ஜனநாயகம் என்னும் கேலிக்கூத்து … !!!மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதியில்
வேலூர் தவிர 542 தொகுதிகளில் தேர்தல்
நடைபெற்றது. இதில் 539 பேரின் சொத்து விவரங்கள்
கிடைத்துள்ளன.

542 புதிய எம்.பி.க்களில் 475 பேர் கோடீஸ்வரர்கள் …!!!

இதில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 265 பேர்.
இது அக்கட்சியின் மொத்த எம்.பி.க்களில் 88 சதவீதம்..
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள
சிவசேனாவைச் சேர்ந்த 18 பேருமே கோடீஸ்வரர்கள்தான்…!!!

52 காங்கிரஸ் எம்.பி.க்களில் 43 பேர் கோடீஸ்வரர்கள்…
இதுபோல, திமுகவைச் சேர்ந்த 23-ல் 22 பேர்…
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 22-ல் 20 பேர் …
ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் 22-ல் 19 பேர் – கோடீஸ்வரர்கள்…!!!

கோடீஸ்வர எம்.பி.க்களில் முதல் 3 இடங்களை
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிடித்துள்ளனர்.

இவர்களில் -முதலிடத்தில் இருப்பது
மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்
மகன் நகுல் நாத் (ரூ.660 கோடி) –

2-ம் இடத்தில் – கன்னியாகுமரி எம்.பி.
எச்.வசந்தகுமார் (ரூ.417 கோடி) –
3-ம் இடத்தில் -பெங்களூரு ரூரல் எம்.பி.
டி.கே.சுரேஷ் (ரூ.338 கோடி)…!

Association for Democratic Reforms என்கிற
ஜனநாயகத்திற்கான அமைப்பு இந்த தகவலை
சேகரித்து வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் ஜனநாயக லட்சணம் இவ்வளவு தான்…

எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி –
பணம் இல்லாதவர் பாராளுமன்றத்திற்கு போக முடியாது
என்பதை இந்த புள்ளி விவரங்கள்
மீண்டும் உறுதிப்படுத்துகின்றன…
(இதில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன என்பதும் உண்மையே…)

ஏன் இந்த நிலை …? யார் காரணம்…?

இந்த நாட்டு மக்களே தான் காரணம்.
மக்களின் மனப்பான்மையும், போக்கும் மாறாத வரையில் –
இங்கு ஜனநாயகம் என்பது வெற்றுக் கூச்சலே…!!!

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்று
பிரிட்டிஷ் அறிஞர் பெர்னார்ட் ஷா சொன்னார்…
இந்தியாவைப் பொறுத்தவரையில் –
அதில் கோடீஸ்வரர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமோ…..???

.
————————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to ஜனநாயகம் என்னும் கேலிக்கூத்து … !!!

 1. புதியவன் சொல்கிறார்:

  //இந்த நாட்டு மக்களே தான் காரணம். மக்களின் மனப்பான்மையும், போக்கும் மாறாத வரையில் // – இதுதான் 90% அனர்த்தங்களுக்குக் காரணம். எவனோ ஒரு தேவதூதன் தங்களுக்கு ஓசியில் காசு கொடுப்பான், நாம வெட்டியா இருந்தாலும் எல்லாத் தவறுகளையும் செய்தாலும், ‘அவங்க’ வந்து எல்லாப் பிரச்சனையையும் தீர்த்துடுவாங்க என்று நினைக்கும் மக்கள்தான் இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும். வட நாட்டில் காசு கொடுத்து வாக்கு வாங்குகிறார்களா என்று தெரியவில்லை (தெரிந்தவர்கள் சொல்லணும்) ஆனால் தமிழ்நாட்டில் காசு கொடுத்தால்தான் வாக்கு என்பது சட்டமாகிவிட்டது (ஆனால் 10-15% பொதுமக்கள்தான் டிரெண்டை உருவாக்குகின்றனர். யார் வரக்கூடாது என்று இவர்கள்தான் தீர்மானித்து ஒரே மாதிரி வாக்களிப்பதால் ஓரளவு ஜனநாயகம் தப்புகிறது)

