இவர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள் … இதையும் கேட்போமே…!!!


வரலாற்றில் இடம் பெறப்போகும் ஒரு முக்கியமான தேர்தல் முடிவு.
இத்தகைய முடிவுகள் வெளிவந்ததன் பின்னணி காரணங்கள் என்ன…?

நம்முடைய கருத்துகள் இருக்கவே இருக்கின்றன…

இந்த கருத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் –

ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காரணத்தை சொல்கிறது….
நம்முடைய கருத்துகளை சரிபார்த்துக் கொள்ள,
அவற்றையும் தெரிந்து கொள்வோமே.

இடையில் குறுக்கிடும் செய்திகள், விளம்பரங்கள் எரிச்சலூட்டுகின்றன.
அதைத்தவிர – ஒவ்வொரு முடிவு வெளிவரும்போதும்,
அந்த கட்சித்தலைவர்கள் கூத்தாடுவது போல் காட்டப்படுவது
மிகவும் அருவருப்பாக இருக்கிறது. வடக்கே இருந்த பழக்கத்தை
இப்போது இங்கேயும் கொண்டு வந்து விட்டார்கள்.

இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, விவாதத்தை
கவனித்தாக வேண்டும் –

இந்த விவாதத்தில், நெறியாளர் – சிறப்பாகவும், நடுநிலையுடனும்
பணியாற்றி இருக்கிறார் என்பதை அவசியம் சொல்ல வேண்டும்.

பின் குறிப்பு –

இந்த விவாதத்தையொட்டி, எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன.
இதைக்காணும் நண்பர்களுக்கும் பல கேள்விகள் இருக்கும்.
பின்னூட்டங்களில் அவற்றை எழுப்பலாம் …..விவாதிப்போமே…

.
—————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

42 Responses to இவர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள் … இதையும் கேட்போமே…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  விவாதத்தை நன்றாக காண முடியலை. நிறைய விளம்பரங்கள், செய்திகள்னு கோர்வையா பார்க்கும் எஃபெக்ட் தரவில்லை.

  நரேந்திர மோடி VS GST, Demonitization, விவசாயிகள் பிரச்சனை… – இதையெல்லாம் மக்கள் பொருட்படுத்தலையா என்ற கேள்வியை எழுப்புபவர், ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. மக்கள் ஐந்து வருட ஆட்சியில் தனக்கு என்ன நேர்ந்தது, தனக்கு எது முக்கியம், அதற்கு கட்சி என்ன செய்தது என்பதை ஒட்டித்தான் வாக்களிக்கின்றனர். கேள்வியாளர் எழுப்பும் அதே குரலில், ‘மக்களுக்கு 2ஜி ஊழல் செய்து கொள்ளையடித்தவர்கள்தான் வேண்டும், தொலைக்காட்சி ஊழல் செய்தவர்கள்தாம் உத்தமர்கள், 200 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டவர்தாம் நல்ல தலைவர்’ என்று வாக்களிக்கிறார்களா? தமிழர்களுக்கு ‘லஞ்சம் வாங்குபவர்கள்தாம்’ தங்களுக்கு தலைவர்களாக இருக்கவேணும் என்று நினைக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பலாம்.

  “எங்கெங்கு மசூதிகள் இருக்கோ அங்கெல்லாம் கோவில் கட்டுவதுதான் தங்கள் அஜெண்டா என்று பாஜக சொல்கிறது” – இப்படிப் பேசுபவர் எந்த கிரகத்திலிருந்து இங்கு வந்து விவாதத்தில் கலந்துகொண்டிருக்கிறார்? கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை மசூதிகள் அவ்வாறு கோவிலாக மாற்றப்பட்டன? இந்தமாதிரி உளருவாயர்களை ஆரோக்கியமான விவாதத்தில் காணுவதற்கே அருவருப்பாக இருக்கிறது.

  இன்னொருவர், ‘தாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி மக்களை இடது முன்னணியின்பால் ஈர்க்க மேற்கு வங்கத்தில் தவறிவிட்டோம்” என்கிறார். ஆனால், ஆட்சியில் இருக்கும் கேரளாவில், மக்கள் ஒட்டுமொத்தமாக கம்யூனிஸ்டுகளை புறம் தள்ளியதன் காரணம் என்ன? ‘மத ரீதியாக’ சபரிமலை விஷயத்தை முன்னெடுத்து சிறுபான்மையினரின் வாக்குகளை அள்ள நினைத்த தந்திரம்தானே. இவர்களுக்கு (கம்யூ) பாஜகவைக் குறை சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?

  சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிமுக பிளவுபட்டதால் 2-3 இடங்களை இழந்தாலும், மக்கள் இந்த ஆட்சிக்கு (அதிமுக) எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்று தோன்றவில்லை. ஸ்டாலின் சொன்னதுபோல, எப்படா இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பலாம் என்று மக்கள் ரெடியாக இல்லை. அவர்கள் அதிமுகவை ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி புரியச் சொல்லி அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்ற வாதம் ஏற்கத்தக்கது.

  என் கருத்து, ஒன்றிணைந்த அதிமுகவாக மக்களைச் சந்தித்திருந்தாலும், மொத்தம் 4-5 இடங்களுக்கு மேல் நிச்சயம் அதிமுக இந்தத் தேர்தலில் பெற்றிருக்காது. அதன் காரணம், அதிமுக பாஜகவுடன் வைத்த கூட்டணிதான். தமிழக மக்கள் பாஜக கட்சியை விரும்பவில்லை என்பது உண்மைதான். அவங்களுக்கு மாநிலக் கட்சியே (திமுகவோ அதிமுகவோ) போதும் என்ற எண்ணம்தான் இருக்கிறது. ஒருவேளை ஜெ. இருந்து, அதிமுக தனியாக போட்டிபோட்டிருந்தால், என் அனுமானம், மீண்டும் 25 இடங்களாவது அதிமுக பெற்றிருக்கும்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  என்னுடைய முதல் கேள்வி –

  38 தொகுதிகளில் அதிமுக தோற்க முக்கிய காரணம் –
  பாஜகவுடன் அது கூட்டணி வைத்துக் கொண்டதை
  தமிழக மக்கள் விரும்பவில்லை என்பது தானா….?

  -கேள்வி -1-A –

  ஆம் என்றால், தமிழக மக்கள் பாஜகவை
  ஏன் விரும்பவில்லை….?

  2-வது கேள்வி –

  38 எம்.பி.தொகுதிகளில் வெற்றி பெற்ற திரு.ஸ்டாலின்,
  சட்டமன்ற தேர்தலில் -(அதற்குள்ளாகவே அடங்கிய)
  – 9 இடங்களில் தோற்க காரணமென்ன…?

  3-வது கேள்வி –

  அகில இந்திய அளவில் தேர்தல் கமிஷன் நேர்மையாக
  செயல்பட்டதா…? அல்லது மோடிஜிக்கு சார்பான நிலை
  எடுத்ததா…?

  4-வது கேள்வி –

  திரு.ராகுல் காந்திக்கு, மோடிஜி அளவிற்கு –
  சாமர்த்தியம், புத்திசாலித்தனம் இல்லாததால்,
  இந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லையா…?

  5-வது கேள்வி –

  ராகுல் காந்தி தொடர்ந்து இதே போன்று வெளிப்படையாக
  செயல்படுவது நல்லதா..? அல்லது மோடிஜியைப் போல்
  தந்திரங்களை கற்றுக் கொண்டால் தான்
  அரசியலில் ஜெயிக்க முடியுமா…?

  6-வது கேள்வி –

  பாஜகவின் இந்த அகில இந்திய அளவிலான
  வெற்றிக்கு முக்கிய காரணம் –
  வட இந்திய வாக்காளர்களின் “மத” அபிமானமா…?

  இதனால், அரசியல் சார்ந்த –
  மற்ற விஷயங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டனவா..?

  – கருத்து கூற விரும்பும் நண்பர்கள் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   கேள்விகளுக்கு சரியான பதில்கள் சொல்லலாம் கா.மை. சார். ஆனால் நீங்க ஒரு சார்பா (நல்லதை நினைத்து என்றாலும்) பேசும்போது அதில் நமக்கு உண்மை கிடைக்காது. திரும்பத் திரும்ப பாஜக வெற்றி ‘மதவெறி’யினால் என்று எழுதினால், தமிழகத்தில் அதிமுகவை வாக்குக் கேட்க மசூதிகளில் அனுமதிக்காதது, பேராயர்கள், கிறித்துவ பாதிரியார்கள் தங்கள் ஆலயங்களில் ‘பாஜக வுக்கு வாக்களிக்கக்கூடாது’ என்று லெட்டர் பேடில் எழுதி எல்லோரிடமும் அனுப்பியது, இந்துமதத்தை குறைகூறி அரசியல் தலைவர்கள் பேசுவது-ஸ்டாலின் உள்பட – இதெல்லாம் ‘மதவெறி’ என்று சொல்லாமல் கடந்துவிட்டால், அதில் எப்படி நியாயமான பார்வை வரும்? பக்கத்து மாநிலமான கேரளாவில் ஒரு தொகுதியில், போட்டியிடும் இஸ்லாமியர் அங்கு செல்லவேண்டிய அவசியமே இல்லாமல் வெற்றிபெற வைக்கப்படுவார். மம்தா, இன்னொரு தேசத்திலிருந்து திருட்டுத்தனமாக இங்கு நுழைந்து வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு ‘வாக்கு வங்கி’ என்ற ஒரே காரணத்துக்காக, ஆதரவாக நிற்கும்போது, பிரிவினையினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையினர், தாங்கள் ஒதுக்கப்படுகிறோம் என்று நினைக்க மாட்டார்களா? இந்த மாதிரி ‘வாக்கு’ என்பதற்காக சார்புநிலை எடுப்பதுதானே அரசியலில் மதம் கலக்க முக்கியக் காரணம்.

