திரு.நிதின் கட்கரி அவர்களுக்கு “மலர் மாரி” பொழிந்து தமிழக மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள் …. !!!


” தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர
கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது
முதல் வேலை” என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி
தெரிவித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தின் தண்ணீர் தேவையை நிறைவேற்ற கோதாவரி – காவிரியை முதலில் இணைப்போம்! – நிதின் கட்கரி அறிவிப்பு

May 26, 2019 in Breaking News –

சென்னை: தேர்தல் முடிந்து பாஜக அரசு அபார
பெரும்பான்மையுடன் மீண்டும் பதவி ஏற்க உள்ள நிலையில்,
மத்திய நீர்வளத் துறை அமைச்சரான நிதின் கட்கரியிடம்,
அடுத்து வரும் அரசின் பொதுவான திட்டம் என்ன என்று
ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் கேட்கப்பட்டது. அதற்கு
பதிலளித்த நிதின் கட்கரி, “ஆண்டுதோறும் கோதாவரி நதியில்
இருந்து 1100 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது.
தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே தண்ணீருக்காக
மோதல் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவ்வளவு
தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இதற்கெல்லாம் கோதாவரி- கிருஷ்ணா-பென்னார்- காவிரி
நதிகளை இணைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை
தயாராக இருக்கிறது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.60 ஆயிரம் கோடி
செலவாகும். இதற்காக உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி
வங்கியில் இருந்து நிதி பெற திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தை
செயல்படுத்துவதன் மூலம் 4 தென் மாநிலங்களின்
தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்,” என்றார்.

————–

– திரு.நிதின் கட்கரியின் அறிவிப்பை தமிழக பாஜக
பெருமையுடன் வரவேற்றுள்ளது.
– பாஜகவுக்கு ஓட்டு போடாத தமிழகத்திற்கும்
முன்னுரிமை கொடுத்து, தண்ணீர் கொடுக்கும் தலைவரின்
பெருந்தன்மையை, (ஆனந்த) கண்ணீருடன் வரவேற்பதாகச்
சொல்லி இருக்கிறார்கள்….

இந்த வலைத்தள நண்பர்களும் முழுமனதோடு இந்த
அறிவிப்பை வரவேற்போம். கோதாவரி தண்ணீரை
தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியை உடனடியாக
துவங்குவார்கள் என்று எதிர்பார்த்து –

இந்த திட்டத்தை துவங்கி வைக்கும் நாளில்,
தமிழக மக்கள் “மலர்மாரி” பொழிந்து,
திரு.நிதின் கட்கரியை வரவேற்பார்கள் என்பதில்
எந்தவித ஐயமும் இல்லை…..

—————————————————–

என்ன –
– காலநேரம் தெரியாமல் –
சில பழைய அறிவிப்புகள் இந்த சமயத்தில் நினைவிற்கு
வந்து நிம்மதியைக் கெடுத்து விடுகின்றன…

———————————
இது –

இது ஆகஸ்ட், 7, 2018 – அன்று
பாராளுமன்றத்தில் எழுத்து மூலமாக கொடுக்கப்பட்ட -வாக்குறுதி –

————–

நடப்பு நிதியாண்டுக்குள் கோதாவரி – காவிரி உள்ளிட்ட
5 நதிகள் இணைப்புத் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்

——-
நடப்பு நிதியாண்டுக்குள் கோதாவரி – காவிரி உள்ளிட்ட 5 நதிகள்
இணைப்புத் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று
மத்திய நீர் ஆதாரம், நதிநீர் வளர்ச்சி, கங்கை புனரமைப்புத்
திட்டத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது
உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து
மத்திய அமைச்சர் நிதி கட்கரி இவ்வாறு கூறினார்.

————————————————

இது – ஆகஸ்ட் 21, 2018 -ல்

Sathiyam News
Published on Aug 21, 2018-

——————————————————–

இது – ஜனவரி 21, 2019 -ல் –

Polimer News
Published on Jan 21, 2019-

———————————————————

.
இருந்தாலும், நம்பிக்கையோடு இருப்போம்.

நல்லது நடக்க வேண்டும்…
அதுவும் விரைவாக நடக்க வேண்டும் என்று வேண்டுவோம்.
திரு.கட்கரி அவர்களின் முயற்சி
விரைவில் வெற்றிகரமாக செயல்படத் துவங்க வாழ்த்துவோம்.

இந்த திட்டம் குறித்து விவரமாக தெரிந்துகொள்ள
வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன.
அவற்றை – பிறகு விவாதிப்போம்.

.
————————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திரு.நிதின் கட்கரி அவர்களுக்கு “மலர் மாரி” பொழிந்து தமிழக மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள் …. !!!

