தேர்தல் முடிவுகள் ….


ஒளிவு மறைவாகச் சொல்ல விரும்பவில்லை…
முடிவுகள் நமக்கு ஏமாற்றம் தருகின்றன என்பது தான் உண்மை …

மக்கள் தீர்ப்பு – மகேசன் தீர்ப்பு என்றெல்லாம் சொல்லி
சமாதானப்படுத்த நான் தயாரில்லை.

நிஜத்திற்கும், பொய்க்குமான வித்தியாசத்தை, மக்களால்
புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் – அதன் விளைவுகளை
அனுபவித்து தான் கழிக்க வேண்டும்…
செய்கிற பாவத்தை – தண்டனை அனுபவித்து – கழிப்பது போல்…!

ஆனால், யாரோ செய்யும் தவறுகளின் விளைவு,
தப்பு செய்யாத தமிழக மக்களை மோசமாக பாதிக்கப்போகிறது.

ஏற்படக்கூடிய சில உடனடியான பாதிப்புகளைப்பற்றி
யோசித்தால் மிகவும் கவலையாக இருக்கிறது.

கோடை சுட்டெரிக்கிறது..
தமிழகம் முழுவதும் தண்ணீர்ப்பஞ்சம்..

விவசாயம் ஒரு பக்கம் இருக்கட்டும்…
தாகத்திற்கு குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல்
மக்கள் தவிக்கிறார்கள்…

இந்த தேர்தல் முடிவுகளின் விளைவாக,
நான்கே நாட்களுக்குள் கர்நாடகா அரசு கவிழும்…
பாஜகவின் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்பார்…

விரைவில் கர்நாடகாவில் சட்டமன்றத்திற்கு
தேர்தல் அறிவிப்பார்கள்…

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக…

உள்ளூரில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும்போது –
நமக்கு எப்படி தண்ணீர் விடுவார்கள்….?

காவிரியில் தண்ணீர் நமக்கு கனவாகவே இருக்கும்…
காவிரியின் எந்த கமிஷனையும் செயல்பட விட மாட்டார்கள்…

அவ்வளவு தானா….? அந்த வரக்கூடிய
துன்பங்களின் பட்டியலை
நினைத்தாலே பயமாக இருக்கிறது … இப்போது வேண்டாம்.

– இந்த முடிவுகளால், தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு
ஏற்படக்கூடிய பலவகையான துன்பங்களையும், அவமதிப்புகளையும்
தாங்கிக்கொள்ள மக்களுக்கு மன வலிமை கொடு என்று
இறையை வேண்டிக்கொள்கிறேன்…

—————————————————————–

பின் குறிப்பு –

இன்று காலையில் நான் பதிவிட்ட
“மனிதராக பிறந்து வந்த தெய்வம் …!!!”
என்கிற இடுகையில் பின்னூட்டத்தில் நண்பர் செல்வராஜன்
முந்தைய பதிவு ஒன்றை நினைவுபடுத்தி இருக்கிறார்….

அதிலிருந்து சில பகுதிகளை மட்டும் இந்த தருணத்தில் இங்கே
மீண்டும் பதிவுசெய்ய வேண்டும் என்று தோன்றியது….
கீழே –

———————————————————————


olai paai, palagai thalaiyanai, bootha kannaadi - kanchi munivar( படுத்திருப்பது ஓலைப்பாயில்,
மரப்பலகை தான் தலையணை,
சிறிய எழுத்துக்களைப் படிக்க பக்கத்தில் பூதக்கண்ணாடி-
நம்மால் கனவில் கூட காண முடியாத ஒரு எளிமை …

——

kanchi sage

காஞ்சி மாமுனிவர் ஒருமுறை சொன்னர் –
” மனுஷனாய் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல்
அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே…
எதற்காக?

தனது ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான்…!
வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை.

ஒன்று கிடைத்துவிட்டாலும் போதவில்லை.
அதனால் வருகிற சுகம் தீர்ந்துபோகிறது.
இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான்.
அவற்றைப் பெறவே அலைகிறான்.