   திமுக ‘சிறுபான்மையினர்’ சார்பு எடுக்கும்போது, இன்றில்லாவிட்டாலும் நாளை, இந்துக்கள் ‘திமுக எதிர்ப்பு’நிலை எடுப்பார்கள். நீங்கள் அதனைக் காண்பீர்கள். தனிப்பட்ட முறையில் அரசியலில் ‘மதம்’ கலக்கக்கூடாது என்றே விரும்புகிறேன். அப்படி ‘மதம்’ கலக்கும்போது, நாட்டின் வளர்ச்சி, அதற்கு ஆட்சி என்ன செய்தது என்பது மாறி, இந்தக் கட்சி என் மதத்துக்கு ஆபத்தில்லாதவன், அதனால் தேர்ந்தெடுப்போம் என்பதுதான் குறிக்கோளாக மாறிவிடும். மதப் பெயரில் எந்தக் கட்சியும் தேர்தலில் போட்டியிடக்கூடாது. ஆலயங்களில் அரசியல் பேசுவது (கூட்டம் போன்று) தண்டிக்கப்படக்கூடிய குற்றம் என்று இருந்தால்தான், அரசியலில் மதம் என்பது நுழையாது. இல்லாவிட்டால், பாஜக எதிர்ப்பு நிலை எடுக்க விரும்புபவர்கள் அது ‘மத வாதக் கட்சி’ என்று சொல்லிக்கொள்ளலாம். அதன் ஆதரவு நிலை எடுக்க விரும்புபவர்கள், ‘பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக நிற்கிறது, நியாயம் பேசுகிறது’ என்று சொல்லிக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    // கேள்விகளுக்கு சரியான பதில்கள் சொல்லலாம் கா.மை. சார்.
    ஆனால் நீங்க ஒரு சார்பா (நல்லதை நினைத்து என்றாலும்)
    பேசும்போது அதில் நமக்கு உண்மை கிடைக்காது….//

    ————

    ஒரு விஷயத்தை உங்களுக்கு புரிய வைக்க வேண்டுமென்று
    நினைக்கிறேன்…

    நான் ஒரு சார்பாக பேசுவதாக இப்போது கூறும் நீங்கள்,
    எனது 2014 ஏப்ரல் /மே மாத இடுகைகளை படித்திருக்கிறீர்கள்
    அல்லவா…?

    அப்போது நான் காங்கிரஸ் ஆட்சியை மிக மிக கடுமையாக
    எதிர்த்தும் அந்த ஆட்சி தொலைய வேண்டுமென்று எழுதியதையும்
    எப்படி சௌகரியமாக மறந்து விடுகிறீர்கள்….?

    அதே காலகட்டத்தில், திருவாளர் நரேந்திர மோடி – பிரதமராக வந்தால்
    நாட்டிற்கு நல்லது என்று எதிர்பார்த்து, வரவேற்று எழுதியதையும்
    எப்படி வசதியாக மறந்து விடுகிறீர்கள்…?

    இது ஜனநாயகம். ஏதோ ஒரு கட்சியை விடாப்பிடியாக
    தொங்கிப்பிடித்துக்கொண்டு, அவர்கள் எதைச் செய்தாலும்
    ஆதரித்து வக்காலத்து வாங்குவது சாதாரண குடிமக்களின்
    வேலை அல்ல. அது அந்தந்த கட்சிக்காரர்களின் வேலை.

    எப்போதும் பொதுவாக இருந்து, நல்லது கெட்டதுகளை கவனித்து,
    தேர்தல் வரும் சமயத்தில், எதை ஆதரிக்க வேண்டும் –
    எதை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது தான்
    எந்தக் கட்சியையும் சாராத சாதாரண பொதுமக்களின் நிலையாக
    இருக்க வேண்டும்…

    நான் இந்த நிலையில் தான் இருக்கிறேன்.

    ஒரு கட்சியின் சார்பாக, விடாப்பிடியாக –
    முக்கியமாக அதன் மதச்சார்பு
    கொள்கைகளுக்காகவே அதை தொடர்ந்து
    ஆதரித்து எழுதுகிறீர்கள் நீங்கள்.

    பலவித கருத்துகளும் இங்கே
    விவாதிக்கப்பட இடம் இருக்க வேண்டும்
    என்று நம்புவதால் தான் –
    நானே, அனைத்து விவாதங்களையும் துவங்குகிறேன்
    என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    ———–

    நான் இங்கு இதை இவ்வளவு அழுத்தமாக எழுதக்காரணம்,
    நான் ஒரு சார்பாக பேசுகிறேன் என்று நீங்கள் கூறியது
    தான்…

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     கா.மை. சார்… என் கருத்து இந்த இடுகையைப் பொருத்தமட்டில்தான். பாஜக சொன்னதுபோல் கறுப்புப் பணத்தை ஒழிக்கவில்லை, டிமானிடைசேஷன் நினைத்த விளைவைக் கொண்டுவரவில்லை, மாட்டிக்கொண்டவர்கள் மீது ஒரு நடவடிக்கை இல்லை, தமிழகத்தின் நலனுக்குப் புறம்பாக பாஜக நடந்துகொள்கிறது, மீத்தேன், இப்போ ஹைட்ரோகார்பன் என்று பல விஷயங்களில் தமிழக நலன் புறக்கணிக்கப்படுகிறது என்பதிலெல்லாம் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. இவை எல்லாவற்றையும் காங்கிரசும் திமுகவும் செய்தது, ஏன்..இதற்கு மேலும் செய்தது.

     //அதன் மதச்சார்பு கொள்கைகளுக்காகவே // – உண்மைதான். அதில் நியாயம் இருப்பதால். வேறு எந்தக் காரணமும் இல்லை. பாஜக இந்து மதத்தின் மீதான கணைகளைத் தடுக்கும் கட்சியாகச் செயல்படுகிறது. திமுக, காங்கிரஸ் வாக்கு வங்கி என்ற அரசியல் காரணத்துக்காக ‘சிறுபான்மை நலன்’ என்பதையும் மீறி இந்துக்களுக்கு எதிர்ப்பாக நடந்துகொள்கிறது. தெலுகு தேசமும் அதேபோல்தான். காங்கிரஸ் என்ன செய்தது என்பது எனக்குத் தெரியும். திமுக தமிழகத்தில் என்ன செய்தது, செய்கிறது என்பதும் எனக்குத் தெரியும். அப்படி இல்லை என்று நிரூபிப்பது மற்றவர்களின் வேலை.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    பாஜகவும், மோடிஜியும் – எதனை முன்வைத்து பிரச்சாரம் செய்தார்கள்
    என்பதை டெல்லியில் வசிக்கும் Jksmraja -என்கிற இந்த நண்பரின்
    நேரிடை அனுபவ -பின்னூட்டத்தில் பாருங்கள் …

    // வட இந்தியாவில், இந்து – முஸ்லீம் களுக்கு இடையே, இனிமேல் ஒற்றுமையாக வாழவேமுடியாது என்ற அளவிற்கு பிரிவினையை ஏற்படுத்திவிட்டார்கள். முற்பட்ட சமூகத்திற்கு பத்து சதவிகிதம் என்ற தூண்டில் இந்த பிரிவினையை ஏற்படுத்த நன்றாக வேலை செய்தது. டெல்லியில்
    நான் வசிக்கும் பகுதியில், ஒவ்வொரு தெரு முனையிலும், ஒவ்வொரு நாளும், வெவ்வேறு முற்பட்ட சமூகத்தை சேர்த்த முதியவர்கள், அந்த தெருவில் உள்ள பெண்களை அழைத்துவந்து, மோடி பிரதமர் ஆகவில்லை என்றால் இந்துமதம் இப்போதே அழிந்துவிடும் என்ற அளவிற்கு பிரச்சாரம் செய்தார்கள். ஒரு முதியவர் சங்கராச்சாரியார் கூட இந்து மதத்தை அழிப்பதற்காக கிறிஸ்துவ சோனியாவால் சதி செய்யப்பட்டது என்று சொல்வதை நானே நேரில் கேட்டேன். //

    இந்த நாட்டின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும்
    இத்தகைய பொறுப்பற்ற பிரச்சாரங்கள் –
    எத்தகைய ஆபத்தை கொண்டு வரும் என்பதை
    நீங்கள் உணர்கிறீர்களா…?

