செல்வந்தர்களுக்கு இங்கென்ன பஞ்சமா….? பிறகு….?


செல்வந்தர்களுக்கு இங்கே எந்த பஞ்சமும் – இல்லை…
இல்லவே இல்லை… ஆனால்,
அவர்களுள் ‘ஷிவ்’ நாடார்களுக்குத் தான் பஞ்சம்.

———–

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
-என்றார் திருவள்ளுவர்.

ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும்,
ஒரு பொதுக்குளம் நீரால் நிறைவது போன்றது –

மக்களுக்கு உதவும் நல் இதயத்தைக் கொண்ட
ஒரு கொடையாளியிடம் சேரும் செல்வம்…!

——–

கீழே இருப்பது ஒரு செய்தி –
இந்த செய்திக்கு அதிக அளவில் விளம்பரம் கிடைக்க வேண்டும்.
இது அதிக மக்களிடம் போய்ச்சேர வேண்டும்…

.

https://www.vikatan.com/news/tamilnadu/159171-shiv-nadar-donates-15-%20%20crore-to-madurai-corporation-school.html?artfrm=news_home_breaking_news

——————

ஹெச்.சி.எல். அதிபர் ஷிவ்நாடார் பெரும் கொடையாளி.
தன் சொத்தில் 10 சதவிகிதத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சாதாரண அரசுப் பள்ளியில் படித்த இவர், இன்று பல்லாயிரம்
கோடிகளுக்கு அதிபதி.

மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகேயுள்ள இளங்கோ
அரசுப் பள்ளியில்தான் 7 மற்றும் 8-ம் வகுப்பு படித்தார் ஷிவ் நாடார்.

1937-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளி சரியாகப் பராமரிக்கப்படாமல்
இருந்தது. பக்கத்தில் உள்ள பிள்ளைகள் மட்டுமே இங்கு சேர்ந்து
படித்து வந்தனர்.

கடந்த 2011-ம் ஆண்டு, தான் படித்த பள்ளிக்கு ஷிவ் நாடார்
விசிட் அடித்தார். பள்ளியின் நிலையைக் கண்ட அவர் கலங்கிப்
போனார். படித்த பள்ளிக்கு ஏதாவது கைம்மாறு செய்ய
வேண்டுமென்று கருதிய அவர், இளங்கோ பள்ளிக்கு
ரூ.15 கோடி ஒதுக்கினார்.

தொடர்ந்து, இளங்கோ பள்ளிக்கென்று புதியதாக இரு கட்டடங்கள்
கட்டும் பணிகள் 2017-ம் ஆண்டு தொடங்கியது. அழகிய கட்டடங்கள்
24 வகுப்பறைகளுடன் எழுந்தது. மதுரைக்கு வரும்போதெல்லாம்
பள்ளியில் நடைபெறும் பணிகளை ஷிவ் நாடார் பார்த்துவிட்டுச்
செல்வார்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், “
பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கரும்பலகை
மட்டுமே 15 அடி நீளம் கொண்டது. பள்ளிக்குள்ளேயே
தண்ணீருக்காக தனி பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்சாரத்தில் வகுப்பறைகள் இயங்கும். கழிவறைகள்
பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

100 கணினிகளுடன் லேப், முற்றிலும் குளிர்சாதன வசதி
செய்யப்பட்ட லைப்ரரி, பள்ளி வளாகத்தில் அழகிய பூங்கா
ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

கூடைப்பந்து விளையாட்டில் எங்கள் பள்ளி சாம்பியன் என்பதால்
நவீன கூடைப்பந்து மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 3 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முற்றிலும்
முடிந்து விடும்” என்று உற்சாகத்தோடு சொல்கிறார்.

நன்கொடை கொடுத்ததோடு ஷிவ் நாடார்
முடித்துக்கொள்ளவில்லை.

பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் திறன்,
ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரிக்க பல்வேறு பயிற்சிகள்
ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக நீருபவி திபேந்திர சிங் என்பவரை ஹெச்.சி.எல்.
மேலாளராக நியமித்துள்ளது. விளைவாக இளங்கோ
பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு 12-ம் வகுப்பில் 100 சதவிகித
தேர்ச்சி பெற்றுள்ளனர். நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு
ஹெச்.சி.எல் சார்பாக ஸ்காலர்ஷிப் வழங்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது.

.
——————————————————————–

ஷிவ் நாடார் போன்ற பெருந்தகைகள்
பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் …!

இங்கே இன்னும் பல “ஷிவ்” நாடார்கள் உருவாக –
வேண்டுவோம் …!!!

இந்த பத்திரிகைச் செய்தி பார்த்து ஒரு 10 பேராவது
முன் வர வேண்டும்….
ஷிவ் நாடார் அளவிற்கு இல்லாவிட்டாலும்,
முடிந்ததைச் செய்யலாம்.

