அபூர்வமாக இப்படியும் சில அமைச்சர்கள் …


பந்தாவான பேச்சு, எப்போதும் அரசியல்,
எங்கே சென்றாலும் தங்களைச்சுற்றி சில ஜால்ராக்கள் கூட்டம் … – இவையெல்லாமல் இல்லாமல் இந்த காலத்தில்
ஒரு அரசியல்வாதியை -அதுவும் அமைச்சரை பார்க்க முடியுமா…?
பார்க்கக் கிடைத்தால் அது அபூர்வம் தானே.

அத்தகைய இரண்டு அமைச்சர்கள் தமிழ்நாட்டில் செயல்படுவதை
சொல்லத்தான் இந்த இடுகை.

2015 -ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்
அருகேயுள்ள கீழடியில் முதல்முறையாக அகழாய்வு நடத்தப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக, அவ்வட்டாரத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் தமிழர்களின் பழமையான கலாச்சாரம் குறித்த
சான்றுகள் கிடைத்ததின் அடிப்படையில் இது முன்னெடுக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்தது.

முதல் இரண்டு கட்ட அகழாய்வின் பொறுப்பாளராக இருந்தார்
மத்தியத் தொல்லியல் துறை பெங்களூரு பிரிவு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன். இங்கே சில நடந்த சில அரசியல் விளையாட்டுகளின் காரணமாக, இந்த அதிகாரி வட மாநிலத்திற்கு
இடமாற்றம் செய்யப்பட்டு,

2017ஆம் ஆண்டு நடந்த மூன்றாவது கட்ட அகழாய்வின்போது
பி.எஸ்.ஸ்ரீராமன் என்பவர் கீழடி ஆய்வின் பொறுப்பாளராக
நியமிக்கப்பட்டார். இம்மூன்று ஆய்வுகளும் மத்தியத் தொல்லியல்
துறையால் மேற்கொள்ளப்பட்டன.

இதன் பின் மத்திய அரசு /தொல்லியல் துறை –
என்ன காரணத்திற்காகவோ (??? )
மேற்கொண்டு அகழ்வாராய்வை தொடர்வதில் அக்கறை
கொள்ளவில்லை…

தமிழகத்தில் பல தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும்,
அரசியல் கட்சிகளும் வற்புறுத்தியும், மத்திய அரசு தரப்பிலிருந்து
மேற்கொண்டு எந்தவித செயல்பாடும் இல்லை. நாம் கூட
இந்த தளத்தில், மத்திய அரசு ஆர்வமின்றி இருப்பதால்,
கீழடி அகழ்வாராய்ச்சியை தமிழக அரசு தன் பொறுப்பில்
ஏற்றுக் கொண்டு அடுத்தடுத்த கட்டங்களை தொடர வேண்டும்
என்று எழுதியிருந்தோம்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் திரு(மாஃபா) கே.பாண்டியராஜன்
தமிழ் மொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக
பொறுப்பு ஏற்ற பிறகு, இந்த துறைகளில் சத்தம் போடாமல் பல முன்னேற்றங்கள், மாறுதல்கள் தெரிகின்றன.

மத்திய அரசுடன் இணக்கமாகப் பேசி, கீழடி அகழ்வாராய்வை
மேற்கொண்டு தொடரும் பொறுப்பை தமிழகம் கேட்டுப் பெற்றது.
இதற்காக உரிய பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு,

கடந்த ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம்
தேதி வரை, தமிழக அரசின் சார்பில் கீழடியில் நான்காம் கட்ட
அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

முதல் 2 அகழாய்வில் கிடைத்த பொருட்களில் சில சுமார்
2,300 ஆண்டுகள் பழமையானவை என்று கார்பன் சோதனையில்
தெரிய வந்ததாகத் தெரிவித்திருந்தது மத்தியத் தொல்லியல் துறை.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 13) கீழடியில் 5ஆம் கட்ட
அகழாய்வைத் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைத்திருக்கிறார்.


இதன்பின்னர் அவர் செய்தியாளர்களைச்
சந்தித்துப் பேசி இருக்கிறார்.
அப்போது, கீழடி அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைப்பதற்கான அகழ் வைப்பகம் அமைக்கத் தமிழக அரசு 1 கோடி
ரூபாய் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

கீழடி ஆற்றங்கரை மற்றும் நகர்ப்புற நாகரிகம் கொண்ட இடம்.

ஏழு ஏக்கர் பரப்பளவில் 47 லட்சம் மதிப்பீட்டில் ஐந்தாவது கட்ட
அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

2014 -2017 வரையிலான மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளில்
உறைகிணறுகள் , செங்கல் கட்டடங்கள், பிராமி எழுத்துக்கள்
பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தந்தத்தால் ஆன பொருள்கள்
உள்பட 7818 தொல் பொருள்கள் கிடைத்துள்ளன.

2018-ம் ஆண்டில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டன. அதில் பாசி, மணிகள், தங்கத்தால் ஆன
பொருள்கள், மான்கொம்பு, இரும்புக் கருவிகள் உள்ளிட்ட
5280 தொல்பொருள்கள் கிடைத்தன.