    அல்லது தொடர்ந்து……

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • R KARTHIK சொல்கிறார்:

   என்னுடைய முதல் கேள்வி –

   38 தொகுதிகளில் அதிமுக தோற்க முக்கிய காரணம் –
   பாஜகவுடன் அது கூட்டணி வைத்துக் கொண்டதை
   தமிழக மக்கள் விரும்பவில்லை என்பது தானா….?

   => இல்லை. பி.ஜெ.பி. கூட்டணி இல்லை என்றாலும் பெரிய மாற்றம் இருக்காது. ஜெயலலிதா இல்லாத ஆ.இ.அ.தி.மு.க. இன்னும் மக்களின் மதிப்பை பெறவில்லை. அதோடு அவர்களின் உட்கட்சி பிளவுகள் வேறு.

   -கேள்வி -1-A –

   ஆம் என்றால், தமிழக மக்கள் பாஜகவை
   ஏன் விரும்பவில்லை….?

   2-வது கேள்வி –

   38 எம்.பி.தொகுதிகளில் வெற்றி பெற்ற திரு.ஸ்டாலின்,
   சட்டமன்ற தேர்தலில் -(அதற்குள்ளாகவே அடங்கிய)
   – 9 இடங்களில் தோற்க காரணமென்ன…?

   => பணமும் ஒரு காரணம். ஆ.இ.அ.தி.மு.க விற்கு சட்டமன்ற இடை தேர்தல் நாடாளுமன்ற தேர்தலை விட முக்கியம். அதனால் அதில் கவனம் அதிகம் செலுத்தி இருக்கிறார்கள்.

   3-வது கேள்வி –

   அகில இந்திய அளவில் தேர்தல் கமிஷன் நேர்மையாக
   செயல்பட்டதா…? அல்லது மோடிஜிக்கு சார்பான நிலை
   எடுத்ததா…?
   => தேர்தல் கமிஷன் ஒரு அரசு சாரா அமைப்பு. அது நேர்மையாக செயல் பட்டது.

   4-வது கேள்வி –

   திரு.ராகுல் காந்திக்கு, மோடிஜி அளவிற்கு –
   சாமர்த்தியம், புத்திசாலித்தனம் இல்லாததால்,
   இந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லையா…?

   => காங்கிரஸ் கட்சியை மக்கள் இன்னும் ஏற்க வில்லை. They dont have the same credibility among the masses. They need more changes in themself to appeal to the people. Its not just Rahul vs Modi.

   Congress has to transform atleast for the welfare of the country. We need a healthy opposition in center.

   5-வது கேள்வி –

   ராகுல் காந்தி தொடர்ந்து இதே போன்று வெளிப்படையாக
   செயல்படுவது நல்லதா..? அல்லது மோடிஜியைப் போல்
   தந்திரங்களை கற்றுக் கொண்டால் தான்
   அரசியலில் ஜெயிக்க முடியுமா…?

   => Rahul’s transparency could prove that he is a good man. But its not going to say that he is a good national leader. How can we believe that he could give a good governance? What credibility he has?

   6-வது கேள்வி –

   பாஜகவின் இந்த அகில இந்திய அளவிலான
   வெற்றிக்கு முக்கிய காரணம் –
   வட இந்திய வாக்காளர்களின் “மத” அபிமானமா…?

   இதனால், அரசியல் சார்ந்த –
   மற்ற விஷயங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டனவா..?

   => Religion has been a major role in this elections but as pointed by others, i believe that the blame is equally to all the parties. By showing too much reactions like award wapsi, intolerance, … from the beginning of the last period, congress tried to appease the minorities as they had done in past. But the strategy which worked earlier by fetching them minority votes backfired with bad name among majority.

   The opposition hopefully should do a constructive duty and counter the ruling party in a meaningful way. This is possible only if they are ready to do drastic changes and transform. Lets wait and watch whether they do something in right direction or just take rest and wait for 2022/23 or take religion in hand.

   In a game/war, you have to hit where the opponent is weak, rather they are trying to take religion in hand which is the strong point of the opponent.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கார்த்திக்,

    உங்கள் பின்னூட்டத்தில்,
    கீழ்க்கண்டவற்றை மிகவும் ரசித்தேன்; ஏற்கிறேன்…..

    .
    ———————————-

    – காங்கிரஸ் கட்சியை மக்கள் இன்னும் ஏற்க வில்லை. They dont have the same credibility among the masses. They need more changes in themself to appeal to the people. Its not just Rahul vs Modi.

    Congress has to transform atleast for the welfare of the country. We need a healthy opposition in center.

    —————-

    In a game/war, you have to hit where the opponent is weak, rather they are trying to take religion in hand which is the strong point of the opponent.

    —————

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 3. ஞான சூனியம் சொல்கிறார்:

  ஐயா,
  நீங்கள் ஏதோ சபை கட்டு கட்ட முயல்வது வெளிப்படையாக தெரிகிறது. பிஜேபியின் வெற்றியை கேவல படுத்த முயல்வது வெளிப்படை. மதவெறியென்றும், கள்ள வோட்டு என்றும் திசை திருப்புவது சிரிப்பையும் , தங்கள் மேல் பரிதாபத்தையும் தான் ஏற்படுத்துகிறது.
  சரி என்ன செய்வது நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஞான …….

   இது கருத்தூட்டமுள்ள பின்னூட்டங்களுக்கான இடம்.
   பிதற்றல்களுக்கான இடம் இதுவல்ல.

   இனியும் இதுபோன்ற உளறல்கள் தொடருமேயானால் –
   உங்களுக்கு இங்கே இடம் கிடைக்காது – உங்கள்
   பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது என்பதை அறியவும்.

   .
   -காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  1. அதிமுக பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தது இவ்வளவு பெரிய தோல்விக்குக் காரணம். பாஜக என்பதையே அந்நியக் கட்சியாக தமிழன் நினைப்பான். அதற்கு ‘சுதந்திரத்திற்குப் பாடுபட்ட கட்சி’ என்ற போலி லேபிளும் கிடையாது. அதற்கு ஏற்றார்ப்போல் பாஜக ‘ஹிந்தி’யையே தூக்கிப் பிடிக்கிறது. சாதாரண தமிழன் அதனை ‘பிராமணர்கள் ஆதரிக்கும் கட்சி’ என்றே நினைக்கிறான்.

  2. சட்டமன்றத்துக்கு (நல்ல தலைவர் இருந்துவிட்டால்) அதிமுகதான் பெரும்பாலானவர்களின் சாய்ஸாக இருக்கும். தினகரன் பிரிந்ததனால் 3-4 தொகுதிகளை இழந்திருப்பார்கள். இல்லாவிட்டால் 22ல் மெஜாரிட்டி அதிமுகதான் வந்திருக்கும்.

  3. தேர்தல் கமிஷன், சேஷன் காலம் தவிர, ஆளும் கட்சிக்கு சார்பாகத்தான் இயங்கியிருக்கிறது. அதனால் தேர்தல் கமிஷன் பாஜகவுக்கு ஆதரவாக இப்போது செயல்பட்டது ஆச்சர்யமில்லை.

  4. ராகுல் காந்தி ஓரளவு நல்லவர் என்றுதான் என் மனதுக்குப் படுகிறது. ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தாலும் 200+ஐத் தாண்டாத நிலைதான் காங்கிரஸுக்கு. எப்போது மாநிலக் கட்சிகள் உதயமாகிவிட்டதோ அப்போதிருந்தே காங்கிரஸ் தேய ஆரம்பித்துவிட்டது. இப்போது பாஜக மட்டும்தான் தேசியக் கட்சி.

  5. ஏதோ ராகுல் காந்தி வெளிப்படையாகச் செயல்பட்டதுபோல் நீங்க சொல்றீங்க. நான் அப்படி நினைக்கவில்லை. (அவருடைய ஸ்டெல்லா மேரீஸ் கூட்ட ஏற்பாடு தமிழகத்தில் யாருக்குமே தெரியாது, 8 மாதங்களுக்கு முன்பிருந்தே ஏற்பாடு செய்யப்பட்டபோதும். இதுதானா வெளிப்படையான செயல்பாடு?). அரசியல் என்பதே தந்திர பூமிதான். மக்களுடைய தரத்துக்கு ஏற்றபடிதான் அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர்.

  6. ‘மத’ அபிமானமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் ஆட்சியில் இருந்தபோது ஒன்றும் செய்யாமல், இனி ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்லும் கட்சிகளை நம்பாததும், இராணுவ நடவடிக்கையையே அரசியலாக்கி, தாங்கள் தேசப்பற்றற்றவர்கள் என்று வாக்காளனை நம்பச் செய்ததும்தான் பாஜகவை நோக்கி அதிக வாக்குகள் வந்ததற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இதைத் தவிர மோடியின் அனிமேடட் பிரச்சாரங்களும், தனிப்பட்ட முறையில் அவர் சம்பாதிக்கவில்லை என்பது தெரிவதும் காரணங்களாக இருக்கலாம். மற்றபடி, “நமக்கு இதைச் செய்தார்” என்பது ஒரு காரணமாக இருக்காதுன்னு தோன்றுகிறது.