இவனுக்குள்ளேயே ” இயல்பான உள் ஆனந்தம்”
என்கிற ஒன்று
மகா சமுத்திரம் மாதிரி நிறைந்திருப்பதை அவனால்
உணற முடிவதில்லை.

பதவி, பணம், கௌரவம், பப்ளிசிட்டி என்று
வெளியிலிருந்து தான் நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக
எண்ணிக்கொண்டு ஓயாமல் அதற்காக பிரயத்தனம் செய்வது,
எப்படி இருக்கிறது என்றால் –
அத்தனையும் சமுத்திரமாக இருக்கிற நாம் அதையறியாமல்
ஒரு சொட்டு ஜலத்துக்காகத் தவிக்கிற மாதிரிதான்”

சத்தியமான வார்த்தை …!

ஆனால் இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள்
மனசாட்சியே இல்லாமல், இப்படி அலைகிறார்களே…
இறுதியில் இவர்கள் கொண்டு போகப்போவது தான் என்ன ..?

————————-

……………………..

மீண்டும் மீண்டும் தேர்தல்கள் வரலாம் தான் … ஆனால்….?
இவர்களில் யாராவது தானே மீண்டும் வருவார்கள்…?

நமது இன்றைய அரசியல் அவலம்
மாற வேண்டுமானால் –
முற்றிலும் புதியவர்கள்,
இன்று இருப்பவர்களின் மூச்சுக்காற்று கூட
தங்கள் மீது படாத புதியவர்கள் –
வர வேண்டும்….
இல்லையேல் –
நமக்கு விடிவேதும் இருப்பதாக தோன்றவில்லை…

” இன்றில்லா விட்டாலும் –
நாளையாவது மாறும் அல்லவா ? ”

– என்கிற நம் கனவு, நனவாக
அந்த இறை நமக்கு துணை நிற்கும் என்று நம்புவோம்…!!!

.
———————————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to தேர்தல் முடிவுகள் ….

 1. புதியவன் சொல்கிறார்:

  //யாரோ செய்யும் தவறுகளின் விளைவு, தப்பு செய்யாத தமிழக மக்களை மோசமாக பாதிக்கப்போகிறது //

  என்ன ஆயிற்று உங்கள் விமர்சனத்தில்? ‘தப்பு செய்யாத தமிழக மக்கள்’ – இதை நீங்கள் நம்புகிறீர்களா? நாம் நினைத்த கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் எல்லாரும் ‘தவறு செய்தவர்களா’? தமிழகத்தின் அதிமுக பாராளுமன்றக் கனவு கலைந்ததற்கு முழுவதும் திமுக+காங்கிரஸ் கூட்டணி பக்கம் சாய்ந்த கிறிஸ்துவ, இஸ்லாமிய வாக்குகள் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? அதுவும் தவிர, வலிமையான தலைமை அதிமுகவுக்கு இல்லாததால், எதிர்கட்சிக்கு வாக்களித்த அதிமுக தொண்டர்கள் என்பதும் தெளிவாகத் தெரியலையா? பாஜகவுடன் சேராமல் இருந்திருந்தால் அதிமுக இன்னும் நிறைய இடங்களைப் பெற்றிருக்கும். அவர்கள் இழந்தது, அவர்களுக்கு என்று இருந்த இஸ்லாமிய, கிறிஸ்துவ வாக்குகளின் பெரும் பகுதி.

  சாதியைக் கடந்து வடமாநில மக்கள் வாக்களித்திருக்கிறார்களா? மேற்குவங்கத்தைப் போல, தங்களுக்கு பாஜக, திருனமுல் காங்கிரஸை தோற்கடிக்க வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்த கம்யூனிஸ்ட் கேடரர்களுடைய வாக்கு பாஜகவுக்கு ஷிஃப்ட் ஆனதா? இல்லை, வடமாநிலத்தவர், பாஜக, மற்ற கட்சிகளைவிட பெட்டர் என்று நினைத்திருக்கிறார்களா? இதுமாதிரி பல்வேறு யூகங்களை, முழுவதுமாக ரிசல்ட் வெளிவந்த பிறகுதான் அனுமானிக்க முடியும். காத்திருப்போம்.

