ஜூனியர் விகடன் – பொய் சொன்னதை ஒப்புக்கொள்கிறதா…?


சென்ற மாதம் முதல் வாரத்தில் –

பெட்டிக்கடைகளில் தொங்கவிடப்பட்ட
மிகப்பெரிய போஸ்டர்களுடன்,
அட்டைப்பட புகைப்படங்களுடன்,
ஜூனியர் விகடன் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது…

அது குறித்த செய்தியை உடனடியாக விமரிசனம் தளம்-

மார்ட்டினிடமிருந்து 500 கோடி …. நிஜமா..? – செய்தியை திரு.ஸ்டாலின் ஏன் மறுக்கவில்லை…? (09/05/2019)

-என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தது.

அதன் பிறகு, நீண்ட அமைதிக்குப் பிறகு,
முதல்முறையாக – இரண்டு நாட்களுக்கு முன்னர்
திமுகவிலிருந்து உயர்நீதிமன்றத்தில்
ஜூனியர் விகடன் மீது இது தொடர்பாக வழக்கு
ஒன்று தொடரப்பட்டுள்ளதாக செய்தி வந்தது.

அதையடுத்து இன்று வெளிவந்துள்ள ஜூனியர் விகடனில்
கீழ்க்கண்ட – கட்டம் கட்டப்பட்ட செய்தி – வெளியாகி இருக்கிறது.

வாய்க்கு வந்ததை எல்லாம் பத்திரிகையில்
வாந்தியெடுத்து விட்டு,
பின்னர், சட்டபூர்வமான நடவடிக்கை வரும்போது,
இப்படி பல்ட்டி அடிக்க – வெட்கமாக இல்லையா
இந்த பத்திரிகை சொந்தக்காரர்களுக்கு…?

இதுவா journalism….?

பரபரப்புக்காகவும், பத்திரிகை விற்பனை ஆக வேண்டும்
என்பதற்காகவும், எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள்
என்றால் –
இந்த பத்திரிகையின் மீது யாருக்கு நம்பிக்கை வரும்…?

( நமக்கு ஏற்கெனவே நம்பிக்கை இல்லை என்பது வேறு விஷயம்…
அதனால் தானே, திமுக ஏன் இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை
என்று கேட்டிருந்தோம்…)

.
———————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஜூனியர் விகடன் – பொய் சொன்னதை ஒப்புக்கொள்கிறதா…?

 1. Selvarajan சொல்கிறார்:

  Selvarajan சொல்கிறார்:
  1:31 பிப இல் மே 9, 2019
  // இந்த விகடன் தற்போது இந்த செய்தியை வெளிட்டு இருப்பதற்கு என்ன காரணம் .. ? மார்ட்டினின் ஃப்யூச்சர் கேமிங் நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரிந்து வந்த பழனிச்சாமியின் இறப்பு என்பது மட்டும் காரணமாக கொள்ள முடியுமா என்பதே கேள்வி — ? பழனிச்சாமியின் மனைவி இரண்டு கோடிகள் வரை பேரம் பேசுகிறார்கள் என்று வெளிப்படையாக கூறி வருகிறார் — எது எப்படியோ 500 கோடிகளை தேர்தல் நன்கொடை — “எலெக்டோரல் பாண்ட்” மூலம் கொடுத்ததா …? // …. இது நீங்கள் குறிப்பிட்டுள்ள முந்தைய இடுகையில் எமது பின்னூட்டத்தில் ஒரு பகுதி … இன்று விகடன் மறுப்பு செய்திக்கு ஆதாரமாக பழனிச்சாமியின் மர்ம மரணத்தை பற்றிய விசாரிப்பை காட்டியுள்ளது … இந்த பத்திரிக்கை அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களினுடையது தானே — அந்தர் பல்டி அடிக்க கற்று கொடுக்கவாவேண்டும் — ?

 2. Ramnath சொல்கிறார்:

  முன்பு ஒரு சமயத்தில், ஜூ.வி.
  சிறப்பாக செயல்பட்டது உண்மை.
  அதன் காரணமாகவே மக்களிடம்
  அதன் செய்திகளுக்கு செல்வாக்கு
  இருந்ததும் உண்மை.

  ஆனால், இன்று – நாறுகிறது.
  வெட்கங்கெட்ட பிழைப்பு.
  இந்த பத்திரிகை குடும்பத்தால்,
  பத்திரிகைத்துறைக்கே
  ஒரு இழிகேடு உருவாகியுள்ளது.