  1. Shahul Hameed N.S.M. சொல்கிறார்:

    நடந்தால் வாழி கட்காரி!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      Shahul Hameed N.S.M.,

      தமிழை, ரசனையுடன் எழுதி இருக்கிறீர்கள் …. வாழ்த்துகள்.

      உண்மை… நடந்தால் தான்… வாழி கட்காரி…!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. Selvarajan சொல்கிறார்:

    அய்யா … திரு கட்கரி நன்றாக கூறியுள்ளார் … இணைத்தால் நல்லது தான் … ! ” மனம் இருந்தால் மார்க்கமா இல்லை…?
    இதற்கு ஒரு மாற்றுத்திட்டமாக, அனைத்து மாநிலங்களும்
    ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ” நீர்வழிச்சாலை ” என்கிற அற்புதமான
    ஒரு யோசனையை தமிழகத்தின் ஓய்வுபெற்ற நீர்மேலாண்மை பொறியாளர்
    திரு.ஏ.சி.காமராஜ் அவர்களது குழு உருவாக்கி அதை நடைமுறைக்கு
    கொண்டு வர வேண்டுமென்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டு வருகிறது.” …
    என்று முந்தைய இடுகை ஒன்றில் தாங்கள் எழுதியுள்ளீர்கள் அதைப்பற்றி அறிய

    // அரசியல்வாதிகள் அற்புதமான இந்த யோசனையை ஏன் கவனிக்க மாட்டேனென்கிறார்கள்…?
    Posted on ஏப்ரல் 25, 2017 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2017/04/25/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE/

    // கோதாவரியில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர்
    வீணாக கடலுக்குப் போகிறது….. நதிகள் இணைப்பு என்பது ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு
    நீரை அனுப்பலாம்; ஆனால் திரும்பப் பெறமுடியாது. நவீன நீர்வழிச் சாலை
    திட்டத்தில், தேவைப்படும்போது நீரை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது.// ….. என்கிற பொறியாளர் திரு ஏ.சி.காமராஜ் அவர்களின் — அற்புதமான நீர்வழிச்சாலை திட்டத்தை இப்போதாவது பரிசீலனை செய்வார்களா …?

  3. புதியவன் சொல்கிறார்:

    தேன் என்று சொன்னாலே இனித்துவிடுமா? என்னைக் கேட்டால், நதி நீர் இணைப்புக்கு முன்னால், மாநில நீர் நிலைகளை தூர்வாரி, கரை எழுப்பி யாரும் சுரண்டா வண்ணம் செய்தாலே தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை வெகுவாகத் தீர்ந்துவிடும். 60,000 கோடியில் ஒரு 6,000 கோடியை இதற்குச் செலவழிக்கலாம். என்னைக்கு நதிகளை இணைத்து என்னைக்கு தமிழகம் வந்து.

    இந்த அறிவிப்பில் எனக்கு சந்தோஷம் வரவில்லை. ‘தேன்’ என்று சொல்லுகின்ற பேச்சாகத்தான் எனக்குத் தோன்றியது.

  4. கிரி சொல்கிறார்:

    நிதின்கட்காரி கோதாவரி நீரை குழாய் வழியாக கொண்டு வரப்போவதாக தெரிவித்து இருந்தார். கால்வாய் வழியாக கொண்டு வந்தால் ஏற்படும் செலவுகள், நீர் ஆவியாதல் காரணங்களால் இதற்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குழாய் மூலமாக கொண்டு வருவதாகக் கூறினார்.

    திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தால் நமக்கு கூடுதல் தகவல்களும் இதனால் கிடைக்கப்போகும் பலன்களும் என்னவென்று புரியும்.

    என்னவென்றே தெரியாமல் இதை எதிர்ப்பவர்கள் நிலை கண்டால் எரிச்சலே மேலிடுகிறது.

    நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்.

    • ராஜன் ராதா மாணாளன் சொல்கிறார்:

      குழாய் மூலம் கொண்டுவரும் முறை ஏற்கனவே ஆந்திராவில் உள்ளது என்று நினைக்கின்றேன்

  5. tamilmani சொல்கிறார்:

    Mr Nitin Gadkari is magnanimous. We know Tamilnadu voters have rejected bjp due to sustained
    false propaganda by the tv media (most of the channels are owned by dmk and congress leaders)
    and anti national elements and churches and masjids (they passed resolutions for not voting bjp).
    DMK in his election manifesto has promised jewel loan waiver, education loan waiver and rs 6000 dole for the each every person every month
    which i think cannot be fulfilled. Believing Stalin’s lies Tamilnadu has rejected bjp and elected 37 dmk mps who are going to be just passengers on the flight to Delhi. Now Bjp has got every right to
    reject the proposals from a state which has not voted for its alliance. But bjp is a different party
    proved by Mr Nitin Gadkari for taking of linking godavari krishna pennar and kaveri rivers a mammoth task but still possible .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s