  • Ramnath சொல்கிறார்:

   பெரும்பாலான தமிழக மக்கள் மதவாதக் கட்சியான பாஜகவுக்கு எதிராகத்தான் ஓட்டளித்திருக்கிறார்கள். எனவே அவர்களை தப்பு செய்யாதவர்கள் என்று சொல்வதில் என்ன தவறு ?
   மதவாதக் கட்சியான பாஜகவுக்கு அவர்கள் ஓட்டு போடாதது தவறு என்பது
   உங்கள் கருத்தா ?

   • புதியவன் சொல்கிறார்:

    @ராம்நாத் – ‘மதவாதம்’ என்றால் என்ன? இதை யோசியுங்கள். பாஜக எதிர்ப்பு மனநிலை என்பது ஒன்றே பெரும்பாலானவர்களை, ‘பாஜக மதவாதக் கட்சி’ என்று சொல்லவைக்கிறது என்பதே என் எண்ணம். “இந்துக்களின் சடங்குகளை கேலியாக கருணாநிதி, ஸ்டாலின் பேசினால், அப்படிப் பேசுபவர்களின் மேடையில் அமர்ந்து மகிழ்ந்துகொண்டிருந்தால், இந்துக் கடவுள்கள் மட்டும் இல்லை என்று தி.க. வீரமணி பேசினால்’ ராம்நாத்துக்கு அவை ‘மதச்சார்பில்லாத’ பேச்சுக்கள். அந்த மாதிரி கமலஹாசன் போன்றவர்கள் முதற்கொண்டு பேசும்போது, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் ஆர்வலர்களும் என்ன செய்திருக்கவேண்டும்? ‘மதத்தை அரசியலில் கொண்டுவராதே’ என்று சொல்லியிருக்கணும். ஆனால் அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, இந்து மதம் பற்றி பாஜக பேசும்போது உடனே ‘மதவாதம்’ என்ற லேபிள் குத்துவது.

    இந்த மாதிரி ‘சிறுபான்மையினருக்கு வாக்குகளுக்காக காவடி தூக்கும்’ போக்கைத் தட்டிக் கேட்டு பெரும்பான்மையினரின் உணர்வைத் தட்டி எழுப்புவதுபோல ஒருவர் பேசினால் அது ‘மத வாதக் கட்சி’, அவற்றை ஆதரிப்பவர்கள் ‘மத வெறியர்கள்’ என்று லேபிள் குத்துவது. (மோடி அவர்கள் இதுமாதிரி நேரடியாக இதுவரை பேசி நான் படித்ததில்லை என்றபோதும்).

    என்ன லாஜிக் சார் இது?

  • Ramnath சொல்கிறார்:

   தமிழ்நாட்டில் பிஜேபி ஜெயிக்கவில்லையே என்று தானே வருத்தப்படுகிறீர்கள். தமிழ்நாட்டின் சிறுமதியாளர்களை மன்னித்து விடுங்கள். மத்தியில் உங்கள் கட்சி ஜெயித்ததை நினைத்து கொண்டாடுங்கள்.

   • புதியவன் சொல்கிறார்:

    @ராம்நாத் – It shows your bad taste. இதையே, நான், ‘அகில இந்திய அளவில் திகார் ஜெயிலில் கிடந்தவர்கள்’ யாரும் ஜெயிக்கவில்லையே என்று வருந்தாமல், தமிழகத்தில் அப்படி பல்லாயிரம் கோடி சம்பாதித்து சிபிஐ வழக்குகளில் இருக்கும் உங்களின் தலைவர்களான, மாறன், கனிமொழி, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் போன்ற பலர் வெற்றி பெற்றதை நிறைவாகக் கொண்டாடுங்கள்” என்று எழுதலாமா? பாஜக என் கட்சி அல்ல, அதற்கு நான் வாக்களிக்கவும் இல்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   உங்கள் பின்னூட்டத்தில் ஏன் இவ்வளவு ஆத்திரம்..
   பிற மதத்தினர் மீது வெறுப்புணர்வு…?