 5. Jksmraja சொல்கிறார்:

  வட இந்தியாவில், இந்து – முஸ்லீம் களுக்கு இடையே, இனிமேல் ஒற்றுமையாக வாழவேமுடியாது என்ற அளவிற்கு பிரிவினையை ஏற்படுத்திவிட்டார்கள். முற்பட்ட சமூகத்திற்கு பத்து சதவிகிதம் என்ற தூண்டில் இந்த பிரிவினையை ஏற்படுத்த நன்றாக வேலை செய்தது. டெல்லியில்
  நான் வசிக்கும் பகுதியில், ஒவ்வொரு தெரு முனையிலும், ஒவ்வொரு நாளும், வெவ்வேறு முற்பட்ட சமூகத்தை சேர்த்த முதியவர்கள், அந்த தெருவில் உள்ள பெண்களை அழைத்துவந்து, மோடி பிரதமர் ஆகவில்லை என்றால் இந்துமதம் இப்போதே அழிந்துவிடும் என்ற அளவிற்கு பிரச்சாரம் செய்தார்கள். ஒரு முதியவர் சங்கராச்சாரியார் கூட இந்து மதத்தை அழிப்பதற்காக கிறிஸ்துவ சோனியாவால் சதி செய்யப்பட்டது என்று சொல்வதை நானே நேரில் கேட்டேன். இந்த மாதிரியானவர்கள் ராகுல் பெயரையே எடுக்காமல், முழுக்க முழுக்க கிறிஸ்தவ சோனியாவின் பெயரை வைத்தே பிரசாரம் செய்தார்கள். வாட்ஸ் ஆப்பினால் பரப்பப்பட்ட செய்திகளும் முழுக்க முழுக்க இப்படியே இருந்த்தது. நான் புரிந்த வரையில் வரும் ஐந்து ஆண்டுகளில் மிக பெரிய மத கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.

  • புதியவன் சொல்கிறார்:

   @ராஜா – உங்கள் கருத்து சிந்திக்க வைக்கிறது.

   //முற்பட்ட சமூகத்திற்கு பத்து சதவிகிதம் என்ற தூண்டில் இந்த பிரிவினையை ஏற்படுத்த நன்றாக வேலை செய்தது.// – இப்படி எழுதியது சரியா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற தூண்டில், தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்தவில்லையா? பாஜக, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 10% என்று இட ஒதுக்கீடு கொடுக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் பலன் பெறலாமே. அப்போ முற்பட்ட சமூகங்கள், ஏழையாக இருந்தாலும் அவங்களுக்கு கல்வி கிடைக்கக் கூடாது, அவர்கள் அழியவேண்டும் என்பதுதான் சமூக நீதியா?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    புதியவன்,

    ராஜாவின் துவக்க வார்த்தையை –

    // வட இந்தியாவில், இந்து – முஸ்லீம்களுக்கு இடையே,
    இனிமேல் ஒற்றுமையாக வாழவேமுடியாது
    என்ற அளவிற்கு பிரிவினையை ஏற்படுத்திவிட்டார்கள். //

    – ஏன் விட்டு விட்டீர்கள்…?
    அது உங்கள் நிலைக்கு தர்ம சங்கடமாக
    இருக்கிறது என்பதாலா…?
    அதற்கும் சேர்த்தே நீங்கள் விளக்கம்
    சொல்லி இருக்கலாமே…?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     அப்படி இல்லை கா.மை சார்.. அதைத்தான் “சிந்திக்க வைக்கிறது” என எழுதினேன். இதில் தர்மசங்கடத்துக்கு என்ன இருக்கிறது?

     ஒரு கை தட்டி ஓசை எங்காவது வருமா?

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      ஓங்கி அறைவதற்கு ஒரு கை போதாது…?
      அப்போதும் ஓசை வருமே…

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 6. Raghuraman சொல்கிறார்:

  Sir., It all started because Congress as one of the national party started disowning the states. For thier power centric hungry ( started from Mrs Indra – I don’t want to tarnish Ghandi’s name by adding to that family) party leadership started patronizing only leaders who could communicate with them. Even Rahul supported people coming from other parties than providing chances to their existing partymen.
  How can they believe someone who was in other party for four years and switching side when they cannot get what they wanted. Look at how they started begging for alliance in TN, Bihar, UP etc from controlling positions – just because not believing the local leaders.

  It is sad that the main opposition party is at the mercy of local parties. This is not good for the country. We need strong opposition.

  On the other hand – though there may be some situations where there will be rash decisions, it ls better than the hung parliament. We already witnessed the atrocities by local parties earlier.

  I am having serious doubt that even if Congress had won 75% of the seats they contested, they cannot form govt on their own.

  Even by 2004, they could come to power with the support of Communists only. We saw the impact.

  We are the real losers by selecting a party who cannot even bargain for state interests. ( It is true that though a party was part of central govt, they did not bargain well).

  First of all let Congress change their culture of appointing leaders from family. There should be some rotation. According to me 91 – 96 was best period for Congress because they did not surrender to a family and could take many bold decisons.

  These are my views.

 7. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … தேர்தல் திருவிழா பலருக்கும் பலவித கோணங்களில் — ஆசைகளில் — விருப்பங்களில் நடந்து முடிந்துவிட்ட பின் — முடிவுகளும் வந்துவிட்ட பின் — அது பற்றிய விவாதங்கள் தேவைதானா …? உள்ளுக்குள் மகிழ்ச்சியில் பொங்கி பூரித்துக் கொண்டு வெளியே ” நடுநிலைவாதிகளை ” போல பசப்புகிறவர்களின் விவாதத்தினால் என்ன பயன் …? இனி என்ன நடக்கும் என்பதையும் அறுதியிட்டு கூற முடியாத நிலையில் இருக்கின்ற நிலையில் இதெல்லாம் தேவைதானா …?

  மோடிஜி அவர்களின் வெற்றிக்கு பின் அளிக்கின்ற பேட்டிகளில் ” டிஜிட்டல் இந்தியா ” என்பது காலாவதியாகி –தற்போது ” புதிய இந்தியா ” என்பது உதயமாகி இருக்கிறது …! அது எப்படி இருக்கும் என்பதைப் பற்றி மேலோட்டமாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப – ஒரு அவுட் லைன் வரைந்து வைத்துக் கொண்டால் — மோடிஜி பதவி ஏற்றபின் அறிவிக்கின்ற அறிவிப்புகள் — திட்டங்கள் — சட்டங்கள் என்பதை அந்த அவுட் லைன் உள்ளே நிரப்பிக்கொண்டு வந்தால் — நமக்கு கிடைக்கும் ” புதிய இந்தியா ” .. !!

  சென்ற ஐந்து ஆண்டுகளில் கால இடைவெளியில் பல திட்டங்கள் – திடீர் அறிவிப்புகள் – வரி விதிப்புகள் இருந்ததை போல இல்லாமல் — தற்போது குறுகிய காலத்தில் அறிவிப்புகள் வந்து குவிந்து விடும் என்பது கூட நடக்கலாம் — உரு மாறப்போகிற புதிய இந்தியாவை எதிர் கொள்ளத்தான் வேண்டும் …!!!

 8. bandhu சொல்கிறார்:

  தமிழக தேர்தல் முடிவுகள் மிக புதுமையாக இருக்கிறது .

  திமுக பெரும்பான்மையான பாராளுமன்ற தேர்தலில் வெற்றி …
  காங்கிரஸ் நாட்டிலேயே இரண்டாவது அதிக தொகுதிகளில் வெற்றி…
  அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி. கூட்டாளி தேசிய அளவில் வெற்றி..
  பிஜேபி தோல்வி என்றாலும் தேசிய அளவில் ஆட்சியை பிடித்திருப்பதால் கட்டமைப்பை உருவாக்கும் வாய்ப்பு ..

  எல்லாவற்றையும்விட, வெற்றி பெற்றும் அமைச்சர்களாகும் யோகம் இல்லாதது! பெரிதாக சம்பாதிக்க முடியாது!

 9. Selvarajan சொல்கிறார்:

  // ஆரம்பித்தது அட்டூழியம்.. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்.. ம.பி.யில் //

  Read more at: https://tamil.oneindia.com/news/delhi/muslim-youths-thrashed-by-self-styled-gau-rakshaks-351880.html … ஒரு கை ஓசை –இரு கை ஓசை எல்லாம் தேவையில்லை — கம்பு இருந்தாலே போதுமானது …?

  • புதியவன் சொல்கிறார்:

   Thatstamil யாரால் நடத்தப்படுகிறது, எப்படி பணம் வாங்கிக்கொண்டு செய்திகள் வெளியிடப்படுகின்றன, அதன் குழும்ம் என்ன என்பதை நான் அறிந்து வைத்திருப்பதால் மதக்கலவரத்துக்காக அவர்கள் திட்டமிட்டுப் பரப்புபவைகளை நான் நம்புவதில்லை. மேற்குவங்கத்தில், தமிழகத்தில் நடப்பவைகள் காணொளியாக வருகின்றன.

