மிகச்சிறிய கைக்கு அடக்கமான portable வாஷிங் மெஷின்…!!!மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்,
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்,
சீன தயாரிப்பான Haier பிராண்டு
வாஷிங் மெஷின் ஒன்றின் காணொளி
ஒன்றை பார்த்தேன்…
செயல்படும் முறை மிகவும் எளிதாக,
அந்தக் காலத்து இம்மர்சன் வாட்டர் ஹீட்டர்
போல் தெரிகிறது… சிறிய வீடுகளில் வசிக்கும்,
சிறிய குடும்பங்களுக்கு சௌகரியமாக இருக்கலாம்.
விலை என்னவென்று பார்த்தேன்…
அமேசானில் கிடைக்கிறது… ரூ.2029/- தான்.

————

இதைப்பற்றி மேல் விவரங்கள் தேடிக்கொண்டிருந்தபோது,
இன்னுமொரு படு சுட்டி, குட்டி மெஷின் ஒன்றையும்
பார்த்தேன்… விலை தெரியவில்லை…

இரண்டின் விளம்பர வீடியோக்களும் கீழே –

இரண்டாவது எப்படியோ…முதலாவது
நிச்சயம் உபயோகமாக இருக்குமென்று
தோன்றுகிறது…!!!

( வாங்குகிறோமோ இல்லையோ,
பலருக்கு பார்ப்பதிலேயே மகிழ்ச்சி ஏற்படுகிறதே…
இல்லையா….!!!
அதையாவது நாம் தர முயற்சிப்போமே…!!! )


.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மிகச்சிறிய கைக்கு அடக்கமான portable வாஷிங் மெஷின்…!!!

 1. rramanisankar சொல்கிறார்:

  நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் வாஷிங் மெஷின் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னரே உபயோகத்துக்கு வந்து விட்டது. சாதாரணமாக பொருட்காட்சியில் வைத்து விற்பனை செய்வார்கள். அப்போது ரூ. 1500/- க்கு வாங்கினேன். மிக நன்றாக வேலை செய்து கொண்டு இருந்தது. சமீபத்தில்தான் கெட்டப் போய் விட்டது. மெஷினினில் உபயோகப்படுத்தி இருக்கும் பிளாஸ்டிக் எல்லாம் நல்ல தரத்தில் இல்லை. நீங்கள் பகிர்ந்து இருக்கும் மெஷினின் தரம் நன்றாக உள்ளது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ரமணிசங்கர்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.