   தயவுசெய்து வெறுப்புணர்வை கைவிடுங்கள்…
   அது, உங்கள் ஈகோவை திருப்திப்படுத்துவதைத் தவிர,
   யாருக்கும் ( நீங்கள் உட்பட ) எந்த நன்மையையும்
   செய்யப்போவதில்லை..

   மாறாக, அனைத்து மதத்தினர் மீதும் அன்பை பரப்புங்கள்.
   அது ஒன்றே இந்த நாட்டில் அமைதியையும்
   ஒற்றுமையையும் சாத்தியமாக்கும்.

   அந்த இறை நமக்கு துணை நிற்கும்
   என்று நம்புவோம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … // அந்த வரக்கூடிய
  துன்பங்களின் பட்டியலை
  நினைத்தாலே பயமாக இருக்கிறது … // ….. என்று நீங்கள் நாசுக்காக கூறுவதை விட

  // வருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு! //
  Read more at: https://tamil.oneindia.com/news/tuticorin/lok-sabha-election-results-2019-live-updates-tn-people-will-worry-why-not-vote-to-bjp-says-tamilsai-351614.html …..செய்தியில்

  // வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என உணர்வார்கள்.// என்று மக்களுக்கு புரியும்படியாக கூறுவது தான் நல்லது … !!!

 3. புதியவன் சொல்கிறார்:

  //” இன்றில்லா விட்டாலும் – நாளையாவது மாறும் அல்லவா ? ” – மாறவேண்டும் கா.மை. சார்…. இப்போ அரசியலில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள், அரசியலை கருவியாகப் பயன்படுத்தி தலைமுறை தலைமுறைக்கும் சொத்துச் சேர்த்தவர்கள். மனசாட்சியே இல்லாமல், ‘விவசாயி’ என்று லேபிள் போட்டுக்கொண்டு சம்பாதித்த பணத்துக்கு வரி கட்டாமல் ஏமாற்றிக் குவிப்பவர்கள்.

  எனக்கு எப்போதும் தோன்றுவது.. ஒரு ஐந்து வருடத்தில், எந்த விதமான கட்டுமானப் பணியிலும் ஈடுபடாமல், ஒரு இலவசமும் தராமல், வருடத்துக்கு 500 குளங்கள்/ஏரிகள்/கண்மாய்கள் இவற்றைத் தூர் வாரி, சுற்றிலும் வேலி கட்டி, தண்ணீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, மூன்றாவது ஆண்டிலிருந்து, நிலத்தடி நீர் எடுப்பது தேசியக் குற்றம் என்று சட்டம் போட்டுச் செயல்பட்டால், காலம் காலத்துக்கு அந்த முதலமைச்சருக்கு ‘விவசாயத்தை மேம்படுத்தியவர்’ என்ற ஒற்றை நல்ல பெயர் கிடைக்குமே… அப்படிச் செய்யாமல் ‘நானும் முதல்வராக இருந்தேன்’ என்று ஐந்து வருடங்கள் பதவியில் இருப்பதில் என்ன சுகம் காணமுடியும் என்று நினைப்பேன்.

  ஒருவேளை ‘அரசியல்’ என்பது 98%பேரையும் பதவி வந்தவுடன் மாற்றிவிடுமோ?

 4. R KARTHIK சொல்கிறார்:

  அய்யா, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்புவோம். இதுவும் கடந்து போகும்.

  பரம்பொருள் எல்லோருக்கும் துணை நிற்பாராக.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   கார்த்திக்,

   // அய்யா, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்புவோம். //

   Exactly – நானும், அப்படித்தான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.

   இன்று இந்த சம்பவம் ஏன் நிகழ்ந்திருக்கிறது என்பது குறித்து
   நாம் இன்றைய சூழ்நிலையை வைத்து தீர்மானிக்கிறோம்.