   மத சம்பந்தமாக யார் அதீதமாக நடந்துகொண்டாலும் அது தவறுதான். இதில் மூன்று மதங்களுக்கும் நிறைய பங்கு உண்டு. பாஜக ஆட்சியில்தான் இந்துக்கள் என்ற போர்வையில் ரௌடிகள் இந்த மாதிரி சில இடங்களில் நடந்துகொள்வதைப் படிக்கிறேன். துரதிருஷ்டவசமாக இவர்களை இந்து அரசியல்வாதிகளும் பாமர இந்துக்களும் ஆதரிப்பது வருந்தத்தக்கது, கண்டிக்கத் தகுந்தது.

   • Selvarajan சொல்கிறார்:

    அடச்சே …!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    // இதில் மூன்று மதங்களுக்கும் நிறைய பங்கு உண்டு. மத சம்பந்தமாக யார் அதீதமாக நடந்துகொண்டாலும் அது தவறுதான்.//

    இந்த கருத்தை நான் ஏற்கிறேன். வெறி பிடித்தவர்கள் 3 மதங்களிலும் இருக்கிறார்கள் என்பது உண்மையே.
    அதிகாரத்தில் இருக்கும் கட்சியினருக்கு இதில் கொஞ்சம் அதிகப்படியான பங்கு இருக்கிறது.
    “சந்தர்ப்பங்களை” உருவாக்குவதிலும், கிடைத்த சந்தர்ப்பங்களை “Exploit” செய்து பயன்படுத்திக்
    கொள்வதிலும் இவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள்…

    “ராபீஸ்” நோய்/வெறி பிடித்த நாய்கள் – அவற்றை மற்றவர்க்கு பரப்புவது போல்,
    இந்த வெறி’யாளர்கள், தங்கள் தொடர்பில் இருப்பவர்களுக்கெல்லாம் இந்த வெறி’யை
    பரப்பு முயல்கிறார்கள்…

    இத்தகையோரை அடையாளம் கண்டுகொண்டு,
    இந்த வெறி’யாளர்களை – ஒதுக்கி வைப்பதிலும், அடக்கி வைப்பதிலும்,
    அந்தந்த சமூகத்தைச் சேர்ந்த மதப்பெரியவர்கள் அக்கறை எடுத்துக்கொண்டு
    செயல்பட வேண்டும்.

    இவர்களை வளர விட்டால், தங்கள் மொத்த சமுதாயத்திற்கும் ஆபத்து
    என்பதை உணர்ந்து, அந்தந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இவர்களை
    புறந்தள்ள வேண்டும்.

    நாட்டில் அமைதியும், ஒற்றுமையும் வளர வேண்டுமானால்,
    அனைத்து மதத்தினரும் இதில் அக்கறை காட்ட வேண்டும்.
    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இதில் அதிக பொறுப்பு இருக்கிறது.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    // Thatstamil யாரால் நடத்தப்படுகிறது //

    -இதைத் தெரிந்துகொள்ள நான் எடுத்த முயற்சிகள்
    பலன் தரவில்லை…. அவசியம் தெரிந்துகொள்ள
    விரும்புகிறேன்.

    வதந்திகளை செய்தியாக்குவதிலும்,
    செய்திகளை “அதிர்ச்சித் தகவல்”களாக்குவதிலும் –
    இந்த நிறுவனத்திற்கு இருக்கும் பங்கை
    நானும் கவனித்துக் கொண்டு தானிருக்கிறேன்.

    உங்களுக்கு தெரிந்த உண்மைகளை சொல்லுங்களேன்.
    ஆதாரபூர்வமானதாக இல்லா விட்டாலும் பரவாயில்லை.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 10. Rahim சொல்கிறார்:

  பிஜேபி வென்றாலும் பக்தாக்களை பதட்டப்பட வைக்கும் கவலைகள்!

  1. இது ஒன்றும் புது அரசு இல்லை. 2014 ன் தொடர்ச்சிதான். இவர்கள் என்ன செய்வார்கள் என பிஜேபி எதிரணிக்கு பழக்கம்தான். உண்மையில் இவர்களை எதிர்கொள்ள எதிரணிக்கு ஆற்றலும் அனுபவமும் அதிகம்.

  2. ஒடுக்கபட்டோருக்கு குரல் கொடுக்கும் திருமா, சுப்பராயன், வெங்கடேசன், தமிழச்சி, ரவிக்குமார் போன்றோர் கடந்த அதிமுக பொம்மைகளை விட வீரியமான உறுப்பினர்கள். இது ஒரு பார்லியை பதற வைக்கும் ட்ரீம் டீம்.

  3. இந்திய இந்து மயமாகிறது என்பது அளவுக்கு மீறிய கற்பிதம். இந்துத்துவம் ஓரளவு ஓட்டுக்களை பெற்று தந்தது என்பதை தவிர மிதமிஞ்சிய பயம் தேவை இல்லை. வடஇந்தியாவில் பதிவான வாக்குகளே 50 முதல் 55 சதமே. பாதி நபர்கள் வாக்களிக்க வில்லை. அதில் (50 இல்) 30 முதல் 40 சதம் மட்டும் BJP நிரந்தர வாக்கு வங்கி. BJP வாங்கியது 50 சதம். அதாவது மேலதிகமாக 10 சதவீத நடுநிலை வாக்குகள் சென்றுள்ளன. மீதம் 50 சதம் எதிர்வாக்குகளே. 10 சதம் நடுநிலை வாக்குகள் திரும்ப வெல்லவும் 50 சத எதிர் வாக்குகள் ஒருமுகப்படுத்தவும் ஒரு உத்தி மட்டும் தேவை. இந்தியா இன்னும் ஒரு பன்முக நாடுதான்।

  4. இந்துத்துவமும் தேசிய வெறியும் ஓட்டுக்களை வாங்கி தந்தாலும், தேசிய பிரச்சனைகளான வேலை வாய்ப்பும், விவசாய அழிவும் இந்த அரசை தாக்கும். இந்துத்துவம் நீண்ட நாளைக்கு மக்களுக்கு சோறு போடாது. இந்திய பொருளாதாரம் இதை தெளிவாக உணர்ந்துள்ளது. கூர்ந்து கவனித்தால் பங்கு சந்தை இதை எதிரொலிப்பதை காணலாம். BJP மிருக பெரும்பான்மை பெற்ற 23-May அன்று, முன்காலத்தில் நடக்காத அளவு பங்குச்சந்தை ‘தேமே’ என உயராமல் இருந்தது. ஆனால் நிபுணர்கள் 10 டு 15 சதம் உயருமென கணித்திருந்தார்கள்.

  5. இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கோட்ஸேயின் கொடூர வரலாறு, சுதந்திரப்போரில் BJP ன் பங்கு, கேடி அண்ட் அல்லக்கைகள் அறிவுக்கூர்மை (கேன்சருக்கு மூத்திரம், மேகமூட்டத்தில் ரேடாரில் தப்புவது, இத்யாதி) ஒரு பொது விவாதத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான விவாதங்கள் மூலம் பலரும் விழிப்படைய ஒரு வாய்ப்பு.

  6. BJP ஆதரவாளர்களுடன் என்னுடன் உரையாடலில், BJP மேலுள்ள அபிமானத்தை விட காங்கிரஸ் மேலான கடுமையான வெறுப்பே இவர்களை BJP ன் பால் இழுக்கிறது. காங்கிரஸ் மாற்று தலையெடுக்கும்போது, BJP யை ‘வேறு வழியில்லாமல்’ ஆதரிக்கும் இவர்களில் பலர் BJP யை கழற்றி விடுவார்கள். காங்கிரஸுக்கு முட்டு கொடுப்பதை காங்கிரஸ் அபிமானிகள் நிறுத்த தொடங்கினால் இது இன்னும் விரைவில் சாத்தியமாகும்.

  • புதியவன் சொல்கிறார்:

   //கோட்ஸேயின் கொடூர வரலாறு, சுதந்திரப்போரில் BJP ன் பங்கு, கேடி அண்ட் அல்லக்கைகள் அறிவுக்கூர்மை// – இதைச் சொல்லும்போது, காங்கிரஸின் சீக்கிய கலவரம், கோவை , பெங்களூர் மற்றும் ஏகப்பட்ட இடங்களில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகள், மும்பை கலவரம்-அதற்கு ஒரு எதிர்வினையும் காட்டாத (முஸ்லீம்களின் வாக்குகள் போய்விடுமே என்று) காங்கிரஸ், லட்சக்கணக்காண கோடி ரூபாய் ஊழல் செய்த காங்கிரஸ், திமுக, பிரிவினையின்போது முஸ்லீம்கள் நடந்துகொண்டவிதம்,, இவையெல்லாம் உங்களுக்கு சவுகரியமாக மறந்துபோகும். காசினிக் கீரை கான்சர் முதற்கொண்டு எல்லாவற்றையும் சரிப்படுத்தும் என்று சொல்லி கோடீஸ்வரரான இஸ்லாமியர்கள் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. “மதம்/சாதி” சம்பந்தமாக கா.மை. சார் குறிப்பிடவேண்டாம் என்று எப்போதும் சொல்வதால் மற்றவர்கள் தவிர்ப்பதால், அதனைச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டாம். தவ்ஹீத் ஜமாதின் இலங்கைப் பிரிவு சமீபத்தில் நடத்தியவைகள் உங்களுக்குத் தெரியும். அதனைப்பற்றி யார் தமிழகத்தில் விவாதித்தார்கள்?

