நேற்று தொலைக்காட்சியில் பார்த்த இந்த காட்சி….


நேற்றைய தினம் பல நண்பர்கள் இந்த காட்சியை
தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம்.
மனிதர்களை விடவும், அதிகம் நுண்ணுணர்வு
கொண்டதாகத் தெரிகின்றன சில விலங்கினங்கள்.

இறந்து போன ஒரு குட்டி யானையின் உடலை
ஒரு பெரிய யானை துதிக்கையில் எடுத்துக் கொண்டு
போவதும், பல பிற யானைகளும் அதனைத்
தொடர்ந்து வருவதும், ஒரு இடத்தில் அமைதியாக,
வரிசையாக – இறந்த யானைக்குட்டிக்கு
இரங்கல் மரியாதை செலுத்துவது போல், அனைத்து
யானைகளும் நிற்பதும் – பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.

வீடியோ எடுத்தவர், தொடர்ந்து சென்று, அதன் பிறகு
அந்த யானைகள் இறந்த குட்டியானையின் உடலை
பள்ளம் தோண்டி புதைக்கின்றனவா அல்லது
வேறு எந்த முறையில் dispose செய்கின்றன
என்பதையும் கூட படம் பிடித்திருக்கலாம்.
அது இத்தகைய நிகழ்வுகளை முழுமையாக புரிந்து
கொள்ள உதவியாக இருந்திருக்கும்.

பல சமயங்களில், விலங்குகள் – தாம், மனித இனத்தை விட
சிறந்தவை என்பதை நிரூபிக்கின்றன.

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to நேற்று தொலைக்காட்சியில் பார்த்த இந்த காட்சி….

 1. புதியவன் சொல்கிறார்:

  இதுபோன்ற நிறைய காட்சிகள் அனிமல் ப்ளானட், நெட் ஜியோ வில் பார்த்திருக்கிறேன். கூகிளிட்டாலும் நிறைய தெரிந்துகொள்ளலாம்.

  1. யானைகள் இறந்த தன் கூட்டத்தைச் சேர்ந்த சக யானைக்கு அஞ்சலி செலுத்தும் (அதாவது அதன் அருகில் வந்து துதிக்கையால் ஓரிரு முறை தடவிக்கொடுக்கும். அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு யானையும் இதனைச் செய்யும். தன்னோடு வரும் யானை, தன் இயலாமையால்-பெரிய காயத்தால், தொடர்ந்து வர முடியலைனா, மற்ற யானைகள் தொடர்ந்து நடக்கும். மீண்டும் அந்த இடத்துக்கு யானைக்கூட்டம் வரும்போது பெரும்பாலும் இறந்த யானையின் மண்டையோடு மற்றும் சில எலும்புகள் கிடக்கும். அவற்றைத் தடவி தன் துக்கத்தை உணர்த்தும்). குரங்குகள் இறந்த குட்டியை, உயிர்ப்பிக்க எடுக்கும் முயற்சியும், முடியாதபோது வருத்தத்தை வெளிப்படுத்துவதையும் பார்த்திருக்கிறேன்.

  2. தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றில், யானைகளின் நலனுக்காக மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டு, காட்டின் ஓரத்தில் ஒருவர் வாழ்ந்துவந்தார் (வெளிநாட்டில் இருந்து அங்கேயே குடியேறி). அவர் தன் வாழ்நாளில் யானைகளின் நலனுக்காக, வேட்டையாடுபவர்கள், மின்சார வேலி போடுவதைத் தடுப்பது, யானைகள் எதிலாவது மாட்டிக்கொண்டால் அதற்கு உதவுவது என்று பல்வேறு உதவிகளைச் செய்து ஆயுள் முழுவதும் அங்கு இருந்தார். அவர் மறைந்தபோது, இரண்டு யானைக்கூட்டங்கள் எங்கிருந்தோ வந்து (சரியாக இறந்த சில மணி நேரங்களில் அல்லது ஒரு நாளுக்குள்) சிறிது தூரத்தில் நின்றுகொண்டு தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தின. ரொம்ப நேரம் நின்றுகொண்டிருந்துவிட்டு நகர்ந்தன. அதுபோல் இன்னொரு யானைக்கூட்டம். இது மெய்சிலிர்க்க வைத்தது. கூகிளிட்டுப் பாருங்கள்.

  3. தன் முட்டைகளைத் திருட வரும் விலங்கிடமிருந்து காப்பாற்ற முதலைகள் மெனெக்கிடுவதும், தன்னிடம் அகப்பட்ட அப்போது பிறந்த எருதின் கன்றை ரொம்பவும் தொந்தரவு தராமல் தன்னுடனேயே வைத்திருந்து பிறகு ஒரு நாளுக்குள் விட்டுவிடுவதையும், தன் கண் முன்னால் தன் குட்டியைத் தூக்கிச் செல்லும்போது ஏதும் செய்ய இயலாமல் பார்க்கும் விலங்குகளையும் பார்க்கும்போது மனது கொஞ்சம் சலனப்படும்.

  யானையின் ‘வலசை’ எனப்படும் நடந்துசெல்லும் பாதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து அவர்கள் ஜீனில் வருவது. தலைமை பெண் யானை அந்தப் பாதை வழியே கூட்டிச் செல்லும். அதில் வயலுக்காக நிலத்தைப் பிடுங்கிக்கொள்வதால், அவற்றின் வலசைப்பாதை மாறுபட்டு, யானைகளின் வாழ்க்கைக்கு இடையூறாகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.