  நீங்க எழுதியிருக்கிற ‘கோடீஸ்வரர்கள்’ என்பதே ஒரு ஏமாற்றுவேலை. அதில் சோனியா, ராகுல் இவங்கள்லாம் வர மாட்டாங்க. அவங்கள்ட மற்றும் மாறனிடம் சொந்த கார் கூட இல்லை. ராகுல் ‘கடனாளி’, அம்மாவிடம் கடன் வாங்கியிருக்கிறார். இந்த லட்சணத்துல இருக்கு ‘கணக்குக் காண்பிப்பது”

  நம்ம சட்டம் 70 லட்சம்தான் பாராளுமன்றத் தேர்தலுக்கு செலவழிக்கணும் என்று சொல்கிறது. (சட்டங்களில் ‘நகைச்சுவை’ இருக்கட்டும் என்பதற்காக இப்படி வைத்திருப்பார்களோ?). பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியாயமான வரும்படி 5 வருடங்களுக்கும் 1 கோடிதான் இருக்கும்னு நினைக்கிறேன் (இல்லை 2 கோடியோ?). அப்புறம் எதற்கு 80 கோடி செலவழிக்கறாங்க?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.நல்லகண்ணு, கக்கன், லால்பகதூர் சாஸ்திரி,
   ந்ருபன் சக்ரபர்த்தி போன்ற எளிய தலைவர்களைப்
   போற்றி வளர்த்தது போன தலைமுறை…

   ஆனால் இன்றைய தலைமுறையில் நாம்…..?
   வெட்கித்தலைகுனிய வேண்டிய நிலையில்
   தான் இருக்கிறோம்.

   நம் மக்கள் மாறும் காலமும் வருமா … ?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… ஒரு தலைமுறை என்பதே 20+ வருடங்கள்தாம். நல்லக்கண்ணுவை எந்தத் தலைமுறையும் போற்றி வளர்க்கவில்லை என்பது கசப்பான உண்மை. இன்றைக்கு அவர் எந்த ஊரில் ‘வார்டு கவுன்சிலருக்கு’ நின்றாலும், எவரும் அவரைத் தோற்கடித்துவிடுவார்கள். ‘நல்லவர்கள்’ என்ற லேபிளுக்காக தமிழகத்தில் கடைசியாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்? இன்றைக்கு ‘பாராட்டும்’ பொருளாகிவிட்ட காமராசரை, அவருடைய சொந்த ஊரிலேயே சாதாரணவர் தோற்கடித்தார். காசு கொடுத்தால் 95% தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற அவப்பெயரை தமிழினத்துக்குத் தந்தது ‘திருமங்கலம்’ மக்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு ‘அரசியல்வாதி நல்லது செய்யவேண்டும்’ என்று பேச, எதிர்பார்க்க என்ன யோக்கியதை இருக்கிறது?

    நாம, சும்மா, அரசியல்வாதிகளைக் குறை சொல்கிறோம்.

    மக்களின் ‘தரத்துக்கு’ ஏற்றபடிதான் தலைவர்கள் உருவாகிறார்கள், வெற்றி பெறுகிறார்கள். நல்லக்கண்ணு அவர்கள் ‘நல்லவர்’ என்று பொதுவாக நாம் சொன்னால், தனிப்பட்ட முறையில் அவர் தேர்தலில் நின்றால், 0.0005% வாக்குகள்கூட அவர் பெறுவாரா என்பது சந்தேகம். காரணம், அவ்வளவு நல்லவர்கள்தாம் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

   • சைதை அஜீஸ் சொல்கிறார்:

    படித்ததில் புடித்தது

    நன்றி 🙏 தஞ்சை ராஜேஸ்

    சற்றே விரிவாக எழுத வேண்டிய பதிவு முடிந்தவரை சுருக்கி எழுதுகிறேன்..

    தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன.. பழைய செய்திகளாகிவிட்டது..

    இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது… பான்பராக் வாயர்கள், படிக்காத அறிவுகெட்டவர்கள்.. அங்கே ஓட்டு போட்டுவிட்டு இங்கே பானிபூரி விற்க வந்துவிடுகிறார்கள், மதவெறியர்கள் என்றெல்லாம் பல பதிவுகளை காண முடிகிறது…

    அவை ஒருபக்கம் இருக்கட்டும்.. முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்… கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது… இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்…ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்.. இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்… எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்.. எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்… பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன… எங்கு பார்த்தாலும் “எந்த பிசினசும் சரியில்லைங்க” என்ற பேச்சுகள்…

    இதற்கு பிண்ணனியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் தேடியுள்ளேன்…

    1. மது..
    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம் இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது… தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது என்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும் அவர்களுக்கு போட்டியிட்டு பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்… உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில் இன்று குடிகார்ர்கள் நிறைந்து , உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது… குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்ட பணி நேரமோ செய்ய முடிவதில்லை.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் , கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை… அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு ₹1000 கூலி கேட்கின்றனர்… வீட்டுக்கு ₹500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு ₹500 என்று…
    இது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் பெருகுவதும், இதனால் கவனிக்கப்படாத குழந்தைகள் சமூக விரோதிகளாகவும் உருவாகும் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் தமிழகம் வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கிறது…

    2. 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால் பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர். சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்கு சென்றனர்.. சிலர் கவலையில் குடி நோயாளிகளாகிவிட்டனர்… மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.

    3. நூறுநாள் வேலை..

    இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை… ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை.. இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால் காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக்கொள்ளலாம்.. வேறு எந்த வேலையும் இல்லை.. ₹150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது…

    4. இலவசங்கள்…
    அரசு தரும் இலவச பொருட்களும், ஊரக வேலைவாய்ப்பு திட்டமும் மக்களை உழைக்க விரும்பாத, சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர்..

    5. நம் கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்.. அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை…

    இத்தகைய காரணங்களால் தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது… சமீபத்தில் தொழில் தொடங்கி நட்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்து பாருங்கள்.. 10ல் 8 பேர் ஊழியர் மற்றும் சம்பள பிரச்சினைகளாலேயே தொழில் நட்டமடைந்த்தாக சொல்லுவார்கள்..

    தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்… ஓட்டல் முதல் கட்டுமான துறை வரை இதுதான் நடக்கிறது… தமிழ் சமையல்காரர் ஒருநாளைக்கு ₹850-1000 சம்பளத்திற்கு , (பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட 2 மணிநேரம் அதிகமாக ₹500-600 சம்பளத்திற்கு செய்கிறார்.. தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது.. வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்…

    இதுதான் கொத்தனார், ஆசாரி வேலைகளுக்கும்…

    நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை… சொல்லப்போனால் எங்கள் தஞ்சையில் 80 பானிபூரி வண்டிகள் உள்ளன… அவற்றில் 10 கூட வட இந்தியர்களுடையதல்ல.. 70க்கும் மேற்பட்ட வண்டிகளில் தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள்…

    கடைசியாக..

    நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்கள் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது… வேலையே செய்யக்கூடாது, சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே பணம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்… இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசுகளே சாராயத்தை விற்று லாபத்தை தேடுவதுதான் உச்சபச்ச கொடுமை…

    கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் , இன்னும் காவிகள், கருப்புகள் எல்லோரும் இது குறித்து சிந்தித்து இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள நோயை மாற்ற வழி தேடினால் மட்டுமே தமிழினம் தப்பிப்பிழைக்கும்…

    ஆம்..

    #தமிழன்_என்றோர்_இனமுண்டு_தனியே_அவனுக்கோர்_குணமுண்டு

    உண்மைதான்…

    • VS Balajee சொல்கிறார்:

     சைதை அஜீஸ் 100 true statement.. we have save Tamil nadu..
     VS Balajee
     PS : கா.மை. சார் i am your long time big fan. wish you long health life

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி பாலாஜி.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     அஜீஸ்,

     உங்கள் பின்னூட்டத்தில் சொல்லப்படும் கருத்துகள்
     என்னை வதைக்கின்றன.