   ரஹீம்…. I respect your views, but views from one community is always same and they are always biased.

   • புதியவன் சொல்கிறார்:

    இன்றைக்கு ஜப்பார் டிராவல்ஸில் பயணித்தேன். அதில் வேலை செய்பவர்கள் பேசிக்கொண்டது, பாஜக ஈவிஎம்மினால் வென்றது என்று. அப்போ தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா – அதைப்பற்றிப் பேசும்போது மக்கள் பாஜகவை ரிஜெக்ட் செய்தார்கள் என்று பேசுகிறார்கள். They want to believe what they are taught to believe.

    காங்கிரஸ் மீதான வெறுப்பு – எதனால்? 10 வருடங்கள் ஆட்சி புரிந்தார்களே.. உங்கள் வாதத்தில் பாஜக மட்டும்தான் வளர்ச்சிக்கு அடிகோலவில்லை, வேலைவாய்ப்பு என்றெல்லாம் குற்றப்பத்திரிகை வாசிக்கிறீர்களே.. காங்கிரஸ்+திமுக ஆட்சி ஊழலுக்கு என்றே வாழ்ந்த ஆட்சி அல்லவா?

    “ஒடுக்கப்பட்டவர்கள்” யார்?

    நீங்கள் சொன்னதில் ஒரு பாயிண்ட்தான் ரெலவண்ட். மக்களுக்கு முதலில் வேலை வாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் வேணும். ஜி.எஸ்.டி. குளறுபடிகள் சரிசெய்யப்படணும். தமிழகத்துக்கு பாஜகவினால் (காங்கிரஸ், திமுகவைப்போல) தேசியப் பிரச்சனைகளில் பிரயோசனம் கிடையாது (காவிரி நீர் போன்று). தமிழகம் ஹைட்ரோகார்பன் போன்ற விஷயங்களில் தீவிரமாக எதிர்வினையாற்றணும். இதில் திமுகவை நம்ப முடியாது. அணு உலை, ஸ்டெர்லைட், கெயில் , நீட் போன்றவைகளை கொண்டுவந்தவர்கள் அவர்களே, திமுக எதிர்க்கும் பிறகு கூட்டணி சேரும்.

    திமுக இப்போது காவிரி பிரச்சனை வரும்போது, காங்கிரஸை மிரட்டி காவிரி நீரை தமிழகத்துக்குப் பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்.

 11. தச்சை பழனி சொல்கிறார்:

  *2019 தேர்தல் கண்ணோட்டம்*

  *நடிக்கத் தெரிந்தாலே போதும் வெற்றி பெறலாம்*

  *தமிழகம் தவிர்த்து வட, தென் இந்தியாவில் கருத்துக் கணிப்பை மீடியாக்கள் மூலம் வெளியிட்டு அதை சாதித்து காட்டிய மோடி அமித்ஷா கூட்டணி*

  *ஆம்.இந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் என்னைப் பொருத்தமட்டில் எதிர்ப் பார்த்தது தான்.கடந்த வருடமே மீண்டும் மோடி தான் இந்தியாவின் பிரதமராவார் என்று இந்தியவின் வாக்களிக்கும் மக்களை விட வெளிநாடுகள் யூகித்து விட்டன.இதிலும் முஸ்லீம் நாடுகள் உட்பட.எனக்கும் வெளிநாட்டு நண்பர் கொடுத்த தகவலின் படியே அன்றே நான் இணையங்களில் ஒரு கட்டுரை எழுதினேன்.ஆனாலும் மோடி அவர்கள் இந்திய மக்களுக்கு நல்லது செய்தததை விட கெடுதல் தான் செய்து வந்திருக்கிறார்.அதனால் வரும் தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று நானும் நம்பினேன்.ஆனால் நடந்தது வெளிநாட்டினர் கூறியது தான் நடந்தது.எப்படி இந்தியாவில் ஒரு வருடத்திற்கு பின்பு நடக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அவர்கள் யூகித்தனர்.இதை எதிர்க்கட்சியினர் தீவிரமாக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்*

  *இந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றியவை:-*

  *1) மோடி அமித்ஷா அவர்களின் தந்திரங்கள்*

  *2) 2014 ல் ஆட்சிக்கு வந்தவுடன் நம்மை கேள்வி கேட்கும் அதிகாரம் படைத்த அமைப்புகள் உச்ச நீதிமன்றம்,சிபிஐ,வருமானவரித்துறை,அமலாக்கத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் இவற்றையெல்லாம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்*

  *3) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்,நீதிபதிகளை மிரட்டுவது,தனக்கு சாதகமான வழக்குகளில் தங்களால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் மூலம் விசாரிக்க வைத்து தீர்ப்புகளை சாதகமாக்கினர்*

  *4) சிபிஐ யில் தனக்கு வேண்டியவர்களை (குற்றப் பின்னணி உள்ளவர்களையும்)நியமித்து எதிர்கட்சியினரை மிரட்ட பயன்படுத்திக் கொண்டனர்*

  *5) வருமான வரித்துறை அமலாக்கத்துறை இவற்றை பயன்படுத்தி எதிர்க்கட்சியினர்களை மட்டும் வழக்கில் சிக்க வைத்து அவர்களை முடக்கினர்*

  *6) தேர்தல் ஆணையம் என்பதை தங்களது கட்சியின் அலுவலகமாகவே மாற்றி செயல்படுத்தி வந்தனர்.மோடி அமித்ஷா இவர்களின் கண் அசைவிற்கு நடனமாடினர்*

  *7) மத்திய அரசின் உயர் பதவியில் உள்ள அனைத்துத் துறை செயலர்களையும் தன் கட்சி பிரதிநிதிகளாக மாற்றினர்*

  *8) மீடியாக்களை நடத்தும் அனைவரையும் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.எந்த ஒரு மீடியாவும் மத்திய அரசின் திட்டங்களை விமர்ச்சிக்க பயந்தன.உலகத்திலேயே இந்திய மீடியாக்கள் மட்டும் தான் எதிர்க்கட்சிகளை மட்டும் விமர்ச்சித்தன.மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் தவறானதாக இருந்தாலும் அவை நல்லவை போல் விவாதம் செய்து மக்களை குழப்பினர்.மொத்தத்தில் இந்திய மீடியாக்கள் மோடி அமித்ஷா வீட்டு நாய்கள் போல் வாள் ஆட்டி பணிந்தன*

  *9) ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதிகளும் தங்களது ஆட்சியில் ஒரு போரை வெளிநாட்டினர் மீது நடத்தி தங்களது ஆதரவை மக்களிடம் பெருக்குவர்.அது போல் மோடி அவர்களும் இப்படி ஒரு செயலை செய்ய தன் கடைசி கால ஆட்சிக் கட்டத்தில் காஷ்மீர் மாநில ஆட்சியை கலைத்து மத்திய அரசாட்சி கொண்டு வந்து தாங்களே துணை ராணுவத்தினர் மூலம் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் மீது பழியை போட்டு பாகிஸ்தான் மீது போர் நாடகம் நடத்தி மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றனர்.அந்த தாக்குதலின் பின்னணி இது வரை யாருக்கும் தெரியாது*

  *10) தாங்கள் இந்திய மக்களின் காவலன் என்ற இமேஜை மக்கள் நம்புபடி கொண்டு சேர்த்தனர்*

  *11) இந்த ஐந்து வருட காலத்தில் தான் தீவிரவாதி தாக்குதலால் நிறைய காஷ்மீர் மக்களும் ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர்.ஆனால் இதை வெளிக்காட்ட இந்திய மீடியாக்கள் மறுத்தன.இதுவரை இந்திய மீடியாக்கள் மோடி பாத்ரூம் போவதை மட்டும் தான் காட்ட வில்லை*

  *12 எங்கெல்லாம் சென்றாரோ அங்கு மக்கள் பயன்படுத்தும் துணைமணிகளை உடுத்தி தானும் உங்கள் ஆள் என விளம்பரப்படுத்தினார்*

  *13 மக்களின் சென்டிமெண்ட் ஆன விசயங்களை மதம் மற்றும் பாதுகாப்பை அவ்வப்போது பயன்படுத்தினார்.இறுதி வெற்றிக்கும் இவையும் ஒரு காரணம்.நாம் பிரச்சாரங்களில் பார்த்திருக்கலாம்*

  *14) இவர் ஆட்சியின் சாதனைகள் என ஒன்றைக்கூட கூறி வாக்கு சேகரிக்க வில்லை.மாறாக எதிர்க்கட்சியினரை தாக்கியேவும் மதம் சம்பந்தமான பிரச்சனைகளையும் பாகிஸ்தான் போர் எனவும் இப்படியே பேசி வெற்றி கண்ட முதல் இந்தியப் பிரதமர்.அதற்கு எனது வாழ்த்துக்கள்*