 3. புதியவன் சொல்கிறார்:

  மதன் ஆசிரியர் குழுவில் இருந்த வரையில் (அதாவது பாலசுப்ரமணியம் அவர்கள் அதிபராக இருந்தபோது), ஓரளவு ஜூவி மற்றும் விகடன் பத்திரிகைகள் நியாயமாக எழுதிக்கொண்டிருந்தன. எப்போது, சன் டிவி ‘விகடன் டிவி’ ஸ்லாட்டுக்காக, கை ஏந்த ஆரம்பித்ததோ அப்போதே திமுக சார்பும், மாறன் பிரதர்ஸ் பற்றி வரும் செய்திகளை வெளியிடாமலோ, இல்லை வெளியிட்டோம் என்று காண்பிப்பதற்காக கோடி காட்டுவதும் நடக்க ஆரம்பித்தது. மதன் வெளியேற்றத்துக்குப் பிறகு, ஸ்ரீனிவாசன் அவர்களின் கையில் விகடன் குழுமம் வந்த பிறகு, வாய்க்கு வந்ததெல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டது. ஒரு காலத்தில் ‘சுதாங்கன்’ அவர்கள் ஜூவி செய்திகளின் அடிப்படையில் (அதாவது செய்தியை வெளியிட இல்லைனா திருத்தி வெளியிட) அரசியல்வாதிகளை பிளாக்மெயில் செய்ததனால் ஜுவியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று செய்தி கசிந்தது. தற்போதைய விகடன் குழும அதிபர், விகடனின் தரத்தை முற்றிலும் சிதைத்துவிட்டார். விகடன், ஜூவியில் வரும் செய்திகள் அனேகமாக எல்லாமே ஒவ்வொருவர் ஸ்பான்ஸர் செய்துவரும் செய்திகள்தாம் (இவனைப் போட்டுக்கொடுப்பது, அவனது அரசியல் வாழ்க்கையை காலி பண்ணுவது போன்று).

  முன்னொரு காலத்தில் நக்கீரன் புலனாய்வுச் செய்திகளை கொஞ்சம் கிளுகிளுப்போடு ஆனால் ஓரளவு நம்பகத்தன்மையோடு அளிக்கும். எப்போது அவர்கள் ‘ஜெ’வை எதிர்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டார்களோ அப்போதே அதன் தரம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. அவர்களுக்கு மாறன் பிரதர்ஸ், திமுக, ஆ.ராசா கும்பல், இலங்கை ஜெகத் கஸ்பர் என்று பெரிய லிஸ்ட் ஆட்களின் பிடியில் சிக்கி, பொய்ச்செய்திகளை அளிப்பதையே கடமையாக 1996லிருந்து வைத்துள்ளது.

  ஆனால் ‘இந்தப் பத்திரிகை குடும்பத்தால்” என்று எண்ணவேண்டாம். இந்து முதற்கொண்டு எந்தப் பத்திரிகைக் குழுமம் இப்போதி நியாயமான செய்திகளைத் தருகிறது? யோசித்துப்பாருங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அஜெண்டா, ஒவ்வொரு வருமானம்.

  தற்போது, உள்ளதில் கொஞ்சம் பரவாயில்லை என்னும்படியாக பாலிமர் தொலைக்காட்சி இருக்கிறது. அதிலும் பல செய்திகள் வருவதில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   உங்கள் கருத்துகளை நான் முற்றிலுமாக
   ஏற்கிறேன். இதே கருத்து தான் எனக்கும்.

   இன்றைய தினத்தில் நேர்மையாக
   செயல்படும் மீடியா ( பத்திரிகை, தொலைக்காட்சி)
   எதையுமே காண முடியவில்லை..

   எல்லாவற்றிலும் வியாபாரம்..
   எல்லாவற்றிலும் சுயநலம்…

   டிகிரி (அளவு விகிதாச்சாரம்) கொஞ்சம் மாறும்..
   அவ்வளவே.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… இன்னொரு பாயிண்ட்.

  இந்தப் பத்திரிகைகள், முதலில் செய்தியாக ‘புளுகை’ எழுதிவிடுகின்றன. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியை அது பெரிதும் பாதித்துவிடுகிறது. ஒருவேளை அரசியல்வாதி நீதிமன்றத்துக்குச் சென்று பிறகு நீதியைப் பெற்று, பல வாரங்களுக்குப் பின் ‘எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. வந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை. இது சம்பந்தப்பட்டவரைப் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறோம். அவரது பதிலையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்” என்று இந்தப் பத்திரிகைகள் சொல்கின்றன. ‘டேமேஜ்’ செய்ததற்கான நஷ்ட ஈடு, என்னைப் பொறுத்தவரையில் இரண்டு வாரங்கள் பத்திரிகையை வெளிவரவிடாமல் மூடவைப்பதுதான்.

  இப்படித்தான் ‘மிருதங்கச் சக்ரவர்த்தி’ படம் வந்தபோது, படம் பார்க்கும் ‘பாஸ்’ வாங்கிக்கொண்டு, படத்தையே பார்க்காமல் மெரீனா கடற்கரையில் சுற்றிவிட்டு (இது என் அனுமானம்), தவறான விமர்சனம் எழுதியதால், சில வாரங்களுக்கு திரை விமர்சனம் எழுதுவதையே விகடன் அதிபர் பாலசுப்ரமணியம் அவர்கள் நிறுத்திவைத்திருந்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s