     உண்மையில், பல சமயங்களில், இந்த தளத்தில், நான்
     எழுதும்போதெல்லாம், இத்தகைய சிந்தனைகள் தான்
     என் மனதில் ஓடும்.

     எப்படி இருந்த தமிழர்களாகிய “நாம்” –
     இப்போது இப்படியாகி விட்டோமே என்று –

     எதையும் செய்ய வக்கற்றவராக,
     இந்த அவலங்களையெல்லாம் பார்த்துக்கொண்டே,
     இந்த சமூகத்தை திருத்தக்கூடிய எதையும் செய்ய
     “சக்தி” இல்லாதவராக, கையாலாகாதவராக
     இருக்கிறோமே என்கிற கழிவிரக்கம் என்னை
     பல சமயங்களில் வதைக்கிறது.

     தானாக சரியாகக்கூடிய விஷயமில்லை இது.
     மக்கள் செல்வாக்கு பெற்ற உண்மையான தலைவர்கள்
     யாராவது, வெற்றி, தோல்விகளைப்பற்றிய கவலைகள்
     இல்லாமல் – அரசியல் ரீதியாக முடிவுகளை
     எடுக்கத் துணிய வேண்டும்.

     முதல் காரியமாக சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்.
     குட்கா, பான் மசாலா -போன்ற போதைப்பொருட்கள்
     அனைத்தும் நிஜமாகவே தடை செய்யப்பட வேண்டும்.
     இலவசங்கள் நிறுத்தப்பட வேண்டும்
     உழைத்தால் தான் பணம் என்கிற நிலையை
     உருவாக்க வேண்டும்.

     இப்போதிருக்கும் அவலத்திலிருந்து வெளிவர வேண்டும்
     என்கிற உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
     உழைப்பை விட மேன்மையானது எதுவுமில்லை
     என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

     இதையெல்லாம் யார் வந்து செய்யப்போகிறார்கள்…?
     நமது சமூகம் ஏன் இப்படி சுயநலவாத கூட்டமாக
     இருக்கிறது…? படித்து, நல்ல வேலையில் இருக்கும்
     யாரும், பிறரைப்பற்றியோ – சமூகத்தின் அவல நிலை
     பற்றியோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
     அவரவர் வசதிகளை பெருக்கிக் கொள்வதிலும்,
     சுகமாக வாழ்வதிலுமே குறியாக இருக்கிறார்கள்.

     – படித்த, நன்கு, நேர்மையாக சிந்திக்கத் தெரிந்த
     ஒரு சிலராவது இந்த சமூகத்திற்காக உண்மையாக
     பாடுபட முன்வரக்கூடாதா…?

     தலைவர்கள் என்று கிளம்பும் யாருமே,
     அரசியல் அதிகாரத்திற்கு ஆசைப்படாமல்,
     சமூகத்தை நல்வழிப்படுத்த முன்வருவதில்லையே – ஏன் ….?

     மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள அரசியல்வாதிகள்
     அனைவரும் அதிகாரத்தை நோக்கியே செல்கிறார்களே தவிர,
     சரிந்து கிடக்கும் இந்த சமூகத்தைப்பற்றிய
     கவலையே இல்லாமல் இருக்கிறார்களே…

     உங்கள் பின்னூட்டம் நிறைய உண்மைகளை சொல்கிறது.
     மனம் வலித்தாலும், இந்த மாதிரி கருத்துகளை
     சொல்ல வேண்டுமென்று நீங்கள் எடுத்துக்கொண்ட
     முயற்சியை பாராட்டுகிறேன்.

     இறைவனை வேண்டுவதைத் தவிர,
     வேறெந்த வழியும் எனக்குத் தோன்றவில்லை.

     இன்றில்லா விட்டாலும் – எதிர்காலத்திலாவது
     நமது சமூகம் மாற வேண்டும் – மாறும் –
     அதற்கொரு விடிவு பிறக்குமென்று நம்புவோம்.
     நல்லது நடக்க வேண்டுவோம்.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

    • Sekhar Madhavan சொல்கிறார்:

     Excellently summed up. I am pasting it in my Facebook page.