   ஆனால், சில காலம் கடந்து எதிர்காலத்தில் நின்று,
   பின்னோக்கி பார்த்தால், நடந்ததெல்லாம் நல்லதற்கே
   என்று கூடத் தோன்றலாம்.

   அதனால் தான், நான் “ஏமாற்றம் தருகிறது ”
   என்று சொல்வதோடு நிறுத்திக் கொண்டு விட்டேன்.

   உங்கள் பக்குவத்தை பாராட்டுகிறேன் கார்த்திக்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • rrscbe சொல்கிறார்:

    ஆனால், யாரோ செய்யும் தவறுகளின் விளைவு,
    தப்பு செய்யாத தமிழக மக்களை மோசமாக பாதிக்கப்போகிறது.
    Thiru KM Sir,
    “Theethum Nandrum pirar thara vaara”.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     நண்ப rrscbe,

     அது சரி தான்….
     ஆனால் அரசியல் சட்டம் அந்த பிறரை’யும்
     நம்மையும் ஒன்றாக்கி வைத்திருக்கிறதே….
     அவர் செய்வதற்கு நம்மையும் பொறுப்பாக்கி
     வைத்திருக்கிறதே… ??? 🙂 🙂

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 5. Sharron சொல்கிறார்:

  KM Sir this comment made me think. North Indians are voting for BJP and for job they are coming to Tamil Nadu.

  • rrscbe சொல்கிறார்:

   Sir,
   For a minute can you think about present status of Tamilnadu. All its natural resources are exploitef & destroyed, quality education is not available to all people equally. Youths are kept under influence of alcohol..Not allowing them to think rationally..All these were done by those who ruled Tamilnadu for the past few decades. Who are they? Are they jumped from sky? Are they not from our own society? Because of their SINS
   , now we are suffering & our future generation is going to suffer.

  • புதியவன் சொல்கிறார்:

   ஷர்ரோன் – நான் இதனை வேறு விதமாகப் பார்க்கிறேன். வட இந்தியர்கள் தென் இந்தியா நோக்கி வேலைக்கு வருகிறார்கள். நாம் ‘இந்தியர்’ என்ற நோக்கில்தான் அணுகவேண்டும் என்றாலும், நான் தமிழ்நாட்டில் நமக்குப் பெரிய பிரச்சனை உருவாகிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இதனை இப்போது கண்டுகொள்ளாமல் விடுகின்ற அரசியல் கட்சிகள், ஒரு நேரத்தில், ‘வாக்கு வங்கி’ என்று இந்தப் பிரச்சனையையும் அணுகலாம். அது தமிழர்களுக்கு மிக்க கெடுதியை உண்டாக்கும்.

   1. அங்கிங்கு எனாதபடி எங்கும் வட இந்தியர்கள் சிறு உணவகங்கள், தேநீர், அனேகமாக எல்லா இனிப்புக் கடைகளிலும் வேலை செய்கிறார்கள், பல்வேறு வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். இதற்கு ‘தமிழ் உணர்வு’ முதலாளிகள்தான் காரணம் (அரசியல்கட்சித் தலைவர்கள், மாறன் உள்பட). வட இந்தியர்கள் 14 மணி நேரம் வேலை பார்ப்பார்கள், லீவு எடுக்க மாட்டார்கள், அவர்களை சுரண்டலாம் என்பதும் மிகப் பெரிய காரணம்.

   2. தமிழக மத்திய அரசு வேலைகளில் வட இந்தியர்கள் ஆதிக்கம் கோலோச்சுகிறது. இதில் கள்ள மவுனம் காட்டும் அரசியல் தலைவர்கள் தமிழகத்தின் எதிரிகள். அதற்கு ஏற்ற மாதிரி தமிழ் பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது-அதாவது தமிழகத்தில் வேலை பார்க்கலாம், ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கலாம், தமிழ் மொழி தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஸ்டாலின் & கம்பெனி, இந்த விஷயத்தை தீவிரமாக அணுகணும். 85% வேலை, அந்த அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே என்று உறுதிப்படுத்தவேணும். ‘நூறு நாள் வேலைத் திட்டம், டாஸ்மாக்’ போன்றவைகள்தான் ‘தமிழர்களில் சோம்பேறிகள்’ என்ற சமூகத்தை உருவாக்குகிறது.

