எப்படி பாஜகவுக்கு ஆதரவான கணிப்புகள் கிடைத்தன….? டாக்டர் சுமந்த் சி ராமன் அலசல்….


உ.பி., ம.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்
கருத்து கணிப்பு நடத்தப்பட்ட விதம் பற்றியும்,
அதில் பாஜகவுக்கான எண்ணிக்கை கூடியது எப்படி என்பது
பற்றியும் விவரமாக அலசுகிறார் சுமந்த் சி ராமன் –

இந்த கருத்து கணிப்பு விவரங்கள் சரியாக இருக்காது என்பதை
நாம் ஏற்கெனவே விவாதித்திருந்தோம்.

இருந்தாலும் ஏன் சரியாக இருந்திருக்காது என்பதை
சுமந்த் சி.ராமன் மூலம் கேட்பது இன்னும் கொஞ்சம்
சுவாரஸ்யத்தைக் கொடுக்கிறது.

இந்த அலசல்கள் மூலம் எல்லாம் பெட்டிக்குள் விழுந்த
வாக்குகள் மாறி விடாது, வரப்போகிற முடிவுகளை
மாற்றி விடாது என்பதை நாம் அறிவோம்.

இருந்தாலும் இங்கே இதை விவாதிப்பது
ஒரு தெளிவிற்காக…just Academic interest…!!!

.
————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to எப்படி பாஜகவுக்கு ஆதரவான கணிப்புகள் கிடைத்தன….? டாக்டர் சுமந்த் சி ராமன் அலசல்….

 1. Rehim சொல்கிறார்:

  என்ன நடக்கலாம் என்கிற என்னுடைய கணிப்பு:

  எக்ஸிட் போல் பொதுவாக டிரெண்டை underestimate அல்லது overestimate செய்யும். அதனால் உண்மை ரிசல்ட் ட்ரெண்டை அதிகப்படுத்தியோ அல்லது குறைத்தோ இருக்கும்.

  2014 இல் underestimate ஆக இருந்தது. இந்தமுறை ஓவர் எஸ்டிமேட் என்று நினைக்கிறன்.
  ஏனென்றால் ஆளும்கட்சி 2014 இல் கொடுத்த வாக்குறுதிகளில் மக்கள் பெரும்பாலும் ஏமாற்றமே அடைந்தனர். அதிலும் , கிராமப்புறம் , விவசாயிகள் , சிறு வியாபாரிகள் அமைதியை விரும்புபவர்கள் வெளிப்படையாகவே அதிருப்தியில் இருந்தனர். இவர்கள் ஒட்டு ஆளும்கட்சிக்கு விழ வாய்ப்பே இல்லை.

  மீடியாவில் என்ன மார்க்கெட்டிங் வந்தாலும் அதை உண்மை என்று நினைக்கிற கூட்டம் ஒன்று உருவாகி உள்ளது. இது வரலாற்றை அசல் ஆவணங்களில் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் whatsapp மூலமும் வெறுப்பு பிரச்சாரம் மூலமும் மட்டுமே படித்திருக்கும். பெரும்பாலும் மத்தியதர படித்த வர்க்கம். மொத்த ஓட்டில் இது ஒரு 25% இருக்கும். மத மற்றும் சாதி அபிமான ஓட்டுக்கள் ஒரு 10% இருக்கும். ஆக 35% ஆளும்கட்சிக்கு கிடைக்கலாம்.

  எனவே எக்ஸிட் போல் ஓவர் எஸ்டிமேட் செய்துள்ளது என்றே நினைக்கிறன். 10% முதல் 20% வரை overestimate செய்திருக்கலாம்.
  எக்ஸிட் போல் சராசரி 300 இடங்கள். அதனை 10% டு 20% கழித்து பார்த்தால் 240 லிருந்து 270 க்குள் கிடைக்கலாம்.

  • ஞானசூனியம் சொல்கிறார்:

   அது தான் க.மை ஐயா அவர்கள் மக்கள் மத வெறி பிடித்து பிஜேபியை ஆதரித்து வோட்டு போட்டு விட்டார்கள் என்று கூறி விட்டாரே. அப்பறம் என்ன வாக்குறுதியை நிறைவேற்றாததால் பிஜேபி தோற்று விடும் என்று கணிப்பு வேண்டி கிடக்கிறது.
   ஒரு வேலை தமிழகத்தில் DMK ஜெயிக்கும் பட்சத்தில் இதுவரை அது கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றியாகிவிட்டது என்று கருதி கொள்ளலாமோ?
   என்ன செய்வது அது உங்கள் ஆதங்கம்.
   ஒரு வேலை பிஜேபி ஜெயித்து விட்டால், நமக்கு இருக்கவே இருக்கிறது சப்பை கட்டுகள் (கள்ள வோட்டு, மதவெறி)

 2. D. Chandramouli சொல்கிறார்:

  The detailed presentation with enormous data recollection by Sumanth Raman is amazing.
  His memory power is astounding. He has grown into a super political data and analytical presenter at the national level, from once a quiz master on TV for cricket matches. Earlier, he used to speak too fast but now has considerably toned down his speed but cogently puts forth his case. Way to go, Mr Raman, proud of you..

 3. ஞானசூனியம் சொல்கிறார்:

  என்னை பொறுத்த வரைக்கும், எல்லாரும் கூறுவதை போன்று மக்களின் மதவெறியை பார்க்கும் பொழுது, நிச்சயம் இந்த exitpoll தீர்ப்பு நூறு சதவிகிதம் பொருந்தி வருகிறது. இது மிகவும் சரியாக இருக்கும் என்றே கருதுகிறேன்.இதில் நிச்சயம் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை.
  மேலும் இன்னொன்றையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் அடுத்த 65 வருடங்களுக்கு நிச்சயம் பிஜேபி ஆட்சி தான் .
  (உபயம் மக்களின் மத வெறி .)
  காங்கிரஸ் ஊரை காலி செய்து , இத்தாலிக்கு சென்று விடுவது நல்லது.

 4. bandhu சொல்கிறார்:

  Rahim சொல்வது போல் தான் நடக்கும் என நினைக்கிறேன் (விரும்புகிறேன்). அதன் படி மற்ற கட்சிகளின் ஆதரவுடன் பிஜேபி ஆட்சியை பிடிக்கும்! எதிர்க்கட்சியே இல்லாத நிலை நாட்டுக்கு நல்லதில்லை. எந்த கட்சியும் இனி தங்கள் ஆட்சி மட்டுமே என்று நிலையில் இயங்கக்கூடாது. இல்லாமல் போகலாம் என்ற possibility மட்டுமே நல்ல ஆட்சிக்கு வழி வகுக்கும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s