    • சைதை அஜீஸ் உங்கள் பதில்கள் மிகத்தெளிவானவை. முக்கியமாக வேலையில்லா திண்டாட்டம், வட நாட்டவர்களின் வேலைத்திறனை நானும் சுவிஸ் வர உணர்ந்துள்ளேன். வாங்கும் சம்பளத்துக்கு உண்மையாகவும், அதற்கு மேலும் உழைப்பார்கள்.,வேலையில்லை என எம்மவர் அலைவதெல்லாம் போலியான நிலை தான். வேலை செய்ய தயாரில்லை. அல்லது அதிக ஊதியம். எந்த அனுபவமும் இல்லா விட்டாலும் அதிகமான ஊதியம் எதிர்பார்ப்பது என்பது எம்மவரிடம் காணும் பெரும் குறைகள் தான்.

 2. Surya சொல்கிறார்:

  Nowadays a (upper) middle class person will have an asset for at least a crore. I don’t think being a crorepati means he or she is rich.

  It would help to list out who those winners who are not crorepati. It will help to understand how they are able to be successful and promote similar folks in the future.

  • தமிழன் சொல்கிறார்:

   சூர்யா… அப்பர் மிடில் கிளாஸ்-இவங்க சம்பாதித்து சொத்து வாங்கறவங்க. அதுனால இவங்க வாங்கும் வீடு 80 லட்சத்திலிருந்து சர்வ சாதாரணமாக 1-2 கோடிகள் இருக்கும். இவங்களை அரசியல்வாதிகளோடு ஒப்பிடாதீங்க. அரசியல்வாதி வைத்திருக்கும் 40 ஏக்கர் நிலம், 2 லட்சம் பெறும் என்றுதான் காண்பிக்கப்படுகிறது. திநகரில் இடம் வைத்திருந்து, அதனையே 12 லட்சம் என்று கணக்கு காண்பிக்கிறார்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், மாறன், ஜெகத் ரட்சகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, அன்புமணி…. போன்றோர் டிக்ளேர் செய்திருக்கும் சொத்து டீடெயில்ஸ் பாருங்க. கனிமொழி தொழில் ‘அரசியல்வாதி’. அன்புமணி ‘ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்’ இப்படித்தான் அவர்கள் தொழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 21,000 கோடி இலங்கையில் முதலீடு செய்ய முயன்ற ஜெகத்ரட்சகன் தொழில் தெரியலை.

 3. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… I was just comparing the previous election result. 2014ல் வெற்றி பெற்ற எம்பிக்கள் கட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 100% (1), தெலுகு தேசம் 100% (16), RJD (2) லாலு கட்சி 100%, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (2) 100%, ஒய்.எஸ்.ஆர் (9) 100%, ஆல் இந்திய மஜ்லீஸ்… (1) 100%, அப்னா தல் (2) 100%, ஷிரோன்மணி அகாலிதள் (4) 100% என்று 100 சதவிகிதம் கோடீஸ்வர எம்பிக்களைக் கொண்ட கட்சிகளை (இன்னும் லிஸ்ட் இருக்கு) மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதில் கம்யூனிஸ்டுகளும் உண்டு என்பது ஆச்சர்யம்தான் (சிபிஎம்ல், 9ல் 3 பேர் கோடீஸ்வரர்கள்).

  நம்ம ஊர் ப.சி, கனிமொழி, மாறன், ராசா, ஜெகத்ரட்சகன், பொன்முடி பையன், துரைமுருகன் பையன், டி.ஆர்.பாலு…….. இவங்கள்லாம், பில்லியனர்ஸ். அதுனால ‘கோடீஸ்வரர்கள்’ என்ற ‘பிச்சைக்காரர்கள்’ பட்டியலில் இடம் பெற மாட்டார்கள்.