  *15) மோடி வெற்றிக்கு முக்கிய காரணிகளில் ஒன்று எதிர்க் கட்சியினர் ஒற்றுமையின்மையே.அது அவருக்கு பெரும் பலமாக இருந்தது.எதிர்க் கட்சியினரையும் ஒன்று சேர விடாமலும் பார்த்துக் கொண்டார்.எதிர்க்கட்சியினர் சிலர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு யார் ஆட்சிக்கு வரக்கூடாது என போராடினார்களோ அவர்களுக்கு வெற்றியை தானாகவே மோடிக்கு வாரி வழங்கியுள்ளனர்.தோல்விக்குப் பின் எதிர்க்கட்சியினரின் புலம்பல் நன்றாக தெரிகிறது*

  *16) மக்களை ஈசியாக கவரும் நடிகர்களுக்கு தானும் நெருக்கமானவன் என்பதை தனது சுய புகைப்படங்கள் மூலம் மக்களை ஏமாற்றவும் பயன்படுத்தினார்*

  *17) அனைத்து மக்களின் கையில் இருக்கும் செல்போன்களை எப்படி தனது விளம்பரைத்ததை கொண்டு செல்ல வேண்டும் என்ற நுட்பத்தை அறிந்து செயல்படுத்தினார்*

  *18) தனக்கு எதிராக போராடியவர்களை இருக்கும் இடம் இல்லாமல் செய்தார்.(அய்யாக் கண்ணு,முகிலன்)*

  *19) எங்கு எப்படி போராட்டம் நடந்தாலும் அதை ஈசியாக எதுவும் செய்து கட்டுப்படுத்தினார்.உதாரணமாக தமிழகத்தில் 35000 போராட்டங்கள் சில காலங்களில் நடந்தன இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பது போல் பொதுமக்களை சுட்டு வீழ்த்தி இன்று தமிழகத்தில் போராடுபவர்களை எச்சரித்தும் கட்டுப் படுத்தியும் வைத்துள்ளார்*

  *20) இந்தியவின் முதுகெலும்பான விவசாயம் செய்யும் விவசாயிகள் போராடியும் அவர்களுக்கு எந்த பலனும் தராமல் வெற்றி பெற்றுள்ளார்.விவசாயிகளை கார்பரேட் முதலாளிகள் மூலம் கட்டுப்படுத்தினார்*

  *21) தனது படங்களை தொழிலதிபர்கள் மூலம் விளம்பரப்படுத்தினார்.அவர்கள் மோடி படம் போட்ட சேலை செயின் பனியன்கள் இனிப்பு வகைகள் இப்படி பல வழிகளில் அவரை விளம்பர்படுத்தினர்*

  *22) பாஜக வில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சி வளர நடவடிக்கை எடுத்தனர்.முக்கியமாக மூத்த தலைவர்களை ஓரம் கட்டினர்*

  *23) பாஜக வின் ஐடி விங் என உருவாக்கி அதில் லட்சக்கணக்கில் இளைஞர்களை நியமித்து (ஊதியத்துடன்) தனது ஆட்சி சாதனைகளை பரப்புவதை விட அந்தந்த மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளின் குறைகளை கடுமையாக விமர்ச்சித்து மக்களிடம் கொண்டு சென்றனர்*

  *24) உலக நாடுகளிடம் தன்னை பெரிய சக்தி என நிருபிக்க அடிக்கடி வெளிநாட்டு பயணம் செய்தார்.மேலும் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும் இந்திய தொழில் அதிபர்களை அழைத்து சென்று அவர்கள் அங்கு தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தினார்.அதன்பலனாக தொழில் அதிபர்கள் இந்திய மீடியாக்களையும் கவனித்துக் கொண்டனர். பாஜக வுக்கு அதிக நிதியும் மோடி விளம்பரத்திற்கான செலவையும் ஏற்றனர்*

  *25) மொத்தத்தில் சாதனைகள் செய்யாமலே பொய் பிரச்சாரம் சென்டிமெண்ட் பேச்சு போர் எதிர்க்கட்சியினரை தரம் தாழ்ச்சி விமர்ச்சனம் இவருக்கு கை கொடுத்தது*

  *26) வட இந்தியர்களின் படிப்பறிவின்மையை பயன்படுத்தி அவர்களை ஈசியாக ஏமாற்றி ஆட்சி நடத்தியும் மீண்டும் நடத்தவும் வந்து விட்டார்*

  *27) பாமர மக்களின் படிப்பறிவின்மையை பயன்படுத்தி வாக்கு பதிவில் நிறைய தில்லுமுல்லு வேலைகளை அவரது கட்சி பிரதிநிதிகள் செய்தனர்.இதற்கு தேர்தல் ஆணையம் காவல் காத்தது*

  *28) இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் என்பதால் தான் அவர்களின் காவலன் என்பதை கூறி அவர்களை பல வழிகள் ஊக்கப்படுத்தினார்*

  *29) ஒரு கட்சி மாற்றுக்கட்சியினரைத் தான் தன் கட்சிக்கு கொண்டு வரும்.ஆனால் இது வரை உலகில் யாரும் செய்ய முடியாத ஒன்றை மோடியும் அமித்ஷாவும் செய்தனர்.ஆம் மாற்றுக் கட்சியையே கைப்பற்றி இருக்கிறார்கள்(அதிமுக) இது பெரும் சாதனை*

  *இவையாவும் மோடியின் மீண்டும் வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக நான் கருதுகிறேன்*

  *நாளை காங்கிரஸ் தோல்விக்கு காரணம் பற்றி காணலாம்*

  • புதியவன் சொல்கிறார்:

   //*நடிக்கத் தெரிந்தாலே போதும் வெற்றி பெறலாம்*// – நீங்கள் ‘நமக்கு நாமே’ ஷூ காலில் வயல்களில் நடந்தது, வீட்டு உணவை ஹோட்டலில் சாப்பிட்டது, பட்டுப் புடவைகளுடன் இருக்கும் விவசாயப் பெண்களிடம் வயலில் விசாரித்தது, வயநாட்டைத் தேர்ந்தெடுத்து, ராகுல், பிரியங்கா திருப்பதி கோவிலுக்குச் சென்றது – இவையெல்லாம் பற்றிச் சொல்லப்போறீங்கன்னு நினைத்தேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தச்சை பழனி,

   மிக விவரமாக, ஆழ்ந்து – அலசி இருக்கிறீர்கள்.
   100 சதவீதம் அப்படியே ஏற்க முடியாதென்றாலும் கூட –
   நீங்கள் சொல்லி இருக்கும் பல கருத்துகள் ஏற்கத்தக்கவையே.

   உங்கள் பின்னூட்டத்தில் சொல்லப்படும் கருத்துகளை
   வேறு எங்கேயாவது கண்டீர்களா… தொகுத்தீர்களா…?

   இவ்வளவு நாட்களாக நீங்கள் ஏன் இங்கு எழுதவில்லை…?
   நீங்கள் அவசியம் இங்கு விவாதங்களில்
   பங்கு கொள்ள வேண்டும்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 12. Selvarajan சொல்கிறார்:

  ஒன் இந்தியா தமிழ் மற்றும் சில மாெழிகளில் வருகிற செய்தித்தாள் அதைப்பற்றி // Oneindia.com is an Indian online portal founded by BG Mahesh,[3][2] owned by Greynium Information Technologies Pvt Ltd. The website provides news updates, sports events, travel, entertainment, business, lifestyle, videos, and classifieds in seven different Indian languages and English. Sriram Hebbar is the CEO of Greynium, BG Mahesh is the managing director.[5] // இது விக்கி தகவல்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன்,

   நீங்கள் தந்துள்ள தகவல்களுக்கு நன்றீ.

   ஆனால், உண்மையில் இதில் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்,
   யாரால் அல்லது எந்த அமைப்பினால்
   ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்பதை கண்டுபிடிக்க
   முடியவில்லையே…

   அது குறித்து எதாவது…. சொல்ல முடியுமா…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! Greynium Information Technologies Pvt. Ltd. owns and operates online portals. It offers Oneindia, an Indian language local news portal என்பதின் பவுண்டர்மற்றும் மேனேஜிங் டைரக்டர்- டைரக்டர் திரு எம்.ஜி மகேஷ் என்பவரை பற்றி { Mr. B. G. Mahesh
    Founder, Managing Director and Director }

    // B.G. Mahesh: The  techie behind Narendra Modi’s campaign // https://www.livemint.com/Specials/lxyNHaAf3M6ggR2LklebYP/B-G-Mahesh-The-techie-behind-Narendra-Modis-campaign.html இதில் உள்ளவற்றை அப்படியே தமிழாக்கம் செய்து பதிவிட்டால் — ” வாய் புளித்ததோ — மாங்காய் புளித்ததோ ” என்று எழுகின்றவர்களுக்கு புரியாததெல்லாம் புரியும் .. !!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     மிக்க நன்றி செல்வராஜன்.