மேலும், “அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 14,638 பொருட்கள்
புதிய அகழ் வைப்பகத்தில் வைக்கப்படும். இதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அமைப்பதற்கு, பாடநூல் நிறுவனம் 1 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிக் குழந்தைகளையும்,
இது போன்ற அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடப்படும். வரலாற்று ஆய்வகம் போல, தமிழகத்திலுள்ள 36 அருங்காட்சியகங்களும் செயல்படும்” என்று அவர் கூறினார்.

வரும் ஆண்டில் 6 இடங்களில் புதிதாக அருங்காட்சியகங்கள்
அமைக்கப்படுமென்று உறுதியளித்தார் பாண்டியராஜன்.
“வரும் ஆண்டில் தேனி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில்
மாவட்ட அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.
கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன்குளம் இடங்களில்
பார்வையாளர் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.
அருங்காட்சியகங்கள் இல்லாமலிருக்கும் நாமக்கல்,
திருப்பூர், பெரம்பலூரில் அடுத்த ஆண்டில் அருங்காட்சியகங்கள்
திறக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

————–

அமைச்சர் திரு.கே.பாண்டியராஜன் அவர்களுக்கு, அவர் சிறப்பாக செயல்படும் விதத்திற்காக இந்த விமரிசனம் வலைத்தளத்தின் சார்பாக நமது மனமார்ந்த
பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

—————-

பாராட்டிற்குரிய விதத்தில் மிகச்சிறப்பாக
செயல்படும் இன்னுமொருவர் –
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள்.

இவர் பொறுப்பேற்ற பிறகு, கல்வித்துறையில்
தமிழகம் மிகச்சிறப்பான முன்னேற்றங்களையும்,
வளர்ச்சியையும் கண்டு வருகிறது.

மற்றொரு சமயத்தில்
அந்த பணிகளைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இந்த தருணத்தில், அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும் நமது வலைத்தளத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

இவர்களது சிறப்பான பணிகள் தொடர வேண்டுவோம்.

.
———————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அபூர்வமாக இப்படியும் சில அமைச்சர்கள் …

 1. tamilmani சொல்கிறார்:

  I think sengottayan is the best choice for Chief minister that was even endorsed by Mr Rajnikanth some time back, In aiadmk govt there aresome good ministers like ma foi pandiarajan,,sengottaiyan. electricity minister Thangamani transport minister vijayabhaskar etc

  • புதியவன் சொல்கிறார்:

   @தமிழ்மணி – விஜயபாஸ்கர்? என்னாச்சு உங்களுக்கு தமிழ்மணி..இவர் மேலத்தானே சிபிஐ, ஐடி ரெய்டு…..

 2. Prabu Ram சொல்கிறார்:

  ஹாங்காங் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்
  சுதந்திரமாக இருந்து பழகியவர்கள். தங்கள்
  சுதந்திரத்தை, உரிமையை தக்கவைத்துக்கொள்ள
  ஒருங்கிணைந்து போராடுவார்கள். 50 லட்சம் மக்களை
  சீன ஆதரவு உள்ளூர் அரசால் அடக்க முடியாது.
  போராட்டம் தொடர்ந்தால், அரசு சட்டத்தை நிச்சயமாக
  திரும்பப்பெற வேண்டியிருக்கும்.

 3. Prabhu Ram சொல்கிறார்:

  மன்னிக்க வேண்டும். இதை நான் முந்தைய தலைப்பில்
  பதிவு செய்திருக்க வேண்டும்.

 4. புதியவன் சொல்கிறார்:

  அமைச்சர் செங்கோட்டையன் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். எப்போதெல்லாம் தேர்தல் சமயம் வருகிறதோ அப்போதெல்லாம் இவரைத்தான் ஜெ. அவர்கள் பிரச்சார பயணத் திட்டமிடலுக்கு நம்புவார்கள். அவரது மனைவி கம்ப்ளெயிண்ட் செய்த ஒரு காரணத்துக்காகத்தான் அவரை தற்காலிகமாக அமைச்சரவையிலிருந்து விடுவித்தார் ஜெ. கல்வித்துறையில் பல்வேறு பணிகளை சிறப்பாகச் செய்கிறார் செங்கோட்டையன் அவர்கள்.

  மாஃபா பாண்டியராஜன் அவர்களும் மிகுந்த லெவல் ஹெடட் ஆக நடந்துகொள்கிறார். தகுதியினால்தான் அமைச்சராக பதவி பெற்றார். ஈவிஎஸ் அவர்கள் அமைச்சரவையிலும் நன்றாக பணியாற்றுகிறார். சப்ஜெக்ட் நன்றாகப் பேசக்கூடிய, பண்பாளர் என்று சொல்லத்தக்கவர் மாஃபா அவர்கள்.

  இருவரும் பாராட்டப்படத்தக்கவர்களே.

 5. நலந்தா செம்புலிங்கம் சொல்கிறார்:

  நல்ல செய்திகள். தெளிவாகப் பதிந்ததமைக்கு நன்றி. நம்பிக்கை அளிக்கும் அமைச்சர்களுக்குப் பாராட்டுக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s