கள்

 7. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  பா ஜ க மிக பெரிய கட்சியாக வரும் .ஆனால் சீட் குறையக்கூடும் .

  சரியான எதிர்க்கட்சிகள் இல்லை என்பதே உண்மை .
  பா ஜ க ஊழல் செய்யாத கட்சி என்று பிரச்சாரம் செய்கிறார்கள் .
  கூடவே தங்களை தேசபக்தர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள் .

  தனியார்மயமாக்கல் என்று கொள்ளை நடக்கிறது .
  அரசிடம் பணம் இல்லை – எனவே அதை தனியார் நடத்தட்டும் .

  இதில் என்ன தவறு ?

  நெடுஞ்சாலைகள் போடுவது அரசு –
  கட்டணம் வசூலித்து பணம் பண்ணுவது வேண்டிய ஆட்கள் .
  மருத்துவமனை நடத்த பணம் இல்லை என்று சொல்லி
  அரசு மருத்துவமனையை தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள் .

  பஸ் ஸ்டாண்டும் இதற்கு தப்பவில்லை .பேருக்கு ஒரு பணம்
  வாங்கிக்கொண்டு ஒப்பந்தம் செய்கிறார்கள் .
  அடுத்த 60 வருடங்களுக்கு அவருக்கு பாத்தியதை .
  ரயில்வேயும் அப்படியே .

  ஸ்மார்ட் சிட்டி என்ற பெத்த பெயர் வேற .

  காஸ் /ஆயில் எடுப்பதற்கு தனியாரிடம் கொடுக்கிறார்கள் .
  குடி தண்ணீர் இனிமேல் காசு கொடுத்து வாங்க வேண்டும் .
  முனிசிபாலிடி தத்து கொடுக்கப்படும் .

  செய்துவிட்டு போய்விடுவார்கள் – விளைவு அடுத்த
  ஐந்து வருடத்தில் தெரிய வரும் .
  “நீங்க ஏன் முன்னாலேயே சொல்லலை ? ” என்ற
  விவாதமும் நடக்கும் .

 8. Prabu சொல்கிறார்:

  only BJP wining thro EVM

 9. Balu சொல்கிறார்:

  Poor boy

 10. Madhavan Sekhar சொல்கிறார்:

  The unsaid comment of most of us here is something like:: “Modi is not an extraordinary person; does not deserve to be the Prime Minister of this country with wiser, more intelligent, more sincere, more patriotic, more secular persons, abounding around us.” But the quirk of events has brought him to the pedestal. We are unable to digest the fact that he gets more votes than we think, he deserves or rather, we know that he deserves.

 11. A.T.Thiruvengadam சொல்கிறார்:

  Exit polls represent a percentage of voters who were willing to share their preferences.They are of different ages .diverse qualifications and different religious denomination.Of course the pollster has his own inclinations and can or may chose people who are similarly inclined.Religion has played or thought to play crucial role can understood when Rahul and his sister genuflecting before various leaders and prostrating in various temples.This election has achieved “Ghur Vapasi” by the c
  Ongress leaders.Thiruvengadam.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s