 4. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! கோடீஸ்வரர்கள் லிஸ்ட் மட்டும் போதுமா …? கிரிமினல்கள் லிஸ்டையும் சேர்த்து வெளியிட்டால் தானே சரியா இருக்கும் — ! …. // 223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை! //

  Read more at: https://tamil.oneindia.com/news/chennai/223-newly-elected-mps-have-criminal-background-351969.html … இந்த செய்தியிலேயே கோடீஸ்வரர்களும் இருக்கிறார்கள் …! இது தற்போதைய நிலைமை .. இருக்கட்டும் .. இருக்கட்டும் .. ! ஆனால்

  // பாஜக ஆட்சிக்கு வந்தால் கிரிமினல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை: மோடி // Tuesday, April 15, 2014

  Read more at: https://tamil.oneindia.com/news/india/modi-vows-send-politicians-with-criminal-background-jail-lse-198133.html .. இது
  ஒரு பழைய செய்திதான்.. சென்ற தேர்தலின் போது பரப்புரையில் கூறியது :– // காந்திநகர்: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் குற்றம்புரிந்த எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்கள் ஓராண்டுக்குள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.//

  அவரே ஆட்சிக்கு வந்தார் — தற்போது மீண்டும் அவரே பிரதமர் பொறுப்பு ஏற்க உள்ளார் .. தற்போது தேர்வாகி உள்ளவர்களில் இருக்கின்ற கிரிமினல் வழக்கு தொடர்பானவர்களை என்ன செய்வார் … ? முன்பு ஓராண்டு சிறையில் தள்ளி தண்டனை கொடுத்தாரே அதுபோல இப்பவும் தண்டனை கொடுப்பாரா —கனவில் …? ஜனநாயகம் என்னும் கேலிக்கூத்து … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   ஏனோ தெரியவில்லை..
   எனக்கு இந்த மலையாள பழமொழி தான்
   உடனடியாக நினைவிற்கு வருகிறது.

   “மின்னுன்னதெல்லாம் பொன்னல்ல…”

   அரசியல்வாதிகள் –
   “சொல்வதெல்லாம் – செய்வதற்காக அல்ல…”
   என்று தானே கொள்ள வேண்டும்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Selvarajan சொல்கிறார்:

  அய்யா .. ! // மேடை ஏறிப் பேசும்போது
  ஆறு போல பேச்சு
  கீழே இறங்கிப் போகும்போது
  சொன்னதெல்லாம் போச்சு

  காசை எடுத்து நீட்டு
  கழுதை பாடும் பாட்டு
  ஆசை வார்த்தை காட்டு
  உனக்குங் கூட ஓட்டு // ….என்கிற பாடல் வரிகள் எப்பாேதும் ..எல்லா தேர்தலுக்கும் ஒத்துவருமல்லவா …!

 6. c.venkatasubramanian சொல்கிறார்:

  Reconsider voting rights for all?

 7. Muthu Selvam சொல்கிறார்:

  Sir, I feel our mindset needs to change totally; our MPs need not be poor; it is a wrong yardstick for this job; only they should not be corrupt and should be people of integrity, devoted to our country. Politics needs very talented and intelligent people, (poor or rich immaterial); more talented than IAS, Police, IFS, Army etc, because they have to take decisions on all matters concerning our country our security, our environement, our economy etc.

  • தமிழன் சொல்கிறார்:

   இடுகை அப்படிப்பட்ட த்வனியில் சொல்லலை. டி.ஆர்.பாலு, மாறன், ஜெகத்ரட்சகன், பீட்டர் அல்போன்ஸ், துரைமுருகன், பொன்முடி, ஆற்காடு வீராசாமி……..கருணாநிதி குடும்பம்….. போன்ற அனைவரும் அரசியலுக்கு வருவதற்குமுன்பு மாதம் 1000 ரூபாய் சம்பளத்துக்கே தாளம் போட்டவங்க. அரசியலுக்கு வந்த பிறகு பல்லாயிரம் கோடிகள் சம்பாதித்துவிட்டார்கள். இந்தக் கோடீஸ்வரர்களைத்தான் இடுகை சுட்டிக்காண்பிக்கிறது.

   பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே பணக்காரராக இருந்தவர். பழனிவேல்ராஜனும் அப்படியே. அப்படிப்பட்டவர்களை இடுகை குறையாகச் சொல்வதுபோல் தெரியவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s