“இம்” என்றால் சிறைவாசம்…. இவர்களென்ன வானத்திலிருந்து குதித்த “தேவதூதர்”களா…?கையில் ஆட்சியும், அதிகாரமும் இருக்கிறது என்பதால்,
யாரை வேண்டுமானாலும் பிடித்து சிறைக்குள்ளே தள்ளிவிட
முடியுமா…?

அரசியல் சட்டம் என்று ஒன்று இந்த நாட்டில் எதற்காக
உருவாக்கப்பட்டது…? பேச்சுரிமை, எழுத்துரிமை அனைத்தும்
அதன் மூலம் வடிவமைக்கப்பட்டது வெறுமனே சட்டம் போட்டு
வேடிக்கை பார்க்க மட்டும் தானா…?

சென்ற மாதம், மேற்கு வங்கத்தில், தன்னை கிண்டல் செய்து
படம் வெளியிட்ட ஒரு பெண்ணை மம்தா தீதி பிடித்து சிறையில்
அடைத்து திருப்தி அடைந்தார்… அந்தப்பெண் உச்சநீதிமன்றம்
வரை சென்று போராடி வெளிவர வேண்டியதாயிற்று….
அதுவரை, அவர் 10 நாட்கள் சட்டவிரோதமாக சிறையில்
அடைக்கப்பட்டதற்கு – யார் மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டது…?

இந்தியா முழுவதும் பேசப்பட்ட அந்த வழக்கு குறித்து
உ.பி. யோகிஜி அரசுக்கு ஒன்றுமே தெரியாதா…?

சென்ற வாரம் யோகிஜியைப்பற்றி ஒரு பெண்மணி
கொடுத்த வீடியோ பேட்டியை தனது வலைத்தளத்தில்
வெளியிட்டதற்காக, கனோஜி என்கிறசெய்தியாளரை பிடித்து
சிறையில் அடைத்தது யோகியின் அரசு.

சில நாட்களுக்கு முன்னர் தான் உச்சநீதிமன்றம்
இது குறித்து தெளிவாக விளக்கம் தெரிவித்திருந்தது
என்பதையும் மீறி அந்த செய்தியாளர் சிறையில்
அடைக்கப்பட்டார்.

இந்த முறை அவரது மனைவி, உச்சநீதி மன்றம் வரை சென்று
செய்தியாளரின் விடுதலையை கோரி போராடினார்.

இந்த வழக்கை விசாரிக்கும்போது, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள
சில கருத்துகள் மிக முக்கியமானவை….

அரசுக்கு எதிராக தவறான முறையில் கருத்து தெரிவித்திருந்தால்,
அவர் மீது அரசாங்கம் சட்டப்படி வழக்கு தொடர்லாம்… ஆனால்,
எதிர்க் கருத்து வெளியிட்டதற்காக, சிறையில் அடைப்பதும், ஜாமீனில்
வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவதும் சட்டவிரோதமானவை
என்று உ.நீ.மன்றம் கூறி இருக்கிறது.

நாமும் அதையே தான் சொல்கிறோம்…
விமரிசனம் செய்பவர்களுக்கும் பொறுப்பு வேண்டும்.
தாங்கள் செய்யும் விமரிசனங்களுக்கு அவர்கள்
பொறுப்பேற்க வேண்டும்….ஆதாரமின்றியோ, ஆபாசமாகவோ
அரசுக்கு எதிராக விமரிசனம் செய்வது தவறு தான்…

ஆனால், ஆளும் கட்சியோ, அரசோ அதை எதிர்கொள்ள வேண்டிய
முறைக்கு தான் இங்கே கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்படுகிறது…

-தவறான விமரிசனம் முன்வைக்கப்பட்டால்/வெளியிடப்பட்டால் –
ஒன்று கட்சி அமைப்புகளின் மூலமோ, அரசின் செய்தித்
துறையின் மூலமோஇதை உரிய முறையில் மறுக்கலாம்… சம்பந்தப்பட்டவர்களை எச்சரிக்கையும் செய்யலாம்.

மீறி தவறு தொடர்ந்தால் – சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய
சட்டவிதிகளின் கீழ் வழக்கு தொடரலாம்… ஆனால், ஜாமீனில் கூட
வெளியே வரமுடியாத அளவுக்கு அவர்கள் மீது வழக்குகளை
புனைந்து, சிறையில் அடைப்பது – அரசியல் சட்டத்திற்கே
விரோதமானது.

பிரசாந்த் கனோஜியா கைதுக்கு எதிராக, அவரது மனைவியால் –
உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த
உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள்
இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் உத்தரப்பிரதேச
அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

……

“உ.பி.முதல்வர் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து
பதிவிட்டதற்காக பத்திரிகையாளரை கைது செய்ததை சரியானதாக கருதுகிறீர்களா…?

– ஒவ்வொரு தனி நபருக்கும் தனது கருத்தை சுதந்திரமாக
தெரிவிக்க உரிமை உள்ளது. சில நேரங்களில், சில விஷயங்கள்
தவிர்க்கப்பட வேண்டியது தான். அதற்காக கைது செய்து சிறையில் தள்ளுவீர்களா..?

