அர்ஜுனன்….!!!கிருஷ்ணரும் அர்ஜுனனும்
பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தார்கள்.

அப்போது, வானத்தில் ஒரு பறவை பறந்துகொண்டிருந்தது.
கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.
அதை அர்ஜுனனுக்குக் காட்டினார்.
அவனும் அதைப் பார்த்தான்.
அர்ஜுனா, அது புறாதானே…? என்று கேட்கிறார் கிருஷ்ணர்.
ஆமாம், கிருஷ்ணா, அது புறாதான் என்கிறான் அர்ஜுனன்.

கொஞ்சம் கழித்து, ஆனா யோசிச்சு பார்த்தால், எனக்கென்னவோ
அந்தப் பறவை ஒரு பருந்துபோல் தெரிகிறது..என்கிறார் கிருஷ்ணர்.
அடுத்த விநாடியே, ஆமாம்….. ஆமாம்….
அது பருந்துதான் என்று சொல்கிறான் அர்ஜுனன்.

மேலும் சில விநாடிகள் கழித்து,
அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்
அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது
என்று கிருஷ்ணர் சொல்ல,
கொஞ்சமும் யோசிக்காமல், தாங்கள் சொல்வது சரிதான்….
அது கிளிதான் என்று சொல்கிறான் அர்ஜுனன்.

இன்னும் கொஞ்சம் நேரம் ஆனதும், அர்ஜுனா,
முதலில் சொன்னதெல்லாம் தவறு.
இப்போதுதான் தெளிவாகத் தெரிகிறது. அது ஒரு
காகம் தான் என்று சிரிப்புடன் கூறுகிறார் கிருஷ்ணன்.

நிஜம்தான் கிருஷ்ணா….. அது காகமேதான்.
கொஞ்சமும் சந்தேகமே இல்லை என்று
பதிலளிக்கிறான் அர்ஜுனன்.

அர்ஜுனா என்ன நீ, நான் சொல்வதை எல்லாம்
அப்படியே ஏற்றுக்கொள்கிறாயே….
உனக்கு என்று எதுவும் யோசிக்கத் தெரியாதா…?
என்று கிருஷ்ணர், கொஞ்சம்
கோபம் கொண்டவர்போல் கேட்கிறார்…

கிருஷ்ணா, என் கண்ணை விடவும் அறிவை விடவும்
எனக்கு உன்மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

நீ ஒன்றைச் சொன்னால் –
அது பருந்தோ, காகமோ, புறாவோ எதுவானாலும்
அதை – அதுவாகவே மாற்றும் ஆற்றல்
உன்னிடம் இருக்கிறது.

அதனால், நீ என்ன சொல்கிறாயோ
அது அப்படித்தானே இருக்க முடியும்.
தெய்வத்தின் வாக்கினைவிட வேறு எதன்மேல்
நான் நம்பிக்கை வைக்க முடியும்….?
என்று அமைதியாகச் சொல்கிறான் அர்ஜுனன்.

முயற்சி, மற்றும் உழைப்பின் மீது மட்டும் தான்
நமக்கு உரிமை இருக்கிறது…
அதன் முடிவிலும், பலனிலும் அல்ல…
அதை தெய்வம் பார்த்துக் கொள்ளும்…

—————————————————–

பகவத்கீதை
.2.ஸாங்கிய யோகம் ….

47. கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி

பொருள் : தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு.
அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை.
செய்கையின் பயனைக் கருதாதே;
தொழில் செய்யாமலுமிராதே.

—————————————————–

இதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு மனம் பக்குவம்
பெற்று விட்டால் – நிம்மதியும் அமைதியும் பெறலாம்…

ஆனால், அர்ஜுனனைப்போல எதையும் அவன்
பார்த்துக் கொள்வான் என்று விட்டு விடும் மனநிலை
எல்லாருக்கும் வருவது –

அவ்வளவு சுலபமா என்ன ….?

.
—————————————————-
பின் குறிப்பு –
கீதைக்கு நான் சொந்தம் கொண்டாட முடியுமா என்ன…?
கற்றது, கேட்டது, படித்தது, அனுபவித்தது –
இவற்றிலிருந்து புரிந்து கொண்டது தான்…!!!

.
————————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அர்ஜுனன்….!!!

 1. palaniappan சொல்கிறார்:

  iya ippa edukkaga ida sollauringa??? election result ikum idukkum edavatu ?????

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பழனியப்பன்,

   நான் தத்துவம் மற்றும் ஆன்மிகம் பற்றி இங்கு
   அவ்வப்போது எழுதுவது வழக்கம் தானே…?

   தேர்தல் முடிவுகளுக்கும் இதற்கும் எதாவது
   சம்பந்தம் இருக்குமென்று உங்களுக்கு தோன்றுகிறதா…?

   சில விஷயங்களை வாசக நண்பர்களின்
   யூகத்திற்கே விட்டு விடுவது தான் நல்லது
   என்று நான் நினைக்கிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  முயற்சி, மற்றும் உழைப்பின் மீது மட்டும் தான் நமக்கு உரிமை இருக்கிறது…
  அதன் முடிவிலும், பலனிலும் அல்ல…
  அதை தெய்வம் பார்த்துக் கொள்ளும்…

  தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு.
  அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை.

  சொந்த வாழ்க்கையில், நான் ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக விளைவை அனுபவிக்கும்போதும் இதைத்தான் நினைத்துக்கொள்வேன். எத்தனையோ வழிகளில் பலன் கிடைக்க வாழ்க்கையில் முயற்சிப்பேன். அத்தனை செய்தும் பலன் கிடைக்கவில்லை என்றால், ‘தெய்வ அனுக்ரஹம்’ இன்னும் வரவில்லை என்று நினைத்துக்கொள்வேன். (வேறு என்ன எண்ணி ஆறுதல் பெறுவது?)

  எம்.ஜி.ஆர் மறைந்தபோது, டர்புலன்ஸுக்குப் பிறகு ஜெ. உதித்தார். ஜெ. மறைந்தபோது (கடைசி 75 நாட்கள்) ரொம்பவும் கலக்கமாக இருந்தது. அப்புறம் காலம் நல்ல தலைவரைக் காட்டும் என்று எண்ணிக்கொண்டேன். காலம் தந்த தலைவர்கள் எம்ஜியார் அவர்களும் பிறகு ஜெ. அவர்களும். இனி? அதற்குக் காத்திருக்கத்தான் வேண்டும்.

 3. c.venkatasubramanian சொல்கிறார்:

  excellent quote nandri

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s