   3. பொதுவாக பாஜக, ‘ஹிந்தி’ என்பதற்கே முன்னுரிமை கொடுக்கிறது. இந்திய அளவில் இது தவறில்லை என்று நான் நினைக்கிறேன், ஆனால் அதற்காக மாநில மொழிகளைக் காவு கொடுக்கக்கூடாது. உலக அளவில் தமிழ் மொழிகளில் முன்னோடி. அதற்கு முக்கியத்துவம் குறையும்போது தமிழக அரசியல்வாதிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பவேண்டும்.

 6. Venkat சொல்கிறார்:

  Most of the structural reforms initiated during first term will, in my opinion, yield result in next 5 years. I am sure more jobs will be created and infrastructure will see a big face lift. I am optimistic that the country will progress and prosper. I am equally afraid of religious polarization. This is not good for the social fabric of secular country like India. I wish Muslims and Christians feel safer in the next 5 years that they come of their anti BJP stand.

 7. Raj சொல்கிறார்:

  தோழர் அறிவழகுவை காணவில்லை
  அதிர்ச்சியில் ஏதாவது நடந்திருக்குமோ

  • அறிவழகு சொல்கிறார்:

   அல்ல தோழா,

   சூது கவ்வி இருக்கு. மறுபடியும் தர்மம் வெல்லும், தாமதமாகவேனும்.

   அதுவரை நமக்கு பொறுமை தேவை.

   அந்த பொறுமையை இறைவனிடம் வேண்டுகிறேன்.

 8. Raj சொல்கிறார்:

  காவிரி மைந்தன் தனது முகவரியை தெரிவித்தால் 5 கிலோ சுவீட் பார்சல் அனுப்பி வைக்கலாம்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ராஜ்,

   உங்கள் வாயும், கையும் பேசும் அளவிற்கு –
   நெஞ்சிலும் துணிவிருந்தால் –

   பாளம் பாளமாக வறண்டு வெடித்துக் கிடக்கும்
   விவசாய நிலத்தையும்,
   ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக ஆழ்கிணறு
   துளைகளைப் போடும் அவலத்தையும் பார்த்து –
   துடித்துக் கதறி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும்
   டெல்டா விவசாயிகளிடம் –

   நேரிலேயே சென்று
   மோடிஜி அவர்களின் பரிசு
   என்று சொல்லியே – கொடுக்கலாம்.

   .
   -காவிரிமைந்தன்

 9. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்…. இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி நேரம் கிடைக்கும்போது ஆராய்ந்து எழுதுங்கள். நான் படித்தவரை, இது அந்தப் பகுதிகளையே அழித்துவிடும், இந்தத் திட்டத்தை அமெரிக்கா போன்ற நாடுகள் அனுமதித்ததே இல்லை என்று சொல்கிறார்கள். தேர்தல் சமயத்திலேயே இதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன். இந்தியாவில் வரும் திட்டங்கள், இந்தியாவின் நன்மைக்கு இருக்கணும், வெளிநாட்டினரின் முதலீட்டுக்காக இருக்கக்கூடாது.

  பாஜகவுக்கான வாய்ப்பு, அவர்கள் சொல்லிக்கொண்டிருந்ததைப்போல், கிரவுண்ட் வொர்க் 5 வருடம் செய்தாச்சு இனி வளர்ச்சியை அடுத்த 5 ஆண்டுகளில் அனுபவிப்போம் என்று சொன்னதற்காக வழங்கப்பட்டது என்பதை அவர்கள் புரிந்துகொண்டு, அதற்கான முன்முயற்சிகளில் இறங்கணும்.