அதுமட்டுமின்றி, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைப்பது ஏற்க முடியாத
விஷயமாகும். அந்த செய்தியாளரை, உடனடியாக ஜாமீனில்
விடுதலை செய்ய வேண்டும்.

மேலும் – அவதூறு வழக்குக்காக 11 நாட்கள் சிறையில்
அடைப்பதா? இது நேர்மையான நடவடிக்கை இல்லை” எனவும்
சாடினர் நீதிபதிகள்.

ட்விட்டரில் பதிவிட்ட ஒரு காரணத்துக்காகவே கனோஜியாவை
சிறையில் அடைத்தது சரி அல்ல என்றும் விமர்சித்தனர் நீதிபதிகள்.
அத்துடன் கனோஜியாவை உடனடியாக ஜாமீனில் விடுதலை
செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வானத்திலிருந்து வந்து குதித்திருக்கும் நம் நாட்டு தேவதூதர்களுக்கு
இதெல்லாம் உறைக்குமா என்ன….?

இந்த செய்தியை மேலும் தெளிவாக புரிந்து கொள்ள உதவியாக –
இது குறித்து ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்தியிலிருந்து
சில பகுதிகள் கீழே –

———————-

Ordering the immediate release on bail of arrested journalist
Prashant Kanojia, the Supreme Court on Tuesday said,
“We are not appreciative of the manner of his tweets,
but we are bothered about his arrest and incarceration…”

Justice Banerjee said free speech and criticism on
social media cannot be choked by incarceration.

To this, the ASG said, “This order of release should not
be seen as a endorsement of his tweets.”

Justice Banerjee responded, “It is very wrong
to think whatever uploaded will be swallowed by the public.
People are educated.”

However, the court later clarified in its order that
the journalist’s release should not be construed
as an “endorsement” of his tweets, but as a firm stand
taken by the highest court to protect personal liberty.

The court said fundamental rights of free speech and
personal liberty were “non-negotiable.”

“We need not comment on the nature of the posts/tweets
for which the action has been taken.

The question is whether Prashant Kanojia ought to have been
deprived of his liberty for the offence alleged.
The answer to that question is prima facie in the negative,”
it recorded in the order.

The court said the State would follow procedure as per law
in Kanojia’s case.

“We direct that the petitioner’s husband [Kanojia] be
immediately released on bail on conditions to the
satisfaction of the jurisdictional Chief Judicial
Magistrate ,” it said.

.
—————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “இம்” என்றால் சிறைவாசம்…. இவர்களென்ன வானத்திலிருந்து குதித்த “தேவதூதர்”களா…?

 1. Ramnath சொல்கிறார்:

  ” இவர்களென்ன வானத்திலிருந்து குதித்த “தேவதூதர்”களா…? ”

  அதைவிடவும் மேலானவர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கின்றனர்
  இந்த கருமாந்திரம் பிடித்த அரசியல் வியா- திகள்..
  சுப்ரீம் கோர்ட் கொடுத்திருக்கும் இந்த விளக்கத்திற்கு அப்புறமும்,
  எந்த அரசாவது மீறி நடந்தால், அந்த அரசுக்கு பலத்த அபராதத்தை விதித்து,
  அந்த அபராதப் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக கொடுக்க உத்திரவிட
  வேண்டும் நீதிமன்றம். பாதிக்கப்படுபவர்களுக்கு அதுவே நியாயம்.

 2. புதியவன் சொல்கிறார்:

  ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ‘விமர்சனம்’ செய்தவர்களை சிறையில் அடைப்பதா? அதுவும் தாங்கள் இஷ்டப்படி குற்றங்கள் சுமத்துவதா? யோகியோ மம்தாவோ மற்றவர்களோ…. இதனைச் செய்வது தவறு. அதுமட்டும் இல்லாமல், தக்க ஆணை இல்லாமல் (அதாவது அரசுதான் கைது செய்யச் சொன்னது என்ற ஆதாரம் இல்லாமல்), இந்தக் கைதுகள் நடைபெற்றிருந்தால், கது செய்த (அதற்கு அதிகாரம் உள்ள) போலீஸ் அதிகாரியும் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்.

  விமர்சனம் செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அல்லது நீதி மன்றத்துக்குச் செல்ல பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு. விமர்சனம் செய்பவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை வைக்கலாம். மற்றபடி ‘சட்டத்தைக் கையில் எடுக்க’ அதுவும் இந்த மாதிரி சில்லரை விஷயங்களுக்கு சட்டத்தைக் கையில் எடுக்க ஆட்சியாளர்களுக்கு அனுமதி கூடாது.

  எம்ஜிஆர் அரசு, விகடன் அதிபர் பாலசுப்ரமணியத்தை கைது செய்ததற்காக பிறகு அடையாள நஷ்ட ஈடாக 1000 ரூபாய் அவருக்குக் கொடுத்தது நினைவுக்கு வருகிறது. (இப்போ இருக்கிற விகடன் குழுமத்துக்கு அந்த மாரல் கரேஜ் கிடையாது. ஏனென்றால் இவங்க செய்தியை உற்பத்தி பண்ணறாங்க, காசிப்பை, செய்திபோல எழுதறாங்க)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s