     நல்ல தகவலைத் தந்திருக்கிறீர்கள்.
     இதைப்படித்த பிறகு தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.
     2014 தேர்தல் முடிந்தபிறகு, மோடிஜியின் வெற்றிக்கு பின்னணியாக
     இருந்தது யார் .. எது… என்று நாம் ஒருமுறை
     இவரை முன்வைத்து விவாதம் செய்திருக்கிறோம்
     என்று நினைக்கிறேன்… முழுவதுமாக நினைவிற்கு
     வரவில்லை…

     சரிதான் –
     அப்படியானால், இந்த ஆசாமி தான் ஒன் இண்டியா வா….!!!

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

    • Selvarajan சொல்கிறார்:

     பின் குறிப்பு : இது பழைய செய்தி என்றாலும் திரு.மகேஷ் பற்றி அறிய உதவும் ..!

 13. Selvarajan சொல்கிறார்:

  // மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக மூன்று பேர் மீது தாக்குதல் // https://tamil.thehindu.com/india/article27246658.ece .. இந்த பத்திரிகையும் கூட ஒன் இந்தியா தமிழ் என்கிற பத்திரிக்கை இனத்தோடு சேர்ந்தாலும் ஆச்சர்யமில்லை ஒரு சிலர் பார்வையில் … ! வீடியோ வைரலாகி ஊர் சிரித்த பின்னும் சப்பைக்கட்டு கட்டுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது — ?

  • புதியவன் சொல்கிறார்:

   செல்வராஜன் – இந்தச் செய்தியைப் படித்தேன். எது இந்த மாதிரி குழுக்களை/சிறு கட்சிகளை (‘முன்னணி’ என்று வைத்திருப்பதெல்லாம் கட்சி என்ற கேடகரியில் வருமான்னு தெரியலை) தடை செய்ய முடியாமல் இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த மாதிரி செய்கைகள்தான் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும். என்னைப் பொறுத்தவரையில் இவர்களெல்லாம் சமூக விரோதிகள், குண்டர் சட்டத்தில் அடைக்கப்படத் தகுந்தவர்கள்.

   மசூதிக்குள் வாக்கு கேட்டு அதிமுக, பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததால் வரக்கூடாது, டெரரிசம் செய்கின்ற ‘தவ்கீத்’ போன்றவைகளோடு, இந்த மாதிரி ‘மாட்டிறைச்சி’ தாக்குதல், ‘காதலர் தின தாக்குதல்’ நடத்தும் ‘சிறு கட்சிகளையும்’ , மதத்தை அரசியலில் கொண்டுவரும் கிறித்துவக் குழுக்கள் எல்லாவற்றையும் உடனடியாக தடை செய்யவேண்டும், ஜாகீரை தடை செய்ததுபோல. சமூகத்தில் fire brand speech மதத்தை, நம்பிக்கையை முன்னிறுத்திச் செய்பவர்களை, தி.க முதற்கொண்டு, உடனடியாகத் தடை செய்யவேண்டும். இதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை.

 14. Gopalasamy சொல்கிறார்:

  Sir,
  Nowadays I am not participating mostly in discussions and comments due to my poor health and age. But when I read one comment, that too referring to point number 9, I am forced to write my opinions. If you feel it is against your policy, please delete it.
  At the outset, I want to say in reality there are two different worlds are coexisting.
  One world comprises of the elite, liberals, intellectuals, scholars, opinionated , highly educated, striving hard for the welfare of the country, sacrificing their life without expecting any financial benefits from any corner. The list is big. It includes , Pranab Rai, Raj Sardeep Desai, Barqa Dutt, Karan Thapar, Kunal Kamra, Dhruv Rathee, Ravish Kumar, Sagarika Ghose, Kanhaiya, Umar Khalid, KMji, Sumanth Raman , portal magazines like, Quint, Scroll, Print, Wire and Vinavu and some more bloggers.
  The other world comprises of people like me with less IQ/Less Educated/ illiterate people, with whose support BJP won the elections.

  The first group people think that Modi should be ousted from power to save democracy, save constitution, save social fabric of our country. Rahul Gandhi is the best person to lead the country or otherwise a coalition with third front.

  The other group wants that Modi should lead the country to provide a stable, secured, corrupt free government reacting to terror acts.

  After elections are over nearly eight BJP workers were killed in various states. So far Intellectuals did not object it. Whether it is Palani Manickam murder or any BJP worker murder, they keep quiet. Can we presume, they support the murders in the larger interest of our country?

  Right from Panchayath polls in west Bengal to the protection of Rajeev Kumar and lok saba elections , we feel, Mamtha’s acts are not democratic. But elite group feels otherwise.

  I was surprised to read a comment stating that Modi arranged to kill forty soldiers for election benefit. I was more astonished that you did not object the statement categorically. We the less IQ people don’t want to subscribe that theory. I don’t want to degrade our PM to that level. Height of hatred ness, height of hypocrisy.
  I want to compare of two different fans. The elites are like Sathayjith Rai’s fans. They are having all statistics, proof, evidence and logical thinking .
  We less IQ people are like the fans of MGR. we have trust and belief in Modi’s government without any logical thinking.
  Both worlds are existing.
  The intellectuals are showing the lead, guide the world with their experience and vast knowledge and skill , including the gentleman blamed Modi for the terror attack.
  But all is not lost. As a silver lining, Tamil Nadu, Kerala out rightly rejected BJP. there is an increase of 8% seats in L.S elections for INC. But Contrary to Stalin’s expectations, Sadist, Cheat, Hitler, Tyrant Modi came back to power.

  Without mentioning secularism, the answer is not complete. Mohan Lasarus, Jawahurulla, Veeramani are the secularists for us. We are supporting to Tawheed Jamadh even if there is a doubt about their direct or indirect involvement in Srilankan blasts. But we are happily blaming directly Modi for Pulawama attack.

  As a person, who happened to hear the speeches after Friday sermon for a number of years, I could not accept Wahabism as secularism. But that may also be the proof for my ignorance.
  I wish the elites should get success in their mission of Modi Hatao in future. Still 60% of people are with them , but not as a cohesive group.

  • புதியவன் சொல்கிறார்:

   //Still 60% of people are with them , but not as a cohesive group.// – Though this looks sarcastic, the truth is not so. If your statement is correct, 70 percent Indians are against Congress dynasty, 95 percent are against Muslim party,60 percent against DMK, and so on. போலி மதச்சார்பின்மை இருக்க இருக்க, ‘இந்துத்துவா’ கான்சப்ட் இன்னும் அதிகரிக்கும். போலி மதச்சார்பின்மைக்கு காரணமாக இருப்பவர்கள் தமிழகத்தில் வெற்றிபெற்ற கட்சிகள் மற்றும் காங்கிரஸ். எப்போ வாக்கு வங்கி என்ற ஒரே காரணத்துக்காக ‘சிறுபான்மையினர்’களை முழுவதும் ஆதரித்து, அவர்கள் சம்பந்தப்பட்ட தவறுகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறார்களோ, எப்போது இந்து மதத்தை மட்டும் எதிர்க்கிறார்களோ அப்போதே அவர்கள் ‘இந்து’ விரோதிகள் என்ற கேடகரியில் வந்துவிடுகிறார்கள்.

   One more point. In Kerala, BJP increased it’s vote share from 10 percent to 15 percent this time. They also rejected ‘Anti Hindu’ Communists.

   By and large, I am in line with your thinking Mr.Gopalasamy. Looks very logical and correct.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Gopalasamy ,

   வாயில் வந்ததை எல்லாம்
   வாந்தி எடுக்கும் இடம் இதுவல்ல.

   நீங்கள் எழுதியிருப்பதை அறியாமை
   என்று சொல்வதா அல்லது விஷமத்தனம்
   என்று சொல்வதா என்று எனக்குத்
   தெரியவில்லை.

   நான் சொல்லாத விஷயங்களையெல்லாம்,
   சொன்னதாக நீங்கள் எப்படி எழுதலாம் ..?

   உங்களுக்கு பிடித்தால் படியுங்கள்;
   பிடிக்கவில்லையென்றால் போய்க்கொண்டே
   இருங்கள் –

   நான் எதை எழுத வேண்டும்,
   எதை எழுதக்கூடாது என்று எனக்கு
   உத்திரவு போட நீங்கள் யார்…?

   “அடியேன் ஒரு கண்மூடித்தனமான
   பாஜக அடிமை” என்று நீங்களே
   சொல்லிக் கொள்கிறீர்கள்;
   ( We less IQ people are like the
   fans of MGR. we have trust and belief
   in Modi’s government without any
   logical thinking…)

   உளறலுக்கு ஒரு அளவே இல்லையா…?
   எந்தவித logical thinking –
   இல்லாமல் தான் பாஜக அரசை
   ஆதரிக்கிறேன் என்று சொல்பவருக்கு
   இந்த தளத்தில் விவாதிக்க என்ன அருகதை
   இருக்கிறது.

   தயவுசெய்து தெளிவான
   சிந்தனையோடு எழுதுவதாக இருந்தால்
   மட்டும் இங்கே பின்னூட்டம் எழுதுங்கள்.

   ( “இந்த கழுதை” இனி இங்கே
   பின்னூட்டம் எழுதாது என்று
   கடைசியாக நீங்கள் சொல்லி விட்டுச்
   சென்றது இன்னமும் எனக்கு
   நினைவிருக்கிறது….)

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s