.
———————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to செல்வந்தர்களுக்கு இங்கென்ன பஞ்சமா….? பிறகு….?

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்…. இந்தத் தடவை நான் சாதி குறிப்பிட்டு எழுதுவதற்கு என்னை மன்னிக்கணும்.

  நாடார்கள், ஒரு காலத்தில் சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருந்தார்கள். அந்தச் சமுதாயப் பெரியவர்கள், இப்படி இருந்தால் மொத்த சமூகமே முன்னேற இயலாது என்று நினைத்து, பெரிய லட்சியத்துடன் இரண்டு காரியங்கள் செய்தார்கள். பெரிய பள்ளிக்கூடங்களை நிறுவி, அவை கல்லூரிகளாக விரிவாக்கம் செய்தார்கள், சமூகத்தின் ஒவ்வொருவரும் படிக்கவேணும் என்ற நோக்கத்தோடு அதனைச் செய்தார்கள். இரண்டாவதாக, வியாபாரத்தில் (மளிகைக்கடை போன்று), தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை கடைவியாபாரத்தில் ஈடுபடுத்தி (முதலில் வேலையாளாக), பிறகு ஒரு ஸ்டேஜில் அவர்களுக்கு ‘தனியே’ கடைவைத்துக் கொடுத்தார்கள். இந்த இரண்டும் ஒரு 30-40 வருடங்களில் பெரிய புரட்சியையே உண்டாக்கியது. சமூகம் வெகுவாக முன்னேறியது. உழைத்தால், அந்த உழைப்பை சமூகத்தின்பாற்பட்டவர்களுக்கும் உதவிகரமாகச் செய்தால் மொத்த சமூகம் பெரிய நிலைக்கு வரும் என்பதற்கு கண்கண்ட உதாரணம் ‘நாடார்கள்’.

  P.G. Courseல், சிவகாசி இந்து நாடார் கல்லூரி, மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி , எஸ்.எஸ்.என். பொறியியற் கல்லூரி (ஷிவ் நாடார்) போன்றவை சட்டென நினைவுக்கு வருகின்றன. நானும் அப்படிப்பட்ட ஒரு கல்லூரியில் படித்தவந்தான். (அவர்கள் படிப்புக்கும், தங்கள் கல்லூரியில் படிப்பவர்கள் பல்கலைக்கழக ரேங்க் வாங்கணும் என்பதற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள், அதற்காக ஸ்டார் மாணவர்களுக்கு எவ்வளவு தூரம் உதவுவார்கள், கண்காணிப்பார்கள் என்பதை நான் அறிந்தவன்)

  எஸ்.எஸ்.என். கல்லூரி முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில் இடம் கொடுக்கிறார்கள். ஆயினும், வருடத்துக்கு 25 ஏழை மாணவர்களுக்கு (அவங்க அரசுப் பள்ளியில் முதல்வனாகத் தேறியிருக்கணும், தலைமை ஆசிரியரின் கடிதம் வேண்டும்) முழுக்க முழுக்க இலவசக் கல்வி அளிப்பதாகவும் படித்தேன். ஷிவ் நாடார் அவர்கள் ஆரம்ப காலத்தில் கணிணி வியாபாரத்தில் ஈடுபட்டவர்.

  நல்ல ஒருவரைப் பற்றி இங்கு வெளியிட்டதில் மிக்க மகிழ்ச்சி. இவர்களைப் போன்றவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் நட்சத்திரங்கள். மனமார்ந்த பாராட்டுகள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // கா.மை. சார்…. இந்தத் தடவை நான் சாதி குறிப்பிட்டு
   எழுதுவதற்கு என்னை மன்னிக்கணும்.//

   தேவையே இல்லை புதியவன்.
   ஜாதி, மதங்களை குறிப்பிட்டு சமூகத்தில் பிளவு,
   மற்றும் மோதல் போக்கை வளர்க்கும் எழுத்துக்கு தான்
   இங்கே தடை. நல்ல விஷயங்களுக்கு அல்ல.

   மேலும், குறிப்பாக தங்கள் சமுதாயத்தைச்
   சேர்ந்தவர்களின் உயர்வுக்காக என்று யாரேனும்
   செயல்பட்டால் கூட –
   அது பாசிடிவான செய்தியாக இருக்கும்பட்சத்தில் –
   வரவேற்கத்தகுந்ததே.

   நீங்கள் கூறி இருக்கும் விஷயங்கள் இந்த இடுகையின்
   செய்திக்கு மேலும் வலு சேர்க்கிறது.

   வரவேற்போம். யார் நல்லது செய்தாலும்
   அவர்களை வரவேற்று, ஊக்கப்படுத்துவது அவசியம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s