 10. tamilmani சொல்கிறார்:

  தமிழ்நாடு 37 திமுக சார்பு எம் பி க்களை தேர்ந்து எடுத்திருக்கிறது.
  இதன் மூலம் என்ன பயன் தமிழ்நாட்டுக்கு வரப்போகிறது. மோடி எதிர்ப்பு கொள்கை go back modi என்று ஒரு நாட்டின் பிரதமரை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு செய்தாகிவிட்டது
  . மிருக பலத்துடன் இருக்கும் பி ஜே பி அரசு
  இவர்களை திரும்பி கூட பார்க்காது. இவர்களில் கார்த்தி ,தயாநிதி ,கனிமொழி ,ராசா ஆகியோர் சட்ட சிக்கல்கள் உடையவர்கள். தமிழர் நலன் சார்ந்த முடிவுகளுக்கு மோடி அரசு பெருந்தன்மையுடன் ஏதாவது செய்தால் தான் உண்டு. கன்னியாகுமரியின்
  வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவி பெற்று தந்த பொன்னார் அவர்களையே
  தோற்கடித்த பெருமை அவர்களுக்கு உண்டு. வாக்களித்த தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள் என்ற தமிழிசையின் கூற்று சரியே. கடைந்தெடுத்த ஊழல்வாதிகள்
  தேர்தலில் ஜெயித்து புனிதர் ஆனார்கள்,தமிழகம் நிச்சயம் தவறு செய்து விட்டது. இங்கு நிலமும் பொய்க்கும் ,நீரும் பொய்க்கும் இந்த நிலை கெட்ட மனிதர்களால் .ஆனால் ஒரு ஆறுதல் ttv தினகரன் ,கமலஹாசன் ,சீமான் எதிர்பார்த்த
  வாக்கு வங்கி இல்லை என்பது .

 11. A.T.Thiruvengadam சொல்கிறார்:

  The congress wrongly believed corruption would be more strong weapon to attack BJP and went full steam and did not go out highlighting the social issues and fell into the trap of Modi.Modi like Indra Gandhi converted the whole fight as one against him by all the opposition tainted with corruption.Further the delay in offering a common programme and providing a single concerted effort to propagate the programme.To some extent some quasi religious practices followed also alienated the regular vote bank.DMK ‘s victory is. Pyrrhic victory such as the one of Jayalalithaa as her 37 MP, s achieved precious little.Thiruvengadam

 12. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  I feel those 38MPs will make TN’s voice heard in Parliament. Will anyone listen to it is a big question again…… I am sure, they will perform better than the old lot of 37…..

  Majority people, who spoke against Namo were mainly from TN, Kerala, few from Andra & Bengal. I think they spoke with facts/data and not with any emotions…..

  When I was speaking to a North Indian officer(of Superintendent cadre), in a central govt dept, he told me this – ///apart from gst, demonitization, joblessness, development etc no big hatred against Modi government. GST’s implementation has flaws but it will be corrected. The concept of demonitization is not able to be understood by people. Jobs will surely come as our PM is assuring. For national security, to have united India, we should vote Modi////….. This attitude got reflected by many North Indian friends….. Saringa aabisar nu sollittu, anaithu dhuvarangalaiyum moodivittu senruvittaen…..

  To be frank, I am with a lot of fear – what all gonna happen to TN & its people ??…. I am not joking, seriously I am fearing a lot about my future generation’s presence in TN and as thamizh…..

  yennatha solrathu…..

  Paan Parag !!!

  Thanks
  Sanmath AK

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சன்மத்,

   நண்பர் அஜீஸின் பின்னூட்டத்தை பாருங்கள்…
   அரசியலைப் போன்றே, தமிழ் மக்களின் வாழ்க்கைத்தரமும்
   கவலை தருகிறது..

   சமூகத்தைப்பற்றிய கவலையோ, அக்கறையோ
   சிறிதும் இல்லாமல்
   இங்கே ஒரு பெருங்கூட்டம் வாழ்கிறது.

   இதையெல்லாம் எப்படி, யார் – சரி செய்யப்போகிறார்கள்
   என்கிற எண்ணமே மலைப்பை தருகிறது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.